search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cow theft"

    • இசக்கிதுரை வீட்டில் மாடு மற்றும் ஆடுகள் மேய்ச்சலுக்காக சென்று விட்டு 4, 5 நாட்கள் கழித்து தான் வீட்டிற்கு வரும்.
    • மேய்ச்சலுக்கு சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்த இசக்கிதுரையின் மாட்டை மர்ம நபர் ஒருவர் கயிறு மூலம் கட்டி திருடிச்சென்றது சி.சி.டி.வி.யில் தெரியவந்தது.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் இசக்கிதுரை. இவர் ஆடு, மாடு வளர்த்து வருகிறார். இவரது வீட்டில் மாடு மற்றும் ஆடுகள் மேய்ச்சலுக்காக சென்று விட்டு 4, 5 நாட்கள் கழித்து தான் வீட்டிற்கு வரும்.

    கடந்த 30-ந்தேதி மேய்ச்சலுக்காக சென்ற இசக்கிதுரை மாடுகள் இதுவரை வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் சாத்தான்குளம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்திய அப்பகுதி யில் அமைக்கப் பட்டிருந்த சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்தனர்.

    அப்போது, கடந்த 30-ந்தேதி நள்ளிரவு மேய்ச்சலுக்கு சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்த இசக்கிதுரை யின் மாட்டை மர்ம நபர் ஒருவர் கயிறு மூலம் கட்டி திருடிச் சென்றது தெரியவந்தது.

    மாட்டை தினமும் பழகுவது போல கொண்டு செல்வதால் இவர் மாடு வளர்ப்பவராக இருக்கலாம் என போலீசார் சந்தேகத்து, சி.சி.டி.வி. காட்சிகளை கொண்டு மர்மநபரை தேடி வருகின்றனர்.

    • கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ வைரல்
    • பேட்டரியையும் திருடி சென்றனர்

    வேலூர்:

    வேலூர் மாநகரம், காட்பாடி, சித்தூர் பஸ் நிலையம், சத்துவாச்சாரி, பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், விருதம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மாடுகள் சுற்றி திரிகின்றன.

    சாலைகளை சுற்றி திரியும் மாடுகளை மர்ம கும்பல் வாகனத்தில் வந்து திருடி செல்வது தொடர்கதையாக உள்ளது. இது குறித்து போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    நள்ளிரவு நேரங்களில் லோடு ஆட்டோவுடன் சுற்றி திரியும் கும்பல், ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இருக்கும் மாடுகளை திருடி சென்று வெளிச்சந்தைகளில் விற்பனை செய்வதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை வேலூர் சத்துவாச்சாரி சாலையில் உள்ள காகிதப்பட்டறை எல்.ஐ.சி. அலுவலகம் எதிரே சாலையில் மாடுகள் படுத்திருந்தன கொண்டிருந்தது.

    இதனை ஆட்டோவில் வந்த மர்ம கும்பல்கள் நோட்டமிட்டு மாடுகளை திருடி சென்றது.

    இந்த காட்சிகள் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

    இதேபோல் வேலூர் தோட்டப்பாளையம் பகுதியில் உள்ள சோளாபுரி அம்மன் கோவில் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவில் இருந்து பேட்டரியை மர்ம கும்பல் திருடி சென்றனர்.

    பேட்டரி திருடி செல்லும் காட்சிகளும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

    கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ள காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • தியாகதுருகத்தில் கோவில் மாடு திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் பஸ் நிலையம் அருகே நஞ்சுண்ட ஞான தேசிக ஈஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமாக 10- க்கும் மாடுகள் உள்ளது. இந்நிலையில் நேற்று காலை மர்ம நபர்கள் கோவிலுக்கு சொந்தமான காளை மாட்டை பிடித்து சென்றுள்ளனர். தகவல் அறிந்து கோவிலில் இருந்தவர்கள் விரைந்து சென்று 3 பேரையும் மடக்கிப்பிடித்தனர். தொடர்ந்து தியாகதுருகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

    விசாரணையில் கள்ளக்குறிச்சி அருகே ரங்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த லூர்துசாமி மகன் பவுன்ராஜ் (வயது 27), இருதரராஜ் மகன் ஜான் எடிசன் (36), அருள்தாஸ் மகன் டோமிக் சேவியர் (32) என்பதும் இவர்கள் மாட்டை திருடி சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்து கோவில் நிர்வாகி வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் பவுன்ராஜ், ஜான் எடிசன், டோமிக் சேவியர் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    • மாடுகளை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்
    • மாட்டு சந்தையில் சிக்கிய வாலிபரை சந்தேகத்தின் பேரில் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் காட்பாடி லத்தேரி குடியாத்தம் பணமடங்கியில் உள்ளிட்ட ஆந்திர மாநில எல்லைகளில் உள்ள கிராமங்களில் அடிக்கடி மாடுகள் திருடு போய் வருகிறது.

    இது குறித்து அந்தந்த பகுதிக்குட்பட்ட போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    நள்ளிரவு நேரங்களில் லோடு ஆட்டோவுடன் சுற்றி திரியும் கும்பல் கிராமப்புற பகுதிகளில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கட்டி வைக்கப்படும் மாடுகளை அவிழ்த்து சென்று ஆந்திர மாநில சந்தேகங்களில் விற்பனை செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பனமடங்கி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமத்தை சேர்ந்த சில விவசாயிகள் ஆந்திர மாநிலம் பலமநேரில் நடைபெற்ற மாட்டு சந்தையில் மாடு வாங்க சென்றனர்.

    அப்போது பனமடங்கியில் திருடு போன மாடுகள் அங்கு விற்பனைக்கு நிறுத்தி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து விவசாயிகள் பனமடங்கி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் பலமனேர் மாட்டுச்சந்தைக்கு சென்றனர்.

    அங்கு மாடுகளை விற்பனைக்கு வைத்திருந்த கும்பல் மாடுகளை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    ஒரு வாலிபர் மட்டும் போலீசாரிடம் சிக்கினார். திருடு போன 4 மாடுகளில் 3 மாடுகளை போலீசார் மீட்டனர். மாட்டு சந்தையில் சிக்கிய வாலிபரை சந்தேகத்தின் பேரில் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விசாரணையின் முடிவில் மாடு திருடும் கும்பல் யார் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

    • மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்று மீண்டும் மாட்டுக் கொட்டைகையில் மாடு களை கட்டிவிட்டு இரவு தூங்கச் சென்றார்.
    • சதீஷ் உள்பட 3 பேர் இரவோடு இரவாக திருடி சென்றதை ஒப்புக் கொண்டார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் எலவனாசூர் அருகே நெடு மானூர் பகுதியைச் சேர்ந்த வர் கோவிந்தராஜ். இவரது மனைவி கமலக்கோடி (வயது 48). விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் வீட்டின் பின்புறம் மாட்டு கொட்டகை அமைத்து மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று  வழக்கம்போல் மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்று மீண்டும் மாட்டுக் கொட்டைகையில் மாடு களை கட்டிவிட்டு இரவு தூங்கச் சென்றார். இன்று காலை கமல கொடி எழுந்து சென்று பார்த்த போது மாட்டு கொட்டையிலிருந்த மாடுகளில் பசுமாடு ஒன்று காணாமல் போயிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே கமலகொடி பசு மாட்டை பல்வேறு இடங்க ளில் தேடிப் பார்த்தார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து கமலக்கொடி எலவனாசூர் போலீஸ் நிலை யத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் எலவனாசூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமால் வழக்கு பதிவு செய்து மாட்டை திருடி சென்ற மர்ம கும்பலை தேடிவந்தார். இந்நிலையில் பரிந்தன் பகுதியில் ஏரிக்கரை தெருவில் உள்ள ஒரு வீட்டில் காணாமல் போன மாடு கட்டி வைக்கப்பட்டிருந்தது. உடனே போலீசார் அந்த வீட்டிற்கு சென்று வீட்டிலிருந்த சதீஷ் (27) என்பவரிடம் விசாரித்த போது கமலக்கொடியின் மாட்டை சதீஷ் உள்பட 3 பேர் இரவோடு இரவாக திருடி சென்றதை ஒப்புக் கொண்டார். உடனே மாட்டை பறிமுதல் செய்த போலீசார் சதீஷை கைது செய்தனர். மேலும் இந்த திருட்டில் ஈடுபட்டு தலைமறைவாக இருக்கும் 2 பேரை போலீ சார் வலை வீசி தேடி வருகின்றனர்.

    • பசுமாடு திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • மர்ம நபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    கள்ளச்குறிச்சி: 

    கள்ளச்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் மூங்கில்துறைப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன் மற்றும் போலீசார் தென்பெண்ணை ஆற்று மேம்பாலத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பசுமாட்டை ஓட்டி வந்த மர்ம நபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் திருவண்ணாமலை மாவட்டம் வேலையாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகன் மணிகண்டன் (வயது 25) என்பதும், மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள குழந்தைஏசு நகரை சேர்ந்த ஆனந்தராஜுக்கு சொந்தமான பசு மாட்டை திருடி வந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து மணிகண்டனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த பசுமாட்டை மீட்டனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதகடிப்பட்டு வாரச்சந்தையில் திருடிய மாட்டை விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

    சேதராப்பட்டு:

    புதுவையை அடுத்த தமிழக பகுதியான கீழ்புத்துப்பட்டு அய்யனார் கோவில் வீதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது வீட்டில் பசு மாடுகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது இவரது பசு மாடுகளை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.

    காலையில் எழுந்து பார்த்த போது வீட்டில் இருந்த பசு மாடுகளை காணாமல் திடுக்கிட்டார். பல இடங்களில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை.

    இதையடுத்து அவர் மதகடிப்பட்டு வாரச்சந்தைக்கு சென்று தேடினார். அங்கு விஜயகுமாரின் 2 பசுமாடுகளையும் ஒருவர் வாங்கி வைத்திருந்தார்.

    உடனே விஜயகுமார் அவரிடம் விசாரித்ததில் 2 பசு மாடுகளையும் ரூ. 40 ஆயிரத்துக்கு வாங்கியதாகவும், 2 பேர் மாடுகளை அவரிடம் விற்றதாகவும் தெரிவித்தார்.

    இதையடுத்து மாட்டை விற்றவர்களிடம் செல்போனில் நைசாக பேசி அவர்களை அங்கு வரவழைத்தார்.

    அவர்களை விஜயகுமாரும் மற்றவர்களும் சேர்ந்து மடக்கி பிடித்தனர். மேலும் கோட்டக்குப்பம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    அதையடுத்து இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று 2 வாலிபர்களையும் பிடித்து விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் அவர்கள் மரக்காணம் கூனிமேடு பகுதியை சேர்ந்த பாஷாவின் மகன் முகமதுஷாகில் (வயது19), புதுவை முத்தியால்பேட்டையை சேர்ந்த முகமது இலியாஸ் மகன் முகமதுஷாகில் (23)என்பதும் தெரியவந்தது. அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

    பின்னர் அவர்களிடம் இருந்து ரூ.40 ஆ யிரத்தையும் பறிமுதல் செய்து மாடுகளை வாங்கியவரிடம் ஒப்படைத்தனர்.

    மேலும் 2 பசு மாடுகளையும் வானூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி உரிமையாளர் விஜயகுமாரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    திருச்செந்தூர் பகுதியில் மாடுகள் திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 9 மாடுகளை பறிமுதல் செய்தனர்.
    திருச்செந்தூர்:

    திருச்செந்தூரை சேர்ந்த சின்னத்துரை, பால்சாமி, கீழநாலுமூளைக் கிணறுஆனந்த் உள்ளிட்டவர்கள் வளர்த்து வந்த 9 மாடுகள் திருடுபோனது. இது குறித்து புகாரின் பேரில் திருச்செந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.   

    இந்நிலையில் திருச்செந்தூர் சண்முகபுரம் பகுதியில் சிலர் மாடுகளை மினிலாரியில் ஏற்றிக் கொண்டிருந்தனர். இதை பார்த்த போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். 

    விசாரணையில் அவர்கள் காயல்பட்டிணத்தை சேர்ந்த ஹனிபா (வயது 50), வீரபாண்டியபட்டிணத்தை சேர்ந்த கந்தன்(50), மனக்கரைணை சேர்ந்த காவி (44), முருகேசன் (44) என்பதும், மாடுகளை திருடி சென்றதும் தெரியவந்தது. மேலும் அவர்கள் திருச்செந்தூர் பகுதியில் 9 மாடுகளை திருடிசென்றதும் தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 9 மாடுகள், திருட்டுக்கு பயன்படுத்திய மினிலாரி, மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வைகளை பறிமுதல் செய்தனர்.
    பெரிபாளையம் அருகே லாரியில் வந்து மாடுகளை திருடிய கும்பலை பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
    பெரியபாளையம்:

    பெரியபாளையம் அருகே உள்ள ஆரணியை அடுத்த புதுப்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி.

    நேற்று நள்ளிரவு அவர் வீட்டின் வெளியே மர்ம நபர்கள் சத்தம் கேட்டு வெளியே வந்தார். அப்போது வீட்டின் வெளியே கட்டப்பட்டு இருந்த 2 மாடுகளை 3 வாலிபர்கள் திருடி செல்வதை கண்டு கூச்சலிட்டார். அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஏராளமானோர் அங்கு திரண்டனர். அவர்கள் மாடு திருடிச் சென்ற கும்பலை சுற்றி வளைத்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அவர்களை ஆரணி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    விசாரணையில் அவர்கள் சோழவரம் அருகே உள்ள கிருதலாபுரம் பகுதியை சேர்ந்த மினிலாரி டிரைவர் ராஜேஷ், மற்றும் 14 வயதுடைய 2 சிறுவர்கள் என்பது தெரிந்தது.

    திருப்பதிக்கு நடைபயணம் செல்லும் பக்தர்களுக்கு உணவு எடுத்து செல்லுவது போல் மினிவேனை தயார் செய்து ஊர் எல்லையில் நிறுத்திவிட்டு மாட்டை திருடிச்செல்ல திட்டமிட்டதை ஒப்புக்கொண்டனர். அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து மினி லாரியை பறிமுதல் செய்தனர்.
    மருவத்தூர் அருகே தோட்டத்தில் கட்டியிருந்த பசுமாடுகளை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    குன்னம்:

    பெரம்பலூர் மாவட்டம் மருவத்தூர் அருகே உள்ள கல்பாடியை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 65), விவசாய கூலி தொழிலாளி. இவர் தனது தோட்டத்தில் குடில் அமைத்து 2 பசுமாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று மாலை வழக்கம் போல் மாடுகளை கொட்டகையில் கட்டிவிட்டு வீடு திரும்பியுள்ளார். இன்று காலை சென்று பார்த்தபோது மாடு களை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அக்கம்பக்கத்தில் தேடியுள்ளார். மேலும் அருகில் இருந்த தோட்டத்துக்காரர்களிடமும் விசாரித்துள்ளார்.

    பின்னர் இது குறித்து மருவத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்தனர். இதற்கிடையே மருவத்தூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் பேரளி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது இரண்டுபேர் மாடுகளை அழைத்து சென்று கொண்டிருந்தனர்.

    அவர்களின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டவே, இருவரையும் அழைத்து விசாரித்தனர். அப்போது இருவரும் மாடுகளை திருடி வந்ததை ஒப்புக்கொண்டனர். இதற்கிடையே சின்னசாமியும் புகார் அளித்திருந்ததால் அவரின் மாடுகள் என உறுதி செய்யப்பட்டது.

    பின்னர் மாடுகள் இரண்டையும் விவசாயி சின்னசாமியிடம் ஒப்படைத்தனர். மேலும் மாடுகளை நள்ளிரவில் திருடி அழைத்து சென்ற, பெரம்பலூர் புதூரை சேர்ந்த வேல்முருகன், நெடுவாசலை சேர்ந்த சிவராஜ் ஆகியோரை கைது செய்தனர். இருவரையும் பெரம்பலூர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர் செய்தனர். நீதிபதி உத்தரவின் பேரில் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க அவரை அழைத்து சென்றனர். இரு மாடுகளும் தலா 50 ஆயிரம் வீதம், ரூ.ஒரு லட்சம் மதிப்பு இருக்கும் என கூறப்படுகிறது. புகார் கொடுத்த சில மணி நேரங்களில் நடவடிக்கை எடுத்து மாடுகளை மீட்டு தந்த கால்துறையினருக்கு விவசாயி சின்னசாமி நன்றியை தெரிவித்தார்.
    அரியானா மாநிலத்தில் பசுவை திருடியதாக வாலிபர் அடித்துக் கொல்லப்பட்டார்.
    பில்வால்:

    ராஜஸ்தான் மாநிலத்தில் சமீபத்தில் பசுவை கடத்தி கொன்றதாக வாலிபர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

    இந்த நிலையில் அரியானா மாநிலத்தில் பசுவை திருடியதாக வாலிபர் அடித்துக் கொல்லப்பட்டார்.

    அரியானா மாநிலம் பில்வால் மாவட்டம் பெக்ரோலா கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் பசுவை திருடி சென்றதாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சந்தேகித்தனர்.

    இதைத்தொடர்ந்து அந்த கும்பல் அந்த வாலிபரை சுற்றி வளைத்து கடுமையாக தாக்கியது. இதில் அவருக்கு 14 இடங்களில் காயம் ஏற்பட்டு பரிதாபமாக பலியானார். அந்த வாலிபரை பற்றிய விவரம் எதுவும் தெரியவில்லை.

    ஆனால் போலீஸ் தரப்பில் இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வார் மாவட்ட போலீஸ் அதிகாரி சுரேஷ்குமார் கூறும்போது, “அந்த வாலிபரின் உடலில் 14 இடங்களில் காயம் இருந்தது. அவருக்கு குடல் இறக்கம் நோய் இருந்துள்ளது. அவரது சாவுக்கு இதுதான் முக்கிய காரணம்” என்றார்.

    பசு பாதுகாவலர்கள் என்ற போர்வையில் நடைபெறும் கொலைகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது. ஆனாலும், இது மாதிரியான சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன.
    ×