search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Crashed"

    • சேலம் கருப்பூர் அருகே உள்ள பறவை காடு பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜன் மோட்டார் சைக்கிள், சாலையோரம் மோதியது.
    • இதில் தூக்கி வீசப்பட்ட அவர், படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்.

    சேலம்:

    சேலம் கருப்பூர் அருகே உள்ள பறவை காடு பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜன். இவரது மகன் விஜய் (வயது 30).

    இவர் நேற்றிரவு கொண்டலாம்பட்டி ரவுண்டானாவில் இருந்து கருப்பூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மழை பெய்து கொண்டிருந்தது.

    கந்தம்பட்டி மேம்பால பகுதியில் சென்று கொண்டிருந்தபோது நிலை தடுமாறிய மோட்டார் சைக்கிள், சாலையோரம் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர், படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் சூரமங்கலம் போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கடலூர் முதுநகரில் இருந்து மீன் ஏற்றிக் கொண்டு லாரி கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தது.
    • டிரை வரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தறிகெட்டு ஓடி சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதி நடு ரோட்டிலேயே பயங்கர சத்தத்துடன் கவிழ்ந்தது.

    கடலூர்:

    கடலூர் முதுநகரில் இருந்து மீன் ஏற்றிக் கொண்டு லாரி கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. கடலூர் முதுநகர் அருகே சின்னகாரைக்காடு பகுதியில் விருத்தாசலம்-கடலூர் சாலையில் இன்று அதிகாலை வந்தது. அப்போது திடீரென டிரை வரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தறிகெட்டு ஓடி சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதி நடு ரோட்டிலேயே பயங்கர சத்தத்துடன் கவிழ்ந்தது.

    இதில் லாரியில் இருந்த மீன்கள் அனைத்தும் சாலையில் சிதறின. இது பற்றி அறிந்த கடலூர் முதுநகர் போலீ சார் விரைந்து சென்று நடுரோட்டில் கவிழ்ந்து கிடந்த லாரியை அப்புறப் படுத்தும் முயற்சியில் ஈடு பட்டனர். மேலும் மீன்களும் சாலையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டது. இந்த விபத்தில் லாரியின் முன்பகுதியும், மின்கம்பமும் சேதமடைந்தது. லாரி டிரைவர் எவ்வித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த சம்ப வத்தால் கடலூர்-விருத்தா சலம் சாலையில் சுமார் 1/2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • சங்கரன்கோவிலில் வாகனம் மோதியதில் ரெயில்வே கேட் சேதம் அடைந்தது.
    • சுமார் அரை மணி நேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் ரெயில் நிலையம் அருகே புளியங்குடி சாலையில் அமைந்துள்ள ரெயில்வே கிராசிங்கில் இன்று அதிகாலை அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.

    இதில் ஒருபுறத்தில் இருந்த ரெயில்வே கேட் சேதமடைந்தது. இன்று காலை 8 மணிக்குள் 4 ரெயில்கள் சங்கரன்கோவில் ரெயில் நிலையத்தை கடக்கும் சூழ்நிலை இருந்ததால், ரெயில்வே பணியாளர்கள் மற்றும் ெரயில்வே போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

    அவர்கள் ரெயில்வே கேட் பகுதிக்கு வந்து செயின்களை வைத்து தடுப்பு அமைத்து வாகனங்களை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து ரெயில்வே கேட்டை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். மேலும் ரெயில்வே கேட்டை சேதப்படுத்திய வாகனம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை பயணிகள் ரெயில் மற்றும் தாம்பரம் முதல் நெல்லை வரை செல்லும் அதிவிரைவு ரெயில் ஆகிய 2 ரெயில்களும் ஒரே நேரத்தில் வந்ததால் சுமார் அரை மணி நேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ரெயில்வே கேட் சேதமான நிலையில் செயின் மூலமாக வாகன போக்குவரத்தை தடுத்து நிறுத்திய சம்பவத்தை வாகன ஓட்டிகள் வியப்புடன் பார்த்து சென்றனர்.

    ×