என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "crop damage"
- சுமார் 150 ஏக்கருக்கு பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது.
- விவசாயிகள், அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மடத்துக்குளம்:
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் பெய்த மழை காரணமாக குமரலிங்கம் பழைய வாய்க்காலில் இருந்து வெளியேறிய தண்ணீர் விளைநிலங்களுக்குள் புகுந்ததால் சுமார் 150 ஏக்கரில் பயிர்கள் பாதிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் மடத்துக்குளம் தாசில்தார் பானுமதி மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அப்போது அங்கு வந்த விவசாயிகள், அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
மேலும் விவசாயிகள் பயிர் பாதிப்புக்கு நிவாரணம் மற்றும் கடைமடை பகுதி விவசாயிகள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க நிரந்தர தீர்வு வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
உரிய ஆய்வுகள் செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
கனமழையின் காரணமாக சாமராயபட்டி, பெருமாள் புதூர், குமரலிங்கம் பகுதிகளில் புது வாய்க்கால் தண்ணீர், மழைநீர் மற்றும் அனைத்து விதமான கழிவு நீர்களும் குமரலிங்கம் பழைய வாய்க்காலில் கலந்து ஆற்றுக்கு செல்கின்றன.
இதனால் வாய்க்கால் கீழ்பகுதியில், கடைமடையில் உடைப்பு ஏற்பட்டு விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் நெல் பயிர்கள், கரும்புகள், தென்னந்தோப்புகள் என சுமார் 150 ஏக்கருக்கு பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது.
கடைமடையில் பாதிப்பை தவிர்க்கும் வகையில், உரிய இடத்தில் கால்வாய் அமைத்தல், நீர் வரத்தை கண்காணித்து பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளுதல் போன்ற திட்டங்களை நீர்வளத்துறை செயல்படுத்தாமல் உள்ளனர். இதுவே பாதிப்புகளுக்கு காரணமாக உள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிகாரிகள் முழுமையாக ஆய்வு செய்து விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- 40 சதவீத கண்மாய்கள், குளம், குட்டைகளில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது.
- கிராமங்களில் 15 ஆயிரம் ஏக்கரில் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டிருந்தது.
சாயல்குடி:
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதன் காரணமாக மாவட்டத்திலுள்ள 40 சதவீத கண்மாய்கள், குளம், குட்டைகளில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது.
இந்நிலையில், சாயல்குடி அருகே கொக்கரசன் கோட்டை, கொண்டு நல்லான்பட்டி, வாலம்பட்டி, உச்சிநத்தம், வி.சேதுரா ஜபுரம், முத்துராம லிங்கபுரம், வெள்ளையா புரம், பிச்சையாபுரம், டி.கரிசல்குளம், டி.எம். கோட்டை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் தூத்துக்குடி மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது.
இந்த கிராமங்களில் 15 ஆயிரம் ஏக்கரில் மிளகாய், வெங்காயம், உளுந்து, பாசிப்பயறு, தட்டைப்பயறு, சோளம், நெல் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டிருந்தது.
சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக, விளாத்திகுளம் ஒன்றியத்தைச் சேர்ந்த லட்சுமிபும், மாவிலோடை கண்மாய்ககளில் தண்ணீர் நிரம்பி அது காட்டாற்று வெள்ளமாக மாறி கஞ்சம்பட்டி ஓடை வழியாக வந்து கொண்டிருக்கிறது.
இதனால் வி. சேதுராஜ புரத்திலிருந்து உச்சிநத்தம் செல்லும் சாலை வழியாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் இப்பகுதியில் 2000-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
![](https://media.maalaimalar.com/h-upload/2024/12/15/7157723-newproject22.webp)
இதனிடையே, எஸ். தரைக்குடி பகுதியில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வந்த மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்த ராஜூலு, பரமக்குடி சார் ஆட்சியர் அபிலாஷா கவுர் உள்ளிட்ட அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்தனர்.
இதனை தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், வெள்ளத்தால் சாலை சேதமடைந்த போக்குவரத்து துண்டிக்கப்பட்ட காரணத்தால், டிராக்டர் மூலம் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு சென்று ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர் களிடம் பேசிய அவர், வெள்ளத்தால் சேதமடைந்து சாலை துண்டிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தோம். இதனை தொடர்ந்து அப்பகுதி பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் உரிய நடவடிக்கை துரித வேகத்தில் எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- வயல்களில் மழைநீர் புகுந்து வெங்காயம்-மக்காசோள பயிர்கள் சேதமடைந்தது.
- எம்.ரெட்டியபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள விவசாயிகள் அனைவரும் தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் பெய்த பருமழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்த நிலையில் விவசாய பணிகளை மும்முரமாக மேற்கொண்டு தங்களது நிலங்களின் தன்மைக்கு ஏற்ப நெல், சோளம், பருத்தி, வெங்காயம், மக்காச்சோளம் போன்ற பல்வேறு வேளாண் பயிர்களை ஏக்கர் கணக்கில் பயிரிட்டுள்ளனர்.மேலும் மாவட்டத்தின் பெரும்பாலான கிராமங்களில் தற்போது களையெடுத்தல், உரமிடுதல் போன்ற பணிகள் முடிவடைந்துள்ளது. மேலும் விவசாய பணிகளுக்காக தங்களது நகைகளை அடகு வைத்தும், கூடுதல் வட்டிக்கு வெளியில் கடன் வாங்கியும் பல்வேறு சிரமத் திற்கு இடையே விவசாய பணி களை மேற் கொண்டு வரு கின்றனர்.
இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகேயுள்ள எம்.ரெட்டியபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையினால் அப்பகுதியிலுள்ள பல்வேறு ஓடைகள் நிரம்பி அதன் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மறவர் பெருங்குடி, எம்.மீனாட்சிபுரம், கல்லுப்பட்டி, சலுக்கார்பட்டி, கஞ்சம்பட்டி, சுத்தமடம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள் சுமார் 200 ஏக்கருக்கும் மேலான பரப்பளவில் விவசாயிகள் பயிரிட்டுள்ள வெங்காயம், மக்காச்சோளம், பருத்தி, கம்பு போன்ற பல்வேறு பயிர்களின் விளை நிலங்களுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. பயிர்கள் அனைத்தும் மழை நீரில் மூழ்கி அழுகிய நிலையில் மிகவும் சேதமடைந்தது. இதனால் கடன் வாங்கி விவசாய பணிகளை மேற்கொண்டு வந்ததால் விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர். ஏக்கர் ஒன்றிற்கு சுமார் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை விவசாயிகள் செலவழித்துள்ள நிலையில் இவ்வாறு அறுவடை நேரத்தில் மழை வெள்ளம் புகுந்து வெங்காயம் மற்றும் மக்காச்சோள பயிர்கள் அனைத்தும் மழை நீரில் மூழ்கி முழுவதும் சேதமான தால் விவசாயிகள் கடும் நஷ்டம் அடைந் துள்ளனர்.
மேலும் தற்போது 2023- 2024 க்கான நெல், சோளம், பருத்தி போன்ற பல்வேறு விளை பொருட்க ளுக்கு குறைந்த பட்ச பிரீமிய தொகையாக ரூ.120-ல் தொடங்கி அதிக பட்சமாக ரூ.500 வரை பயிர் காப்பீடு செய்துள்ள நிலையில் மழைநீரில் மூழ்கி சேதமடைந்து வீணாகிய விளை பொருட்களால் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ள விவசாயிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உரிய நிவாரணத்தை இழப்பீடு தொகையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென எம்.ரெட்டியபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள விவசாயிகள் அனைவரும் தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- காவிரி டெல்டா பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழையால் சேதமடைந்தன.
- பாதிப்புகளை பார்வையிட மத்திய குழுவை அனுப்பிவைக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.
சென்னை:
தமிழ்நாட்டின் காவிரி டெல்டா பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்கள் பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக நீரில் மூழ்கியதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை தணித்திடும் வகையில் நெல் கொள்முதல் விதிமுறைகளில் தேவையான தளர்வுகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் கடிதம் எழுதியிருந்தார்.
இந்தக் கடிதத்தை மத்திய அரசு உடனடியாக பரிசீலித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், மழையால் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளதை நேரில் பார்வையிட மத்தியக் குழுவை அனுப்பிவைக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்தியக்குழுவில் இடம்பெற்றுள்ள அதிகாரிகள் தமிழகத்துக்கு வருகை தந்து நேரில் பார்வையிட உள்ளதாக தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் பெய்த கனமழையால் ஏற்பட்ட பயிர் பாதிப்பு குறித்து மத்திய குழு இன்று ஆய்வு செய்கிறது. யூனுஸ், பிரபாகரன், போயா ஆகிய தொழிநுட்ப வல்லுநர்கள் அடங்கிய மத்திய குழு இன்று பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளையும், பயிர் பாதிப்பு குறித்தும் ஆய்வு மேற்கொள்கின்றனர்.
இந்த ஆய்வின் முடிவில், அவர்கள் மத்திய அரசுக்கு அளிக்கும் விவரங்களின் அடிப்படையில் மத்திய அரசு ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்வது குறித்து தமிழக அரசுக்கு உத்தரவு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- நெல் கொள்முதல் விதிமுறைகளில் தேவையான தளர்வுகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
- மழையால் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளதை நேரில் பார்வையிட மத்தியக்குழுவை அனுப்பிவைக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டின் காவிரி டெல்டா பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்கள் பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக நீரில் மூழ்கியதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை தணித்திடும் வகையில் நெல் கொள்முதல் விதிமுறைகளில் தேவையான தளர்வுகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் கடிதம் எழுதியிருந்தார்.
அந்தக் கடிதத்தில், 'பிப்ரவரி மாதத்தில் (இம்மாதம்) நெல் அறுவடை செய்ய தயாராக இருந்த நேரத்தில் துரதிஷ்டவசமாக தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பெய்த பருவம் தவறிய மழையால் சுமார் ஒரு லட்சம் எக்டேர் பரப்பிலான பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன என்று ஆரம்ப மதிப்பீட்டின்படி தெரிவிக்கப்பட்டுள்து.
வயல்களில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றி அறுவடை பணியை மீண்டும் தொடங்க தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுத்துவரும் நிலையில் தொடர்ந்து பலத்த மழை பெய்ததால் அறுவடை செய்யப்பட்ட தானியத்தில் ஈரப்பதம் அளவு அதிகமாக இருக்கும் என விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
எனவே, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய அனுமதிக்கவும், முதிர்ச்சி அடையாத சுருங்கிய நெல்லின் குறைந்தபட்ச வரம்பை 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் வரை தளர்த்தவும், சேதம் அடைந்த நிறமாற்றம் மற்றும் முளைத்த நெல்லை 5 சதவீதத்தில் இருந்து 7 சதவீதம் வரை தளர்த்தவும் தேவையான மதிப்பை இந்த சம்பா பயிருக்கும் குறைக்கவும் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்' என கூறியிருந்தார்.
இந்தக் கடிதத்தை மத்திய அரசு உடனடியாக பரிசீலித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், மழையால் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளதை நேரில் பார்வையிட மத்தியக்குழுவை அனுப்பிவைக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்தியக்குழுவில் இடம்பெற்றுள்ள அதிகாரிகள் தமிழகத்துக்கு வருகை தந்து நேரில் பார்வையிட உள்ளதாக தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் மழையால் ஏற்பட்டுள்ள பயிர் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு நாளை வருகிறது.
- பயிர் பாதிப்பு பற்றி வேளாண்துறை அதிகாரிகள் ஏற்கனவே முதற்கட்ட ஆய்வு செய்து வருகின்றனர்.
- அமைச்சர் இரண்டு பேர் பயிர்கள் சேதம் குறித்த புள்ளி விவரங்களை தரவேண்டும்.
சென்னை:
கடந்த சில நாட்களாக தஞ்சை, திருச்சி, திருவாரூர், மயிலாடுதுறை, அரியலூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் போன்ற டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்தது. அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் மழையின் காரணமாக நீரில் சாய்ந்து மூழ்கியது. இது அரசினுடைய கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இது குறித்து வேளாண்துறை அதிகாரிகள் ஏற்கனவே முதற்கட்ட ஆய்வு செய்து வருகின்றனர். இதை தொடர்ந்த தமிழக முதலமைச்சர் கூடுதல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதில் அமைச்சர் இரண்டு பேர் எந்ததெந்த மாவட்டங்களில் நெற்பயிர் உள்ளிட்ட அறுவடைக்கு தயாராக உள்ள பயிர்கள் சேதம் அடைந்துள்ளது என்பது பற்றிய கணக்கெடுத்து புள்ளி விவரங்களை தரவேண்டும் என்று முதலமைச்சர் கூறியுள்ளார். இதன் அடிப்படையில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் ஆய்வு செய்ய உள்ளனர். இவர்களோடு வேளாண்துறை செயலாளர், இயக்குநர்கள், மூத்த அதிகாரிகள் எல்லாம் களஆய்வு மேற்கொண்டு வருகிற திங்கட்கிழமை பயிர் சேத விவரங்களை அறிந்து மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கான பயிர் காப்பீட்டு தொகை பெற்று தருவது குறித்து முடிவெடுப்பார்கள்.
அதன் அடிப்படையில் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டு, இழப்பீட்டுத் தொகையை பற்றி முதலமைச்சர் அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.
இயற்கை சீற்றங்களால் சேதம் அடையும் பயிர்களுக்கு ‘பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா’ என்ற மத்திய அரசு திட்டத்தின்கீழ் இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. காட்டு விலங்குகள் தாக்குதலால் சேதம் அடையும் பயிர்களையும் இதில் சேர்க்க வேண்டும் என்று பல்வேறு எம்.பி.க்கள் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், காட்டு விலங்குகள் தாக்குதலால் சேதம் அடையும் பயிர்களுக்கும் இத்திட்டத்தின்கீழ் இழப்பீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக, ஒன்றிரண்டு மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் இது அமல்படுத்தப்படும் என்று மத்திய வேளாண் மந்திரி ராதா மோகன்சிங் கூறினார். சில தோட்டக்கலை பயிர்களையும் சோதனை அடிப்படையில் இத்திட்டவரம்புக்குள் கொண்டு வந்திருப்பதாகவும் அவர் கூறினார். #WildAnimalAttack #PradhanMantriFasalBimaYojna #RadhaMohanSingh
செங்கோட்டை அருகே மேற்குத் தொடர்ச்சி மலையடிவார பகுதியில் சமீப காலமாக காட்டு யானைகள் அட்டகாசம் செய்து வருகின்றன. வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து காட்டுக்குள் விரட்டினாலும் மீண்டும் மீண்டும் யானை கூட்டம் அடிவாரத்துக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு வடகரை பகுதியில் வயலுக்குள் புகுந்து வாழை, தென்னை மரங்களை சேதப்படுத்தின. இந்த நிலையில் இன்று காலையில் அடவிநயினார் அணைக்கட்டு அருகேயுள்ள சம்பு ஓடை பகுதிக்குள் 3 காட்டு யானைகள் புகுந்தன. இப்பகுதியில் விவசாயிகள் ஏராளமான ஏக்கரில் நெல்பயிர் சாகுபடி செய்துள்ளனர்.
இந்த தோட்டங்களுக்குள் நுழைந்த யானைகள் ஒரு ஏக்கரில் பயிர்களை மிதித்து சேதப்படுத்தியது. உடனே அப்பகுதி விவசாயிகள் அங்கு திரண்டு யானைகளை காட்டுக்குள் விரட்டியடித்தனர். இதுபற்றி விவசாயிகள் கூறுகையில்,” காட்டு யானை கூட்டங்கள் கடந்த 8 மாதமாக இரவு நேரங்களில் தோட்டத்துக்குள் புகுந்து தென்னை, வாழை பயிர்களை நாசம் செய்து வருகின்றன. யானைகளை வனப் பகுதிக்குள் விரட்ட பல மாதங்கள் கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இது தொடர் கதையாக உள்ளது. எனவே உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். செங்கோட்டை பகுதியில் தொடரும் யானைகள் அட்டகாசத்துக்கு வனத்துறையினர் நிரந்தர தீர்வு காணவேண்டும்“ என்றனர். #tamilnews