என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Crop loan"
- நகை இல்லாமல் பயிர்க்கடன் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
- கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகளால் வழங்கப்பட்ட மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை கள் குறித்து வேளாண்மை துணை இயக்குநர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் எடுத்துக் கூறினார். உழவன் செய லியை பதிவிறக்கம் செய்ய வும், அதன் பயன்பாடு குறித்து எடுத்துரைக்கவும் அனைத்து வேளாண்மை உதவி இயக்குநர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டது.
தோட்டக்கலை துறையின் கீழ் இருக்கும் அனைத்து பண்ணைகளிலும் நன்றாக விளைந்த நாற்றாங்கால்கள் உரிய நேரத்தில் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மிளகாய் மற்றும் தக்காளி நாற்றுக்கள் பருவ காலத்தில் கிடைக்க வழிவகை செய்யப் பட்டுள்ளதாகவும், வரும் காலங்களில் வருவாய் துறை அலுவலர்களால் வழங்கப் படும் அடங்கலுடன், ஒப்பம் செய்யப்பட்ட நகலும் சேர்த்து விவசாயிகளுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளில் உள்ள சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டு, தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் கொப்பரைத் தேங்காய் உலர்த்தும் கருவி, வெட்டும் கருவி, மரம் ஏறும் கருவி ஆகியவற்றை மானி யத்தில் வழங்க வேண்டி அரசுக்கு பரிசீலனை அனுப்பப்பட உள்ளது என்றும் கூட்டுறவுத் துறை மூலம் அனைத்து கூட்டுறவு கடன் சங்கங்களிலும் தேவையான அளவில் யூரியா உரம் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவிக் கப் பட்டது.
கூட்டுறவுத்துறையில் நகை இல்லாமல் பயிர்க் கடன் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அதற்கு வழி வகை செய்யப்படும் என்று அவர் பதிலளித்தார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், வேளாண்மை இணை இயக்குநர் கோ.பத்மாவதி, மாவட்ட கலெக்டரிடன் நேர்முக உதவியாளர் நாச்சியார் அம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- நடப்பாண்டில் விவசாய பயிர்கடன் ரூ.17 ஆயிரம் கோடி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
- அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மித்ராவயல் கால்நடை கிளை நிலையத்தில் தரம் உயர்த்தப்பட்ட பார்வை கால்நடை மருந்தகத்தினை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி மேம்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக விவ சாய பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத் திடும் பொருட்டு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப் பட்டு வருகிறது. தற்போது இயற்கை விவசாயம் பெரு மளவில் மதிக்கப்பட்டு போற்றப்பட்டும் வருகிறது.
மேலும் விவசாயிகளின் நண்பனாக திகழ்ந்து வருவது கால்நடைகளாகும். கால் நடைகளின் உடல்நலத்தினை சரிவர பேணிக்காப்ப தற்கென தமிழக அரசால் கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப் பட்டு வருகிறது.
அதன்படி கால்நடை களுக்கான மருத்துவ முகாம்கள் மற்றும் கால்நடை மருந்தகங்கள், கால்நடைக ளுக்கான காப்பீடுகள் உள்ளிட்ட திட்டங்களின் மூலம் கால்நடைகளை பேணிப்பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு வங்கி கடனுதவி களும் வழங்கப்பட்டு வருகிறது. அதில் நடப் பாண்டில் கூட்டுறவு துறையின் சார்பில் 1 லட்சத்து 4 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கிட இலக்கு நிர்ணயித்துள்ளார்கள். அதில் விவசாய கடன் மற்றும் பயிர் கடனுதவி களுக்கு மட்டும் ரூ.17 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் வழங்கப்பட உள்ளது.
அதேபோன்று கால்நடை வளர்ப்போர்களுக்கு பயனுள்ள வகையில் ரூ.14 ஆயிரம் வட்டியில்லா கடனு தவியாகவும் வழங்கப்படு கிறது. இத்திட்டங்களை விவசாயிகள் முறையாக அறிந்து கொள்வதற்கென கிராமப்புறப்பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த ப் பட்டும் வருகிறது.
இவ்வாறு அவர் பேசி னார்.
இந்நிகழ்ச்சியில், தேவ கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால்துரை, சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் சரண்யா, கால்நடைப் பரா மரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர்(பொ) கார்த்திகேயன், உதவி இயக்குநர் (காரைக்குடி) பாலசுப்பிரமணி, முன்னாள் அமைச்சர் தென்னவன், ஆவின் பால்வள தலைவர் சேங்கைமாறன், மித்ராவயல் ஊராட்சி மன்ற தலைவர் ஐஸ்வர்யா, காரைக்குடி வட்டாட்சியர் தங்கமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- விவசாயிகளுக்கு ரூ.200 கோடி வட்டியில்லா பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- இந்த தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 180 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் தமிழக அரசின் வட்டியில்லா பயிர்க்கடன் திட்டம் செயல்ப டுத்தப்பட்டு வருகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலம் நடப்பாண்டு ரூ.200 கோடி வரை கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் போதிய உரம் இருப்பு வைத்து விவசாயிகளுக்கு பயிர்க்கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலம் விவசாயிகளுக்கு தற்போது வரை ரூ.135.30 கோடிக்கு பயிர்க்கடன்கள் வழங்கப்பட்டுள்ளது.
எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி வட்டியில்லா பயிர்க்கடன் பெற்று பயனடைய அனைத்து விவசாயிகளுக்கும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் கடன் தேவை யுள்ள விவசாயிகள் பயிர்க்கடன் பெறுவதற்கு கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் பயிர் அடங்கல், 10(1)சிட்டா, குடும்ப அட்டை நகல், பாஸ்போர்ட் 2 புகைப்படம் ஆகிய வற்றுடன் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நேரில் விண்ணப்பித்து பயிர்க்க டன்கள் பெறலாம்.
கூட்டுறவு சங்கங்களில் இதுவரை பயிர்க்கடன் பெறாத விவசாயிகள் அருகிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உரிய பங்குத்தொகை செலுத்தி புதிய உறுப்பினர்களாக சேர்ந்து பயிர்க்கடன் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.
- மயிலாடுதுறைக்கு என்று புதிய மருத்துவக்கல்லூரி அறிவிக்க வேண்டும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை அடுத்த நலத்துக்குடி கிராமத்திற்கு வருகைதந்த பா.ம.க. தலைவர் அன்புமணி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;-
தமிழ்நாட்டில் ஆண்டு சராசரி மழை 950 மி.மீ, அதில் ஒரே நாளில் சீர்காழியில் 550 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
தமிழ்நாட்டில் பெய்யும் பெரும் அளவு மழை நீர் வடிகாலாக மயிலாடுதுறை மாவட்டம் விளங்குகிறது.
சரிவர தூர்வாரமல் உள்ளதே இதற்கு காரணமாகும். இதனை உடனடியாக பேரிடர் பாதித்த மாவட்ட மாக அறிவித்து ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.
குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்.பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பயிர் கடன்களை ரத்து செய்ய வேண்டும்.
நாங்கள் எந்த கட்சியிலும் கூட்டணியில் இல்லை.மயிலாடுதுறைக்கு என்று புதிய மருத்துவக் கல்லூரி அறிவிக்க வேண்டும்.
ஆன்லைன் விளையா ட்டால் தமிழகத்தில் மேற்கொண்டு உயிரிழ ப்புகள் ஏற்பட்டால்அதற்கு கோப்புகளில் கையெழுத்துயிடாத தமிழக ஆளுநரே பொறுப்பேற்க வேண்டும்.
2026 ஆம் ஆண்டு பா.ம.க தலைமையில் கூட்டணி ஆட்சி தமிழகத்தில் அமையும்.அதற்கு ஏற்றார் போல் 2024 ஆம் ஆண்டிற்கான பாராளுமன்றத் தேர்தலில் தேர்தல் வியூகங்கள் வகுக்கப்படும்.
இட ஒதுக்கீட்டை நூறு விழுக்காடாக ஆக்க வேண்டும், அனைத்து சமுதாயத்திற்கும் சரிசமமாக இட ஒதுக்கீடு பிரித்து தர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, மாவட்ட செயலாளர் பழனிச்சாமி, லன்டன் அன்பழகன், நல்லத்துக்குடி காமராஜ், உள்ளிட்ட முக்கிய பொருப்பாளர்கள் திரளாக கலந்துக் கொன்டனர்.
- கள்ளிக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் இதுவரை ரூ.3.78 கோடி விவசாயிகளுக்கு பயிர்க்கடனாக வழங்கப்பட்டுள்ளது.
- நிகழ்ச்சிக்கு கூட்டுறவு இணை பதிவாளர் சித்ரா தலைமை தாங்கினார்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கள்ளிக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 69 ஆவது கூட்டுறவு வார விழா நடைபெற்றது.
கூட்டுறவு இணை பதிவாளர் சித்ரா தலைமை தாங்கி பேசும்போது,
திருவாரூர் மாவட்டத்தில் இதுவரையில் விவசாயிகளுக்கு பயிர் கடனாக ரூ. 288 கோடியும், கால்நடை பராமரிப்பு துறை சார்பில் ரூ.6.60 லட்சம் கடனாக வழங்கப்பட்டுள்ளது.
கள்ளிக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் இதுவரை ரூ.3. 78 கோடி விவசாயிகளுக்கு பயிர்க்கடனாக வழங்கப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் விவசாயிகள் மாற்றுத்திறனாளி தொழில் தொடங்க உள்ளிட்ட 17.81 லட்சம் கடன் வழங்கப்பட்டு உள்ளது என்றார்.
சரக துணை சார்பதிவாளர் ராமசுப்பு முன்னிலை வகித்தார்.கள்ளிக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் செந்தில்நாதன் வரவேற்று பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாரி முத்து எம்.எல்.ஏ, கலந்து கொண்டு பயனாளிகளுக்கு கடன் தொகைகளை வழங்கி னார். இதில் முத்துப்பேட்டை ஒன்றிய தி.மு.க. செயலாளர் மனோகரன், கள்ளிக்குடி ஊராட்சி மன்ற தலைவர் சுசீலா செந்தில்நாதன், சரக துணை பதிவாளர் பிரபா, கள மேலாளர்கள் சசிகலா மற்றும் கார்த்தி முன்னோடி விவசாயிகள் ஜெயராமன், ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முடிவில் வங்கி செயலாளர் வி.கமலராஜன் நன்றி கூறினார்.
- இதுவரை 50,327 பேருக்கு ரூ.286.27 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது.
- ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் பரிசு வழங்கினார்.
திருவாரூர்:
திருவாரூர்மாவட்டம், திருவாரூர் நகராட்சிக்கு ட்பட்ட தெற்கு வீதியில் நடைபெற்ற 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி கலந்து கொண்டு 1262 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 25 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கி னார்.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் தலைமை வகித்தார். நாகை நாடாளு மன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து, மாவட்ட ஊராட்சித்தலைவர் கோ.பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் அமை ச்சர் தெரிவித்ததாவது, அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவானது ஆண்டு தோறும் நவம்பர்-14ஆம் தேதி முதல் ஆரம்பிக்க ப்பட்டு தொட ர்ந்து ஏழு நாட்கள் நடத்தப்ப ட்டு வருகிறது.இந்தியாவிலேயே முதன் முதலாக கூட்டுறவு வங்கி தொடங்கப்பட்டது தமிழகத்தில் தான். திருவாரூர் மாவட்டத்தில், மத்திய கூட்டுறவு வங்கி ஏதுவுமில்லை.
டெல்டா மாவட்டங்களில் கும்பகோ ணம் மற்றும் தஞ்சாவூர் என இரண்டு மத்திய கூட்டுறவு வங்கிகள் செயல்பட்டு வருகிறது. மானியக்கோரியின் போது திருவாரூக்கு மத்திய கூட்டுறவுவங்கி வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இக்கோரி க்கையின் அடிப்படையில் விரைவில் திருவாரூர் மாவட்டத்திற்கு மத்திய கூட்டுறவு வங்கி திறப்ப தற்கு உண்டான உரிய நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்படும்.
முதலமைச்சர் சில கட்டமைப்புகளுடன் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் முழு நேர நியாய விலைக்கடைகளும், ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் பகுதி நேர நியாய விலைக டைகளும், கழிப்பறை வசதியுடன் கட்டுவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்கள். 2022-2023ஆம் நிதியாண்டில் இதுவரை 50327 நபர்களுக்கு ரூ.286.27 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், திருவாரூர் மாவட்டத்தில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்கள் மூலமாக பண்ணை சாராக் கடன்கள், சிறு வணிகக் கடன்கள், மாற்றுத்திறனாளி களுக்கான கடன்கள், டாம்கோ மற்றும் டாப்செ ட்கோ உள்ளிட்ட கடன்கள் பொதுமக்களுக்கு சிறந்த முறையில் வழங்கப்பட்டு வருகிறது என அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்தார்.
அதனைதொடர்ந்து, சுய உதவிக்குழு கடன், பயிர்க்கடன் என மொத்தம் 1262 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 25 லட்சம் மதிப்பி லான கடனுதவிகளும், சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்களும், பேச்சுப்போ ட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும் அமைச்சர்அர.சக்கரபாணி வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், திருவாரூர் கூட்டுறவு சங்க ங்களின் மண்டல இணை பதிவாளர் சித்ரா, தஞ்சாவூர் கூட்டுறவு இணையத்தின் மேலாண்மை இயக்குநர் ப.உமா மகேஸ்வரி, திருவாரூர் ஒன்றியக்குழு தலைவர் தேவா உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
- இதர அரசுத்துறைகளில் அரசு மானிய திட்டங்களில் பயன்பெற முடியவில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
- விதிமுறைகளை பின்பற்றி உரிமைச்சான்று வழங்க கலெக்டர் உத்தரவிட வேண்டும்.
திருப்பூர்:
விவசாயிகள், கூட்டுறவு சங்கங்களில் பயிர்க்கடன் பெறுவது, விவசாய நகைக்கடன் பெறுவது, மானிய திட்டங்களில் பயன்பெறும் போதும் பல்வேறு வகை நில உடைமை ஆவணங்கள் கேட்கப்படுகின்றன. வருவாய்த்துறை அதிகாரிகள் வழங்கியுள்ள நில உடைமை ஆவணங்களின் நகல்களை சமர்ப்பிக்கின்றனர்.
அனைத்து வகை ஆவணங்கள் இருந்தாலும், வருவாய்த்துறையில் உரிமைச்சான்று பெற்று கொடுக்க வேண்டும் என வங்கிகளும், கூட்டுறவு சங்கங்களும் வற்புறுத்துகின்றன. இதனால் கிராம நிர்வாக அலுவலர், தாசில்தார் ஆகியோரிடம் நில உரிமைச்சான்று பெற்று வழங்கிவந்தனர்.
இந்நிலையில் வருவாய்த்துறையை சேர்ந்த யாரும், நில உரிமைச்சான்று வழங்க கூடாது என கலெக்டர் அதிரடி உத்தரவிட்டுள்ளார். இதனால் கூட்டுறவு சங்கங்கள், வங்கிகள், இதர அரசுத்துறைகளில் அரசு மானிய திட்டங்களில் பயன்பெற முடியவில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து திருப்பூர் விவசாயிகள் கூறியதாவது:-
தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் உரிமை சான்று வழங்கப்படுகிறது. ஆனால் யாருக்கும் உரிமைச்சான்று வழங்க கூடாது என கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மின் வாரிய சேவைகளுக்கு உரிமைச்சான்று கட்டாயம்.
பயிர்க்கடன் பெறுவது, மானிய திட்டங்களில் கடன் பெறுவது என கூட்டுறவு சங்கமும், வங்கிகளும் உரிமைச்சான்று கட்டாயம் வேண்டும் என்கின்றனர். இதனால் நடப்பு ஆண்டு பயிர்க்கடன் பெற முடியாத சூழல் உள்ளது.உரிமைச்சான்று வழங்கக்கூடாது என உத்தரவிடப்பட்டால், எந்த அரசுத்துறையும் உரிமைச்சான்று கேட்கவும் கூடாதென அறிவுறுத்த வேண்டும்.
கூட்டுப்பட்டா, பாகசாசனம் செய்யாத நிலங்களுக்கு, அரசு சேவைகளை பெற, உரிமைச்சான்று கட்டாயம் தேவைப்படும். எனவே, விதிமுறைகளை பின்பற்றி உரிமைச்சான்று வழங்க கலெக்டர் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம் கூறுகையில், உரிமைச்சான்று வழங்குவது தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து கலெக்டர் கவனத்துக்கு கொண்டு சென்று உரிமைச்சான்று தொடர்பான உத்தரவுகள் மறுபரிசீலனை செய்ய பரிந்துரைக்கப்படும் என்றார்.
- விருதுநகர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் பயிர்க்கடன் வழங்கும் முகாம் வருகிற 23-ந் தேதி நடக்கிறது.
- விருதுநகர் மாவட்டத்திற்கு ரூ.190 கோடி பயிர்க்கடன் வழங்க குறியீடு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை ரூ.14.40 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் விருதுநகர் மாவட்டத்திற்கு ரூ.190 கோடி பயிர்க்கடன் வழங்க குறியீடு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை ரூ.14.40 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் மானாவாரி பகுதியில் விவசாய பணிகள் தொடங்கி உள்ள நிலையில் விவசாயிகள் பயிர்க்கடன் பெற எதுவாக பயிர்க்கடன் வழங்கும் முகாம் வருகிற 23-ந் தேதி அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் நடைபெறுகிறது. கணினி சிட்டா நகல், பயிர் சாகுபடி தொடர்பான கிராம நிர்வாக அலுவலர் அடங்கல் சான்று, மத்திய கூட்டுறவு வங்கி சேமிப்பு கனாக்கு எண், ஆதார் அட்டை நகல், எம்மார்ட் கார்டு நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் அருகாமையிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை விவசாயிகள் தொடர்பு கொண்டு கடன் மனு அளித்து பயனடையலாம்.
மேலும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினராக இல்லாத விவசாயிகள் அருகே உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் புதிய உறுப்பினராக சேர்ந்து உரிய ஆவணங்களுடன் மனுவை அளித்து கடன் பெற்று பயனடையலாம். பயிர்க்கடன் வழங்கலில் ஏதாவது சேவை குறைபாடுகள் இருந்தால் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பொது மேலாளர் (9489927001) கடன் பிரிவு உதவி பொது மேலாளர் (9489327006), கடன் பிரிவு மேலாளர் (9489927177) என்ற கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
மேற்கண்ட தகவலை விருதுநகர் மண்டல கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சியை பறிகொடுத்தது. அங்கு ஆட்சியை பிடித்த காங்கிரஸ் கட்சி, விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது.
இதனால், விவசாயிகள், காங்கிரசுக்கு ஆதரவாக திரும்பும் நிலை ஏற்படும் என்று பா.ஜனதா கருதுகிறது. 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில், விவசாயிகள் பிரச்சினை முக்கிய இடத்தை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, விவசாயிகளை கவரும் வகையிலான அறிவிப்புகளை வெளியிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அதன்படி, விவசாயிகளின் பயிர் கடன்களுக்கு வட்டியை முற்றிலுமாக தள்ளுபடி செய்யும் திட்டத்தை அறிவிப்பது பற்றி பரிசீலித்து வருகிறது. தற்போது, விவசாயிகளுக்கு 7 சதவீத வட்டியில் ரூ.3 லட்சம்வரை குறுகிய கால பயிர் கடன் அளிக்கப்படுகிறது. உரிய நேரத்தில் கடனை திருப்பி செலுத்தினால், 3 சதவீத வட்டி தள்ளுபடி செய்யப்படுகிறது.
இந்நிலையில், உரிய தேதிக் குள் பயிர் கடனை திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு மீதி 4 சதவீத வட்டியையும் தள்ளுபடி செய்யும் திட்டத்தை அறிவிக்கலாமா? என்று மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
ஏற்கனவே, வட்டி தள்ளுபடி மூலம் மத்திய அரசுக்கு ஓராண்டுக்கு ரூ.15 ஆயிரம் கோடி சுமை ஏற்பட்டு வருகிறது. வட்டியை முற்றிலுமாக தள்ளுபடி செய்தால், இந்த சுமை ரூ.30 ஆயிரம் கோடியாக உயரும் அபாயம் உள்ளது.
விவசாயிகளுக்கு மற்றொரு சலுகையாக, உணவு தானிய பயிர்களின் காப்பீட்டுக்கு அவர்கள் செலுத்தி வரும் பிரிமியம் தொகையை தள்ளுபடி செய்யவும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
இயற்கை காரணிகளால் பாதிக்கப்படும் பயிர்களுக்கு காப்பீடு வழங்கும்வகையில், ‘பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா’ என்ற பயிர் காப்பீட்டு திட்டம், 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது. இதில், விவசாயிகளிடம் இருந்து 2 சதவீதம், 1.5 சதவீதம், 5 சதவீதம் என பயிர்களுக்கு ஏற்ப குறைவான பிரிமியம் தொகையே வசூலிக்கப்பட்டு வருகிறது. மீதி பிரிமியத்தை மத்திய-மாநில அரசுகள் ஏற்று வருகின்றன.
இனிமேல், விவசாயிகள் செலுத்தும் சொற்ப பிரிமியத்தையும் தள்ளுபடி செய்ய மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதனால், அவர்கள் ஓராண்டுக்கு செலுத்தும் ரூ.5 ஆயிரம் கோடி பிரிமியத்தை மத்திய அரசே ஏற்க வேண்டி இருக்கும்.
அத்துடன், நடப்பு நிதியாண்டில், விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கடன் அளவை ரூ.11 லட்சம் கோடியாக மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.
விவசாயிகளுக்கான சலுகைகளை வகுப்பது பற்றி உயர்மட்ட அளவில் ஆலோசனை கூட்டங்களை மத்திய அரசு நடத்தி வருகிறது. புத்தாண்டு பரிசாக இத்திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது.#centralgovernment
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்