search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cure"

    • இவருக்கு எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியது.
    • நீலாம்பாள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராசு (வயது 60 )கூலி தொழிலாளி.இவர் கடந்த 20-ந் தேதி சொந்த வேலையின் காரணமாக தனது இருசக்கர வாகனத்தில் சின்ன சேலம் சென்று மீண்டும் நல்லாத்தூர் கிராமத்தில் உள்ள வீட்டிற்கு செல்ல கச்சிராயபாளையம் சாலையில் உள்ள ரைஸ் மில் அருகே சென்று கொண்டிருந்த போது இவருக்கு எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதி யது. இதில் தங்கராசு தலை மற்றும் உடல் பகுதியில் பலத்த அடிப்பட்டு கோயமுத்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலன் அளிக்காமல் தங்கராசு பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து அவரது மனைவி நீலாம்பாள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • இரட்டை சகோதரிகளும் தங்களது விபரீத காதலை ஒரே வாலிபருடன் வளர்த்து வந்தனர்.
    • காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மனவேதனை அடைந்த இரட்டைசகோதரிகள் மற்றும் மகேஷ் ஆகிய 3 பேரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.

    திருவள்ளூர்:

    திருவாலங்காடு அருகே உள்ள ஒரத்தூர் கிராமத்தை சேர்ந்த 15 வயதுடைய இரட்டை சகோதரிகள் 10-ம் வகுப்பு படித்து முடித்து உள்ளனர். பிளஸ்-1 படிக்க இருந்தனர்.

    இவர்கள் இருவரும் உறவினரான அதே பகுதியில் வசித்து வரும் மகேஷ் (22) என்பவரை காதலித்தனர். அவரும் இரட்டை சகோதரிகளை காதலிப்பதாக கூறி இருவரிடமும் நெருங்கி பழகினார். மகேஷ் ஐ.டி.ஐ. படித்து விட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இரட்டை சகோதரிகளும் தங்களது விபரீத காதலை ஒரே வாலிபருடன் வளர்த்து வந்தனர். இந்த விவகாரம் இருவீட்டாரின் பெற்றோருக்கும் தெரிந்தது. இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மகேசையும், இரட்டை சகோதரி மாணவிகளையும் பெற்றோர் கண்டித்து அறிவுரை கூறினர். எனினும் அவர்களது காதல் தொடர்ந்து நீடித்து வந்தது.

    இந்நிலையில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மனவேதனை அடைந்த இரட்டைசகோதரிகள் மற்றும் மகேஷ் ஆகிய 3 பேரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.

    இதையடுத்து நேற்று மாலை அவர்கள் அப்பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆறு அருகே சென்று கொக்கு மருந்து சாப்பிட்டு மயங்கி விழுந்தனர்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர்கள் 3 பேரையும் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதில் இரட்டை சகோதரி மாணவிகளில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொரு மாணவி மற்றும் மகேஷ் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களது நிலைமையும் மோசமாக உள்ளது. இச்சம்பவம் திருவாலங்காடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக திருவாலங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.
    • செல்லும் வழியிலேயே ருத்திர மூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார்.

    முத்துப்பேட்டை:

    பட்டுக்கோட்டை அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் ருத்திர மூர்த்தி (வயது 27).

    பொன்னவராயன் கோட்டை கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் மனைவி தனலட்சுமி (32) உள்பட பலரும் முத்துப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் ஏஜென்சியில் வேலை பார்த்து வருகின்றனர்.

    இந்தநிலையில், நேற்று பணிகள் முடிந்து ருத்திர மூர்த்தி தனது மோட்டார் சைக்கிளில் ஊர் திரும்ப கிளம்பினார்.

    அவருடன் தனலட்சுமியும் வருவதாக கூறியதையடுத்து இருவரும் பைக்கில் முத்துப்பேட்டையிலிருந்து பட்டுக்கோட்டை நோக்கி சென்றுக்கொண்டிருந்தனர்.

    அப்போது, தம்பிக்கோட்டை பாமணி ஆற்றுப்பாலம் அருகே பஞ்சராகி நின்ற காரை முந்தி செல்ல முயன்ற போது எதிர்பாராத விதமாக எதிரே முத்துப்பேட்டை நோக்கி வந்த கார் மீது மோட்டார் சைக்கிள் மோதியது.

    இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.

    உடனே, ஆம்புலன்ஸ் மூலம் இருவரும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே ருத்திர மூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார்.

    மேலும், படுகாயமடைந்த தனலட்சுமி மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ருத்திர மூர்த்தி உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்ண்டுகொண்டு வருகின்றனர்.

    • சின்னசேலம் கலவர கல்வீச்சில் காயம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் போலீசாருக்கு அமைச்சர்கள் நேரில் சென்று ஆறுதல் கூறினர்.
    • அலுவலகங்களில் இருந்த சான்றிதழ்கள் முற்றிலும் எரிந்து நாசமானதை பார்வையிட்டனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி இறப்பால் பள்ளியில் வன்முறை சம்பவம் நடைபெற்றது. இந்த கலவரத்தில் போலீசார் பலர் காயம் அடைந்தனர். அவர்கள் கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி மற்றும்தொழிலாளர்கள் நலன் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அமைச்சர்கள் வகுப்பறைகள், அலுவலகங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். அலுவலகங்களில் இருந்த சான்றிதழ்கள் முற்றிலும் எரிந்து நாசமானதை பார்வையிட்டனர். மேலும் அலுவலகம் எதிரில் நிறுத்தப்பட்டிருந்த கார் பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகள் ஆகியவை முற்றிலும் எறிந்து போனதையும், கட்டிடங்களுக்கு தீ வைத்துக் கொளுத்த ப்பட்டிருப்பதையும் பார்வையிட்டனர். தொடர்ந்து மாணவி ஸ்ரீமதி தங்கி இருந்த 3-வது மாடியில் உள்ள அறையை பார்வையிட்டனர்.

    அங்கிருந்து எப்படி கீழே விழுந்திருப்பார், எங்கே விழுந்தார் என்பது குறித்தும் அதிகாரியிடம் கேட்டறிந்தார். இதேபோல் பள்ளியில் சுவற்றில் ரத்தக்கறை உள்ளதாக சமூக வலைதலங்களில் கூறப்பட்டது குறித்து அமைச்சர் எ.வ. வேலு கேட்டறிந்தார். அதற்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் கடந்த 2019 இல் இருந்து இந்த கரை இருப்பதாக கூறினர். தொடர்ந்து ஆய்வு முடித்து விட்டு அமைச்சர்கள் புறப்பட்டபோது அங்கு வந்த சுமார் 20க்கும் மேற்பட்ட பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் அமைச்சரை சந்தித்து எங்கள் பிள்ளைகள் இதே பள்ளியில் படிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர் இது குறித்து முதல்வரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர்கள் உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அப்போது கல்வீச்சில் காயம் அடைந்து சிகிச்சை பெறும் போலீசாருக்கு அமைச்சர் நேரில் ஆறுதல் கூறினர். அப்போதுகாவல்துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் ஒழுங்கு) தாமரைக்கண்ணன், எம்.எல்.ஏ.க்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன், மணிக்கண்ணன், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் பனமரத்துப்பட்டி ராஜேந்திரன், மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

    ×