என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Currency"
- பாகிஸ்தானில் ஏழ்மையில் இருக்கும் குடிமக்களை இழிவுபடுத்துவதாக சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
- 5 ஆண்டுகள் கேப்டனாக இருந்தும் பாபர் அசாமுக்கு எப்படி நடந்துகொள்வது என்று தெரியவில்லை.
பாகிஸ்தான் விக்கெட் கீப்பர்-பேட்டர் அசம் கான் ஒரு பஸ் பயணத்தின் போது சக வீரர்களுடன் 'உணர்ச்சியற்ற' வீடியோவை உருவாக்கினார்.
அந்த வீடியோவில் அவர் பணத்தால் வியர்வையைத் துடைப்பதைக் காணலாம். அவரது நகைச்சுவையின் ஒரு பகுதியாக, கிரிக்கெட் வீரரும் தனது கேப்டன் பாபர் ஆசாமுக்கு பதிலளிக்கும் போது அதையே செய்வதைப் பற்றி தற்பெருமை செய்வது போல் காட்டினார்.
பாகிஸ்தான் கேப்டன் அசம் கான் தனது முகத்தை கரன்சி நோட்டுகளால் துடைக்கும் வீடியோவைப் பகிர்ந்ததை அடுத்து ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பாபர் ஆசாமை விமர்சித்து பேசி வருகின்றனர்.
சர்ச்சைக்குரிய வீடியோ, பாகிஸ்தானில் ஏழ்மையில் இருக்கும் குடிமக்களை இழிவுபடுத்துவதாக சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இந்த நடவடிக்கை அவரது அருகாமையில் இருந்த சக ஊழியர்களிடமிருந்து அதிக சிரிப்பலை ஏற்படுத்தியிருந்தாலும், இது சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் மத்தியில் பரவலான சீற்றத்தை ஈர்த்தது. ஒரு குறிப்பிட்ட சமூக ஊடகப் பயனர், ஆசம் கானின் 'உணர்ச்சியற்ற' செயல் தற்போது வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள 'ஏழை பாகிஸ்தானிய' குடிமக்களை இலக்காகக் கொண்டது என்று கூறினார்.
இன்னும் சிலர், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் உண்மையில் உணர்ச்சியற்ற முட்டாள்கள். பாகிஸ்தானில் வெயிலின் தாக்கத்தால் மக்கள் இறக்கின்றனர். இவர்கள் இங்கிலாந்தில் அமர்ந்து ஏழை பாகிஸ்தானியர்களை கேலி செய்து பணத்தால் வியர்வையை துடைக்கிறார்கள். 5 ஆண்டுகள் கேப்டனாக இருந்தும் பாபர் அசாமுக்கு எப்படி நடந்துகொள்வது என்று தெரியவில்லை. என்று பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
- நீங்கள் வாஸ்து தோஷம் உள்ள வீட்டில் இருந்தால், எந்த முன்னேற்றத்தையும் காண முடியாது.
- தினமும் வீட்டில் சாமி கும்பிடும் போது கற்பூரத்தை ஏற்றுவதால் வீட்டின் சுற்றுப்புறம் தூய்மையடைகிறது.
நாம் வாழும் வீடு வாஸ்து சாஸ்திரத்தின் படி இருக்க வேண்டும். ஒருவேளை நாம் குடியிருக்கும் வீட்டில் வாஸ்து குறைபாடுகள் இருந்தால், அது ஒருவரது வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். சரி, வாஸ்து குறைபாடு உள்ள வீட்டை அறிவது எப்படி என்று நீங்கள் கேட்கலாம்.
நீங்கள் வாஸ்து தோஷம் உள்ள வீட்டில் இருந்தால், எந்த முன்னேற்றத்தையும் காண முடியாது, வீட்டில் பிரச்சனைகள் அதிகரிக்கும், பணியிடத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் மற்றும் நிறைய பண பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
இந்த மாதிரியான பிரச்சனைகளை சந்திக்கிறீர்கள் என்றால், வாஸ்து தோஷம் உள்ள வீட்டில் குடியிருக்கிறீர்கள் என்று அர்த்தம். இந்நிலையில் வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள ஒருசில பரிகாரங்களை வீட்டில் செய்வதன் மூலம், வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரித்து, வீட்டில் உள்ள பிரச்சனைகள் சரியாகும். இப்போது அந்த பரிகாரங்கள் என்னவென்பதைக் கண்போம்.
நீங்கள் செடி பிரியர் என்றால், வீட்டில் துளசி செடியை வாங்கி வளர்த்து வாருங்கள். குடியிருக்கும் வீட்டில் துளசி செடியை வளர்ப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் இந்த செடியில் செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவி குடியிருக்கிறார். அதுவும் இந்த துளசி செடியை வீட்டில் பிரதான வாசலில் வைக்க வேண்டும். இப்படி வைப்பதன் மூலம், வீட்டின் நிதி நிலைமை மிகவும் சிறப்பாக இருக்கும்.
பணப்பையை காலியாக வைத்திருக்காதீர் ஜோதிட சாஸ்திரத்தின் படி, நீங்கள் உங்கள் வீட்டில் பணம் வைக்கும் பை அல்லது பெட்டியை எப்போதும் காலியாக வைத்திருக்காதீர்கள். அப்படி வைத்தால், அது வீட்டில் பணம் தொடர்பான பிரச்சனைகளை அதிகரிப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில் பணம் வைக்கும் பையானது லட்சுமி தேவி இருக்கும் இடம். இந்த இடத்தை காலியாக வைத்தால் லட்சுமி தேவி கோபப்படுவாள். எனவே பணப்பையை காலியாக வைத்திருக்காதீர்கள்.
ஜோதிடத்தின் படி, தினமும் வீட்டில் சாமி கும்பிடும் போது கற்பூரத்தை ஏற்றுவதால் வீட்டின் சுற்றுப்புறம் தூய்மையடைகிறது. அதாவது வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் வெளியேற்றப்பட்டு, நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். நேர்மறை ஆற்றல் நிரம்பிய வீட்டில் வாஸ்து தோஷம் எதுவும் இருக்காது. இதன் விளைவாக எவ்வித பணப் பற்றாக்குறையும் ஏற்படாது. எனவே வீட்டில் பணப் பிரச்சனை வரக்கூடாதெனில், தினமும் கற்பூரத்துடன், 1 கிராம்பை வைத்து ஏற்றி வீடு முழுவதும் அதன் புகையை காட்டுங்கள்.
உங்கள் வீட்டில் பண பிரச்சனை அதிகமாக உள்ளதா? அப்படியானால் இரவு தூங்கும் முன் தலையணைக்கு அடியில் ஒரு வெள்ளி நாணயத்தை வையுங்கள். இப்படி செய்வதன் மூலம், புதன் மற்றும் செவ்வாயினால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. ஏனெனில் இவ்விரு கிரகங்களின் தோஷங்களானது ஒருவருக்கு நிறைய கஷ்டத்தை தரும். முக்கியமாக பணப் பிரச்சனையால் அவதிப்பட வைக்கும்.
- நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாநில தலைவர் பி.ஒய். விஜயேந்திரா மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
- மிகப் பெரிய துலாபார நிகழ்ச்சி மாநிலம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
பெங்களூர்:
கர்நாடக மாநிலம் ஹுப்ளி மாவட்டம் ஷிரஹட்டியில் உள்ள பாவைக்யதா சன்ஸ்தான் மஹா பீடமானது பக்கீர் சித்தராமன் மாஹஸ்தசாமியின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டும், யானை சம்பிகாவின் 60-வது வருட மடத்திற்கு சேவையாற்றுவதையும் குறிக்கும் வகையிலும் ஒரே நேரத்தில் துலாபார நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. இந்த நிகழ்ச்சி அங்குள்ள நேரு மைதானத்தில் நடைபெற்றது.
இங்கு மிகப்பெரிய தராசு கட்டி தொங்கவிடப்பட்டு மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு அதில் மடத்து யானை நிறுத்தப்பட்டது. பின்னர் யானையின் முதுகில் தங்க முலாம் பூசப்பட்ட பக்கீர் சித்தராமன் மாஹஸ்தசாமி சிலை வைக்கப்பட்டது.
இதையடுத்து பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட எடை தராசின் ஒரு பக்கத்தில் யானை சம்பிகாவும் மறுபக்கத்தில் 5,555 கிலோ 10 ரூபாய் நாணயங்களுடன் அவற்றின் கூட்டு எடைக்கு சமமாக வைக்கப்பட்டது. ரிசர்வ் வங்கியிடமிருந்து 376 பைகளில் வாங்கப்பட்ட ரூ.73,40,000 மதிப்புள்ள நாணயங்கள் துலாபாரத்திற்கு பயன்படுத்தப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி, மாநில அமைச்சர்கள் எச்.கே.பாட்டீல், எம்.பி.பாட்டீல், ஈஸ்வர் காந்த்ரே, கர்நாடக முன்னாள் முதல்-மந்திரிகள் பசவராஜ் பொம்மை, ஜெகதீஷ் ஷெட்டர், கர்நாடக சட்டப் பேரவை தலைவர் பசவராஜ் ஹோரட்டி, பா.ஜ.க. மாநில தலைவர் பி.ஒய். விஜயேந்திரா மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
44 அடி நீளம், 30 அடி உயரம், 20 அடி அகலம் கொண்ட தராசு ரூ. 20 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புடையது. இந்த தராசு நிரந்தரமாக மடத்தில் காட்சிக்கு வைக்கப்படும் என ஏற்பாட்டு் குழு உறுப்பினர் சந்திரசேகர் கோகாக் தெரிவித்தார்.
கர்நாடக மாநிலத்தில் நடந்த இந்த மிகப் பெரிய துலாபார நிகழ்ச்சி மாநிலம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
- திருச்சி விமான நிலையத்தில் 23 லட்சம் வெளிநாட்டு கரன்சி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது
- மலேசியாவிற்கு கடத்தவிருந்த நிலையில் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது
கே.கே.நகர்,
திருச்சி விமான நிலையத்திலிருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தி வருவதும் அதனை தடுக்கும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகளும், மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இருப்பினும் திருச்சி விமான நிலையத்தில் அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவது வாடிக்கையாக உள்ளது.இதே போல் வெளிநாட்டு கரன்சி மற்றும் அரியவகை ஆமை, பாம்பு, பல்லிகள் கடத்தி வருவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் நேற்று இரவு திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஏர் ஏசியா விமானம் மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு புறப்பட தயாராக இருந்தது.இந்த விமான பயணிகளை மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது திருச்சியைச் சேர்ந்த ராம் பிரபு (வயது 39). என்பவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரை தனியே அழைத்து சோதனை செய்தனர்.அப்போது அவரிடம் 23 லட்சம் மதிப்பிலான சவுதி ரியால் இருப்பது தெரியவந்தது.இதனை தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டு கரன்சி மாற்றத்துக்கு கட்டாயப்படுத்தும் புரோக்கர்கள்
- அப்பாவி மக்களை காப்பாற்ற கோரிக்கை
திருச்சி:
சர்வதேச விமான நிலை–யங்களில் வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளை (கரன்சி) மாற்றுவதற்கு பணம் மாற்ற கவுண்டர்கள் உள்ளன. திருச்சி விமான நிலையத்திலும் அதுபோன்ற கவுண்டர்கள் இரண்டு செயல்பட்டு வருகின்றன. இந்தநிலையில் அங்கீக–ரிக்கப்படாத அந்நிய செலா–வணி தரகர்கள் முனை–யத்தில் இருந்து வெளி–யேறும் இடத்தில் காத்தி–ருந்து பயணிகளை வெளி–நாட்டு கரன்சி பரி–மாற்ற பரிவர்த்தனைகளுக்கு கட்டாயப்படுத்து–வதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து புதுக்கோட்டையைச் சேர்ந்த விமான பயணி ஒருவர் கூறுகையில், இந்த சட்ட விரோத பணம் மாற்ற பரிவர்த்தனை பாது–காப்பு துறையினருக்கு முன்பாகவே நடக்கின்றன. சி.சி.டி.வி. கேமராக்கள் இருந்தபோதிலும் சட்ட–விரோத பண பரிமாற்றம் தொடர்ந்து நடந்து வருகிறது. விமான நிலைய வளா–கத்திலேயே தினமும் லட்சக் கணக்கான ரூபாய் கைமா–றுகிறது. இரவு நேரங்களில் அதிகம் நடக்கிறது. இது மாதிரியான புரோக்கர்களை எப்படி நம்புவது என்று பயணிகளுக்கு தெரிய–வில்லை. பண பரிவர்த்த–னைக்கு எந்த ரசீதும் அவர்கள் தருவதில்லை. இரண்டு வருடம், மூன்று வருடம் கஷ்டப்பட்டு வெளி–நாட்டிலிருந்து சம்பாதித்து விட்டு இங்கு திரும்புகிறோம். இந்த விரோத பண பரிவர்த்தனையால் பெருந்தொகையை புரோக்கர்களிடம் இழக்க நேரிடு–கிறது என கூறினார். இன்னொரு பயணி கூறும்போது, கரன்சியின் சந்தை மதிப்பை குறைத்து காட்டி எங்களை ஏமாற்று–கிறார்கள். கரன்சி பரிமாற்றத்துக்கான கமிஷன் அதிக–மாக இருக்கிறது. புரோக்கர்கள் எங்களை துரத்தி வருவதால் எங்க–ளால் ஒன்றும் செய்ய இயல–வில்லை என்றார். சமூக ஆர்வலர் ஒருவர் கூறும்போது, இதுபோன்ற சட்ட விரோத பண பரிமாற்ற புரோக்கர்கள் விமான நிலைய அதிகாரிகள் மற்றும் காவல் துறையினருடன் கைகோர்த்துள்ளனர். பிரச் சினை விஸ்வரூபம் எடுக்கும் போது சம்பந்தம் இல்லாதவர்கள் மீது நட–வடிக்கை எடுக்கிறார்கள். இதனை விமான நிலைய அதிகாரிகளும் பாதுகாப்புத் துறையினரும் தடுத்து நிறுத்தி அப்பாவி மக்களை பாதுகாக்க வேண்டும் என்றார்.
- கோவில் கொடிமரம் அருகே திருஞானசம்பந்தர் எழுந்தருள, ஓதுவார்கள் உலவாக்கிழி பதிகம் பாடினர்.
- பக்தர்களுக்கு சாமியிடம் வைத்து பூஜிக்கப்பட்ட நாணயங்களை குரு மகா–சன்னிதானம் பிரசாதமாக வழங்கினார்.
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா, திருவாவடுதுறையில் தேவாரபாடல் பெற்ற திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்றிலும் சிறப்புடைய அதுல்ய குஜாம்பிகை உடனாகிய கோமுக்தீஸ்வரர் கோவில் உள்ளது.
ஆண்டுதோறும், இக்கோவிலில் தை ரதசப்தமி விழாவின் 5-ஆம் நாள் திருஞானசம்பத்திற்கு இறைவன் பொற்கிழி அளிக்கும் ஐதீக நிகழ்வு நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்தாண்டு ரதசப்தமி விழா கடந்த 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 5-ஆம் நாளான நேற்று பொற்கிழி அளிக்கும் ஐதீக விழா நடைபெற்றது.
விழாவையொட்டி கோவில் கொடிமரம் அருகே திருஞானசம்பந்தர் எழுந்தருள, ஓதுவார்கள் உலவாக்கிழி பதிகத்தை பாடினர். தொடர்ந்து சாமி சன்னதியில் இருந்து பூதகனம் பொற்கிழியை சுமந்து வந்து பீடத்தில் வைத்தது.
இதனை அடுத்து திருஞானசம்பந்தருக்கு சாமி பொற்கிழி வழங்கும் ஐதீக நிகழ்வு திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் திருமுறை இசை அறிஞர் 4 பேருக்கு தலா ரூ.5 ஆயிரம் அடங்கிய பொற்கிழியை குருமகா சன்னிதானம் அளித்து ஆசியுரை வழங்கினார்.
தொடர்ந்து, பக்தர்களுக்கு சாமியிடம் வைத்து பூஜிக்கப்பட்ட நாணயங்களை குரு மகா–சன்னிதானம் பிரசாதமாக வழங்கினார்.
விழாவில் ஆதீன கட்டளை தப்பிரான்கள், ஆதீன கண்காணிப்பாளர் சண்முகம் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- வங்கிகளின் ஏ.டி.எம்., மையங்களில் சில நேரங்களில், பணம் எடுக்க முடியாமல் நெட் ஒர்க் பிரச்சினை ஏற்படுகிறது
- ஏ.டி.எம்., எந்திரங்களில், பெரும்பாலும் 500 ரூபாய் நோட்டுகள் தான் வருகிறது.
அவினாசி :
தன்னார்வ நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகளுடன், திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், காலாண்டு கூட்டம் நடத்தினார்.
இதில் கன்ஸ்யூமர்ஸ் கேர் அசோசியேசன் சார்பில் அதன் தலைவர் காதர்பாட்சா, பொது செயலர் ராமலிங்கம், நியமன செயலர் கிறிஸ்டோபர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் முன்வைத்த கோரிக்கை வருமாறு:-சில வங்கிகளின் ஏ.டி.எம்., மையங்களில் சில நேரங்களில், பணம் எடுக்க முடியாமல் நெட் ஒர்க் பிரச்சினை ஏற்படுகிறது. இதனால் பென்ஷனர்கள், மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். ஏ.டி.எம்., எந்திரங்களில், பெரும்பாலும் 500 ரூபாய் நோட்டுகள் தான் வருகிறது.
சில்லரை செலவினங்களுக்கு தேவையான10, 20, 50, 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் கிடைப்பதில்லை. இதுவும் பல வகைகளில் பிரச்சினையாகவே உள்ளது.எனவே அருகேயுள்ள வங்கி கிளைகளில் 500 ரூபாய் நோட்டுகளுக்கு சில்லரை நோட்டு தரும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது, ஏ.டி.எம்., மையங்களில் சில்லரை ரூபாய் நோட்டுகள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.கூட்டத்தில் நுகர்வோர் சார்ந்த செயல்பாடுகளில் சிறப்புற செயல்பட்டமைக்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்ட பாராட்டுச்சான்று, விருது, கேடயம் ஆகியவற்றை சங்க தலைவர் காதர்பாட்சா பெற்று கொண்டார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்