என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Curry"
- சுத்தம் செய்து வைத்துள்ள மட்டன் கொத்துக்கறியை போட்டு நன்கு வேக வைக்கவும்.
- வறுத்து எடுத்ததை ஒரு மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளவும்.
தேவையான பொருட்கள்:
நல்லெண்ணெய் - பொறிக்க
மட்டன் கொத்துக்கறி - 1/2 கிலோ
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - காரத்திற்கு ஏற்ப
இஞ்சி பூண்டு விழுது - தேவையான அளவு
கடலை பருப்பு 100 கி
உளுந்தம் பருப்பு - 100 கி
மிளகு - 50 கிராம்
கருப்பு எள்ளூ - 50 கி
சீரகம் - 50 கி
வரமிளகாய் - 50 கி
இட்லி மாவு - 1 கிலோ
செய்முறை:
• முதலில் மட்டன் கொத்துக்கறியை நன்கு அலசி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
• ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி நன்கு சுத்தம் செய்து வைத்துள்ள மட்டன் கொத்துக்கறியை போட்டு நன்கு வேக வைக்கவும்.
• இதனுடன் உப்பு, மஞ்சள் தூள், காரத்திற்கு ஏற்ற மிளகாய் தூள், தேவையான அளவு இஞ்சி பூண்டு விழுது போன்றவற்றை சேர்ந்து அதனுடைய பச்சை வாடை போகும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
• ஒரு கடாயில் கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, மிளகு, கருப்பு எள்ளு, சீரகம், வரமிளகாய் போன்றவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
• வறுத்து எடுத்ததை ஒரு மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளவும்.
• ஒரு இட்லி பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இட்லி தட்டுகளில் மேல் ஒரு துணி போட்டு, முதலில் இட்சி மாவை 1/2 கரண்டி ஊற்றவும்.
• பின்னர் தயாரித்து வைத்துள்ள மட்டன் கொத்து கறி கலவையை சிறிதளவு வைக்கவும்.
• பின்னர் மறுபடியும் 1/2 கரண்டி அளவு மாவை ஊற்றி பின்னர் இட்லி தட்டுகளை இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
• பின்னர் வெந்த இட்லிகளை தனியாக எடுத்து வைக்கவும்.
• பின்னர் ஒரு தோசை கல்லை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றி தயாரித்து வைத்திருக்கும் பொடியை போட்டு சிறு தீயில் கிளறவும்.
• பின்னர் தயாரித்து வைத்துள்ள கறி இட்லியை பொடி கலவையில் போட்டு பிரட்டி எடுக்கவும்.
• இதோ தமிழ்நாட்டு ஸ்டைல் கறி இட்லி ரெடி.
- கறிவிருந்து பரிமாறும் அன்னதான நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.
- கறிவிருந்து நிகழ்ச்சியில் பெண்களுக்கு அனுமதியில்லை.
திருச்சுழி:
மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள கோவில்களில் திருவிழாக்கள் என்றாலே கிடாய் வெட்டு, கறிவிருந்து மிகவும் பிரபலமானதாகும். குறிப்பாக கிராம கோவில்களில் 100-க்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு ஆண்களுக்கு மட்டுமே அன்னதானம் வழங்குவதும் ஆங்கேங்கே அவ்வப்போது நடைபெறுவது வழக்கமாகும்.
அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகேயுள்ள தமிழ்ப்பாடி கிராமத்தில் ஸ்ரீ மந்தக்குமார சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் பொங்கல் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழாவை யொட்டி பொதுமக்கள் பொங்கல் வைத்து சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றது.
இதனையடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்தப் பட்ட சுமார் 150-க்கும் மேற்பட்ட ஆட்டு கிடாய் களை தமிழ்ப்பாடி ஸ்ரீ மந்தக்குமார சுவாமிக்கு பலியிட்டு உணவாக சமைத்து காலை முதலே பக்தர்களுக்கு சுடச்சுட கிடாய் கறிவிருந்து பரிமாறும் அன்னதான நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட இந்த கறிவிருந்து நிகழ்ச்சியில் பெண்களுக்கு அனுமதியில்லை. வயதான பெண்கள், குழந்தைகள் இந்த கறிவிருந்து அன்னதான நிகழ்ச்சியில் கலந்துகொள்ளலாம். பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட இந்த கறிவிருந்து அன்னதான நிகழ்ச்சியில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து உண்டு பசியாறி சென்றனர்.
- எப்படி ரூ.600-க்கு விற்கப்படுகிறது என்பதற்கு அதிர்ச்சி தகவல் கிடைத்தது.
- உயிரோடு உள்ள ஆடுகளை வெட்டி பயன்படுத்துவது தான் பாதுகாப்பானதாகும்.
சென்னை:
சென்னை புளியந்தோப்பில் மாநகராட்சியின் இறைச்சி கூடம் செயல்பட்டு வருகிறது. அங்கு ஆடு மற்றும் மாடுகள் வெட்டப்பட்டு மொத்தமாக விற்பனை செய்யப்படுகிறது. சென்னை நகரில் உள்ள பெரும்பாலான இறைச்சி கடைகளுக்கு இங்கிருந்து தான் விற்பனைக்கு இறைச்சி கொண்டு செல்லப்படுகிறது.
மற்ற நாட்களைவிட ஞாயிற்றுக்கிழமைகளில் 5 ஆயிரம் ஆடுகள் அங்கு வெட்டப்படுகின்றன. கிலோ ரூ.700 வரை விற்கப்படுகிறது. ஆனால் இறைச்சி கடைகளில் ஆட்டு இறைச்சி கிலோ ரூ.900 வரை விற்கப்படுகிறது.
புளியந்தோப்பு இறைச்சி கூடத்தின் முன் பகுதியில் சிலர் ஆட்டு இறைச்சி விற்பனை செய்து வருகின்றனர். அங்கு கிலோ ரூ.600-க்கு ஆட்டு இறைச்சி கிடைக்கிறது.
மட்டன் கடைகளில் கிலோ ரூ.900-க்கு விற்கும்போது அங்கு எப்படி ரூ.600-க்கு விற்கப்படுகிறது என்பதற்கு அதிர்ச்சி தகவல் கிடைத்தது.
ராஜஸ்தான், சூரத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து ஞாயிற்றுக் கிழமைகளில் விற்பனைக்கு சனிக்கிழமை ஆடுகள் கொண்டு வரப்படும். ஒரு லாரிக்கு 350 ஆடுகள் வீதம் கொண்டு வரும்போது நெரிசலில் சிக்கி அவற்றில் 4 அல்லது 5 ஆடுகள் செத்து விடுவது வழக்கம். ஒரு லாரியில் 5 ஆடுகள் என்றால் 10, 15 லாரிகளில் வரும் போது 50 ஆடுகளுக்கு மேல் வழியில் இறந்து விடுகிறது.
இறந்துபோன ஆடுகளை அந்த பகுதியில் உள்ள சிலர் குறைந்த விலைக்கு வாங்கி, சுத்தம் செய்து பிரீசரில் வைத்து பாதுகாக்கின்றனர்.
மறுநாள் காலையில் அதனை வெட்டி விற்பனைக்கு கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
இறந்த ஆடுகளை பதப்படுத்தி உண்பது சுகாதார மற்றதாகும். உயிரோடு உள்ள ஆடுகளை வெட்டி பயன்படுத்துவது தான் பாதுகாப்பானதாகும்.
ஆனால் இறைச்சி கூடத்தின் முன்பு சிலர் இதனை தொழிலாக செய்து வருகின்றனர். செத்து போன ஆட்டு இறைச்சிக்கும் உயிரோடு வெட்டிய ஆட்டு இறைச்சிக்கும் பார்க்கும் போது வேறுபாடு தெரியாது.
இறைச்சி கடைகளை விட கிலோவிற்கு ரூ.300 குறைவாக கிடைப்பதால் அதனை மக்கள் தெரியாமல் வாங்கி சென்று பயன்படுத்துகின்றனர்.
ஆனால் இதுபோன்ற சாகின்ற ஆடுகளை இறைச்சி கூடத்தில் தூக்கி எறிந்து விடுவார்கள். கூடத்தில் உள்ள வியாபாரிகள் இந்த செயலில் ஈடுபடுவது இல்லை. ஆனால் வெளியே சிலர் கடை வைத்து சுகாதாரமற்ற ஆட்டு இறைச்சி விற்பதை அதிகாரிகள் கண்டு கொள்வது இல்லை.
மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கட்டுப்பாட்டில் தான் இறைச்சி கூடம் முழுவதும் உள்ளது. அப்படி இருக்கும் போது மலிவான விலையில் ஆட்டு இறைச்சி விற்பனை செய்வதை ஏன் தடுக்க முடியவில்லை என்று வியாபாரிகள் கேள்வி எழுப்புகின்றனர்.
- சிறிது நெய் விட்டு சாப்பிட்டால் உப்புமா ருசியாக இருக்கும்.
- கார்ன் பிளவர் மாவு கலந்து லேசான ஈரப்பதத்துடன் வறுத்தெடுத்தால் கோவக்காய் சுவையாக இருக்கும்.
* சாம்பார், ரசம், காரக்குழம்பு போன்றவைகளை தயார் செய்யும்போது அடுப்பில் இருந்து இறக்கி வைக்கும் தருவாயில் அரை டீஸ்பூன் வெல்லம் கலந்தால் சுவை கூடும்.
* கடலைப்பருப்பு, உப்பு, வெங்காயம், பச்சை மிளகாய் போன்றவற்றை நறுக்கிவிட்டு அதனுடன் அரை டீஸ்பூன் ரவையும் கலந்து வடை சுட்டால் மொறுமொறுவென்றும் சுவையாகவும் இருக்கும்.
* எண்ணெய், கடுகு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து அதில் நறுக்கிய முட்டைக்கோஸை போட்டு வதக்கவும். பின்பு அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து தண்ணீரே இல்லாமல் மிதமான தீயில் 5 நிமிடம் மூடி வைத்துவிட்டு இறக்கினால் முட்டைக்கோஸ் பொரியல் சுவையாக இருக்கும்.
* உப்புமா தயார் செய்யும்போது ரவையை பொன்னிறமாக வறுத்து, பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானவுடன் கடுகு, உளுந்தம் பருப்பு, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்பு 1-க்கு 3 மடங்கு தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு, கொதித்தவுடன் வறுத்த மாவை கொட்டி கிளறி, அது வெந்தவுடன் இறக்கவும். அதில் சிறிது நெய் விட்டு சாப்பிட்டால் உப்புமா ருசியாக இருக்கும்.
* புளிக்குழம்பு தயார் செய்யும்போது முதலில் தேவையான அளவு தனியா, வர மிளகாய், வெந்தயம் போன்றவற்றை பொன்னிறமாக வறுக்கவும். அந்த கலவையை மிக்சியில் அரைக்கவும். பின்னர் வாணெலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு, சிறிதளவு கடலைப்பருப்பு போட்டு தாளிக்கவும். அதில் புளிக்கரைசலை ஊற்றி கிளறவும். பின்பு மிக்சியில் அரைத்த கலவையை கொட்டி உப்பு, மஞ்சள் சேர்த்துவிட்டு குழம்பு கொதிக்கவும் இறக்கவும். அதனை சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் வாசனை கமகமக்கும்.
* தோசைக்கல்லில் நறுக்கிய கோவக்காயை கொட்டி, அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி வதக்கி, தேவையான அளவு மிளகாய் தூள், உப்பு, கார்ன் பிளவர் மாவு கலந்து லேசான ஈரப்பதத்துடன் வறுத்தெடுத்தால் கோவக்காய் சுவையாக இருக்கும்.
* பாகற்காய் தொக்கு செய்யும்போது பாகற்காயுடன் சிறிதளவு புளிக்கரைசல் சேர்த்து, மிளகாய் தூள், உப்பு போட்டு கொதிக்க விடவும். நன்றாக சுண்டி வந்ததும் சிறிதளவு வெல்லம் சேர்த்தால் கசப்பு தெரியாது. சுவையாகவும் இருக்கும்.
- ‘காய்கறி’ விலை கடும் உயர்வால் ‘கறி’க்கு பொதுமக்கள் மாறினர்.
- இந்த விற்பனையால் இறைச்சி கடைக்காரர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மதுரை
பொதுவாக ஆன்மீகத் திற்கு உகந்ததாக கருதப்படும் கார்த்திகை, மார்கழி மாதங் களில் அசைவ பிரியர்கள் சைவத்திற்கு மாறுவார்கள் என்பதாலும், சபரிமலை யாத்திரை செல்பவர்கள் எண்ணிக்கையை கணக்கில் கொண்டும் காய்கறிகளின் விலை உச்சம் தொடும்.
அதேபோல் சுபமுகூர்த்த நாட்கள் மிகுந்த தை, மாசி வைகாசி, ஐப்பசி மாதங்க–ளில் சராசரியாக காய்கறி–களின் விலை உயரும். மற்ற மாதங்களில் காய்க–றிகளின் விலை குறைவா–கவே இருக் கும்.
ஆனால் தற்போது வழக் கத்திற்கு மாறாக ஆனி மாதத்தில் காய்கறிகளின் விலை எதிர் பாராத அள–வுக்கு புதிய உச்சம் தொட் டுள்ளது. குறிப்பாக தக்கா–ளியின் விலை 100 ரூபாயை தாண்டி–யுள்ளது பேசும் பொருளாக மாறியுள்ளது.
அதேபோல் சின்ன வெங் காயத்தின் விலையும் 100 எட்டி இல்லத்தரசிகளுக்கு பெரும் சுமையை கொடுத் துள்ளது. இதனால் பெரும் பாலான உணவகங்கள் தக்காளியை தவிர்த்து வருகி–றது. அதேபோல் சின்ன வெங்காயத்திற்கு பதிலாக பெரிய வெங்காயத்தை அதிக அளவில் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
இந்தநிலையில் சைவம், அசைவம் இரண்டையும் சாப்பிடுபவர்கள் அசை–வத்திற்கு தற்போது முழுமை–யாக மாறியுள்ளனர். காய்க–றிகளின் விலையை விட இறைச்சி வகைகளின் விலை குறைவாக இருப்ப–தாக கருத்து தெரிவித்துள்ள அவர்கள் காய்கறிகளின் அபரிமிதமான இந்த விலையேற்றம் தங்களது அன்றாட செலவை இரு–மடங்காக்கி விட்டதாக ஆதங்கத்துடன் தெரிவித்து வருகிறார்கள்.
ஞாயிற்றுக்கிழமை விடு–முறை தினமான இன்று காய்கறி மார்க்கெட்டுகள் பெரும்பாலும் வெறிச்சோ–டியே காணப்பட்டன. அதற்கு மாறாக இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அதே–போல் மீன் விற்பனை–யும் இன்று அமோகமாக இருந் தது.
மதுரை மாநகரில் நெல் பேட்டை, தெற்குவாசல், கருப்பாயூரணி, நரிமேடு, காளவாசல், மாட்டுத்தா–வணி, பழங்காநத்தம், மக–பூபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆடு, மாடு, மீன் விற்பனை கடை–களில் ஏராளமானோர் குவிந்தனர்.
இதில் ஆட்டுக்கறியை பொறுத்தவரை எலும்புடன் கிலோ ரூ.700, தனிக்கறி ரூ.800 என்றும், கறிக்கோழி கிலோ ரூ.190, நாட்டுக்கோழி கிலோ ரூ.550 முதல் ரூ.600 என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. சராசரியாக ஆட்டு இறைச் சிக்கு ஒரு கடையில் 10 முதல் 15 ஆடுகள் வரை விற் பனையானது.
அதிரடியான இந்த விற்பனையால் இறைச்சி கடைக்காரர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கருப்பு கொண்டை கடலை - 1 கப்
சின்ன வெங்காயம் - அரை கப்
நறுக்கிய தக்காளி - அரை கப்
பச்சைமிளகாய் - 4
இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
மிளகாய்தூள் - அரை டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 5 டீஸ்பூன்
கல் உப்பு - தேவையான அளவு
தனியா தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
பிரிஞ்சி இலை - 2
கொத்தமல்லிதழை - தேவைக்கு
கொண்டை கடலையை நன்றாக கழுவி 10 மணிநேரம் நீரில் ஊறவைக்கவும்.
கொத்தமல்லி, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அகன்ற பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் சீரகம், பிரிஞ்சி இலை போட்டு அவை பொரிந்ததும் வெங்காயத்தைகொட்டி பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதனுடன் மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து கிளறவும்.
இஞ்சி, பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், மிளகாய் தூள், உப்பு, தனியா தூள் ஆகியவற்றையும் சேர்த்து லேசாக வதக்கவும்.
பின்னர் தக்காளி சேர்த்து கிளறுங்கள்.
தக்காளி குழைய வதங்கியதும் அதைத்தொடர்ந்து கொண்டை கடலையை கொட்டி தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். நன்றாக வெந்தவுடன் கொத்தமல்லி தழையை தூவி இறக்கவும்.
ஆரோக்கிய பலன்: கொண்டை கடலையில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் உடல் எடை மற்றும் கொழுப்பை குறைக்கும். சர்க்கரை நோய்க்கும் நல்லது. இதை தொடர்ந்து உண்பதால் உடல் பொலிவு பெறும். படர் தாமரை போன்ற சரும பிரச்சினை வராமலும் தடுக்கும்.
இறால் - முக்கால் கிலோ,
கடலை மாவு - அரை கப்,
சின்ன வெங்காயம் - 150 கிராம்,
பெரிய வெங்காயம் - 3,
தக்காளி - 4,
மீன் வறுவல் மசாலா - 50 கிராம்,
மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன்,
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - சிறிதளவு,
சோம்பு, சீரகம், கசகசா - தலா ஒரு டீஸ்பூன்,
இஞ்சி - பூண்டு விழுது - 3 டீஸ்பூன்,
தேங்காய் - அரை மூடி,
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
இறாலை நன்றாக சுத்தம் செய்து வெதுவெதுப்பான நீரில் முக்கி எடுத்து தனியே வைக்கவும்.
கொத்தமல்லி, சின்னவெங்காயம், வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சின்ன வெங்காயம், சோம்பு, சீரகம், கசகசா ஆகியவற்றை மிக்ஸியில் விழுதாக அரைத்து கொள்ளவும்.
தேங்காயை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கடலை மாவை போட்டு அதனுடன் மீன் வறுவல் மசாலா, மிளகுத்தூள், இஞ்சி - பூண்டு விழுது ஒரு டீஸ்பூன், அரைத்து வைத்த வெங்காய விழுது, உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு திக்கான மாவு பதத்தில் வைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒவ்வொரு இறாலாக தனியாக எடுத்து மாவுடன் உருட்டி, சிறு சிறு உருண்டைகளாக பிடித்து, எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, சூடானதும் கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய பெரிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் மீதமுள்ள இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இஞ்சி - பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து குழைய வேக விடவும்.
தக்காளி குழைய வதங்கியதும் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வதக்கிய பின்னர், சிறிது தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.
அரைத்த தேங்காய் விழுதை அதனுடன் கலந்து, திக்கான பதம் வந்ததும் பொரித்த இறால் உருண்டைகளை சேர்த்து, அடுப்பை 'சிம்’மில் வைத்து வேகவிடவும்.
வாழைப்பூ (பொடியாக நறுக்கியது) - 1 கப்
வெங்காயம் - 2
தக்காளி - 1
மிளகாய் வற்றல் - 4
சோம்பு - 1 டீஸ்பூன்
பொட்டுக்கடலை - 4 டீஸ்பூன்
பச்சைப் பட்டாணி - 1 கப்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
தனியா - 1 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் - 4 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
கடுகு - 1 டீஸ்பூன்
முந்திரி - 4
செய்முறை :
பட்டாணியையும் வாழைப்பூவையும் வேகவைத்து எடுங்கள்.
கொத்தமல்லி, தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மிளகாய் வற்றல், சோம்பு, பொட்டுக்கடலை, தனியா, முந்திரி ஆகியவற்றை ஊறவைத்து அவற்றுடன் தேங்காய் சேர்த்து மையாக அரைத்துக்கொள்ளுங்கள்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்குங்கள்.
தக்காளி குழைய வெந்ததும் வேகவைத்த வாழைப்பூவையும் பட்டாணியையும் சேர்த்துக் கிளறுங்கள்.
அடுத்து அதில் அரைத்த விழுதை ஊற்றி, கரம் மசாலா துள், மஞ்சள் தூள் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள்.
குழம்பு திக்கான பதம் வந்ததும் கடுகு தாளித்துக் கொட்டி, கொத்தமல்லி தூவி இறக்குங்கள்.
துவரம்பருப்பு - 1 கப்,
வாழைப்பூ - 1 கப்,
நறுக்கிய தக்காளி - 1,
புளி - நெல்லிக்காய் அளவு,
சின்ன வெங்காயம் - 8,
காய்ந்தமிளகாய் - 4,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
குழம்பு மிளகாய் பொடி - 2 டீஸ்பூன்,
உப்பு, தாளிக்க கடலை எண்ணெய் - தேவைக்கு,
கடுகு, கறிவேப்பிலை - சிறிது.
செய்முறை :
வாழைப்பூவை சுத்தம் செய்து நறுக்கி மோரில் போட்டு வைக்கவும்.
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
துவரம் பருப்பை நன்றாக கழுவி குக்கரில் போட்டு 2 கப் தண்ணீர், மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி 3 விசில் விடவும்.
விசில் அடங்கியதும் திறந்து தக்காளி, புளிக்கரைசல், மிளகாய் பொடி, வாழைப்பூ, உப்பு போட்டு கலந்து மீண்டும் 1 விசில் விட்டு இறக்கவும்.
பின்பு கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, கறிவேப்பிலை, காய்ந்தமிளகாய் தாளித்த பின்னர் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி, குக்கரிலிருந்து சாம்பாரை ஊற்றி ஒரு கொதி விட்டு இறக்கவும்.
பீட்ரூட் - 1,
தக்காளி - 1,
வெங்காயம் - 1,
கீறிய பச்சைமிளகாய் - 2,
குழம்பு மிளகாய் பொடி - 1 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
செய்முறை :
பீட்ரூட், வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, கறிவேப்பிலை தாளித்த பின்னர் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் பீட்ரூட், உப்பு, குழம்பு மிளகாய் பொடி சேர்த்து கலந்து 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.
நன்றாக வெந்து தண்ணீர் சுண்டியதும் இறக்கவும்.
பிஞ்சு வெண்டைக்காய் - 1/4 கிலோ,
சின்ன வெங்காயம் - 50 கிராம்
காய்ந்த மிளகாய் - 2,
புளி - சிறிய எலுமிச்சை அளவு,
தக்காளி - 1,
குழம்பு மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், உப்பு,
நல்லெண்ணெய் - தேவைக்கு,
செய்முறை :
தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
புளியை சிறிதளவு தண்ணீரில் கரைத்து கொள்ளவும்.
வெண்டைக்காயை வட்ட வட்டமாக நறுக்கி சிறிது எண்ணெயில் போட்டு வதக்கி கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, காய்ந்தமிளகாய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி போட்டு நன்றாக வதக்கவும்.
தக்காளி மசிய வதங்கியதும் புளிக் கரைசல், உப்பு, குழம்பு மிளகாய் பொடி, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
அடுத்து வதக்கிய வெண்டைக்காயை போட்டு தண்ணீர் வற்றியதும் இறக்கி பரிமாறவும்.
கருணைக்கிழங்கு - 1/4 கிலோ
தேங்காய் பால் - 2 டம்ளர்
புளி - தேவைக்கேற்ப
உப்பு - தேவையான அளவு
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
சாம்பார் பொடி - தேவையான அளவு
கடுகு, உளுந்து - சிறிதளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை :
கருணைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி, சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ளவும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
புளியை ஊறவைத்து கரைத்து எடுத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர், புளிக் கரைசலை ஊற்றி கொதிக்கவிடவும்.
கொதிக்கும் புளிக்கரைசலில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், நறுக்கிய கருணைக்கிழங்கு துண்டுகளையும் போட்டு நன்றாக வேகவிடவும்.
பின்னர் தேங்காய்ப்பால் சேர்த்து கொதிக்கவிட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து குழம்பு திக்கான பதம் வந்தவுடன் கொத்தமல்லி போட்டு இறக்கவும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்