என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "DAL"
- தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் மாதம் ஒரு கிலோ துவரம் பருப்பு வழங்கப்பட்டு வருகிறது.
- ரேஷனில் கிலோ ரூ30க்கு கிடைக்கும் துவரம் பருப்பை நம்பியே ஏழை நடுத்தர மக்கள் உள்ளனர்.
ரேஷன் கடைகளில் தீபாவளிக்கு முன்பாக துவரம் பருப்பு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பான அவரது அறிக்கையில், "தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ஒரு கிலோ துவரம் பருப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த 6 மாதங்களுக்கு மேலாக சரிவர துவரம் பருப்பு வழங்கப்படுவதில்லை. மூன்று மாதங்கள் யாருக்கும் துவரம் பருப்பு கிடைக்கவில்லை. கடந்த பல மாதங்களாக சில நாட்கள் மட்டுமே துவரம் பருப்பு கிடைக்கிறது வெளிச்சந்தைகளில் ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ. 200 வரை விற்கப்படுகிறது. இதனால் ரேஷனில் கிலோ ரூ30க்கு கிடைக்கும் துவரம் பருப்பை நம்பியே ஏழை நடுத்தர மக்கள் உள்ளனர்.
தீபாவளிக்கு இன்னும் 14 நாட்களே இருக்கும் நிலையில் ரேஷன் கடைகளில் வழங்குவதற்காக 20,000 டன் துவரம் பருப்பு ஆர்டர் செய்யப்பட்டதாகவும், அதில் 3473 டன் மட்டுமே மட்டுமே சப்ளை செய்யப்பட்டிருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. அரசின் அலட்சியத்தால் மீதமுள்ள 16,527 டன் துவரம் பருப்பு உரிய நேரத்தில் வந்து சேருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால் தீபாவளிக்கு முன்பாக துவரம் பருப்பு பெற தகுதியான 1 கோடியே 80 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கும் துவரம் பருப்பு வழங்க முடியாது என கூறப்படுகிறது. இது ஏழை நடுத்தர மக்களை மிக கடுமையாகப் பாதிக்கும். எனவே திமுக அரசு தனறு தூக்கத்தை கலைத்து போர்க்கால அடிப்படையில் துவரம் பருப்பை கொள்முதல் செய்து அனைவருக்கும் தீபாவளி பண்டிகைக்கு முன்பாக துவரம் பருப்பு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அதுபோல தீபாவளிக்கு முன்பாக பாமாயில் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் கிடைப்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு உறுதி செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
- ரேசன் கடைகளில் பருப்பு மற்றும் பாமாயிலில் மே மாதம் தட்டுப்பாடு ஏற்பட்டது.
- துவரம் பருப்பு மற்றும் பாமாயிலை ஜூன் மாத முதல் வாரத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
சென்னை:
உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு அரசு சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் வாயிலாக 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம்தோறும் தலா ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.30-க்கும், ஒரு லிட்டர் பாமாயில் ரூ.25-க்கும் மானிய விலையில் வழங்கி வருகிறது.
பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக பாமாயில் மற்றும் துவரம் பருப்புக்கான ஒப்பந்தப் புள்ளிகள் மீதான முடிவுகள் மேற்கொண்டு அப்பண்டங்களைக் கொள்முதல் செய்வதில் காலதாமதம் நேரிட்டது. இருப்பினும், அரசின் தொடர்ந்த சீரிய முயற்சிகள் காரணமாக நகர்வுப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு நேற்று வரை 82,82,702 குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ துவரம் பருப்பினையும், 75,87,865 குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு லிட்டர் பாமாயில் பாக்கெட்டினையும் நியாய விலை கடைகளிலிருந்து வழங்கப்பட்டுள்ளது.
குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாத ஒதுக்கீட்டினை இம்மாத இறுதிக்குள் வழங்கிட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும், மே மாதத்தில் பருப்பு மற்றும் பாமாயில் பெற முடியாதவர்கள் வசதிக்காக ஜூன் முதல் வாரம் வரை நியாயவிலைக் கடைகளில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெற்றுக்கொள்ள தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளும்படி மாவட்ட வழங்கல் அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
குடும்ப அட்டைதாரர்களின் நன்மையினைக் கருத்தில் கொண்டு மே மாதத்தில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட் பெற இயலாத அட்டைதாரர்கள் அவர்களுக்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டினை ஜூன் மாத முதல் வாரத்தில் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 20,000 மெட்ரிக் டன் துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
- 2 கோடி பாமாயில் பாக்கெட்டுகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகளில் மே மாதத்திற்குரிய சேரன் பொருட்களில் பருப்பு மற்றும் பாமாயில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால், ரேசன் பொருட்கள் வாங்கும் மக்களுக்கு பருப்பு, பாமாயில்-ன் தட்டுப்பாட்டை சுட்டிக்காட்டி அந்த இரண்டு பொருட்களும் அரை மாதம் முடிந்தும் வழங்கப்படாமல் இருக்கிறது. இதன் எதிரொலியால், மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ரேசன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாதத்திற்குரிய பருப்பு, பாமாயில் கிடைப்பது உறுதி என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், " சேரனில் மே மாதத்தில் விநியோகிப்பதற்காக 20,000 மெட்ரிக் டன் துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
2 கோடி பாமாயில் பாக்கெட்டுகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
ரூ.418.55 கோடி மதிப்பீட்டில் பருப்பு, பாமாயில் கொள்முதல் செய்யப்பட்டு, ரேசன் கடைகளுக்கு விநியோகம் செய்யப்படும்.
இதன்மூலம், குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாதத்திற்குரிய பருப்பு, பாமாயில் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
- அரிசி மாவு, பச்சை மிளகாய் விழுது கலந்து கிளறினால் வடகம் சுலபமாக பிழியலாம்.
- வெண்ணெய், பால் கலந்து அரிசி மாவை கிளறினால் கொழுக்கட்டை உடைந்து வராது.
பொதுவாகவே சமைக்கும் அனைவருக்கும் பிடித்த மாதிரி சமைக்க வேண்டும் என்பது தான் இல்லத்தரசிகளின் பெரிய ஆசை. இதற்காக புதிய புதிய வகைகளில் சமையல்களை செய்வார்கள் அப்படி சமையலில் அசத்த சில சூப்பரான டிப்ஸ்களை இங்கே பார்க்கலாம்.
* கடலை மாவை சூடான நெய்யில் கரைத்து, பின்பு சர்க்கரை பாகில் கலந்து மைசூர் பாகு செய்தால், அது மிருதுவாகவும், மென்மையாகவும் இருக்கும். மைசூர் பாகு செய்யும்போது நெய்யும் அதிகம் ஊற்றி கிளற வேண்டியது இருக்காது.
* பாசி பருப்பை வேகவைத்து அதில் அரிசி மாவு கலந்து தேன் குழல் செய்தால் சுவையாக இருக்கும்.
* காய்கறிகள் வேக வைத்த தண்ணீரை வடிகட்டிக்கொள்ளவும். அதனை பயன்படுத்தி அவியல் செய்தால் காய்கறிகள் கறுப்பு நிறமாக மாறாது. பொரியலும் பளிச்சென்றும், ருசியாகவும் இருக்கும். (தண்ணீர் கொஞ்சமாக ஊற்றி வேக வைக்கவும்)
* கேசரிக்கு நெய் ஊற்றி ரவையை வறுக்கும்போது அதில் சிறிதளவு சுடுதண்ணீர் ஊற்றவும். அதனுடன் கேசரி பொடியை சேர்த்தால் துளி கூட கட்டி பிடிக்காது.
* ஜவ்வரிசியை வேகவைத்து அந்த தண்ணீரில் உப்பு, அரிசி மாவு, பச்சை மிளகாய் விழுது கலந்து கிளறினால் வடாகம் சுலபமாக பிழியலாம்.
* அடைக்கு தேவையான பருப்பு, மிளகாயை மிக்சியில் அரைத்து வைத்துக்கொண்டால் உடனடியாக உப்பு கலந்து அடை செய்யலாம்.
* கொழுக்கட்டைக்கு தண்ணீர் கொதிக்கும்போது, ஒரு ஸ்பூன் வெண்ணெய், ஒரு ஸ்பூன் பால் கலந்து பின்பு அரிசி மாவை போட்டு கிளறினால் கொழுக்கட்டை உடைந்து வராமல் இருக்கும்.
- பரமத்தி வேலூர் வெங்கமேட்டில் உள்ள பரமத்தி வேலூர் மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு கொண்டு வருகின்றனர்.
- மொத்தம் ரூ 7 லட்சத்து 17ஆயிரத்து 153- க்கு ஏலம் நடைபெற்றது.
பரமத்திவேலூர்:
பரமத்தி வேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் விளையும் தேங்காய்களை உடைத்து அதை உலர்த்தி விவசாயிகள் வியாழக்கிழமை தோறும் பரமத்தி வேலூர் வெங்கமேட்டில் உள்ள பரமத்தி வேலூர் மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு கொண்டு வருகின்றனர். இங்கு தரத்திற்கு தகுந்தார் போல் மறைமுக ஏலம் விடப்படுகிறது.கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற மின்னணு ஏலத்திற்கு 15 ஆயிரத்து 960 கிலோ தேங்காய் பருப்பு கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.77.01க்கும், குறைந்தபட்சமாக 51.99 க்கும்,சராசரியாக ரூ.76.89 க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.11 லட்சத்து 17ஆயிரத்து 263- க்கு ஏலம் நடைபெற்றது. ஏலத்திற்கு 10 ஆயிரத்து 245 கிலோ தேங்காய் பருப்பு கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ 78.99 க்கும் குறைந்தபட்சமாக ரூ 51.48 க்கும், சராசரியாக ரூ 77.49 க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ 7 லட்சத்து 17ஆயிரத்து 153- க்கு ஏலம் நடைபெற்றது.
- இதன் சுவை வாயில் வைத்ததும் கரைந்துவிடும்.
- வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே மிகவும் எளியமுறையில் செய்துவிடலாம்.
தேவையான பொருட்கள்:
பாசிபருப்பு- 200 கிராம்
ரவை- 100 கிராம்
வெல்லம்-500 கிராம்
தேங்காய்-அரை கப்
ஏலக்காய்தூள்- ஒரு ஸ்பூன்
நெய்- 100 கிராம்
முந்திரி- அலங்கரிக்க
செய்முறை:
செட்டிநாடு ஸ்பெஷல் உக்காரை வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே மிகவும் எளியமுறையில் செய்துவிடலாம். இதன் சுவை வாயில் வைத்ததும் கரைந்துவிடும் அளவுக்கு இனிப்பு சுவையுடன் இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைஅனைவரும் மிகவும் விரும்பி சப்பிடுவர்.
ஒரு காடாயில் வாணலிவைத்து காய்ந்ததும் 200 கிராம் பாசிபருப்பை சேர்த்து நன்றாக மணம் வரும் வரை வறுத்து எடுக்க வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து வறுக்க வேண்டும் கருகிவிடக்கூடாது. இதனை ஒரு குக்கரில் வைத்து அதற்கு தேவையான அளவு தண்ணீர் விட்டு கழுவி அந்த பருப்பை தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைக்க வேண்டும். இப்போது வெல்லத்தை கரைத்து எடுத்துக்கொள்ளலாம். இதற்கு ஒரு அடிகனமான பாத்திரத்த்தை அடுப்பில் வைத்து வெல்லம் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு காய்ச்சி எடுக்க வேண்டும். ஒரு கப் பாசிபருப்புக்கு 3 கப் வெல்லம் என்ற அளவுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். இனிப்பு அதிகம் விரும்புபவர்கள் என்றால் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். பாகு கம்பிபதம் வர வேண்டாம். பாகு கரைந்து வந்தால் போதுமானது. வெல்லம் கரைந்து வந்தவுடன் இதனை ஒரு பாத்திரத்தில் தனியே எடுத்து வைக்க வேண்டும்.
அதன்பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் 3 கரண்டி நெய் சேர்க்க வேண்டும். இந்த உக்காரைக்கு சுவை சேர்க்கக்கூடியது இந்த நெய்தான். நெய் காய்ந்ததும் அதில் அரை கப் ரவை சேர்க்க வேண்டும். ரவையை பொன்னிறமாக நன்றாக வறுக்க வேண்டும். பின்னர் இதில் துருவி வைத்த தேங்காய் சேர்க்க வேண்டும். இதுவும் நன்றாக வறுத்து எடுக்க வேண்டும். நன்றாக வறுத்து எடுத்துக்கொண்டால் கெட்டுப்போகாமல் இருக்கும்.
இந்த கலவையில் நாம் வேகவைத்துள்ள பாசிப்பருப்பு கலவையை சேர்க்க வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்றாக கலந்துவிடவேண்டும். அப்போது ரவை நன்றாக் வெந்துவரும். அப்போது நாம் ஏற்கனவே எடுத்து வைத்துள்ள வெல்லக் கரைசலை வடிகட்டியில் வடித்து சேர்க்க வேண்டும். வெல்லப்பாகு சேர்த்தவுடன் இந்த கலவையை நன்றாக கைவிடாமல் கலந்துகொண்டே வர வேண்டும். இதனுடன் நெய் சேர்க்க வேண்டும். கடைசியில் இதனுடன் நெய்யில் வறுத்து வைத்துள்ள முந்திரி மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நெய் பிரிந்து வரும் வரை கிளற வேண்டும். சுவையான செட்டிநாடு ஸ்பெஷல் உக்காரை தயார்.
- சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் - ஓமலூர் பிரதான சாலையில் உள்ள அரசு வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்புக்கான பொது ஏலம் நடைபெற்றது.
- தற்போது வழக்கத்தைவிட கூடுதலான விலை கிடைத்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
எடப்பாடி:
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் - ஓமலூர் பிரதான சாலையில் உள்ள அரசு வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்புக்கான பொது ஏலம் நடைபெற்றது.
இதில் சுமார் 152 குவிண்டால் எடையுள்ள 303 மூட்டை தேங்காய் பருப்புகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இதில் முதல் தர தேங்காய் பருப்புகள் குறைந்தபட்ச விலையாக குவிண்டால் ஒன்று ரூ.7,556 முதல் ரூ.7,810 வரை விற்பனையானது. 2-ம் தர தேங்காய் பருப்புகள் குவிண்டால் ஒன்று ரூ.6,175 முதல் ரூ.7,475 வரை விலை போனது. இதன்படி மொத்தம் ரூ.11 லட்சத்து 23 ஆயிரத்து 771-க்கு தேங்காய் பருப்புகள் விற்பனையானது.
தற்போது வழக்கத்தைவிட கூடுதலான விலை கிடைத்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
- வரம் பருப்பு, பாசிப் பருப்பு விலை திடீரென உயர்ந்துள்ளது.
- கடலை எண்ணெய் லிட்டர் 120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
காங்கயம் :
சமையலில் அரிசி, பருப்பு, எண்ணெய் போன்றவை முக்கிய பங்கு வகிக்கிறது. இவற்றின் விலை வரத்து குறைவு காரணமாக விலை உயர்ந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர்.துவரம் பருப்பு, பாசிப் பருப்பு விலை திடீரென உயர்ந்துள்ளது. அதன்படி திருப்பூர், உடுமலையில் துவரம் பருப்பு கிலோ மொத்த விலை 120 ரூபாய், சில்லறை விலை 140 ரூபாய்க்கு விற்றது. தற்போது மொத்த விலை 140 ரூபாய், சில்லறை விலை 160 ரூபாயாக உயர்ந்துள்ளது.பாசிப்பருப்பு 100 ரூபாயில் இருந்து 120 ரூபாயாக உயர்ந்துள்ளது. உளுந்து கிலோவுக்கு 20 ரூபாய் உயர்ந்து 130 ரூபாயில் இருந்து 150 ரூபாயாகியுள்ளது.
சீரகம் விலை இதுவரை இல்லாத வகையில் கிலோவுக்கு 200 ரூபாய் கூடி கிலோ 600 ரூபாய்க்கு விற்கிறது. மிளகு, 150 ரூபாய் விலை உயர்ந்து கிலோ 800 ரூபாய்க்கு விற்கிறது.கர்நாடக பொன்னி கிலோ 55 ரூபாயில் இருந்து 60, ராஜபோகம் பொன்னி கிலோ 58ல் இருந்து 64, இட்லி அரிசி 40ல் இருந்து 45 ரூபாயாகியுள்ளது.அரிசி பருப்பு விலை உயர்ந்து பொதுமக்களுக்கு கவலை அளித்தாலும், எண்ணெய் விலை சற்று குறைந்து ஆறுதல் அளித்துள்ளது.
கடலை எண்ணெய் லிட்டர் 120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கடந்த மாதம் லிட்டர் 150 முதல் 130 ரூபாய் வரை விற்பனையானது. இம்மாதம் லிட்டருக்கு 40 முதல் 60 ரூபாய் வரை விலை குறைந்துள்ளது. திருப்பூர் மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரவை பொருளாளர் சாமி கூறுகையில், நடப்பு மாதத்தில் அரிசி விலை கிலோவுக்கு 5ரூபாய் வரையும், பருப்பு, உளுந்து விலை கிலோவுக்கு 15 முதல் 20 ரூபாய் உயர்ந்துள்ளது. அதே நேரம் கடலை எண்ணெய் விலை சற்று குறைந்துள்ளது. வெளி மாநில வரத்து குறைந்து வருவதால் விலை உயர்ந்துள்ளது. சீரகம் இதுவரை இல்லாத விலை உயர்வை தற்போது எட்டியுள்ளது என்றார். காங்கயம் பகுதியில் 450- க்கும் மேற்பட்ட தேங்காய் உடைத்து உலர்த்தும் உலர் களங்கள் உள்ளன. மேலும் 150-க்கும் மேற்பட்ட தேங்காய் எண்ணெய் ஆலைகளும் செயல்பட்டு வருகிறது. இங்கு பீகார், ஒடிசா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ஜார்கண்ட் மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களும், தமிழகத்தில் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர், திருச்சி, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களும் வேலை செய்து வருகின்றனர். இந்த களங்களுக்கு பிற மாவட்டங்கள் மற்றும் கர்நாடக, கேரளாவிலிருந்தும் தேங்காய் கொண்டுவரப்பட்டு மட்டை உரித்து, உடைத்து உலர வைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. உலர்களங்களில் உலர்த்தப்படும் பருப்பு தனியார் தேங்காய் எண்ணெய் நிறுவனங்களுக்கும், காங்கயம் பகுதியில் உள்ள கிரஷிங் யூனிட்டுகளுக்கும் அனுப்பப்படுகின்றன.
காங்கயம் கிரஷிங் யூனிட்டுகளில் உற்பத்தியாகும் தேங்காய் எண்ணெய்யானது டேங்கர் லாரிகள், டின்களில் அடைக்கப்பட்டு வட மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. மேலும் டின்கள், பாட்டில்கள், பவுச்களில் அடைக்கப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்படும் கடைகள் மூலம் விற்பனைக்கும் அனுப்பப்படுகிறது. இந்தநிலையில் கொப்பரை தேங்காயின் விலை அதிகரிக்கவில்லை. குறிப்பாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1 கிலோ தேங்காய் பருப்பு ரூ.85 முதல் ரூ.86 வரை விற்பனையானது. அதன் பின்னர் தேங்காய் பருப்பு விலை சற்றே குறையத் தொடங்கியது. கடந்த மார்ச் மாதத்தில் 1 கிலோ தேங்காய் பருப்பு ரூ.81 வரை விற்பனையானது. பின்னர் தொடர்ந்து கொப்பரை தேங்காயின் விலை ஏறாமல் குறைந்து கொண்டே வந்தது. தற்போது 1 கிலோ தேங்காய் பருப்பு ரூ.74 ஆக உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் ரூ.1,720 ஆக இருந்த 15 கிலோ கொண்ட எண்ணெய் டின் தற்போது ரூ.1,580 ஆக உள்ளது. இதனால் தோப்புகளில் தேங்காய்களுக்கும் உரிய விலை கிடைப்பதில்லை.
இதுகுறித்து காங்கயம் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.எஸ்.என்.தனபால் கூறியதாவது:- சோயா எண்ணெய், பாமாயில் எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய் உள்ளிட்ட சமையல் எண்ணெய்களின் விலை குறைந்ததால், தேங்காய் எண்ணெய்யின் விற்பனை குறைவானது. இதன் காரணமாக கொப்பரை தேங்காய் விலை சரிந்துள்ளது. மேலும் தேங்காய் எண்ணெய்யை அதிக அளவில் உபயோகிக்கும் கேரளாவில் தற்போது தேங்காய் எண்ணெய் ஆலைகள் ஆங்காங்கே உருவாக்கி செயல்பட்டு வருகிறது. இதுவே தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு தேங்காய் எண்ணெய் விற்பனை குறைவானதற்கு ஒரு காரணமாகும்.
தேங்காய் எண்ணெய்யின் பயன்பாடு அதிகரித்தால் மட்டுமே கொப்பரை தேங்காய் விலை உயரும். அந்த வகையில் ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய்யை வினியோகம் செய்தால் தேங்காய் எண்ணெய்யின் பயன்பாடு அதிகரிக்கும். கொப்பரை தேங்காயின் விலையும் குறையாது. தோப்புகளில் தேங்காய்களுக்கும் உரிய விலை கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
உடுமலை சுற்றுப்பகுதிகளில் தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ளது. இப்பகுதிகளில் விளையும் தக்காளி, உடுமலை நகராட்சி சந்தைக்கு கொண்டு வந்து ஏல முறையில் விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.கடந்த சில மாதமாக உரிய விலை கிடைக்காதது, பருவம் தவறி பெய்த மழை, நோய் தாக்குதல் உள்ளிட்ட காரணங்களினால் தக்காளி பயிர்கள் பாதித்தது. நடவு செய்த பெரும்பாலான விவசாயிகள் தக்காளி செடிகளை அழித்தனர். இந்நிலையில் தற்போது வரத்து குறைவு காரணமாக மீண்டும் தக்காளி விலை உயர்ந்து காணப்படுகிறது. உடுமலை சந்தையில் 14 கிலோ கொண்ட பெட்டி 375 ரூபாய் வரை விற்பனையானது.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-
உடுமலை சந்தைக்கு ஒரு லட்சம் பெட்டிகள் வரை வரத்து காணப்படும் நிலையில் கடந்த சில மாதமாக விலை இல்லாதது உள்ளிட்ட காரணங்களினால் அழிக்கப்பட்டது.மழை பொழிவும் குறைந்ததால் சாகுபடி பரப்பும் பெருமளவு குறைந்தது. இதனால் சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்து தற்போது 6 ஆயிரம் பெட்டிகள் என்ற அளவில் உள்ளது. இதனால் விலை உயர்ந்து காணப்படுகிறது.
இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.
பருப்பு தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில் சாகுபடியை அதிகரிக்க வேளாண் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நாடு முழுவதும் துவரை, உளுந்து உள்ளிட்ட பருப்பு வகைகளின் விளைச்சல் குறைந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.சர்வதேச சிறுதானிய ஆண்டை ஒட்டி, அவற்றின் சாகுபடிக்கு பல்வேறு மானிய உதவிகள் வழங்கப்படுகின்றன. இதுவே பருப்பு சாகுபடி குறைந்ததற்கு காரணமாக கூறப்படுகிறது. எனவே குறுவை பருவத்தில் நெல்லுக்கு மாற்றாக பருப்பு வகைகள் சாகுபடியை அதிகரிக்க வேளாண் துறை திட்டமிட்டுள்ளது.இதற்காக குறுவை பருவத்தில் மாற்று பயிர் சாகுபடிக்கான சிறப்பு தொகுப்பு திட்டத்தின் கீழ் பருப்பு வகைகளை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 1,740 ரூபாய் மானியமாக வழங்கப்பட உள்ளது.
இதற்கான பயனாளிகள் தேர்வில் வேளாண் துறையினர் கவனம் செலுத்தி வருகின்றனர். சென்னை, கன்னியாகுமரி, கரூர், பெரம்பலூர், ராமநாதபுரம், சிவகங்கை, நீலகிரி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு இத்திட்ட மானியம் கிடைக்கும்.இதற்காக உழவன் செயலி வாயிலாக முன்பதிவு செய்யும் வசதியும் செய்யப்பட்டு உள்ளது. சம்பா பருவ நெல் சாகுபடி பருவத்திலும் பருப்பு வகைகள் சாகுபடியை அதிகரிப்பதற்கான திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.
- தேசிய வேளாண்மை சந்தைக்கு கடந்த வாரம் 8 ஆயிரத்து 155 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.
- மொத்தம் ரூ.5 லட்சத்து 60 ஆயிரத்து 698-க்கு விற்பனை நடைபெற்றது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு கடந்த வாரம் 8 ஆயிரத்து 155 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.
இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.83.69-க்கும், குறைந்தபட்சமாக ரூ.58.71- க்கும், சராசரியாக ரூ.81.99-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.5 லட்சத்து 85 ஆயிரத்து 587-க்கு ஏலம் போனது.
நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 7 ஆயிரத்து 234 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.88.30-க்கும், குறைந்த பட்சமாக ரூ.55.80-க்கும், சராசரியாக ரூ.82.90-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.5 லட்சத்து 60 ஆயிரத்து 698-க்கு விற்பனை நடைபெற்றது.
- பரமத்திவேலூர் வெங்கமேட்டில் மின்னணு தேசிய வேளாண்மை சந்தை (இ-நாம் செயலி) மூலம் நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது.
- இதில் 7 ஆயிரத்து 857 கிலோ தேங்காய் பருப்பு, மொத்தம் ரூ.5 லட்சத்து 99 ஆயிரத்து 531-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஏலத்தில் தேங்காய் பருப்பு அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.84.39-க்கும், குறைந்த பட்சமாக ரூ.51.65-க்கும், சராசரியாக ரூ.84.39-க்கும் ஏலம் போனது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வெங்கமேட்டில் மின்னணு தேசிய வேளாண்மை சந்தை (இ-நாம் செயலி) மூலம் நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது.
இதில் 7 ஆயிரத்து 857 கிலோ தேங்காய் பருப்பு, மொத்தம் ரூ.5 லட்சத்து 99 ஆயிரத்து 531-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஏலத்தில் தேங்காய் பருப்பு அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.84.39-க்கும், குறைந்த பட்சமாக ரூ.51.65-க்கும், சராசரியாக ரூ.84.39-க்கும் ஏலம் போனது.
இ-நாம் செயலி மூலம் ஏலம் நடைபெற்றது, விவசாயிகளுக்கு விற்பனை தொகையானது அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டது. இதனால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
டெல்லி (7), ஹரியானா (10) ஆகிய மாநிலங்களில் எல்லாத் தொகுதிகளிலும் பாஜக முன்னிலைப் பெற்றுள்ளது. ஆனால் பஞ்சாப் மாநிலத்தில் மட்டுமே அந்த கட்சியால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை.
13 தொகுதிகளை கொண்ட பஞ்சாபில் காங்கிரஸ் 8-ல் முன்னிலைப் பெற்றுள்ளது. பா.ஜனதா 2 இடங்களிலும், சிரோமணி அகாலி தளம் இரண்டு தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. கடந்த முறை நான்கு தொகுதிகளை வென்ற ஆம் ஆத்மி ஒரு தொகுதியில் மட்டுமே முன்னிலைப் பெற்றுள்ளது. பா.ஜனதா மற்றும் சிரோமணி அகாலி தளம் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்