என் மலர்
நீங்கள் தேடியது "David Warner"
- துணை கேப்டனாக இந்திய அணியின் ஆல் ரவுண்டர் நியமிக்கப்பட்டுள்ளார்.
- இந்த சீசனில் ரிஷப் பந்திற்கு பதிலாக வார்னர் கேப்டனாக செயல்பட உள்ளார் என டெல்லி நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
2023 ஐபிஎல் தொடர் இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ளது. இந்நிலையில் டெல்லி அணியின் புதிய கேப்டன் அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் செயல்பட்டு வந்தார். அவர் கடந்த ஆண்டு டிசம்பரில் கார் விபத்தில் சிக்கி குணமடைந்து வருவதால் இந்த சீசனில் ரிஷப் பந்திற்கு பதிலாக வார்னர் கேப்டனாக செயல்பட உள்ளார் என டெல்லி நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும் துணை கேப்டனாக இந்திய அணியின் ஆல் ரவுண்டர் அக்சர் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
அதில் டேவிட் வார்னர், அக்சர் படேல் இந்த இருவரின் தலைமையில் இந்த #IPL2023 சத்தமாக கர்ஜிக்க தயாராக உள்ளது என்று தலைப்பிட்டிருந்தது.
வார்னர் தனது ஐபிஎல் வாழ்க்கையை 2009-ல் டெல்லி உரிமையுடன் (அப்போது டெல்லி டேர்டெவில்ஸ்) தொடங்கினார். ஆனால் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு மாறினார். அவர் 2016 -ல் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக செயல்பட்டு கோப்பையை கைப்பற்றினார்.
போட்டியின் கடந்த பதிப்பில், வார்னர் 12 போட்டிகளில் கேபிடல்ஸ் அணிக்காக 150.62 என்ற அற்புதமான ஸ்ட்ரைக் ரேட்டில் 432 ரன்கள் எடுத்தார். இந்தப் போட்டியில் அவர் ஐந்து அரை சதங்களை அடித்தார்.
- பிட்ச்சில் ஸ்விங் இருக்கும் என்பது எதிர்பார்த்தது தான். ஆனால் நாங்கள் எதிர்பார்த்ததற்கும் அதிகமாக பந்து ஸ்விங்கானது.
- இதே மைதானத்தில் இன்னும் 6 போட்டிகளில் விளையாட உள்ளோம்.
16-வது ஐபிஎல் தொடரின் 7-வது போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் நேருக்கு நேர் மோதியது. இப்போட்டியில், டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழந்து 162 ஆட்டங்களை சேர்த்தது.
இதனையடுத்து களமிறங்கிய குஜராத் அணி 18.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்நிலையில் அக்சர் படேல் ஏன் பந்து வீச வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறித்து கேப்டன் டேவிட் வார்னர் விளக்கம் கொடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
பிட்ச்சில் ஸ்விங் இருக்கும் என்பது எதிர்பார்த்தது தான். ஆனால் நாங்கள் எதிர்பார்த்ததற்கும் அதிகமாக பந்து ஸ்விங்கானது. ஆனால் பிட்ச்சின் இன்னொரு பக்கத்தில் ஸ்விங் அந்த அளவிற்கு ஆகவில்லை. ஒரு மைதானத்தின் சூழலுக்கு தகுந்தாற்படி எப்படி விளையாட வேண்டும் என்பதை குஜராத் அணி செய்து காட்டி இருக்கிறது.
இதே மைதானத்தில் இன்னும் 6 போட்டிகளில் விளையாட உள்ளோம். சாய் சுதர்சன் தொடக்கம் முதலே சிறப்பாக பேட்டிங் செய்து வந்தார். குறைந்தது டெல்லி மைதானத்தில் 180 முதல் 190 ஆட்டங்கள் வரை எடுக்க வேண்டும்.
ஐபிஎல் தொடரில் நீண்ட ஆண்டுகளாக அக்சர் படேல் பந்து வீசி வருகிறார். இந்தியாவின் பிரதான சுழற்பந்து வீச்சாளர். அவர் பந்து வீசாததற்கு பிட்ச் மற்றும் விக்கெட் தான் காரணம். மற்றபடி அவருக்கு காயம் எதுவும் இல்லை.
என்று வார்னர் கூறினார்.
இந்த போட்டியில் அக்சர் படேல் ஒரு ஓவர் கூட பந்து வீசவில்லை.
- டேவிட் வார்னர் ஐ.பி.எல். தொடரில் 6,000 ரன்களை கடந்தார்.
- 6 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வெளிநாட்டு வீரர் என்ற சாதனை படைத்தார்.
கவுகாத்தி:
ஐபிஎல் தொடரில் இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி டெல்லியின் பந்துவீச்சை திறம்பட சமாளித்து 199 ரன்கள் குவித்தது.
ராஜஸ்தான் தரப்பில் பட்லர் 79 ரன்னும், ஜெய்ஸ்வால் 60 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து, 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 142 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.
இந்நிலையில், இந்த போட்டியில் டெல்லியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய டேவிட் வார்னர் 26 ரன்கள் எடுத்திருந்த போது ஐ.பி.எல். தொடரில் 6,000 ரன்களைக் கடந்த முதல் வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை படைத்தார்.
அதுமட்டுமின்றி, ஐ.பி.எல். தொடரில் குறைந்த இன்னிங்சில் (165) 6,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்திருக்கிறார்.
இந்தப் பட்டியலில் விராட் கோலி (188 இன்னிங்ஸ்), ஷிகர் தவான் (199) அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
- பவர் பிளேயில் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்று திட்டமிடுவோம்.
- எங்களின் பந்து வீச்சு குழுவை நினைத்து நாங்கள் பெருமை படுகிறோம்.
புதுடெல்லி:
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று இரவு டெல்லியில் நடந்த ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் வீழ்த்தியது.
முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவரில் 127 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜேசன் ராய் 43 ரன்னும் ஆந்த்ரே ரசல் 38 ரன்னும் எடுத்தனர். டெல்லி தரப்பில் இஷாந்த் சர்மா, நார்ஜே, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
பின்னர் விளையாடிய டெல்லி அணி 19.2 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் டேவிட் வார்னர் 57 ரன்கள் எடுத்தார். 6-வது ஆட்டத்தில் விளையாடிய டெல்லி அணிக்கு இது முதல் வெற்றியாகும். கொல்கத்தா 4-வது தோல்வியை (6 ஆட்டம்) சந்தித்தது.
வெற்றி குறித்து டெல்லி கேப்டன் டேவிட் வார்னர் கூறியதாவது:-
இரண்டு புள்ளிகளை பெறுவது மிகவும் அருமை. முதல் வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களின் பந்து வீச்சு குழுவை நினைத்து நாங்கள் பெருமை படுகிறோம்.
பவர் பிளேயில் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்று திட்டமிடுவோம். அதை சரியாக செய்தோம்.
நாங்கள் பேட்டிங்கில் மீண்டும் விக்கெட்டுகளை இழந்தோம். ஒருவருக் கொருவர் நாங்கள் மிகவும் நேர்மையாக இருக்கிறோம். மேம்படுத்த வேண்டிய பகுதிகள் குறித்து விவாதிப்போம். நாங்கள் சரியான விலையாட்டை விளையாடினோம் என்றார்.
கொல்கத்தா கேப்டன் நிதிஷ் ரானா கூறும்போது, 'நாங்கள் 15 முதல் 20 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம். ஆடுகளம் எளிதானதல்ல என்பது எங்களுக்கு தெரியும். நான் அதிக நேரம் பேட்டிங் செய்திருக்க வேண்டும்.
அந்த நேரத்தில் எனது விக்கெட் முக்கியமானது. நாங்கள் ஒரு அணியாக நன்றாக விளையாட வேண்டும்.
இவ்வளவு குறைந்த ஸ்கோரை வைத்து கொண்டு போராடினோம். இப்போட்டியில் பந்து வீச்சில் செயல்பட்டது போல் அடுத்து ஆட்டங்களில் பந்துவீச வேண்டும் என்று விரும்புகிறோம்' என்றார்.
- இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘புஷ்பா -2’.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில், ஜகதீஷ், சுனில், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த படம் 'புஷ்பா'. இப்படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது.

புஷ்பா
தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் டைட்டில் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் புஷ்பாவாக மாறிய புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

டேவிட் வார்னர் பதிவு
அதாவது, டேவிட் வர்னர், 'புஷ்பா -2' திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டரில் உள்ள அல்லு அர்ஜுன் புகைப்படத்திற்கு பதிலாக தனது புகைப்படத்தை பதிவிட்டு பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த பதிவை தற்போது அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
டேவிட் வார்னர் தனது இணையப் பக்கத்தில் அடிக்கடி இவ்வாறு பல புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- டெல்லி அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய முன்னனி பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் உள்ளார்.
- அவரது தலைமையின் கீழ் விளையாடிவரும் அந்த அணி முதல் 5 போட்டிகளில் தோல்வியை சந்தித்தது.
டெல்லி:
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் டெல்லி அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய முன்னனி பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் உள்ளார்.
அவரது தலைமையின் கீழ் விளையாடிவரும் அந்த அணி முதல் 5 போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. இதையடுத்து கடைசியாக நடைபெற்ற இரு ஆட்டங்களில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
இந்த நிலையில், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் ஆல்-ரவுண்டர் அக்சர் பட்டேலை அந்த அணியின் கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் யோசனை தெரிவித்துள்ளார். அவர் ஒரு சிறந்த வீரர் என்றும், சிறந்த பார்மில் உள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
- டெல்லி- ஐதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் டெல்லி அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- ஆட்டநாயகனாக அக்சர் படேல் தேர்வு செய்யப்பட்டார்.
டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமாரின் காலில் விழுந்து வணங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான 34-வது போட்டி நேற்று ஹைதராபாத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது. பின்னர், ஆடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்து தனது சொந்த மைதானத்தில் 7 ரன்களில் தோல்வி அடைந்தது.
இதற்கு முன்னதாக டெல்லியில் நடந்த போட்டியில் ஹைதரபாத் அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்றைய போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
This visual is all ? ?!
— IndianPremierLeague (@IPL) April 24, 2023
Follow the match ▶️ https://t.co/ia1GLIWu00#TATAIPL | #SRHvDC | @SunRisers | @DelhiCapitals | @BhuviOfficial | @davidwarner31 pic.twitter.com/t9nZ95dyJ7
இந்த நிலையில், இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனான டேவிட் வார்னர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமாரின் காலில் விழுந்து அதன் பிறகு அவரை கட்டியணைத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
2016-ம் ஆண்டு வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சாம்பியன் பட்டத்தைச் தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது.
- ஷிகர் தவான் 213 இன்னிங்சில் 50 அரை சதம் அடித்துள்ளார்.
- ஐ.பி.எல். போட்டியில் 50-வது அரைசதம் அடித்த 3-வது வீரர் என்ற பெருமையை தவான் பெற்றார்.
கொல்கத்தா:
ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த 53-வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை வீழ்த்தியது.
இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷிகர் தவான் 47 பந்தில் 9 பவுண்டரி, 1 சிக்சருடன் 57 ரன் எடுத்தார். ஐ.பி.எல். போட்டியில் அவரது 50-வது அரை சதமாகும். 213 இன்னிங்சில் 50-வது அரை சதத்தை எடுத்துள்ளார்.
ஐ.பி.எல். போட்டியில் 50-வது அரைசதம் அடித்த 3-வது வீரர் என்ற பெருமையை தவான் பெற்றார். டேவிட் வார்னர், விராட் கோலி ஆகியோருடன் அவர் இணைந்தார்.
வார்னர் 57 அரைசதம் அடித்து முதல் இடத்திலும், கோலி, தவான் 50 அரை சதத்துடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.
- முதல் மூன்று விக்கெட்டுகளை நாங்கள் விரைவாக இழந்துவிட்டோம்.
- எங்கள் அணிக்கு துவக்க வீரர்கள் தான் முக்கிய பலம். ஆனால் அதுவே எங்களுக்கு இந்த போட்டியில் சரியாக அமையவில்லை.
16-வது ஐபிஎல் தொடரின் 55-வது லீக் போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் நேற்று மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்தது. அதன்பின் 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தநிலையில் முதல் மூன்று விக்கெட்டுகளை விரைவாக இழந்ததே தோல்விக்கான முக்கிய காரணம் டெல்லி அணியின் கேப்டனான டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
முதல் மூன்று விக்கெட்டுகளை நாங்கள் விரைவாக இழந்துவிட்டோம். குறிப்பாக முதல் ஓவரிலேயே நான் விக்கெட்டை இழந்து எங்களுக்கு நாங்களே நெருக்கடியை ஏற்படுத்தி கொண்டோம். எங்கள் அணிக்கு துவக்க வீரர்கள் தான் முக்கிய பலம். ஆனால் அதுவே எங்களுக்கு இந்த போட்டியில் சரியாக அமையவில்லை.
168 ரன்கள் என்பது இலகுவாக எட்டக்கூடிய இலக்கு தான். முதல் 6 ஓவர்களை சரியாக பயன்படுத்தினால் மட்டுமே எப்படிப்பட்ட இலக்கையும் எட்ட முடியும். எங்களுக்கு ஒரு பார்ட்னர்சிப் கூட சரியாக அமையவில்லை. நான் சில விசயங்களை முயற்சித்து பார்தோம். ஆனால் அது எங்களுக்கு சாதகமாக அமையவில்லை.
இவ்வாறு டேவிட் வார்னர் கூறினார்.
- டெல்லி ஆடுகளம் போல் அல்லாமல், இந்த பிட்ச் சிறப்பாக இருந்தது.
- பேட்டிங்கில் பிரித்வி ஷா கொடுத்த இம்பேக்ட் பார்ப்பதற்கே சிறப்பாக அமைந்தது.
ஐபிஎல் தொடரின் மிகமுக்கியமான ஆட்டத்தில் பஞ்சாப் அணியை எதிர்த்து டெல்லி அணி விளையாடியது. இந்தப் போட்டியில் யாரும் எதிர்பாராத வகையில் டெல்லி அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த வெற்றிக்கு பவர்பிளே ஓவர்களில் டெல்லி அணியின் தொடக்க வீரர்களான பிரித்வி ஷா - டேவிட் வார்னர் ஆகியோர் அதிரடியாக செயல்பட்டதே முக்கிய காரணமாக அமைந்தது.
குறிப்பாக டெல்லி அணியின் பிரித்வி ஷா 38 பந்துகளில் 54 ரன்களை விளாசி அசத்தினார். இது நடப்பு ஐபிஎல் சீசனில் பிரித்வி ஷா விளாசியுள்ள முதல் அரைசதமாகும். இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்பாக பிரித்வி ஷாவிற்கு மிகச்சிறந்த சீசனாக அமையும் என்று பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூறி இருந்தார். ஆனால் அதற்கு மாறாக பிரித்வி ஷா சொதப்பலான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார்.
ஒரு கட்டத்தில் பிரித்வி ஷாவை டெல்லி அணி இருந்து பிளேயிங் லெவனில் இருந்தே நீக்கியது. ஆனால் மனம்தளராத பிரித்வி ஷா, பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் அரைசதம் விளாசி கம்பேக் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர் கூறியதாவது:-
களத்தில் மோசமான ஃபீல்டிங்கை வெளிப்படுத்தினோம் என்றே நினைக்கிறேன். ஆனால் இந்தப் போட்டியில் எங்களது பலம் என்ன என்பதை அறிந்து செயல்பட்டோம்.
அதேபோல் டெல்லி ஆடுகளம் போல் அல்லாமல், இந்த பிட்ச் சிறப்பாக இருந்தது. அதுமட்டுமல்லாமல் பேட்டிங்கில் பிரித்வி ஷா கொடுத்த இம்பேக்ட் பார்ப்பதற்கே சிறப்பாக அமைந்தது. ரைலி ரூஸோவும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சொந்த மண்ணில் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும். டெல்லி பிட்ச்சில் சிறந்த பேட்டிங்கை செய்ய தவறியுள்ளோம். ஆனால் இன்றையப் போட்டியில் வென்று 2 புள்ளிகளை பெற்று மகிழ்ச்சியளிக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- டேவிட் வார்னர் மீது நாங்கள் நம்பிக்கை வைத்திருக்கிறோம்.
- ஆஷஸ், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் போட்டிகளில் அவர் பெரிய பங்களிப்பை வழங்குவார்.
ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடரிலும், அடுத்த மாதம் நடைபெறவுள்ள இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலும் டேவிட் வார்னர் ஆஸ்திரேலிய அணிக்காக முக்கியப் பங்கு வகிப்பார் என அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆன்ட்ரூ மெக்டோனல்டு நம்பிக்கை தெரிவித்தார்.
வார்னர் குறித்து ஆன்ட்ரூ மெக்டோனல்டு கூறியதாவது:-
டேவிட் வார்னர் மீது நாங்கள் நம்பிக்கை வைத்திருக்கிறோம். நாங்கள் எதிர்வரும் தொடருக்கு அவரை அணியில் சேர்த்திருக்கிறோம். ஆஷஸ், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் போட்டிகளில் அவரது பெரிய பங்களிப்பை வழங்குவார் என நம்புகிறோம்.
அவர் இரண்டு தொடர்களுக்குமே முக்கியமான பிளேயர் ஆவார். அவரை சேர்க்காமல் இருந்திருந்தால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கு பிறகு ஆஷஸ் தொடருக்கு நாங்கள் திறமையான வீரர் தேட வேண்டியது இருந்திருக்கும்.
ஆனால், அதுபோன்ற நடைபெறவில்லை. அவரையே தேர்ந்தெடுத்து விட்டோம். முதல் 2 ஆஷஸ் தொடருக்கு நாங்கள் வீரர்களை தேர்வு செய்துவிட்டோம். வார்னரும் அந்த லிஸ்ட்டில் இருக்கிறார்.
அவர் நல்ல ஆட்டத்திறனுடன் இருக்கிறார். நான் அவரிடம் சமீபத்தில் பேசினேன். அவர் ஆஸ்திரேலிய அணியில் விளையாடுவதற்கு தயாராக இருப்பதாக கூறினார்.
இவ்வாறு மெக்டோனல்டு கூறினார்.
ஆஸ்திரேலிய அணி கடந்த முறை சொந்த மண்ணில் 4-0 என்ற இங்கிலாந்தை ஒயிட் வாஷ் செய்து சாம்பியன் ஆனது.
இந்த முறை இங்கிலாந்தில் ஆஷஸ் போட்டி அடுத்த மாதம் 16-ம் தேதி தொடங்குகிறது.
அதற்கு முன்னதாகவே உலக டென்ஸ்ட சாம்பியன்ஷிப் போட்டி முடிந்து விடும். அதுவும் இங்கிலாந்தில் தான் நடைபெறுகிறது.
இப்போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணியின் ஒரு பகுதியினர் இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றுவிட்டனர்.
- ஒவ்வொரு போட்டியில் ஆடும் போதும், இது தான் நமது கடைசி போட்டி என்ற நினைப்பில் விளையாடுவேன்.
- டெஸ்ட் கிரிக்கெட்டை எடுத்துக் கொண்டால், அடுத்த ஆண்டு ஜனவரியில் சொந்த ஊரான சிட்னியில் நடக்கும் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டுடன் விடைபெற விரும்புகிறேன்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் வார்னர். இதுவரை 103 டெஸ்டில் விளையாடி 25 சதம் உள்பட 8,158 ரன்கள் சேர்த்துள்ளார். 36 வயதான வார்னர் கடைசி 4 இன்னிங்சில் 10, 1, 10, 15 ரன் வீதம் எடுத்து சொதப்பினார். அதனால் அவர் அடுத்து வரும் டெஸ்ட் போட்டிகளில் ஜொலித்தால் தான் தொடர்ந்து வாய்ப்பு பெற முடியும் என்ற நெருக்கடியில் இருக்கிறார்.
இந்த நிலையில் டேவிட் வார்னர் அளித்த பேட்டியில், '2024-ம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தான் நான் விளையாடப்போகும் கடைசி சர்வதேச போட்டியாக இருக்கும் என்று எப்போதும் சொல்லி வந்திருக்கிறேன். எனது திட்டமும் அது தான்.
டெஸ்ட் கிரிக்கெட்டை எடுத்துக் கொண்டால், அடுத்த ஆண்டு (2024) ஜனவரியில் சொந்த ஊரான சிட்னியில் நடக்கும் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டுடன் விடைபெற விரும்புகிறேன். டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் போட்டி ஆகிய டெஸ்ட் போட்டிகளில் வெற்றிகரமாக சாதிக்கும் பட்சத்தில், அடுத்து வரும் பாகிஸ்தான் தொடருடன் எனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக் கொள்வேன்.
இங்கு தொடர்ச்சியாக ரன் குவித்து, அதன் பிறகு தொடர்ந்து அணியில் வாய்ப்பு கிடைத்தாலும் கூட பாகிஸ்தான் தொடருக்கு அடுத்ததாக நடக்க உள்ள வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் நிச்சயம் விளையாடமாட்டேன். அதன் பிறகு வெள்ளைநிற பந்து கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்துவேன்.
ஒவ்வொரு போட்டியில் ஆடும் போதும், இது தான் நமது கடைசி போட்டி என்ற நினைப்பில் விளையாடுவேன். இது தான் எனது கிரிக்கெட் ஸ்டைல். இந்த அணியினருடன் அங்கம் வகிப்பதை மிகவும் விரும்புகிறேன். அவர்களுடன் உற்சாகமாக விளையாடுகிறேன். தொடர்ந்து கடினமாக உழைக்கிறேன். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஆஷஸ், 50 ஓவர் உலக கோப்பை போட்டி என்று அடுத்து முக்கியமான போட்டிகள் வருகின்றன. அதற்கு என்னை தயார்படுத்தி வருகிறேன்' என்றார்.
வார்னர் குறித்து ஆஸ்திரேலிய அணியின் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா அளித்த பேட்டியில், 'கடந்த சில தினங்களாக வார்னரின் பேட்டிங் பயிற்சியை பார்க்கிறேன். பயிற்சியில் மிகச்சிறந்த நிலையில் அவர் இருப்பது போல் தெரிகிறது. அதனால் போட்டியில் ரன் குவிப்பார் என்று நம்புகிறேன். இனி வார்னர் கதை அவ்வளவு தான் என்று விமர்சனங்கள் எழுந்த போது அவர் தனது 100-வது டெஸ்டில் இரட்டை சதம் அடித்ததை பார்த்தோம். சிறந்த வீரரை ஒரு போதும் குறைத்து மதிப்பிட முடியாது. அவரிடம் இருந்து ரன்வேட்டையை எதிர்பார்க்கிறோம்' என்றார்.