என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Deaths"
- இந்த ஆண்டில் மட்டும் இதுவரை சுமார் 35 லட்சம் பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
- இறந்தவர்களில் பெரும்பாலானோர் 20 முதல் 29 வயது வரை உள்ளவர்கள்.
பிரேசிலியா:
தென் அமெரிக்க நாடான பிரேசிலில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த ஆண்டில் மட்டும் இதுவரை சுமார் 35 லட்சம் பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அவர்களில் 1,600 பேர் சிகிச்சை பலனின்றி இறந்து உள்ளனர். இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 35 சதவீதம் அதிகம் ஆகும். இறந்தவர்களில் பெரும்பாலானோர் 20 முதல் 29 வயது வரை உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி பொதுமக்களுக்கு பிரேசில் அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
- கான்கிரீட் வேலை நடந்து கொண்டிருக்கும்போது விபத்து
- பீகார் மாநில தொழிலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்
தெலுங்கானா மாநிலத்தின் சூர்யபெட் மாவட்டத்தில் மெல்லச்செருவு கிராமத்தில் உள்ளது "மை ஹோம்" சிமென்ட் தொழிற்சாலை.
இன்று அந்த தொழிற்சாலையில் அங்கு நடைபெற்று வந்த கான்கிரீட் அமைக்கும் பணியின்போது திடீர் விபத்து ஏற்பட்டது. கான்கிரீட் கலவையை எடுத்துச்செல்லும் இரும்பு குழாய்கள் உடைந்து ஒன்றன்பின் ஒன்றாக சரிந்தது. இதில் தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். இதில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக தெரிகிறது. மேலும் சிலர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.
தகவலறிந்து விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினர், காயம் அடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பத்திரமாக அனுப்பி வைத்தனர். இறந்தவர்களின் உடல்கள் ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
நிறுவனத்தில் திடீரென ஏற்பட்ட விபத்தின் காரணமாக தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இடிபாடுகளில் இருந்து தற்போது வரை 3 சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் இருவரின் சடலங்களை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் சிலர் உள்ளே சிக்கிக் கொண்டுள்ளதாக தெரிகிறது.
பலியானவர்கள் உ.பி. மற்றும் பீகார் மாநிலங்களை சேர்ந்தவர்கள் என அடையாளம் கண்டுள்ள காவல்துறையினர், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து மை ஹோம் நிர்வாகம், எந்த கருத்தும் கூறவில்லை. வேறு எந்த விவரங்களும் வெளியாகவில்லை.
- கடலூரில் பா.ஜ.க மகளிர் அணி சார்பில் கள்ளசாராய மரணங்களை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
- நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினார்கள்.
கடலூர்:
கடலூர் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட பா.ஜ.க மகளிர் அணி சார்பில் கள்ளசாராயம் குடித்து மரணங்கள் நடைபெறுவதை கண்டித்து கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர்கள் ஜெயா, மாலா ஆகியோர் தலைமை வகித்தனர். மாநகர தலைவர் சாமந்தி வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் சுபஸ்ரீ, மாவட்ட தலைவர் மருதை, மாநகர தலைவர் வேலு வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்கள். இதில் ஒன்றிய தலைவர் தமிழ்ச்செல்வி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினார்கள். முடிவில் பொதுச் செயலாளர் சுதா நன்றி கூறினார்.
ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டம் இத்கோரி வட்டத்தைச் சேர்ந்தவர் மீனா முஷார் (வயது 45). இவர் தெருவோரம் கிடக்கும் பழைய பேப்பர், பிளாஸ்டிக்குகளை சேகரித்து விற்பனை செய்து அதன்மூலம் வாழ்ந்து வந்தார். இவர் கடந்த திங்கட்கிழமையன்று திடீரென இறந்துவிட்டார்.
அவர் கடந்த நான்கு நாட்களாக வருமானம் எதுவும் இல்லாமல் சாப்பிடவில்லை என்றும், பட்டினியால் அவர் இறந்துவிட்டதாகவும் அவரது மகன் கூறியுள்ளார். ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகே மரணத்திற்கான காரணம் தெரியவரும் என உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியானது.
இதேபோல் முன்னதாக, கிரிடி மாவட்டம் மங்கர்காடி கிராமத்தைச் சேர்ந்த சாவித்திரி தேவி (வயது 65) என்ற மூதாட்டி சனிக்கிழமை பட்டினியால் இறந்துள்ளார். அவருக்கு ரேசன் கார்டு கிடையாது. முதியோர் பென்சனும் கிடைக்கவில்லையாம். பிள்ளைகள் பிழைப்பு தேடி வெளியூர் சென்ற நிலையில், பிச்சை எடுத்து வாழ்ந்து வந்த சாவித்திரி தேவி, கடந்த சில தினங்களாக சாப்பாடு எதுவும் இல்லாமல் இறந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இந்த இரு பட்டினி மரணங்கள் குறித்தும் அரசின் கவனத்திற்கு தெரியவந்ததும், இதுபற்றி விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி முதல்வர் ரகுபர் தாஸ் உத்தரவிட்டுள்ளார். #StarvationDeaths
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்