என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "decreased"
- கடந்த சில மாதங்களாக பருத்தி மூட்டைகள் வரத்து அதிக அளவில் இருந்தது.
- இந்த வாரம் ஆயிரம் மூட்டைகள் மட்டும் பருத்தி மூட்டைகள் கொண்டு வரப்பட்டது.
அந்தியூர்:
அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அத்தாணி சாலை வாரச்சந்தை எதிர்ப்புறம்அமைந்துள்ளது. இங்கு விவசாயிகளின் விளை பொருட்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை நடைபெறும்.
இந்த நிலையில் அந்தியூர் தவிட்டுப்பாளையம், வெள்ளியம்பாளையம், வட்டக்காடு, புதுக்காடு, காந்தி நகர், சங்கரா பாளை யம், எண்ணமங்கலம், சின்னத்தம்பி பாளையம், பச்சம் பாளையம், கள்ளி மடை குட்டை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் பருத்தி பயிரிட்டு உள்ளனர்.
இதையொட்டி வெள்ளிக்கிழமை முதல்திங்கட்கிழமை வரை ஒழுங்குமுறை விற்பனை கூட கட்டிடத்தில் பருத்தி வைக்கப்பட்டு அதன் ஏலம் திங்கட்கிழமை காலை அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் ஞானசேகர் முன்னிலையில் நடைபெறும்.
இந்த ஏலத்தில் புளியம்பட்டி, அன்னூர், கொங்கணாபுரம், சத்தியமங்கலம், அவிநாசி, ஆந்திர மாநிலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து பருத்தியின் விளைச்சலுக்கு ஏற்றவாறு விலை நிர்ணயிக்கப்பட்டு ஏலம் எடுத்து வருகிறார்கள்.
கடந்த சில மாதங்களாக பருத்தி மூட்டைகள் வரத்து அதிக அளவில் இருந்தது. இந்த நிலையில் பருத்தி விளைச்சல் குறைவானதை யொட்டி அந்தியூர் ஒழுங்கு முறை கூடத்துக்கு பருத்தி வரத்து குறைந்தது.
இதையடுத்து இந்த வாரம் ஆயிரம் மூட்டைகள் மட்டும் பருத்தி மூட்டைகள் கொண்டு வரப்பட்டது.
நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரதான பெரிய அணைகளான பாபநாசம், மணிமுத்தாறு மூலம் தான் பெருவாரியான விவசாயம் மற்றும் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட மக்களின் குடிநீர் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வந்தன.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக பாபநாசம், சேர்வலாறு அணையில் இருந்து தண்ணீர் அதிகப்படியாக திறக்கப்பட்டது. இதனால் நீர்மட்டம் வேகமாக குறையத்தொடங்கியது. 144 அடி உச்ச நீர்மட்டம் உள்ள பாபநாசம் அணையில் இன்று மிகவும் குறைந்த அளவான 38 அடியே இருந்தது.
இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 212.25 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 50.82 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 83.05 அடியாக உள்ளது. அங்கு 70 சதவீத நீர் இருப்பு உள்ளதால் அதன் மூலம் இந்த கோடை காலத்தை சமாளித்து விடலாம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கடந்த ஆண்டு சேர்வலாறு அணை பழுது பார்க்கும் பணி நடந்ததால் பாபநாசம் அணையில் நீர் திறக்கப்பட்டு வற்ற வைக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டும் பாபநாசம் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள், பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
காவிரி நீர் பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. நேற்று அணைக்கு 107 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இன்றும் இதே அளவு தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நீர் வரத்தை விட தண்ணீர் திறப்பு கூடுதலாக உள்ளதால் நீர்மட்டம் 69.84 அடியில் இருந்து 69.78 அடியாக குறைந்து உள்ளது.
தொடர்ந்து நீர்வரத்து குறைந்து வரும் பட்சத்தில் அணையின் நீர்மட்டம் மேலும் குறைய வாய்ப்பு உள்ளது.
ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையின் உயரம் 71 அடி ஆகும். தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக இந்த ஆண்டில் 2 முறை அணை முழுக்கொள்ளளவை எட்டியது. அணையில் இருந்து மதுரை, திருமங்கலம், மேலூர் பகுதிகளின் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது.
‘கஜா‘ புயல் காரணமாக கடந்த வாரம் வைகை அணைக்கு நீர்வரத்து திடீரென அதிகரித்தது. இதனையடுத்து வைகை அணையில் இருந்து சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள கண்மாய்களுக்காக தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டது. ஏற்கனவே பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகை அணையின் நீர்மட்டம் மள, மளவென குறைய தொடங்கியது. மேலும் வைகை அணைக்கான நீர்வரத்தும் கணிசமாக குறைந்தது.
இதன் எதிரொலியாக, கடந்த வாரம் 68 அடியாக இருந்த வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 63 அடியாக குறைந்து விட்டது. சிவகங்கை, ராமநாதபுரம் பகுதிகளுக்கு இன்னும் 5 நாட்கள் தண்ணீர் திறக்கப்பட உள்ளதால் அணையின் நீர்மட்டம் மேலும் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. நாளுக்குநாள் நீர்வரத்தும் குறைந்து கொண்டே இருக்கிறது.
அணையில் இருந்து, கடந்த சில தினங்களாக வினாடிக்கு 4 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று காலை அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. அதன்படி திறக்கப்படுகிற தண்ணீரின் அளவு வினாடிக்கு 1,560 கன அடியாக குறைக்கப்பட்டது. நாளை அல்லது நாளை மறுநாள் முதல் மீண்டும் கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட இருப்பதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.
வைகை அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால் 5 மாவட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நேற்று காலை 6 மணி நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 63.58 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 913 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து பாசனத்துக்கும், மதுரை மாநகர குடிநீர் தேவைக்கும் சேர்த்து வினாடிக்கு 1,560 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்