search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Deer hunting"

    • 2 மான்கள் துப்பாக்கியால் சுட்டதில் இறந்து கிடந்தது.
    • மான்களை மீட்டு வனத் துறையினரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை பெரிய ஏரி பகுதியில் ஏராளமான மான்கள் வசிக்கின்றன. இந்த பகுதியில் நேற்று துப்பாக்கியால் சுடும் சத்தம் பல முறை கேட்டது. இதனையடுத்து அங்கிருந்த சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த போது அங்கு 2 மான்கள் துப்பாக்கியால் சுட்டதில் இறந்து கிடந்தது தெரிய வந்தது. போலீசார் வருவதை அறிந்து வேட்டை கும்பல் மான்களை அங்கேயே போட்டுவிட்டு ஓட்டம்பிடித்தது விசாரணையில் தெரிய வந்தது. இதனை அடுத்து அந்த மான்களை மீட்டு வனத் துறையினரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    இதனைத் தொடர்ந்து மான்களை சுட்டு வேட்டை யாடியது யார்? வேட்டைக்கு பயன்படுத்தியது நாட்டு துப்பாக்கியா? அல்லது லைசன்ஸ் துப்பாக்கியா? என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    இதுகுறித்து மான்களை பிரேத பரிசோதனை செய்த பிறகு அதில் உள்ளது பால்ரஸ் குண்டா அல்லது துப்பாக்கி குண்டா என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல் தெரிய வேண்டும் என மாவட்ட வன அலுவலர் இளங்கோவன் தெரிவித்தார்.

    இந்த பகுதியில் மான்களை வேட்டையாடிய சம்பவம் மிகப்பெரிய பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இன்று அதிகாலை அதே பகுதியில் ஒரு மான் விபத்தில் சிக்கி உயிர் இழந்தது. இதுகுறித்து செந்துறை போலீசார் மற்றும் வனத்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மான்வேட்டை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
    • இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே யுள்ள எலவனாசூர் கோட்டை பகுதியில் உள்ள காடுகளில் மான்வேட்டை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்படி எலவ னாசூர்கோட்டை சப்- இன்ஸ்பெக்டர் திருமால் மற்றும் போலீசார் எறையூர் பகுதியில் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள காட்டுப் பகுதியில் 2 நபர்கள் நாட்டுத் துப்பாக்கியுடன் சென்றனர்.

    அவர்களை அழைத்தபோது, 2 பேரும் தப்பியோடினர். அவர்களை மடக்கிப் பிடித்த போலீசார், போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் எறையூரை சேர்ந்த ராஜ் என்கிற அருள்ஜோதி (வயது 31), அம்புரோஸ் மகன் குறவன் என்கிற டேவில் செல்வராஜ் (40) என்பது தெரியவந்தது. இவர்கள் நாட்டுத் துப்பாக்கி மூலம் மான்களை வேட்டையாட முயற்சித்ததும் போலீசாரின் விசாரணையில் தெரிந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • 20 கிலோ இறைச்சி, துப்பாக்கி பறிமுதல்
    • சாத்தனூர் காப்பு காட்டில் துணிகரம்

    செங்கம்:

    செங்கம் அருகே உள்ள பெண்ணையாறு காப்புக்காட்டில் சாத்தனூர் வனச்சரக அலுவலர் ஸ்ரீனிவாசன் தலைமையில் வனவர் ராதா, வனக்காப்பாளர்கள் சிலம்பரசன், கார்த்திகேயன், ராஜ்குமார், வெங்கடேசன் உள்ளிட்டோர் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது காப்புக் காட்டில் உரிமம் இல்லாத கள்ள நாட்டு துப்பாக்கியை பயன்படுத்தி புள்ளிமானை வேட்டையாடி கூறு போட்டு கொண்டிருந்த 4 பேரை வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர்.

    விசாரனையில் அவர்கள் தண்டராம்பட்டை சேர்ந்த சேகர்,

    புளியம்பட்டியை சேர்ந்த வரதன், சங்கர்,

    ஏழுமலை என்பதும் தெரியவந்தது.

    அவர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 20 கிலோ மான் கறி, வேட்டைக்கு பயன்படுத்திய நாட்டு துப்பாக்கி மற்றும் ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

    • போலீசாரின் ரோந்து பணியில் சிக்கினர்
    • 3 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்

    போளூர்:

    திருவண்ணாமலை மாவட்ட வன அலுவலர் அ ருண்லால் உத்தரவின் பேரில் போளூர் வனச்சரக அலுவலர் குமார் தலைமையில், வனவர்கள் சிவகுமார், சந்திர சேகரன் மற்றும் வனக்காப்பா ளர்கள் அல்லியாளமங்கலம் காப்புக்காடு, அல்லிக்கட்டை சரகத்தில் காடு ஆகிய பகுதி களில் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது காட்டில் பெண் புள்ளிமானை, நாட்டு துப் பாக்கி மூலம் வேட்டையாடி, அதனை இருசக்கர வாகனத்தில் கடத்தி சென்ற 3 வாலி பர்களை மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் அவர்கள் ரோந்து பணி தேவிகாபுரத்தை சேர்ந்த சிவா (வயது 27), போளூரை சேர்ந்த சாம்சன் (26), கிளியனூரை சேர்ந்த அரி (25) என்பது தெரிய வந்தது.

    இதை யடுத்து 3 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 3 நாட்டு துப்பாக்கிகள், ரவைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    வேட்டையாடப்பட்ட மானை கால் நடை மருத்துவர் மூலம் பிரேத பரிசோதனை செய்து காட்டில் புதைத்தனர்.

    • 25 கிலோ பறிமுதல்
    • ஒருவர் கைது

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் வனப்பகுதியில் பல பகுதிகளில் ஏராளமான புள்ளி மான்கள் உள்ளன இந்த புள்ளிமான்களை வனப்பகுதியை ஒட்டியபடியுள்ள கிராமங்களைச் சேர்ந்த சிலர் வேட்டையாடி மான் இறைச்சியை விற்பனை செய்வதாக தொடர் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

    இந்நிலையில் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராம மூர்த்தி மேற்பார்வையில் பழைய குற்றவாளிகளை கைது செய்ய குடியாத்தம் தாலுக்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன், ஏட்டு சத்தியமூர்த்தி உள்ளிட்ட போலீசார் இன்று அதிகாலை சூராளூர் அடுத்த மலையடிவாரம் அருகே தேடப்படும் ஒருவர் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் விரைந்து சென்றனர்.

    போலீசாரை கண்டதும் 2 பேர் மோட்டார் சைக்கிள்களில் தப்பி ஓடினர். அங்கு இருந்த ஒரு நபரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

    அந்த நபரை தீவிர விசாரணை செய்த போது ஒடுகத்தூர் அடுத்த தீர்த்தம் பகுதியைச் சேர்ந்த பாபு (வயது 30) என்பது தெரியவந்தது. சிலருடன் சேர்ந்து பெரிய புள்ளி மானை வேட்டையாடி இறைச்சியை துண்டுகளாகிய விற்பனைக்கு கொண்டு செல்லும்போது பிடிப்பட்டது தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் பாபுவிடமிருந்து மோட்டார் சைக்கிள் 25 கிலோ மான் இறைச்சி வேட்டையாட பயன்படுத்தும் கருவிகள் கத்தி, எடை மெஷின் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    இதனையடுத்து காவல்துறை உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் பிடிப்பட்ட பாபு மற்றும் மான் இறைச்சி உள்ளிட்டவைகளை குடியாத்தம் வனத்துறை யினரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    குடியாத்தம் வனப்பகுதியில் புள்ளி மான்களை வேட்டையாடி இறைச்சி விற்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது ரோந்து செல்லாத வனத்துறையினரையும் சம்பவத்தை கண்டுக்காமல் மெத்தனமாக உள்ள வனத்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், வனவிலங்கு ஆர்வலர்களும் மாவட்ட நிர்வாகத்தை வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    செங்கம் அருகே புள்ளிமானை வேட்டையாடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 25 கிலோ இறைச்சி, நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.
    திருவண்ணாமலை:

    செங்கம் அருகே பிஞ்சூர் வனப்பகுதியில் புள்ளிமான்கள் உள்ளன. இந்த மான்களை சமூக விரோதிகள் வேட்டையாடி வருவதாக மாவட்ட வன அலுவலர் கிருபாசங்கருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் செங்கம் வனத்துறை அதிகாரி ராமநாதன் தலைமையிலான 10 பேர் கொண்ட குழுவினர் பிஞ்சூர் வனப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையை நடத்தினர்.

    அப்போது தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்குள் 2 பேர் சந்தேகத்திற்கு இடமாக இருந்தனர். அவர்களை வனத்துறையினர் பிடித்து விசாரணை செய்தனர். அதில் இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர்.

    அவர்களிடம் இருந்த ஒரு சாக்குபையை வனத்துறையினர் சோதனை செய்தபோது, அதில் சுமார் 25 கிலோ புள்ளிமான் இறைச்சி இருந்தது தெரியவந்தது. இதைப்பார்த்த வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.

    மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் புதுப்பாளையம் அடிவாரம் பகுதியை சேர்ந்த முருகன் (வயது 28), வீரானந்தல் பகுதியை சேர்ந்த ரஞ்சித் (38) ஆகியோர் என்பதும், அவர்கள் வனப்பகுதியில் நாட்டுத் துப்பாக்கியை கொண்டு மான்களை வேட்டையாடி விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்த வனத்துறையினர் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    ×