என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Deer rescue"

    • குருவார்பட்டி கிராமத்தில் ராமர் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தின் நடுப்பகுதியில் கிணறு உள்ளது.
    • 2 வயதான மான் ஒன்று உயிருக்கு போராடிய நிலையில் தண்ணீரில் தத்தளித்து கொண்டு இருந்தது.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே உள்ள குருவார்பட்டி கிராமத்தில் ராமர் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தின் நடுப்பகுதியில் கிணறு உள்ளது. இந்த கிணற்றின் அருகே நாய் குரைத்துள்ளது.

    இதனை கண்ட அந்த கிராம இளைஞர்கள் சந்தேகத்துடன் வந்து பார்த்தவுடன் 2 வயதான மான் ஒன்று உயிருக்கு போராடிய நிலையில் தண்ணீரில் தத்தளித்து கொண்டு இருந்தது.

    இந்த நிலையில் குருவார்பட்டி மற்றும் கோடாங்கிபட்டி இளைஞர்கள் சேர்ந்து கயிறு மூலம் மானை மீட்டு ஆட்டோ மூலம் விளாத்திகுளம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் வனத்துறையினர் குருமலை காப்பு காட்டில் மானை விட்டனர்.

    • பொதுமக்கள் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்
    • வனப்பகுதியில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப வலியுறுத்தல்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம்சுற்றியுள்ள வனப்பகுதிகளில் ஏராளமான புள்ளி மான்கள் உள்ளன. நேற்று காலை தண்ணீர் தேடி சுமார் 2 வயது உள்ள பெண் புள்ளிமான் கவுண்டன்ய மகாநதி ஆற்றின் வழியாகவே வந்துள்ளது .

    அப்போது நாய்கள் துரத்தியதால் பயந்துபோன மான் குடியாத்தம் போடிப்பேட்டை நீரேற்று நிலையம் அருகே வந்தது.

    இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் அந்த மானை பத்திரமாக மீட்டு குடியாத்தம் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    குடியாத்தம் வனச்சரக அலுவலர் வினோபா உத்தரவின் பேரில் வனத்துறையினர் விரைந்துசென்று அந்த மானை மீட்டு கல்லப்பாடி காப்புக்காடுகள் பகுதியில் விட்டனர். தற்போது கோடைகாலம் துவங்கி விட்டதால் வனப்பகுதிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் இல்லை என கூறப்படுகிறது.

    இதனால் வனவி லங்குகள் தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்து விடுகிறது கடந்த சில தினங்களுக்கு முன்பும் தண்ணீர் தேடி புள்ளி மான் ஒன்று குடியாத்தம் நகருக்குள் நுழைந்தது.

    வனத்துறையினர் உடனடியாக தனி கவனம் செலுத்தி வனப்பகுதிகளில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • புள்ளிமானை நாய்கள் துரத்தி வந்த நிலையில் பள்ளி வகுப்பறையில் புகுந்த மானை பத்திரமாக அப்பகுதி மக்கள் மீட்டனர்.
    • மாதவரம் வனத்துறையினர் மானை மீட்டு வனபகுதியில் கொண்டு சென்று விட்டனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த வேன்பாக்கம் அரசு மேல் நிலைப் பள்ளி அருகே காட்டுப்பள்ளி வனப்பகுதியில் இருந்து தண்ணீருக்காக வந்த புள்ளிமானை நாய்கள் துரத்தி வந்த நிலையில் பள்ளி வகுப்பறையில் புகுந்த மானை பத்திரமாக அப்பகுதி மக்கள் மீட்டனர்.

    கும்முடிப்பூண்டி அடுத்த மாதவரம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் மாதவரம் வனத்துறையினர் மானை மீட்டு வனபகுதியில் கொண்டு சென்று விட்டனர்.

    • வனத்துறையினர் மீட்டனர்
    • வனவிலங்குகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    ஆம்பூர்:

    ஆம்பூர் வனச்சரகத்திற்க்கு உட்பட்ட மலைப்பகுதிகளில் ்காட்டு எருமை, புள்ளி மான், காட்டுப்பன்றி, முயல், முள்ளம்பன்றி, கரடி உள்ளிட்ட உயிரினங்கள்அதிக அளவில் வாழ்ந்து வருகின்றன.

    வன விலங்குகள் தண்ணீர் தேவைக்காக வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் வருகின்றது. அவ்வாறு வரும் மான்களை நாய்கள், விடுவதில்லை துரத்தி சென்று அவற்றை வேட்டையாடுகின்றன.

    மேலும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் புள்ளி மான்கள் மீண்டும் வனப்பகுதிக்கு உயிருடன் செல்வதில்லை. பல நேரங்களில் நாய் கடித்தும், வாகனங்களில் அடிப்பட்டு பயத்தாலும் திடீரென இறந்து விடுகின்றது.

    இந்த நிலையில் ஆம்பூர் கன்னிகாபுரம் பகுதிக்கு 2 புள்ளி மாண்கள் தண்ணீர் தேடி வந்தன. அங்கு ரேசன் கடை எதிரே உள்ள வளாகத்தில் வனப்பகுதிக்கு திரும்பி செல்ல வழிதெரியாமல் சுற்றித்திரிந்தன.

    இதுகுறித்து அந்த பகுதிமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து, 2 புள்ளி மான்களையும் மீட்டு வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.

    இதுபோல் அழிந்து வரும் வனவிலங்குகளை பாதுகாக்க நடவடிக்கை வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூரை அடுத்த கீழ் கொத்தூர் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் என்பவரது நிலத்தில் உள்ள சுமார் 70 அடி ஆழமுள்ள கிணற்றில் நேற்று மாலை புள்ளி மான் ஒன்று விழுந்து.

    பின்னர் அப்பகுதியினர் மான் தத்தளித்துக் கொண்டு இருப்பதாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சுமார் 2 மணி நேரம் போராடி புள்ளி மானை உயிருடன் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

    பின்னர், வனத்துறை அலுவலர் இந்து உத்தரவின்பேரில் மீட்கப்பட்ட புள்ளி மானை அருகே உள்ள பரவமலை காப்புக்காட்டில் கொண்டு விட்டனர்.

    ×