என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Deflation"
- டீஃப்லேஷன் ஒரு அபாயகரமான பொருளாதார நிலை என நிபுணர்கள் வர்ணிக்கின்றனர்
- சீனாவில் 2 ஆண்டுகளாக தென்பட்ட வளர்ச்சி மாறி டீஃப்லேஷன் தொடங்கி விட்டது
பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை பன்மடங்கு உயர்ந்து மக்களின் வாங்கும் திறன் குறையும் போது பணவீக்கம் (inflation) எனும் நிலை தோன்றும்.
ஆனால் பொருட்களுக்கும் சேவைகளுக்கும் தேவை குறையும் போது அவற்றின் விலையும் குறைய தொடங்கும். குறைந்த அளவிலான பணத்தில் அதிக அளவிலான பொருட்களை வாங்க முடியும். இந்நிலையை டீஃப்லேஷன் (deflation) எனப்படும் பணவாட்டமாக பொருளாதார நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
சீனாவில் சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு சென்ற ஜூலை மாதம் பொருளாதாரம் டீஃப்லேஷன் நிலையை அடைந்தது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
கோவிட் பெருந்தொற்றுக்கு பிறகு அங்கு பொருளாதாரம் மீண்டு, வளர்ந்தும் வருவதற்கான அறிகுறிகள் தென்பட்ட நிலையில் முதல் முறையாக இந்நிலை தற்போது தோன்றியுள்ளது.
சீனாவில் மக்கள் செலவினங்களை மிகவும் குறைத்து வருவதால் பொருளாதாரம் வாட்டத்தை அடைந்துள்ளதாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் பொருளாதாரத்தில் 25 சதவீதத்திற்கும் மேல் பங்கு வகித்த ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்டிருக்கும் சரிவும் இதற்கு மற்றொரு காரணம்.
பணவீக்கத்தின் முக்கிய அளவீடான நுகர்வோர் விலைக் குறியீடு (Consumer Price Index) கடந்த ஜூலை மாதம் 0.3 ஆக குறைந்துள்ளது என தேசிய புள்ளியியல் அலுவலகம் கூறியுள்ளது.
நுகர்வோரின் மனநிலையில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை தவிர பிற பொருட்கள் மற்றும் சேவைகளுக்காக செலவு செய்யும் எண்ணம் மறைவதுதான் பணவாட்டம் ஏற்பட முக்கிய காரணம் என கூறப்படுகிறது.
இது ஒரு அபாயகரமான பொருளாதார நிலை என நிபுணர்களால் வர்ணிக்கப்படுகிறது.
நுகர்வோர் குறைவதால் உற்பத்தியை குறைக்கவும், புதிய தொழிலாளர்களை பணியமர்த்துவதை நிறுத்தி வைக்கவும், தேவைப்பட்டால் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யவும் நிறுவனங்கள் திட்டமிடும். இதனால் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கும்.
சீனாவின் பொருளாதார வாட்டம் குறித்த அறிவிப்பின் தொடர்ச்சியாக இந்திய பங்குச் சந்தையில் பங்குகள் சரிவை சந்தித்தன.
சீனாவின் பொருளாதார மாற்றம் உலகளவில் ஏற்படுத்தப்போகும் தாக்கத்தை பொருளாதார நிபுணர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.
- கிழங்கு ஆலைகளில் மரவள்ளி கிழங்கில் இருந்து ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது.
- மேலும் சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளான எஸ்.வாழவந்தி, பெரிய கரசபாளையம், செங்கப் பள்ளி, பரமத்தி, பொத்தனூர், கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதூர், சோழசிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரவள்ளி கிழங்கு பயிரிடப் பட்டுள்ளது.
இப்பகுதிகளில் விளையும் மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதி களில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர்.
கிழங்கு ஆலைகளில் மரவள்ளி கிழங்கில் இருந்து ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயார் செய்யப்படு கிறது. மேலும் சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர்.
மரவள்ளி கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையா ளர்கள் மரவள்ளி கிழங்கில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின் நனர்.
கடந்த வாரம் மரவள்ளிகிழங்கு டன் ஒன்று ரூ.12 ஆயிரத்து 500 -க்கு விற்பனையானது. தற்பொழுது டன் ஒன்றுக்கு ரூ.1000 வரை சரிவடைந்து ரூ.11ஆயிரத்து 500-க்கு விற்பனையாகிறது. அதே போல் சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளி கிழங்கு டன் ஒன்று கடந்த வாரம் ரூ.13 ஆயிரத்து 500-க்கு விற்பனையானது. தற்போது டன் ஒன்றுக்கு ரூ.1000 வரை சரிவடைந்து ரூ.12 ஆயிரத்து 500-க்கு விற்பனையாகிறது.
வரத்து அதிகரித்துள்ள தால், மரவள்ளி கிழங்கு விலை சரிவடைந்து உள்ளது. இதனால் மரவள்ளி கிழங்கு பயிர் செய்துள்ள விவசாயி கள் கவலை அடைந்துள் ளனர்.
- பரமத்திவேலுார் பல்வேறு பகுதிகளில், ஆயிரக்கணக்கான ஏக்கரில் பூவன், ரஸ்தாளி, பச்சநாடன், கற்பூரவல்லி, மொந்தன் உள்ளிட்ட பல்வேறு ரகமான வாழைத்தார்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.
- வாழைத்தார் விலை குறைந்ததால், வாழை விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலுார், நன்செய் இடையாறு, ஓலப்பாளையம், குப்புச்சிபாளையம், பாலப்பட்டி, செங்கப்பள்ளி, மணப்பள்ளி, மோகனூர், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, கொந்தளம், பொன்மலர்பாளையம், அண்ணா நகர், செல்லப்பம் பாளையம், சாணார்பாளையம், பிலிக்கல் பாளையம், அய்யம்பாளையம், ஆனங்கூர், கண்டிபாளையம், வடகரையாத்தூர், கொத்தமங்கலம், மாரப்பம்பாளையம், சோழசிராமணி, சிறுநல்லிக்கோவில் மற்றும் பல்வேறு பகுதிகளில், ஆயிரக்கணக்கான ஏக்கரில் பூவன், ரஸ்தாளி, பச்சநாடன், கற்பூரவல்லி, மொந்தன்
உள்ளிட்ட பல்வேறு ரகமான வாழைத்தார்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். வாழைத்தார் வெட்டும் தருவாயில் வரும்போது கூலி ஆட்கள் மூலம் வாழைத்தார்களை வெட்டி உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பரமத்தி வேலூரில் நடைபெற்று வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்க்கும் கொண்டு சென்று விற் பனை செய்து வரு கின்றனர்.
வாழைத்தார்களை ஏலம் எடுத்து செல்வதற்காக நாமக்கல், கரூர் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து தங்களுக்கு கட்டுபடியாகும் விலைக்கு வாழைத்தார்களை வாங்கி லாரிகள் மூலம் கொண்டு செல்கின்றனர்.
வாங்கிய வாழைத் தார்களை தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங் களுக்கும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த வாரம் பூவன் வாழைத்தார் ஒன்றுக்கு ரூ.300-க்கு விற்றது, தற்போது அதிகபட்சமாக, ரூ.200-க்கும், ரூ.400-க்கு விற்ற, ரஸ்தாளி தார், தற்போது, ரூ.250-க்கும், கற்பூரவல்லி வாழைத்தார் கடந்த வாரம் ரூ.300-க்கு விற்றது நேற்று ரூ.200-க்கும், ரூ.250-க்கு விற்ற பச்சநாடன் வாழைத்தார் தற்பொழுது ரூ ரூ.200-க்கும் விற்பனையானது. மொந்தன் வாழைக்காய் ஒன்று, ரூ.5 விற்ற நிலையில், தற்போது, ரூ.3-யாக குறைந்துள்ளது.
வரத்து அதிகமானதும், மேலும் வெயில் காலத்தில் இரண்டு நாட்களுக்கு மேல் வாழைப்பழம் தோல்கள் கருப்பாக மாறிவிடுவதும் இதற்கு காரணம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
வாழைத்தார் விலை குறைந்ததால், வாழை விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
- கோடை மழை காரணமாக எலுமிச்சம் பழம் விளைச்சல் அதிகரித்துள்ளது.
- ஒரு பழம் 10 ரூபாய் வரை விற்ற நிலையில் நேற்று எலுமிச்சை பழம் ஒன்று 3 ரூபாய் முதல் அதிகபட்சம் 5 ரூபாய் வரை விற்பனையானது.
பரமத்திவேலூர்:
கோடை மழை காரணமாக எலுமிச்சம் பழம் விளைச்சல் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் வரை எலுமிச்சம்பழம் ஒரு பழம் 10 ரூபாய் வரை விற்ற நிலையில் நேற்று எலுமிச்சை பழம் ஒன்று 3 ரூபாய் முதல் அதிகபட்சம் 5 ரூபாய் வரை விற்பனையானது. எலுமிச்சை பழம் விலை சரிவால் ஆர்வத்துடன் பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர்.
இது குறித்து வியாபாரி கூறுகையில், தற்போது மதுரை, தேனி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் எலுமிச்சை பழம் விளைச்சல் அதிகரித்துள்ளது. ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு சென்று எலுமிச்சை பழங்களை வியாபாரிகள் வாங்கி வருகிறார்கள்.
தற்போது கோடை மழை, அவ்வப்போது பெய்து வருவதால் பயன்பாடு குறைந்து விலையும் சரிவடைந்து வருகிறது. வரும் நாட்களில் எலுமிச்சை பழம் மேலும் விலை சரிவடைய வாய்ப்புள்ளது என கூறினார்.
- நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலுார் தாலுகாவில் பல்வேறு வகையான வாழைகளை பயிரிட்டுள்ளனர்.
- வாழைத்தார்களை ஏலம் எடுப்பதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து தங்களுக்கு கட்டுபடியாகும் விலைக்கு ஏலம் எடுத்து செல்கின்றனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலுார் தாலுகா பாண்டமங்கலம், பொத்த னுார், நன்செய் இடையாறு, குப்பிச்சி பாளையம், மோக னுார், பரமத்திவேலுார், அண்ணாநகர், பிலிக்கல்பா ளையம், ஆனங்கூர், ஜேடர்பாளை யம்,கொத்த மங்கலம், சிறுநல்லி கோவில், அய்யம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் விவசாயிகள் பூவன், பச்சநாடன், கற்பூர வல்லி, ரஸ்தாளி, மொந்தன் உள்ளிட்ட பல்வேறு வகை யான வாழைகளை பயி ரிட்டுள்ளனர். வாழைத்தார் கள் விளைந்த உடன் வாழைத்தார்களை வெட்டி உள்ளூர் பகுதி களுக்கு வரும் வியாபாரி களுக்கும், பரமத்தி வேலுாரில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். வாழைத்தார்களை ஏலம் எடுப்பதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து தங்களுக்கு கட்டுபடியாகும் விலைக்கு ஏலம் எடுத்து செல்கின்றனர்.
ஏலம் எடுக்கப்பட்ட வாழைத்தார்களை, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்க ளுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில் நேற்று பரமத்தி வேலூர் தினசரி ஏல மார்க்கெட்டில் நடைபெற்ற ஏலத்திற்கு 500 வாழைத்தார்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.200-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.200-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.250-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.170-க்கும், மொந்தன் வாழைத்தார் ஒன்று ரூ.200 -க்கும் விற்பனையானது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் வாழைத்தார் வீழ்ச்சி அடைந்துள்ளது.
வாழைதார் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் சரிவு, விவசாயிகளை கவலையடைச் செய்துள்ளது.
இது குறித்து விவசாயிகள் கூறும்போது, வாழைத்தார் விலை சரிந்தாலும், வாங்க ஆள் இல்லாமல் திருப்பிக் கொண்டு போகும் நிலை உள்ளது. தற்போது வாழைத்தார் வரத்து அதிகமாக உள்ளது. வெளி மாவட்ட, வெளி மாநில வியாபாரிகள் யாரும் வரவில்லை. உள்ளூர் வியாபாரிகள் மட்டுமே வந்தனர். விளைச்சரிவுக்கு இதுவும் ஒரு காரணமாகும். வாழைத்தார்களை மார்க்கெட்டுக்கு கொண்டு வரும், சரக்கு வாகனங்களின் வாடகைக்கு கூட கட்டுபடி ஆகாது. அக்னி நட்சத்திரம் முடிந்தவுடன் சுப முகூர்த்தம் நாட்களில் விலை உயரும் என தெரிவித்தனர்.
- விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு பயிர் செய்துள்ளனர்.
- இப்பகுதிகளில் விளையும் கரும்புகளை வெட்டிச் செல்வதற்காக மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்துள்ளனர்.
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் வட்டத்தில் ஜேடர்பாளையம், சோழசிராமணி, அய்யம்பாளையம், கபிலர்மலை, பரமத்தி வேலூர், பாண்டமங்கலம், நன்செய்இடையாறு, பிலிக்கல்பாளையம், ஆனங்கூர், கண்டிப்பா ளையம் ,வடகரையாத்தூர், கொத்தமங்கலம், தி.கவுண்டம்பாளையம் திடுமல், கபிலக்குறிச்சி, பெரிய சோளிபாளையம், சின்ன சோளி பாளையம், பெரிய மருதூர் , சின்ன மருதூர், சிறு நல்லிக்கோவில் கொத்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு பயிர் செய்துள்ளனர். இப்பகுதிகளில் விளையும் கரும்புகளை வெட்டிச் செல்வதற்காக மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்துள்ளனர்.
பதிவு செய்யாத விவசாயிகள் கபிலர்மலை சுற்று வட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் சுமார் 200-க்கும் மேற்பட்ட வெல்லம் தயாரிக்கும் கரும்பு ஆலை உரிமையா ளர்களுக்கு டன் ஒன்றுக்கு ரூ. 2900 வரை விற்பனை செய்கின்றனர்.
வாங்கிய கரும்புகளை சாறு பிழிந்து கொப்பரையில் ஊற்றி சூடேற்றி பாகு ஆக்கி உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் மற்றும் நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றை தயார் செய்கின்றனர். பின்னர் அவற்றை 30 கிலோ கொண்ட சிப்பங்களாக (மூட்டைகளாக) கட்டி, பிலிக்கல்பாளையத்தில் உள்ள வெல்லம் ஏல சந்தைக்கு கொண்டு வருகின்றனர்.
ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் புதன்கிழமை களில் வெல்லம் ஏலச் சந்தையில் உள்ள 13 ஏல மண்டியில் ஏலம் நடைபெறுகிறது. வெல்லத்தை ஏலம் எடுப்பதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமா நிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வெல்லத்தை ஏலம் எடுத்துச் செல்கின்றனர்.
கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,275 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,330 வரையிலும் ஏலம் போனது. புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில் உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,240 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ. 1,270 வரையிலும் ஏலம் போனது.
வெல்லம் வரத்து அதிகரித்ததால் விலை சரி வடைந்துள்ளது. வெல்லம் விலை வீழ்ச்சியால் கரும்பு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
- பரமத்திவேலூர் பகுதி உள்ளிட்ட பல்வேறு வகையான வாழை ரகங்களை ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் செய்துள்ளனர்.
- இங்கு விளையும் வாழைத்தார்களை பரமத்திவேலூரில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கு கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், நன்செய் இடையாறு, குச்சிபாளையம், குப்புச்சிபாளையம், பாலப்பட்டி, மோகனூர், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, கொந்தளம், பொன்மலர் பாளையம், அய்யம்பாளையம், ஆனங்கூர், கண்டிபாளையம், வடகரையாத்தூர், ஜேடர்பாளையம், கொத்தமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பூவன், கற்பூரவள்ளி, பச்சநாடன், ரஸ்தாலி, மொந்தன் உள்ளிட்ட பல்வேறு வகையான வாழை ரகங்களை ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் செய்துள்ளனர்.
இங்கு விளையும் வாழைத்தார்களை பரமத்திவேலூரில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கு கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து வியாபாரிகள் வந்திருந்து வாழைத்தார்களை வாங்கி செல்கின்றனர்.
கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் ஒன்று அதிகபட்சமாக ரூ.380-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.350-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.320-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.320-க்கும், மொந்தன் வாழைத்தார் ஒன்று ரூ.500-க்கும் விற்பனையானது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.300-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.200-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.250-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.200-க்கும், மொந்தன் வாழைத்தார் ஒன்று ரூ.300-க்கும் விற்பனையானது.
வரத்து அதிகரிப்பால் வாழைத்தார்களின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் வாழை பயிர் செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
- இங்கு விளையும் வெற்றிலைகள் கர்நாடகா, கேரளா, குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினந்தோறும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
- வரத்து அதிகரிப்பாலும் வெற்றிலை விலை சரிவடைந்துள்ளது என தெரிவித்தனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதிகளான பாண்டமங்கலம், பொத்தனூர், வேலூர், அனிச்சம்பாளையம், குப்புச்சிப்பாளையம், நன்செய் இடையாறு, பாலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் வெற்றிலை பயிர் செய்யப்பட்டுள்ளது.
இங்கு விளையும் வெற்றிலைகள் கர்நாடகா, கேரளா, குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினந்தோறும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் மார் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ. 15 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் மார் சுமை ஒன்று ரூ. 6 ஆயிரத்திற்கும், வெள்ளைக் கொடி வெற்றிலை முதியம்பயிர் மார் சுமை ஒன்று ரூ. 7 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் மார் ரூ. 3 ஆயிரத்து 500-க்கும் ஏலம் போனது.
நேற்று நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் மார் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.8 ஆயிரத்திற்கும் கற்பூரி வெற்றிலை இளம்பயிர் மார் சுமை ஒன்று ரூ.4 ஆயிரத்திற்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை முதியம் பயிர் மார் சுமை ஒன்று ரூ.3 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் மார் சுமை ஒன்று 2 ஆயிரத்து 500-க்கும் ஏலம் போனது.
இதை குறித்து விவசாயிகள் கூறிகையில், அதிக அளவில் விஷேச நிகழ்ச்சிகள் இல்லாததாலும், வரத்து அதிகரிப்பாலும் வெற்றிலை விலை சரிவடைந்துள்ளது என தெரிவித்தனர்.
- கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி ரூ. 20 முதல் ரூ. 30 வரை விற்கப்பட்டது.
- தக்காளி வரத்து அதிகம் ஆனதால் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து நேற்று ஒரு கிலோ ரூ. 8 முதல் ரூ. 10 வரை விற்பனை ஆனது.
சேலம்:
சேலத்தில் உழவர் சந்தைகளில் கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி ரூ. 20 முதல் ரூ. 30 வரை விற்கப்பட்டது. நேற்று சேலத்திற்கு பனமரத்துப்பட்டி, ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி வாழப்பாடி, காரிப்பட்டி, மேச்சேரி உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்து விவசாயிகள் பலர் தக்காளியை விற்பனைக்காக கொண்டு வந்தனர். அதை வியாபாரி கள் பெற்று விற்பனை செய்தனர். வழக்கத்தை விட நேற்று தக்காளி வரத்து அதிகம் ஆனதால் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து நேற்று ஒரு கிலோ ரூ. 8 முதல் ரூ. 10 வரை விற்பனை ஆனது.
- விவசாயிகளும் என்ன செய்வதென்று தெரியாமல், வேதனையடைந்து வருகின்றனர்.
- நடப்பு பருவத்தில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்த விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
குடிமங்கலம்:
உடுமலை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் விவசாயம் பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. இதில் காய்கறி பயிர்களில் சின்னவெங்காயம் பிரதானமாக உள்ளது.உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில் நாற்று நடவு முறை மற்றும் நேரடியாக காய் நடவு முறையில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இப்பகுதிகளில் பிரதான சாகுபடியாக சின்ன வெங்காயம் இருந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக நோய்த்தாக்குதல், விலை சரிவு, சாகுபடி செலவினம் என பெரிய அளவிலான நஷ்டம் ஏற்பட்டதால் நடப்பு பருவத்தில் சாகுபடி பரப்பு குறைந்துள்ளது.
இப்பகுதிகளில் ஏறத்தாழ 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை துவங்கியுள்ளது.சாகுபடியில் விதைப்பு பருவத்தில் மழை குறைந்தது, தொடர்ந்து பெய்த அதிக பனிப்பொழிவு, கடும் வெயில் உள்ளிட்ட காரணங்களினாலும், களைக்கொல்லி, பூச்சி மருந்துகள் உள்ளிட்ட இடு பொருட்கள் குறித்து தொழில் நுட்ப உதவிகள் விவசாயிகளுக்கு கிடைக்காத நிலையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
விவசாயிகளும் என்ன செய்வதென்று தெரியாமல், வேதனையடைந்து வருகின்றனர். வழக்கமாக ஒரு ஏக்கருக்கு 7 முதல் 8 டன் வரை மகசூல் இருக்கும் நிலையில் நடப்பாண்டு 4 டன் மட்டுமே மகசூல் கிடைத்து வருகிறது.
ஒரு சில பகுதிகளில் சீதோஷ்ண நிலை மாற்றத்தால், ஒட்டுமொத்த வெங்காய பயிரும் கருதி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. விளை நிலங்களில் 20 முதல் 25 ரூபாய்க்கு மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் பாதித்துள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில்,
சின்ன வெங்காயம் சாகுபடியில் சீதோஷ்ண நிலை மாற்றம், தரமற்ற இடு பொருட்கள் பயன்பாடு உள்ளிட்ட காரணங்களினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.ஒரு ஏக்கர் சாகுபடிக்கு 70 முதல் 80 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும் நிலையில் நடப்பாண்டு கடுமையான பனிப்பொழிவு, வெயில், மழையில்லாதது என சீதோஷ்ண நிலை மாற்றத்தால் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மகசூல் குறைந்துள்ளதோடு விலையும் குறைவாக உள்ளது. பல இடங்களில் வெங்காயம் பயிர் கருகி வீணாகியுள்ளது. இதனால் நடப்பு பருவத்தில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்த விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
உடுமலை பகுதிகளில் ஆண்டு தோறும் சின்ன வெங்காயம் சாகுபடி பரப்பு குறைந்து வருகிறது. அதே போல் தக்காளி, புடலங்காய், அவரைக்காய், பாகற்காய் என பந்தல் சாகுபடியிலும், மஞ்சள் தேமல் நோய் உள்ளிட்ட காரணங்களினால் பாதிப்புகள் ஏற்படுவதோடு விளைபொருட்களுக்கு உரிய விலையும் கிடைப்பதில்லை.
மத்திய, மாநில அரசுகள் இந்த பிரச்சினையில் தலையிட்டு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்