என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Delhi Assembly polls"

    • பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியுடன் இணைந்து ஆம் ஆத்மி கட்சி போட்டியிட்டது.
    • டெல்லியில் நடைபெற்ற 7 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி தோல்வியைத் தழுவியது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியுடன் இணைந்து ஆம் ஆத்மி கட்சி போட்டியிட்டது. டெல்லியில் நடைபெற்ற 7 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி தோல்வியைத் தழுவியது.

    இதற்கிடையே, தலைநகர் தலைநகர் டெல்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கான சட்டசபைத் தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது.

    இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சி கட்சித் தலைவர் கோபால் ராய் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், பாராளுமன்ற தேர்தலுக்காக இந்தியா கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்டோம். வரும் சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி இந்தியா கூட்டணியுடன் இணைந்து போட்டியிடாது. டெல்லி மக்களுடன் இணைந்து சட்டசபைத் தேர்தலை தனியாகச் சந்திப்போம் என தெரிவித்தார்.

    • ஆம் ஆத்மி மொத்தமுள்ள 70 தொகுகளில் 31 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
    • டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என ஆம் ஆத்மி தெரிவித்தது.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம்.

    மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது அதற்கான பணிகளை தொடங்கிவிட்டார்.

    மொத்தமுள்ள 70 தொகுகளில் 31 தொகுதிகளுக்கு ஏற்கனவே வேட்பாளர்களை அறிவித்துவிட்டார்.

    டெல்லி தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றால், 18 வயது நிரம்பிய அனைத்து பெண்களுக்கும் ஒவ்வொரு மாதமும் தலா 2,100 ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்தார்.

    டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தனது முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் முன்னாள் எம்பியான சந்தீப் தீக்ஷித் புதுடெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார்.

    ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் புதுடெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • புதுடெல்லி தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிடப் போவதாக கெஜ்ரிவால் கூறினார்.
    • முன்னாள் முதல் மந்திரி மகன்களை எதிர்த்து போட்டியிட உள்ளேன் என்றார்.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லி சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜ.க ஆகிய கட்சிகள் தனித்தனியே போட்டியிடுகின்றன. இதற்காக அக்கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன.

    அதன்படி, புதுடெல்லி தொகுதியில் டெல்லியில் 3 முறை காங்கிரஸ் சார்பில் முதல் மந்திரி பதவி வகித்த ஷீலா தீட்ஷித் மகன் சந்தீப் தீட்ஷித்தை அக்கட்சி களமிறக்கியது.

    அதேபோல், முன்னாள் முதல் மந்திரி ஷாகிப் சிங் வர்மா மகன் பர்வேஷ் வர்மாவை இத்தொகுதியில் பா.ஜ.க. களமிறக்கியது.

    இதற்கிடையே, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால் தொகுதி மாறுவார் என தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், தனியார் செய்தி நிறுவன நிகழ்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், டெல்லி தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட உள்ளேன். இத்தொகுதியில் முதல் மந்திரி மகன்களுக்கும், சாமானிய மனிதருக்கும் இடையில் போட்டியிருக்கும். முதல் மந்திரி அதிஷி கல்காஜ் தொகுதியில் போட்டியிடுவார் என தெரிவித்தார்.

    • டெல்லியில் கடந்த முறை நடந்த சட்டசபைத் தேர்​தலில் ௬௨ இடங்​களில் வென்று ஆம் ஆத்மி ஆட்சி​யை தக்க​வைத்​தது.
    • மூத்த குடிமக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்திருந்தார்.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் கடந்த 2015-ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 67 இடங்களைக் கைப்பற்றி ஆம் ஆத்மி முதல் முறையாக ஆட்சி அமைத்தது. அடுத்து, 2020-ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் 62 இடங்களில் வென்று ஆட்சியை மீண்டும் தக்கவைத்தது.

    இதற்கிடையே, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் டெல்லி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலிலும் வெற்றி பெற்று தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சி அமைக்க ஆம் ஆத்மி கட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

    காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணியை தவிர்த்து, டெல்லி சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம் என ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

    தேர்தலில் ஆம் ஆத்மி மீண்டும் வெற்றி பெற்றால் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,100 வழங்கப்படும் என கெஜ்ரிவால் அறிவித்தார். மேலும், மூத்த குடிமக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் எனவும் வாக்குறுதி அளித்திருந்தார்.

    இந்நிலையில், டெல்லியில் உள்ள ராஜேந்திர நகர் பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 24 மணி நேரமும் தண்ணீர் வழங்கும் திட்டத்தை ஆம் ஆத்மி கட்சி இன்று அறிமுகம் செய்தது.

    அப்போது பேசிய கெஜ்ரிவால், தற்போது ராஜேந்திர நகர் பகுதியில் 24 மணி நேரமும் தடையின்றி தண்ணீர் வழங்கப்படுகிறது. விரைவில் இந்தத் திட்டம் டெல்லி முழுமையும் செயல்படுத்தப்பட உள்ளது என தெரிவித்தார்.

    • டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 5-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
    • தேர்தலில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 8-ம் தேதி எண்ணப்பட உள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 5-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று அறிவித்தார். தேர்தலில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 8-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

    இந்நிலையில், டெல்லி சட்டசபை தேர்தலில் முழு பலத்துடன் களத்தில் இறங்க தயாராக வேண்டும் என தொண்டர்களுக்கு ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக கெஜ்ரிவால் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து தொழிலாளர்களும், உறுப்பினர்களும் முழு பலத்துடனும் உற்சாகத்துடனும் களத்தில் இறங்க தயாராக இருக்கவேண்டும். அவர்களின் (பாஜக) பெரிய அமைப்புகள் உங்கள் ஆர்வத்திற்கு முன் தோல்வி அடைகின்றன. நீங்கள் எங்களின் மிகப்பெரிய பலம்.

    இந்த தேர்தல் வேலை அரசியலுக்கும், துஷ்பிரயோக அரசியலுக்கும் இடையில் இருக்கும். டெல்லி மக்கள் எங்கள் வேலை அரசியலில் நம்பிக்கை வைத்திருப்பார்கள். நிச்சயம் வெற்றி பெறுவோம் என பதிவிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக தனித்தனியாக போட்டியிடுகின்றன.
    • டெல்லியில் ஆட்சி அமைத்தால் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.

    டெல்லி சட்டசபை தேர்தல் பிப்ரவரி 5-ந்தேதி நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8-ந்தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுவதால் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், டெல்லியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தால் ஜீவன் ரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 25 லட்ச ரூபாய்க்கு மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.

    மூத்த காங்கிரஸ் தலைவர் அசோக் கெலாட் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

    முன்னதாக டெல்லியில் ஆட்சி அமைத்தால் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 ஊக்கத் தொகை வழங்கும் 'பியாரி திதி யோஜனா' திட்டத்தை காங்கிரஸ் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 5-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
    • டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு திரிணமுல் காங்கிரஸ் ஆதரவு அளிக்கிறது.

    புதுடெல்லி:

    டெல்லி சட்டசபை மொத்தம் 70 உறுப்பினர்களை கொண்டது. டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 5-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அறிவித்தார். தேர்தலில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 8-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

    ஆம் ஆத்மி கட்சிக்கு சமாஜ்வாதி கட்சி ஆதரவு அளிப்பதாக அறிவித்தது. இதனால் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவிற்கு கெஜ்ரிவால் நன்றி தெரிவித்தார்.

    இதற்கிடையே, டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு திரிணமுல் காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்கிறது என ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். இதையடுத்து காங்கிரஸ், ஆம் ஆத்மி, பா.ஜ.க. ஆகிய கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.

    இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சிக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிப்பதாக அறிவித்தது. இதனால் திரிணாமுல் கட்சி தலைவர் மம்தா பானர்ஜிக்கு கெஜ்ரிவால் நன்றி தெரிவித்தார்.

    இதுதொடர்பாக, கெஜ்ரிவால் எக்ஸ் வலைதளத்தில் நன்றி தெரிவித்துள்ள செய்தியில், டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி. கட்சிக்கு ஆதரவளித்த மேற்கு வங்க முதல் மந்திரி மம்தாவுக்கு நன்றி. நீங்கள் நல்ல நேரத்திலும், சிக்கலான நேரத்திலும் எப்போதும் ஆதரவாகவும், ஆசியும் அளித்து உறுதுணையாக இருந்துள்ளீர்கள் நன்றி என பதிவிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுகின்றன.
    • டெல்லியில் ஆட்சி அமைத்தால் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.

    டெல்லி சட்டசபை தேர்தல் பிப்ரவரி 5-ந்தேதி நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8-ந்தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுவதால் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

    டெல்லியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தால் ஜீவன் ரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 25 லட்ச ரூபாய்க்கு மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என்றும் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 ஊக்கத் தொகை வழங்கப்படும் என்றும் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

    இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி வரும் ஜனவரி 13-ம் தேதி டெல்லியில் நடைபெறும் தேர்தல் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுவார் என தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.

    • டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக தனித்தனியாக போட்டியிடுகின்றன.
    • டெல்லியில் ஆட்சி அமைத்தால் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.

    டெல்லி சட்டசபை தேர்தல் பிப்ரவரி 5-ந்தேதி நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8-ந்தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுவதால் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

    டெல்லியில் ஆட்சி அமைத்தால் ஜீவன் ரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 25 லட்ச ரூபாய்க்கு மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என்றும் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 ஊக்கத் தொகை வழங்கப்படும் என்றும் காங்கிரஸ் கட்சி ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

    இந்நிலையில், டெல்லியில் ஆட்சி அமைத்தால் 'யுவ உதான் யோஜனா' என்ற திட்டத்தின் கீழ் வேலையில்லா பட்டதாரிகளுக்கு வருடத்திற்கு 8,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    • ஒவ்வொரு குடும்பத்திற்கும் 25 லட்ச ரூபாய்க்கு மருத்துவ காப்பீடு வழங்கப்படும்
    • பெண்களுக்கு மாதம் ரூ.2,500 ஊக்கத் தொகை வழங்கப்படும்.

    டெல்லி சட்டசபை தேர்தல் பிப்ரவரி 5-ந்தேதி நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8-ந்தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுவதால் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

    டெல்லி தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து வருகிறது.

    அவ்வகையில், ஜீவன் ரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 25 லட்ச ரூபாய்க்கு மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என்றும் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 ஊக்கத் தொகை வழங்கப்படும் என்றும் யுவ உதான் யோஜனா' என்ற திட்டத்தின் கீழ் வேலையில்லா பட்டதாரிகளுக்கு வருடத்திற்கு 8,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது.

    இந்நிலையில், டெல்லியில் ஆட்சி அமைத்தால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும் 500 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

    • பெண்களுக்கு மாதந்தோறும 2500 ரூபாய் வழங்கப்படும்.
    • வீட்டு சமையல் சிலிண்டருக்கு 500 ரூபாய் மானியம் வழங்கப்படும். தீபாவளி மற்றும் ஹோலி 2 சிலிண்டர் இலவசம்.

    டெல்லி மாநில சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 5-ந்தேதி நடைபெறுகிறது. பிப்ரவரி 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தேர்தலில் வெற்றி பெற்றால் பல்வேறு சலுகைகள் வழங்குவதாக தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளன.

    இந்த நிலையில் டெல்லி மாநில தேர்தலுக்கான முதற்கட்ட தேர்தல் அறிக்கையை பாஜக வெளியிட்டுள்ளது. பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா இதை வெளியிட்டுள்ளார்.

    அதில் குறிப்பிட்டுள்ள முக்கியம்சங்கள்:-

    * கர்ப்பிணி பெண்களுக்கு 21 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். அதனுடன் 6 ஊட்டச்சத்து தொகுப்புகளும் சேர்த்து வழங்கப்படும். இது தவிர முதல் குழந்தைக்கு 5 ஆயிரம் ரூபாயும், 2-வது குழந்தைக்கு 6 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்.

    * பெண்களுக்கு மாதந்தோறும 2500 ரூபாய் வழங்கப்படும்.

    * வீட்டு சமையல் சிலிண்டருக்கு 500 ரூபாய் மானியம் வழங்கப்படும். அதுமட்டுமல்லாமல் தீபாவளி மற்றும் ஹோலி பண்டிகைக்கு இரண்டு சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும்.

    * மூத்த குடிமக்கள் கூடுதலாக 5 லட்சம் ரூபாய் சேர்த்து மொத்தம் 10 லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீடு பெறுவார்கள்.

    * 60 வயது முதல் 70 வயது மூத்த குடிமக்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் முதல் 2500 ரூபாய் வரை பென்சன் வழங்கப்படும். 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

    * விதவை பெண்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

    • டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுகின்றன.
    • 2020 தேர்தலில் 62 இடங்களில் வென்று ஆம் ஆத்மி டெல்லியில் ஆட்சியை பிடித்தது.

    டெல்லி சட்டசபை தேர்தல் பிப்ரவரி 5-ந்தேதி நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8-ந்தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுவதால் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், டெல்லி சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக பல ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்.

    கமலா நகர் வார்டில் இரண்டு முறை தேர்தலில் போட்டியிட்ட கபில் நாகர்,  டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். அவருடன் 100க்கும் மேற்பட்ட ஆம் ஆத்மி கட்சி தொண்டர்களும் பாஜகவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங்கும் கலந்து கொண்டார்.

    2020 ஆம் ஆண்டு நடைபெற்ற டெல்லி சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 70 இடங்களில் ஆம் ஆத்மி 62 இடங்களை வென்று ஆட்சியை பிடித்தது. பாஜக 8 இடங்களில் மட்டும் தான் வெற்றியை பெற்றது.

    ×