search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Department of Agriculture"

    • அங்கக வேளாண்மையில் ஊட்டச்சத்து மேலாண்மை குறித்து வேளாண் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
    • ராம–நாதபுரம் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர் சிவகாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

    கீழக்கரை

    விவசாயத்தில் அதிக விளைச்சல் பெறுவதற்காக செயற்கை உரங்களையும் பூச்சி மற்றும் பூஞ்சாண கொல்லிகளை பயன்படுத்தி–யதால் மண்ணின் இயற்கை வளம் குறைந்து மண்ணில் வாழும் நுண்ணு–யிர்களின் எண்ணிக்கை மற்றும் செயல் பாடு மிகவும் குறைந்தது. மண் வளத்தை பெருக்க பயிர்ச் சுழற்சி முறை ஒருங் கிணைந்த பண்ணைய முறை, பசுந்தாள் உரப்பயிர் களை பயிரிடுதல் பயிர் கழி–வுகள், இதர வேளாண் கழிவுகள், அங்கக உரங்கள், நுண்ணுயிர் உரங்கள், மண் புழு உரங்கள், ஊட்டமேற்றிய தொழுவுரம் மற்றும் எண் ணெய் வித்துகளின் புண் ணாக்கு போன்றவற்றை பயன்படுத்த வேண்டும் என வேளாண் அதிகாரி தெரி–வித்துள்ளார். வயல் வரப்புகள் தரிசு நிலங்கள் சாலையோரங்கள் மற்றும் காடுகள் வளரும் வாகை, புங்கம், வேம்பு, மயில் கொன்றை மரங்களின் இலைகள் மரத்தின் சிறு குச்சி கொம்புகள் ஆகிய பசுந்தளை உரங்களை நிலத்தில் இடுவதால் மண்ணின் இயற்பியல் குணங்கள் மேம்படும். உயிர் உரங்கள் மண்ணில் இடப்படும் அனைத்து இடுபொருட்களும் சிதை–வுற்று அங்கக மூலங்களாக மாற் றம் பெறுவதற்கு கோடிக்க–ணக்கான நுண்ணுயிரிகள் பெரும் பங்கு வகிக்கின்றன. இவற்றை மண்ணில் இடும் பொழுது மண்ணில் அதன் எண்ணிக்கையை அதிகப்ப–டுத்துவதோடு பயிர்களுக்குத் தேவையான ஊட்டச் சத்துக் களையும் மேம்படுத்தி பயிர்களுக்கு ஊட்டமளிக்கிறது.

    பயிர்களில் அதிக விளைச் சலைப் பெற மண் ணில் பெற மண்ணில் போதுமான அளவில் கிட் டும் நிலையில் உயிர்ச்சத்து–களை நிலை நிறுத்துவ–தற் கும் மண்ணின் இயற்பி–யல் குணங்களை மேம்படுத்து–வதற்கும் மண்வாழ் உயிரி–னங்களின் மகத்தான செயல்பாட்டிற்கும் அடிகோ–லும் அங்கக பொருட்களின் பயன்பாட்டை அதிகரித்து வளங்குன்றா அங்கக வேளாண்முறையை பின்பற்றுவதற்கு ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் முன் வரவேண்டும் என்று ராம–நாதபுரம் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர் சிவகாமி கேட்டுக்கொண் டுள்ளார்.

    • 9 முதல் 12 மாத வயது உடைய கன்றுகளை மட்டும் நடவு செய்ய வேண்டும்.
    • 45 நாட்கள் கழித்து காய்பறித்தல் நல்லது.

    உடுமலை :

    தென்னை சாகுபடி செழிக்க, செய்ய வேண்டிய வை மற்றும் செய்ய க்கூடாதவை என்னென்ன என்பது குறித்து, வேளாண் துறையினர் விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி விவசாயிகள் செய்ய வேண்டியவை வருமாறு:- தரமான தாய்மரத்தை தேர்வு செய்ய வேண்டும். சரியான பருவத்தில் கன்றுக ளை நட வேண்டும். ஐந்து மாதத்துக்குள் முளைக்காத கன்றுகளை அகற்றி விட வேண்டும். 9 முதல் 12 மாத வயது உடைய கன்றுகளை மட்டும் நடவு செய்ய வேண்டும்.குழிகளின் பக்கவாட்டில் மண்ணை அகற்றி கன்றுகள் வளர, வளர புதிய மண் இட வேண்டும். மழைக்காலத்தில் கன்றின் அடித்தண்டில் ஒட்டி இருக்கும் மண்ணை அகற்ற வேண்டும். சொட்டுநீர் பாசன முறையை பின்பற்றி நீர் வழியாக உரமிடுதல் நல்லது. மண் சோதனை மதிப்பீட்டு அளவுகளை கொண்டு, சரியான, தேவையான அளவு தொழு உரம் மற்றும் பிற உரங்களை இட வேண்டும்.குருத்து அழுகலை தடுக்க சரியான வடிகால் வசதி செய்ய வேண்டும். அடித்தண்டு அழுகலை கட்டுப்படுத்த, சொட்டு நீர் பாசனம் அவசியம். பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கும்போது 45 நாட்கள் கழித்து காய்பறித்தல் நல்லது. நோய் மற்றும் பூச்சி கட்டுப்பாட்டுக்கு இயற்கை வழி பொருள்கள் மற்றும் உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளை பயன்படுத்த வேண்டும்.வீரிய ஒட்டு கன்றுகளை நல்ல நீர் வசதியு டன் நன்றாக பராமரித்து வளர்க்க வேண்டும். இன கவர்ச்சி பொறிகளை தோப்பின் ஓரத்திலோ அல்லது வெளியிலோ வைக்க வேண்டும்.

    விவசாயிகள் தவிர்க்க வேண்டியவை :- வீட்டுக்கு அருகில் மாட்டு தொழுவம், குப்பை மேடு பக்கத்தில் மட்டும் பிற வசதியான இடங்களில் வளரும் தென்னை மரங்களை தாய் மரமாக தேர்வு செய்யக்கூடாது. தென்னந்தோப்பை அடிக்கடி உழவு செய்தல் கூடாது.அதிகமான தண்ணீர் பாய்ச்சுவதை தவிர்க்க வேண்டும். பரிந்துரை க்கப்படாத உரங்களை விடக்கூடாது. வேர்கள் மற்றும் தண்டுகளில் காயம் ஏற்படுத்தக் கூடாது. பச்சை இலைகளை வெட்டக்கூடாது. முதிர்ச்சி அடையாத காய்களை, விதை காய்களாக தேர்வு செய்யக்கூடாது.தாழ்வான பகுதிகளில் மழை நேரத்தில் நடவு செய்வதை தவிர்க்க வேண்டும். பரவல் பாசன முறையை பின்பற்றக் கூடாது.இனக்கவர்ச்சி பொறிகளை நேரான சூரிய வெளிச்சத்தில் வைக்கக் கூடாது. குருத்துப் பகுதியில் பரிந்துரைக்கப்படாத பூச்சி கொல்லி மருந்துகளையே அல்லது திரவ நுண்ணுயிர் உரங்களையோ, உயிர் கொல்லியையோ தெளித்தல் கூடாது. 

    • கூலி பணியாளர்களின் வயதை காரணம் காட்டி வேலை மறுக்க கூடாது என தொழிலாளர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
    • தமிழ்நாடு அரசு ஏ.ஐ.டி.யூ.சி பண்ணை தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு அரசு ஏ.ஐ.டி.யூ.சி பண்ணை தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமையில் தஞ்சையில் நடைபெற்றது. பண்ணை சங்க மாநில பொது செயலாளர் அரசப்பன் முன்னிலை வகித்தார்.

    இந்த கூட்டத்தில், அரசு வேளாண்மை துறை பண்ணைகளில் தின கூலியாக பணிபுரிபவர்களை வயதை காரணம் காட்டி வேலை மறுக்க கூடாது.

    தற்போது இவர்களுக்கு வேலை வழங்க மறுப்பதால் வாழ்வாதாரம் பறிக்கப்படுவதை தமிழ்நாடு அரசு கவனத்தில் கொண்டு தொடர்ந்து இவர்கள் வேலை பார்த்து வரும் பண்ணைகளில் பணிபுரிய பண்ணை நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தல் செய்ய வேண்டுமென்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

    இதில் தமிழ்நாடு நெசவுத் தொழிலாளர் சம்மேளன மாநில பொதுச்செயலாளர் ராதா, ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட பொருளாளர் கோவிந்த ராஜன், மாவட்ட செயலாளர் துரை. மதிவாணன், சங்க நிர்வாகிகள் பானுமதி, குணசேகரன், பருத்திவேல், வெள்ளைச்சாமி, மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • இலைப் புள்ளியின் உட்புறத்தில் வெளிர் நிறத்தில் இருக்கும்.
    • வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தையோ தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து உரிய விளக்கங்களை பெற்று பயன்பெறலாம்.

    மடத்துக்குளம் :

    மடத்துக்குளம் வட்டாரத்தில் நெற்பயிரில் குலை நோய் மற்றும் இலைப்புள்ளி நோய் தாக்குதலில் இருந்து பயிர்களை பாதுகாக்க வேளாண்மைத்துறையினர் வழிகாட்டல்கள் வழங்கி உள்ளனர். இதுகுறித்து மடத்துக்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராஜேஸ்வரி கூறியதாவது:-

    மடத்துக்குளம் வட்டாரத்தில் குறுவை மற்றும் சம்பா பருவத்தில் சுமார் 7,500 ஏக்கரில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் தற்போது சுமார் 2,500 ஏக்கர் பரப்பிலான நெற்பயிர் வளர்ச்சிப் பருவம், பூ பருவம், பால் பிடிக்கும் பருவம் மற்றும் அறுவடைக்குத் தயாரான நிலையில் உள்ளது. மடத்துக்குளம் வட்டாரத்தில் தற்சமயம் நிலவி வரும் காற்றின் அதிகப்படியான ஈரப்பதம் மற்றும் மூடுபனி காரணமாக நெற்பயிரைத் தாக்கும் பூஞ்சாண நோய்களான இலைப்புள்ளி நோய் மற்றும் குலை நோய் தாக்குவதற்கு சாதகமான சூழல் நிலவி வருகிறது. நெற்பயிரில் இலைகளில் ஆரஞ்சு நிறத்தில் புள்ளி கோள வடிவில் தோன்றி இலை முழுவதும் பரவி காணப்படுவது இலை புள்ளி நோய் தாக்குதலின் அறிகுறியாகும்.

    இதனை தவிர்க்க நெல்லில் நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட ரகங்களான கோ 44, பவானி ரகங்களை சாகுபடி செய்தல் சிறந்தது. மேலும் அதிகப்படியான தழைச்சத்து இடுவதை தவிர்க்க வேண்டும். விதைகளை சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ் கொண்டு விதை நேர்த்தி செய்து விதைத்தல் மற்றும் நெல் நடவு வயலில் தொழு உரத்துடன் 2 கிலோ கலந்து இடுதல் வேண்டும். மேலும் ரசாயன பூஞ்சாண கொல்லிகளான மேன்கோசெப் ப்ரொபினெப், கார்பென்டசிம் போன்றவற்றைத் தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம். குலை நோய் நெல் இலைகளின் மேற்புறத்தில் குழல் வடிவிலான இலைப்புள்ளி தோன்றி கண் போன்று காட்சியளிக்கும். இலைப் புள்ளியின் உட்புறத்தில் வெளிர் நிறத்தில் இருக்கும். கணுப்பகுதியில் கருப்பு நிறத்தில் அழுகியது போன்று தோற்றமளிக்கும்.

    குலைநோய் பாதித்த பயிர்களின் கதிர்கள் வெளிவருவது தடைப்படும். அதையும் தாண்டி வெளிவரும் கதிர்கள் பதர்களாக இருக்கும். குலை நோயிலிருந்து பயிர்களைப் பாதுகாக்க நோய் எதிர்ப்புத்திறன் கொண்ட ரகங்களான கோ 57,கோ 51,கோ 52,கோ 53,ஏடிடி 36,ஏடிடி 39,ஏஎஸ்டி 18 மற்றும் ஐஆர் 64 ரகங்களை சாகுபடி செய்யலாம். நெல்லில் அதிக தழைச்சத்து இடாமல் இருக்க வேண்டும். அத்துடன் நெல் வயலில் உள்ள களைகளை அகற்றி சுத்தமாக பராமரித்தல் மூலமாக குலை நோயைக் கட்டுப்படுத்தலாம். பூஞ்சாண நோய்களின் அறிகுறி தென்பட்டால் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களையோ அல்லது வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தையோ தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து உரிய விளக்கங்களை பெற்று பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    • பருத்தியில் பஞ்சு உள்ள விதை, பஞ்சில்லாத விதைகள் என 2வகைகள் உள்ளன.
    • பி.டி 2என்பது பருத்தி செடியில் வளரும் காய்ப்புழு பாதிப்பை அழிக்கக்கூடிய மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் ஆகும்

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநர் விஜயா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பருத்தியில் பஞ்சு உள்ள விதை, பஞ்சில்லாத விதைகள் என 2வகைகள் உள்ளன. இதில் பஞ்சில்லாத விதைகள் பி.டி 2 என அழைக்கப்படுகிறது. பி.டி 2என்பது பருத்தி செடியில் வளரும் காய்ப்புழு பாதிப்பை அழிக்கக்கூடிய மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் ஆகும். இந்த விதைகள் அரசால் அனுமதியளிக்கப்பட்டு நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் விற்பனை நிலையங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது. விவசாயிகள் உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் மட்டுமே பி.டி 2பருத்தி விதைகளை வாங்க வேண்டும்.

    உரிமம் பெறாத கடைகளிலோ அல்லது தனி நபரிடமோ அல்லது விதை விற்பனை ரசீது வழங்காதவர்களிடமிருந்து விதைகளை வாங்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. மத்திய, மாநில அரசி னால் அனுமதி வழங்கப்படாத களைக்கொல்லி எதிர்ப்பு திறனுடைய பருத்தி விதைகளை கண்டிப்பாக வாங்கக்கூடாது.

    பருத்தி பாக்கெட்டில் ஓபல் பச்சை நிற விவர அட்டை இல்லாமல் வேறு நிறம் இருந்தால் அவ்விதைகளை விவசாயிகள் வாங்கக்கூடாது. விவர அட்டையில் வரிசை எண், குவியல் எண், சோதனை நாள், பொதிகட்டும் நாள், காலாவதி நாள், நிகர எடை விதையில் விதை நேர்த்திக்கான பூச்சி மருந்து கலந்த விவரம் என 14 விவரங்கள் இல்லாமல் குறைவான அச்சடிக்கப்பட்டு இருந்தால் கண்டிப்பாக அதை வாங்க கூடாது. இவற்றிற்கு மத்திய அரசின் மரபணு பொறியியல் செயற்குழு ஒப்புதல் வழங்கப்படவில்லை.

    இந்த விதைகளை வாங்கி நிலத்தில் விதைத்தால் மண்ணின் வளம் கெட்டு போகும். மேலும், இந்த விதைகளில் முளைக்கும் செடிகளில் பூ பூக்கும் பருவம் மற்றும் காய் பிடிக்கும் பருவத்தில் பல பாதிப்புகள் ஏற்பட்டு விவசாயிகளுக்கு மிகுந்த நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. சுற்றுப்புறசூழல் பாதிப்படைய வாய்ப்புகள் உள்ளது. எனவே, விவசாயிகள் உரிமம் பெற்ற கடைகளில் மத்திய அரசின் அனுமதி பெற்ற பருத்தி விதைகளை மட்டுமே வாங்கி பயிரிட வேண்டும். மேலும், விவர அட்டையின் நிறம் குறைபாடு மற்றும் விவர அட்டையில் 14விவரங்கள் இல்லாமல் குறைபாடு உள்ள விதைகளை வாங்கினாலும் அல்லது விற்றாலும் வாங்கிய விவசாயிகளின் மீதும், விற்பனை செய்வோர் மீதும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழும் மற்றும் விதைகள் கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழும், நீதிமன்ற நடடிவக்கை மேற்கொள்ளப்பட்டு அனுமதி பெறாத விதைகளை வாங்குவோருக்கும், விற்போருக்கும் 5வருட கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.1லட்சம் அபராதம் சேர்த்து விதிக்கப்படும். விவசாயிகள் களைக்கொல்லி எதிர்ப்பு சக்தியுடைய பருத்தி விதைகளை பெற்று நடவு செய்வதோ அல்லது விதைகள் உற்பத்தி செய்வதோ கூடாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இறவை பாசன நிலங்களிலும் மக்காச்சோளம் சாகுபடி மேற்கொள்ள விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர்.
    • தொழில் நுட்பங்களை கடைபிடித்தால் படைப்புழு தாக்குதலிருந்து கட்டுப்படுத்தலாம்.

    குடிமங்கலம் :

    உடுமலை பகுதிகளில் மக்காச்சோளம் சாகுபடி பிரதானமாக உள்ளது. உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரத்தில் ஏறத்தாழ 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. படைப்புழு தாக்குதல், தரமற்ற விதை, சாகுபடி செலவு அதிகரித்துள்ள நிலையில் மக்காச்சோளத்திற்கு போதிய விலை கிடைக்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் மக்காச்சோளம் சாகுபடி பரப்பு குறைந்து வருகிறது.

    இந்நிலையில் பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்திற்கு நீர் திறக்கப்பட உள்ள நிலையில் அப்பகுதிகளிலும் பருவ மழையை எதிர்பார்த்தும், இறவை பாசன நிலங்களிலும் மக்காச்சோளம் சாகுபடி மேற்கொள்ள விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர். மக்காச்சோளம் சாகுபடி விவசாயிகளுக்கு படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.இது குறித்து உடுமலை வேளாண் உதவி இயக்குனர் தேவி கூறியதாவது:- மக்காச்சோளத்தில், அமெரிக்கன் படைப்புழுவை கட்டுப்படுத்த முன் ஏற்பாடாக ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு, கடைசி உழவின் போது, நிலத்தில் இட்டு உழுது விட வேண்டும். இவ்வாறு செய்யும் போது நிலத்திலுள்ள தாய் அந்துப்பூச்சிகள் கூண்டுப்புழுவிலிருந்து வெளிவருவதில்லை.

    அடுத்து விதை நேர்த்தி அவசியமானதாகும்.விதையினை சையன்ட்ரானிபுரோல் 19.8 மற்றும் தயோ மீதாக்சோம் 19.8 மருந்தினை ஒரு கிலோ விதைக்கு 4 மில்லி மற்றும் 15 லிட்டர் நீர் கலந்து அரை மணி நேரம் நிலத்தில் உலர்த்தி பின் விதைகளை நிலத்தில் விதைக்க வேண்டும்.மேலும் வரப்பு ஓரத்தில் எள், சூரியகாந்தி, துவரை, தட்டை, உளுந்து, சோளம் ஆகிய தானிய பயிர்களை வரப்பு பயிர்களாக சாகுபடி செய்தால் அமெரிக்கன் படைப்புழுவை கட்டுப்படுத்தலாம்.இந்த தொழில் நுட்பங்களை கடைபிடித்தால் படைப்புழு தாக்குதலிருந்து கட்டுப்படுத்தலாம்.இவ்வாறு வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்தார்.

    • திருச்செந்தூர் மற்றும் உடன்குடி வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் கடந்த சுமார் 5 வருடங்களுக்கு மேலாக தரிசாக உள்ள தங்கள் நிலங்களை திருத்தி விவசாயம் செய்ய விரும்பும் விவசாயிகளுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாகும்.
    • இத்திட்டத்தில் சொந்த நிலம் உள்ள ஒரு விவசாயிக்கு அதிக பட்சம் 5ஏக்கர் வரை மானியம் வழங்கப்படும்.

    உடன்குடி:

    திருச்செந்தூர் வட்டார வேளாண்மை உதவியக்குனர் வெங்கட சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருச்செந்தூர் மற்றும் உடன்குடி வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் கடந்த சுமார் 5 வருடங்களுக்கு மேலாக தரிசாக உள்ள தங்கள் நிலங்களை திருத்தி விவசாயம் செய்ய விரும்பும் விவசாயிகளுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாகும்.

    இத்திட்டத்தில் சொந்த நிலம் உள்ள ஒரு விவசாயிக்கு அதிக பட்சம் 5ஏக்கர் வரை மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ்தேர்வு செய்யப்பட்ட பள்ளிப்பத்து, மூலக்கரை, வீரமாணிக்கம், பிச்சிவிளை, வெங்கட்ராமானுஜபுரம், சிறுநாடார்குடியிருப்பு, மாதவன்குறிச்சி, சீர்காட்சி மற்றும் மணப்பாடு ஊராட்சி பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.இதர கிராம விவசாயிகளும் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.

    மேலும் தரிசு நிலங்களை திருத்தி சாகுபடி செய்யப்படும் பயிருக்கு ஏற்றபடிபிரதம மந்திரி நுண்ணீர் பாசனத்திட்டத்தின் மூலம் சொட்டுநீர் பாசனம் அமைக்கசிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் மற்றும் துணை நிலை நீர்பாசனத் திட்டத்தின் கீழ்புதியதாக ஆழ்துளை கிணறு, மின்மோட்டார் மற்றும் நீர் சேமிக்கும் தொட்டிஅமைக்க மானியமும் விதிமுறைக்கு ஏற்ப வழங்கப்படுகிறது.

    சொட்டுநீர் பாசனம் அமைக்க ஒரு விவசாயிக்கு அதிகபட்சம் 12.5ஏக்கர் வரை மானியம் வழங்கப்படும். மேலும் இத்திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் தங்கள் ஆதார்கார்டு நகல், ஸ்மார்ட் கார்டு நகல், வங்கி கணக்கு புத்தகநகல், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும்தரிசு நில அடங்கல், கணினி பட்டா ஆகிய ஆவணங்களுடன் தங்கள் பகுதி வேளாண்மைதுறை அலு வலர்களை அணுகி பயன்பெறலாம்என வட்டார வேளாண் உதவி இயக்குநர் வெங்கட சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

    • கொழிஞ்சி கடும் வெப்பத்தைத் தாங்கி வளரக்கூடிய பயிராகும்.
    • கொழிஞ்சியில் சாம்பல் சத்து, மணிச்சத்து மற்றும் தழைச்சத்து அதிக அளவில் இருப்பதால் நெற்பயிர்கள் செழித்து வளரும்.

    உடுமலை:

    மண்வளம் காப்பதில் பசுந்தாள் உரப்பயிர்களில் கொழிஞ்சி முதலிடம் பிடிக்கிறது. மண்ணின் வெப்பத்தைக் கட்டுப்படுத்தவும், மண் வளத்தை மேம்படுத்தவும் வேளாண்மைத்துறையினர் வழிகாட்டுகின்றனர். இதுகுறித்து உடுமலை வேளாண்மைத்துறையினர் கூறியதாவது:-

    கொழிஞ்சி கடும் வெப்பத்தைத் தாங்கி வளரக்கூடிய பயிராகும்.பூச்சி நோய் தாக்குதல் குறைவான பயிராகும். சணப்பை, தக்கைப்பூண்டு போன்ற பயிர்கள் கடும் வெப்பத்தைத் தாங்காது.அத்துடன் அவற்றை பூப்பூக்கும் பருவத்துக்கு முன் மடக்கி உழவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் தண்டு கெட்டிப்பட்டு நார்த்தன்மை அதிகரித்து விடும்.இதனால் சீக்கிரம் மக்காமல் நிலத்திலேயே தங்கி விடும். ஆனால் கொழிஞ்சியைப் பொறுத்தவரை எத்தனை நாட்கள் நிலத்தில் விட்டு வைத்திருந்தாலும் மடக்கி உழுததும் எளிதில் மக்கி விடும்.அத்துடன் வளரும் காலம் வரை நிலத்துக்கு மூடாக்கு போல செயல்பட்டு மண் வெப்பமாவதைத் தடுக்கும்.

    நெல் அறுவடைக்கு 15 நாட்களுக்கு முன் தண்ணீர் பாய்ச்சுவதை நிறுத்தி விடலாம்.அதனையடுத்து 7 நாட்களுக்குப் பிறகு ஒரு ஏக்கருக்கு 8 கிலோ உளுந்து விதையுடன் 5 கிலோ கொழிஞ்சி விதையையும் சேர்த்து 10 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து விதைக்க வேண்டும்.இதனைத் தொடர்ந்து 7 நாட்கள் கழித்து நெல்லை அறுவடை செய்து விடலாம்.பின்னர் உளுந்தும் கொழிஞ்சியும் தண்ணீர் பாய்ச்சாமலேயே நன்கு வளரும்.உளுந்தை 75 நாட்களில் அறுவடை செய்து விடலாம்.அடுத்த போக நெல் சாகுபடிக்கு 15 நாட்கள் முன் நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்சி கொழிஞ்சியை மடக்கி உழுது விடலாம்.

    கொழிஞ்சியில் சாம்பல் சத்து, மணிச்சத்து மற்றும் தழைச்சத்து அதிக அளவில் இருப்பதால் நெற்பயிர்கள் செழித்து வளரும்.குறிப்பாக நெல் சாகுபடியில் யூரியாவின் பயன்பாட்டைக் குறைப்பதில் கொழிஞ்சிக்கு பெரும்பங்கு உள்ளது.மடக்கி உழுத செடியிலுள்ள விதைகள் மண்ணுக்குள் புதைந்திருந்தது அறுவடைக்குப் பிறகு தானாகவே முளைக்கும்.எனவே நெல் சாகுபடிக்கு முன் கொழிஞ்சி சாகுபடி மேற்கொண்டு விவசாயிகள் பயனடையலாம்.அத்துடன் அனைத்து விதமான பயிர் சாகுபடியிலும் பசுந்தாள் உரப்பயிரான கொழிஞ்சி சாகுபடி செய்து மடக்கி உழுவதன் மூலம் மண் வளத்தை மேம்படுத்தலாம்என்று அதிகாரிகள் கூறினர்.

    ×