என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Department of Education"
- 'மாணவிகள் அழகாக இல்லாததற்கும், மாற்றுத் திறனாளிகள், ஏழைகள் ஆகியோரது நிலைக்கும் முன் ஜென்ம பாவம் தான் காரணம்' என்று மகாவிஷ்ணு பேசியிருந்தார்.
- எது "நன்நெறி" என்பதைத் தமிழ்நாடு அரசின் கல்வித்துறை செயலில் காட்ட வேண்டிய நேரமிது என்று தெரிவித்துள்ளார்.
சென்னை, அசோக் நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மந்திரம் சொன்னால் பிரபஞ்ச சக்தி இறங்கும் என மூடநம்பிக்கைகளை விதைக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டு இருக்கிறது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
கடந்த காலங்களில் செய்த பாவங்களுக்கு ஏற்ப இந்த ஜென்மம் கடவுளால் படைக்கப்பட்டிருக்கிறது என்று மாணவர்கள் மத்தியில் அவர் பேசினார். மாணவிகள் அழகாக இல்லாததற்கும், மாற்றுத் திறனாளிகள், ஏழைகள் ஆகியோரது நிலைக்கும் முன் ஜென்ம பாவம் தான் காரணம் என்று மகாவிஷ்ணு பேசியிருந்தார். இந்த பேச்சால் கோபமான அந்த பள்ளியைச் சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியர் ஒருவர் மகாவிஷ்ணுவின் கருத்துக்கு ஆட்சேபனை தெரிவித்திருந்தார். அதற்கு மகாவிஷ்ணு அந்த ஆசியரிடம் மோசமாக நடந்து கொண்ட வீடியோவும் வெளியாகி கண்டனங்களைக் குவித்து வருகிறது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
பாஜக ஆளும் மாநிலம் ஒன்றில் ஓராண்டுக்கு முன் நாடாளுமன்ற கல்வி நிலைக்குழு ஆய்வு மேற்கொண்டோம். அங்கன்வாடி ஊழியர்கள் கிராமத்தில் உள்ள கோயில்களைத் தூய்மைப்படுத்தும் பணியும், அங்கு குழந்தைகளுக்குப் போதிப்பதைப் பற்றியும் நாங்கள் கேள்வி எழுப்பினோம். அப்போது அந்த மாநிலத் தலைமைக் கல்வி அதிகாரி "கோயிலில் பாவ புண்ணியத்தைப் பற்றிப் போதிக்காமல் ஒருவனுக்கு வாழ்வியலை எப்படி போதிக்க முடியும்?" என்று கேட்டார்.
இன்று அதே கேள்வியைத் தமிழ்நாட்டு அரசுப் பள்ளியில் சிறப்பு விருந்தினராக வந்து ஒருவர் கேட்கிறார். மறுப்பு தெரிவிக்கும் ஆசிரியரைப் பார்த்து, "உங்கள் பெயரென்ன?" என்று கேட்கிறார். அந்த ஆசிரியரின் பெயர் ஜான்சன் ஆகவோ, ஜாஹீர் உசேனாகவோ இருந்திருந்தால் இன்று முதல் பள்ளிக் கல்வி பற்றிய பிரச்சனை ஆர். என். இரவியிடமிருந்து ஹெச்.ராஜாவுக்கு மாற்றப்பட்டிருக்கும். அவர்கள் தெரிந்தே செய்கிறார்கள். எது "நன்நெறி" என்பதைத் தமிழ்நாடு அரசின் கல்வித்துறை செயலில் காட்ட வேண்டிய நேரமிது என்று தெரிவித்துள்ளார்.
- 1.35 மணிக்கு தொடங்கி மாலை 4:20 மணி வரை பள்ளிகள் செயல்பட உள்ளன.
- காமராஜர் பிறந்தநாள் அன்று அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளிகள், தற்போது காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 3:45 மணி வரை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அரசுப் பள்ளிகளில் நேரங்களை மாற்றி கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி, பள்ளி முதல்வர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
அதன்படி, காலை 9 மணிக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு மதியம் 12. 25 மணிக்கு இடைவேளை விடப்படுகிறது. அதன் பிறகு 1.35 மணிக்கு தொடங்கி மாலை 4:20 மணி வரை பள்ளிகள் செயல்பட உள்ளன.
இந்த புதிய நடைமுறை வருகிற 15ம் தேதி காமராஜர் பிறந்தநாள் அன்று அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழக அரசாணை அடிப்படையில் எனக்கான முழு ஓய்வூதிய பணப்பலன்களை முறைப்படுத்தி வழங்க உத்தரவிட வேண்டும் என ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன்.
- கோர்ட்டு உத்தரவை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையாக ஏன் நிறைவேற்றவில்லை? என கேள்வி எழுப்பினார்.
மதுரை:
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஞானபிரகாசம் என்பவர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த அவமதிப்பு வழக்கில் கூறி இருந்ததாவது:-
நெல்லை மாவட்டம் பழையபேட்டை கிராமத்தில் உள்ள ஊழியஸ்தானம் ஆசிரியர் பயிற்சி மையத்தில் 1966 ஆம் ஆண்டு முதல் அலுவலக உதவியாளராக 40 ஆண்டுகள் பணியாற்றி 2006 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றேன்.
தமிழக அரசாணை அடிப்படையில் எனக்கான முழு ஓய்வூதிய பணப்பலன்களை முறைப்படுத்தி வழங்க உத்தரவிட வேண்டும் என ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன்.
அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதிகள், எனது மனுவினை பரிசீலனை செய்து பணப் பலன்களை வழங்க நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். இதை எதிர்த்து அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில் எனக்கு பணப்பலன்கள் வழங்குவது தொடர்பாக ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை அதிகாரிகள் தற்போது வரை நிறைவேற்றவில்லை. எனவே நீதிமன்ற உத்தரவை முறையாக நிறைவேற்றாத கல்வித்துறை அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, கோர்ட்டு உத்தரவை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையாக ஏன் நிறைவேற்றவில்லை? என கேள்வி எழுப்பினார். பின்னர், இது குறித்து தமிழக பள்ளிக்கல் வித்துறை செயலாளர், ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி கல்வி இயக்குனர் ஆகியோர் வருகிற 19-ந்தேதி இந்த கோர்ட்டில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
- 2023-24 கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு விலையில்லா பாட புத்தகம் 5 கோடியே 16 லட்சம் அச்சிடப்பட்டுள்ளது.
- தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிகளுக்கும் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பிரித்து அனுப்பும் பணி நடந்து வருகிறது.
சென்னை:
அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பாடப்புத்தகம் ஒவ்வொரு ஆண்டும் இலவசமாக வழங்கப்படுகிறது.
1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பாடப் புத்தகங்கள் மட்டுமின்றி, பென்சில், ஜாமின்ரி பாக்ஸ், கிரையன்ஸ், சீருடை, பள்ளி பை, ஷீ உள்ளிட்ட பொருட்களும் இலவசமாக கொடுக்கப்படுகிறது. இந்த ஆண்டு பள்ளி திறக்கப்படும் முதல் நாளே மாணவர்கள் கையில் பாட புத்தகம் கிடைக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களுக்கும் பாடபுத்தகங்கள் அனுப்பப்பட்டுவிட்டன.
2023-24 கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு விலையில்லா பாட புத்தகம் 5 கோடியே 16 லட்சம் அச்சிடப்பட்டுள்ளது. அதனை அனைத்து கல்வி மாவட்டத்துக்கும் அனுப்பும் பணி முழுமை அடைந்தன. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் கட்டுப்பாட்டில் அவை குடோன்களில் இருந்து அரசு பள்ளிகளுக்கு அனுப்பப்படுகிறது. தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிகளுக்கும் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பிரித்து அனுப்பும் பணி நடந்து வருகிறது. ஒரு சில நாட்களுக்குள் இந்த பணி நிறைவடைந்துவிடும்.
பள்ளி ஜூன் முதல் வாரத்தில் திறக்கும்போது அன்றைய தினமே பாட புத்தகங்கள் வழங்க கல்வித் துறை அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.
- மாணவர்களின் கற்றல் திறனுக்கு ஏற்றாற்போல் தமிழ் , ஆங்கிலம், கணிதம், அறிவியல் ஆகியப் படங்களை கதை, பாடல், படித்தல் , எழுத்தல் ஆகியவை மூலமாக கற்பிப்பது தொடர்பான பயிற்சிகள் நடைபெறுகிறது.
- 2022-23ஆம் ஆண்டில் இருந்து ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
நீடாமங்கலம்:
திருவாரூர் மாவட்டம் , வலங்கைமான் ஒன்றியத்தில் பணியாற்றும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் பணியாற்றும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு 5 நாள் பயிற்சி வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி நடந்து வருகிறது.
முதல் நாள் பயிற்சியை வட்டாரக் கல்வி அலுவலர் ஜெயலெட்சுமி , வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இப்பயிற்சியில் 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களை அரும்பு , மொட்டு , மலர் என மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டு அம்மாணவர்களின் கற்றல் திறனுக்கு ஏற்றாற்போல் தமிழ் , ஆங்கிலம், கணிதம், அறிவியல் ஆகியப் படங்களை கதை, பாடல், படித்தல் , எழுத்தல் ஆகியவை மூலமாக கற்பிப்பது தொடர்பான பயிற்சிகள் நடைபெறுகிறது.
இப்பயிற்சியை திருவாரூர் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிவேல் பார்வையிட்டார்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் 1, 2, 3 வகுப்புகளுக்கு 2022-23ஆம் ஆண்டில் இருந்து 'எண்ணும் எழுத்தும்' திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தின் மூலம் 2025 ஆம் ஆண்டிற்க்குள் அனைத்து தொடக்கப் பள்ளி மாணவர்களும் படித்தல் , எழுதுதுதலில், கணக்கீடு செய்தல் ஆகிவற்றில் குறிப்பிட்ட திறனை அடைய கல்வித்துறை திட்டமிடப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்