என் மலர்
நீங்கள் தேடியது "details"
- கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 337 மனுக்கள் பெறப்பட்டது.
- விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையேற்று பேசியதாவது:-
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பலவேறு கோரிக்கைகள் அடங்கிய 337 மனுக்கள் பெறப்பட்டது.
பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது .
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் அவர் பேராவூரணி வட்டத்தை சேர்ந்த சைபுநிசாபேகத்துக்கு தன் விருப்ப நிதியிலிருந்து விலையில்லா தையல் இயந்திரத்தினை வழங்கினார்.
இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா (வருவாய்) , ஸ்ரீகாந்த் (வளர்ச்சி ), தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன், நேர்முக உதவியாளர் சத்துணவு அன்பரசு மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பெற அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்களது விபரங்களை தேசிய தரவுதளத்தில் பதிவேற்ற வேண்டும்.
- பிரதமரின் விபத்து காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 2 லட்சத்திற்கான விபத்து காப்பீடு வழங்கப்படும் என்று சிவகங்ககை லெக்டர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெடடி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்திய அரசு அமைப்பு சாரா தொழிலாளளர்களின் விவரங்களை ஒருங்கிணைக்க உச்சநீதிமன்ற உத்தரவின்படி 'அமைப்பு சாரா தொழிலாளர்களின் தேசிய தரவு தளம் என்ற ஒரு தரவுதளத்தை உருவாக்கியுள்ளது.
https://eshram.gov.in என்ற வலைதளத்தின் மூலம் கட்டுமானத் தொழிலாளர்கள் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், வீட்டுப்பணியாளர்கள், விவசாயத்தொழிலாளர்கள், குத்தகைதாரர்கள்,பேக்கிங் செய்வோர் உள்ளிட்ட 370 வகையான துறைகளில் வேலை பார்க்கும் இ.எஸ்.ஐ., பி.எப்., பிடித்தம் செய்யப்படாத அமைப்பு சாரா தொழிலாளர்கள் தங்களின் விவரங்களை அனைத்து பொது சேவை மையங்களிலும் மற்றும் அனைத்து இ-சேவை மையங்களிலும் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
eSHRAM Portal- லில் தொழிலாளர்கள் சுயமாகவும் பதிவு செய்து கொள்ள லாம். மாநில அரசின் பல்வேறு வகையான நலத்திட்டங்களின் கீழ் பதிவு செய்துள்ள அனைத்துத் தொழிலாளர்களும் இத்தரவுதளத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டும்.
இத்தரவுதளத்தில் தொழிலாளர்கள் தங்களைப்பதிவு செய்து கொள்ள வயது 16 முதல் 59-க்குள் இருக்க வேண்டும். மேலும் எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை. பதிவேற்றம் செய்வதற்கு ஆதார் அட்டை, ஆதாரில் இணைக்கப்பட்ட மொபைல் எண் ஓ.டி.பி. மூலம் அல்லது கைரேகை மூலம் பதிவு செய்து கொள்ளலாம். வங்கி கணக்குப் புத்தகம் போன்ற தேவையான விவரங்கள் இருக்க வேண்டும்.
மேலும் இத்தரவுகளை பதிவேற்றம் செய்த பிறகு பயனாளிகளுக்கு UAN என்ற 12-இலக்க எண் கொண்ட அடையாள அட்டை வழங்கப்படும்.
அமைப்புசாரா தொழிலாளர்கள் வேலை காரணங்களுக்காகவோ அல்லது வேறு ஏதும் பிற காரணங்களுக்காகவோ புலம்பெயர நேர்ந்தாலும், அரசிடமிருந்து பெற வேண்டிய சலுகைகளைப் பெற இந்த அடையாள அட்டை உதவியாக இருக்கும். இந்த தரவுதளத்தில் தன்னை இணைத்துக் கொள்ளும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பிரதமரின் விபத்து காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 2 லட்சத்திற்கான விபத்து காப்பீடு வழங்கப்படும்.
எனவே உச்சநீதிமன்ற உத்தரவின்படி இந்திய அரசால் உருவாக்கப்படும் அமைப்புசாரா தொழலாளர்களுக்கான இத்தேசிய தரவுதளத்தில் அனைவரும் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 473 மனுக்கள் பெறப்பட்டது.
- விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமைதாங்கி பேசியதாவது:-
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட த்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவி த்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 473 மனுக்கள் பெறப்பட்டது.
பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்குவழங்கப்பட்டுள்ளது. மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவல ர்களுக்கு அறிவுறு த்தப்பட்டு ள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் அவர் பிற்படு த்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் பூதலூர் வட்டம், புதுக்குடி வடபாதி கிராமத்தில் வசிக்கும் விளிம்புநிலை மக்களை சேர்ந்த 13 குடும்பங்களுக்கு விலையில்லா வீட்டு மனை பட்டாவிற்கான ஆணைக ளையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் பேராவூரணி வட்டம் பின்னவாசல் ஊராட்சியை சேர்ந்த 10 குடும்பங்களுக்கு விலையில்லா வீட்டு மனை பட்டாவிற்கான ஆணை களையும் வழங்கினார்.
இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா , கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த் ,தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் இலக்கியா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்ரேணுகாதேவி, பூதலூர் வட்டாட்சியர் பெர்ஷியா மற்றும் அனை த்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- டிராக்டர் வாங்குவதற்கான கடன் விபரங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.
- முடிவில் வேளாண் உதவி அலுவலர் சிற்றரசு நன்றி கூறினார்.
மெலட்டூர்:
தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், அன்னப்பன்பேட்டையில் அனைத்து கிராம ஒருங்கி ணைந்த வேளாண்மை துறை மற்றும் மெலட்டூர் பரோடா வங்கி, இணைந்து விவசாயிகள் தினவிழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மெலட்டூர் பரோடா வங்கி மேலாளர் செல்வக்குமார் தலைமை வகித்தார்.
கொத்தங்குடி ஊராட்சி மன்ற தலைவர் பழனி, ஒன்றிய கவுன்சிலர் சுமத்ராமோகன், அன்னப்பன்பேட்டையில் ஊராட்சி தலைவர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அம்மாபேட்டை வேளாண்மை உதவிஇயக்குனர் மோகன், பரோடா வங்கி உதவி மேலாளர் கார்த்திக் ஆகியோர் விவசாயிகளுக்கு வழங்கப்படும் விவசாய கடன், மான்ய விலையில் உழவு, நடவு இயந்திரங்கள், டிராக்டர் வாங்குவதற்கான கடன் விபரங்கள் குறித்து எடுத்து ரைத்தனர்.
இந்த விழாவில்வேளா ண்மைத்துறை,தோட்ட க்கலைத்துறை, மீன்வள த்துறை, கால்ந டைத்துறை உள்பட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டு தங்கள் துறை சம்மந்தமான திட்ட ங்கள் குறித்து விவசாயி களுக்கு எடுத்து கூறினர்.
கூட்டத்தில் மெலட்டூர், கொத்த ங்குடி, அன்னப்பன்பேட்டை அதனை சுற்றியுள்ள கிராம ங்களை சேர்ந்த முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இறுதியில் வேளாண் உதவி அலுவலர் சிற்றரசு நன்றி கூறினார்
ஏற்பாடுகளை வேளாண்மைத்துறை, மற்றும் மெலட்டூர் பரோடா வங்கி ஊழியர்கள் செய்திருந்தனர்.
- குடும்ப அட்டைதாரர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ள உணவு பொருட்களின் விவரங்களை கேட்டறிந்தார்.
- காலதாமதமின்றி பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்க வேண்டும்.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு பகுதியில் உள்ள ரேசன்கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உணவு பொருட்கள் மற்றும் மின் எந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, ரேசன் கடையில் உள்ள அரிசி, கோதுமை, உள்ளிட்ட பொருட்களின் இருப்பு விவரங்கள் மற்றும் குடும்ப அட்டைதாரர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ள உணவு பொருட்களின் விவரங்களை கேட்டறி ந்தார்.
தொடர்ந்து, பணியாளர்க ளிடம் காலதாம தமின்றி பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்க வேண்டும் என உத்தரவி ட்டார்.
ஆய்வின்போது மன்னா ர்குடி கோட்டா ட்சியர் கீர்த்தனா மணி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
- பான் கார்டு கிரெடிட் கார்டு, அவற்றின் பின் நம்பர் போன்ற விவரங்களை தாருங்கள்.
- வெளிநாட்டில் வேலைக்கு செல்ல வேண்டும் என்றால் நான் கூறும் வங்கி எண்ணில் பணம் செலுத்துங்கள்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதி சேர்ந்த ஒருவர் தனியார் கல்லூரியில் நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது.
அதில் உங்களது பான் கார்டு செயல் இழந்துவிட்டது.
எனவே பான் கார்டு கிரெடிட் கார்டு , அவற்றின் பின் நம்பர் போன்ற விவரங்களை தாருங்கள். நாங்கள் சரி செய்து கொடுக்கிறோம் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனை உண்மை என்று நம்பிய கல்லூரி அதிகாரி, குறிப்பிட்ட எண்ணில் மர்ம நபர் கேட்ட விவரங்களை பதிவிட்டார்.
இதனைத் தொடர்ந்து அடுத்த சில மணி நேரங்களில் கல்லூரி அதிகாரியின் கிரடிட் கார்டில் இருந்து ரூ.2.63 லட்சம் எடுக்கப்பட்டதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
அந்த நம்பரை தொடர்பு கொண்டும் பலன் இல்லை. அப்போதுதான் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்தார்.
மற்றொரு சம்பவம்
இதேபோல் பட்டுக்கோட்டை மணிபட்டினம் பகுதியை சேர்ந்த 39 வயது வாலிபர் ஒருவர் வெளிநாட்டில் வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தார். இது தொடர்பாக பலரிடம் சொல்லி வைத்திருந்தார்.
இந்த நிலையில் இவரது செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர், நீங்கள் வெளிநாட்டில் வேலைக்கு செல்ல வேண்டும் என்றால் நான் கூறும் வங்கி எண்ணில் பணம் செலுத்துங்கள்.
உங்களுக்கு விசா வாங்கித் தருகிறேன். மருத்துவ சான்றிதழும் தயார் செய்து கொடுக்கிறேன் என பேசி இணைப்பை துண்டித்தார்.
இதை உண்மை என்று நம்பிய அந்த வாலிபர் குறிப்பிட்ட வங்கி கணக்கில் ரூ.72 ஆயிரம் செலுத்தினார். ஆனால் பல நாட்களாகியும் அந்த நபரிடம் இருந்து எந்த ஒரு அழைப்பும் வரவில்லை .
விசாவும் வந்து சேரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அந்த வாலிபர் குறிப்பிட்ட நம்பரை தொடர்பு கொண்டு பயனில்லை. அப்போது தான் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்தார்.
இந்த 2 சம்பவங்கள் குறித்தும் தஞ்சை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
அதன் பேரில் ஏ.டி.எஸ்.பி. சுவாமிநாதன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் ரோஸ்லின் அந்தோணியம்மாள் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 60 கனமீட்டர் மிகாமல் களிமண் இலவசமாக எடுத்து கொள்ள அனுமதி வழங்கப்படும்.
- மேலும் விபரங்களுக்கு சம்பந்தப்பட்ட தாசில்தார் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மயிலாடுதுறை மாவட்ட த்தில் பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையின் கட்டுபாட்டில் உள்ள நீர்நிலைகளில் அமைந்துள்ள மண், வண்டல் மண் மற்றும் களிமண் போன்ற சிறு கனிமங்களை தூர்வாரி கட்டணமில்லாமல் பொது மக்களின் வேளாண்மை நோக்கம் மற்றும் மண்பாண்ட தொழில் பயன்பாட்டிற்கு மண் எடுக்க விண்ணப்பதாரர்கள் உரிய ஆவணங்களுடன் தொடர்புடைய வேளாண்மை அலுவலர்கள் சான்று/மண்பாண்ட தொழிலாளர்கள் சங்க சான்றுடன், கிராம நிர்வாக அலுவலர்களிடம் விண்ணப்பம் பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.
விவசாய பயன்பாட்டிற்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை 1 ஏக்கர் பரப்பளவுள்ள நஞ்சை நிலத்திற்கு 75 கனமீட்டர் மற்றும் 1 ஏக்கர் பரப்பளவுள்ள புஞ்சை நிலத்திற்கு 90 கனமீட்டர் வண்டல் மண் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள், மண்பாண்டங்கள் செய்வதற்கு 60 கனமீட்டர் மிகாமல் களிமண் இலவசமாக எடுத்து கொள்ள உரிய நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்படும்.
இதுகுறித்த மேலும் விபரங்களுக்கு சம்பந்தப்பட்ட தாசில்தார் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நில உடமை விபரம் சரிபார்க்கப்பட்டு வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
- உரிய அலுவலர்களை தொடர்பு கொண்டு விவரங்களை சரிபார்த்து கொள்ள வேண்டும்.
நீடாமங்கலம்:
வலங்கைமான் மற்றும் குடவாசல் விவசாயிகளுக்கு, வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயசீலன் ஒரு தகவல் கொடுத்துள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது:-
மத்திய , மாநில அரசுகள் விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக "வேளாண் அடுக்கு" என்ற திட்டத்தினை செயல்படுத்த உள்ளது.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, வேளாண்மை, தோட்டக்கலை. கூட்டுறவு, பட்டு வளர்ச்சி, உணவு வழங்கல், வேளாண் பொறியியல், ஊரக வளர்ச்சி, கால்நடை பராமரிப்பு ,வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம், விதை சான்றளிப்பு , சர்க்கரை துறை உள்ளிட்ட 13 துறைகளில் அனைத்து விவசாயிகளுக்கும் அனைத்து திட்ட பலன்களும் கிடைக்கச் செய்யும் வகையில் GRAINS என்ற வலைதளத்தில் விவசாயிக ளுடைய விபரங்கள் குறிப்பாக நில உடமை விபரம் உள்ளிட்ட விபரங்களை சரிபார்க்கப்பட்டு வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
இதில் அந்தந்த கிராமங்களினங கிராம நிர்வாக அலுவலர்கள் உதவி வேளாண்மை அலுவலர்கள், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் இந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இனி வரும் காலங்களில் அனைத்து விவசாய நல திட்டங்களும் GRAINS மூலம் விவசாய பெருமக்களை சென்றடை உள்ளது. இதனால் அனைவரும் தங்களது நில உடமை ஆவணம், ஆதார் அட்டை நகல், புகைப்படம், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம்ஆகியவற்றுடன் உரிய அலுவலர்களை தொடர்பு கொண்டு விவரங்களை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மொழிப்பாடத்தேர்வில் மட்டும் மாநில அளவில் 50 ஆயிரத்து 674 பேர் ஆப்சென்ட் ஆகினர்.
- துணை பொதுத்தேர்வு ஜூன் 19ந் தேதி நடத்தப்படுகிறது.
தாராபுரம் :
பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 13ந தேதி துவங்கி ஏப்ரல் 3-ந் தேதி வரை நடந்தது. மொழிப்பாடத்தேர்வில் மட்டும் மாநில அளவில் 50 ஆயிரத்து 674 பேர் ஆப்சென்ட் ஆகினர்.இவர்கள் பள்ளிக்கு வராதவர்கள் என தெரிவிக்கப்பட்டதால் நலத்திட்ட பொருட்கள், அதற்காக செலவிடப்பட்ட தொகை குறித்த கேள்விகள் எழுந்தன. பள்ளிக்கு வந்து தேர்வெழுத வராதவர்கள் நிலை குறித்து, ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது.
மாவட்ட வாரியாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மூலம், குழு அமைத்து ஆய்வு செய்யப்பட்டது. தேர்வெழுதாத மாணவர்களை பள்ளி மேலாண்மை குழு மூலம், கண்டறியும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.பிளஸ் 2 ரிசல்ட் வெளியான நிலையில் ஆப்சென்ட் மாணவர்களுக்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் குறித்த கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், உயர்கல்வி சேர்க்கையில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, துணை பொதுத்தேர்வு ஜூன் 19ந் தேதி நடத்தப்படுகிறது. தோல்வியடைந்த மாணவர்களுக்கும், தேர்வு எழுதாத மாணவர்களுக்கும் சிறப்பு பயிற்சி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக, ஆப்சென்ட்டான மாணவர்களில் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிப்போர் பட்டியல் திரட்ட அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.
- ஸ்கேன் செய்து விவரங்கள் மண்வள அட்டை செயலியில் பதிவு செய்யப்படுகிறது.
- மண் மாதிரிகளின் அறிக்கையினையும் பார்த்துக் கொள்ளலாம்.
மதுக்கூர்:
மதுக்கூர் வட்டாரம் தளிக்கோட்டை பஞ்சாயத்து 2023- 24 ஆம் நிதி ஆண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு வேளாண் துறை மூலம் இவ்வாண்டு ஒரு சிறப்பு திட்டமாக ஒவ்வொரு மண் மாதிரி தனிப்பட்ட குறிப்பு குறியீடு வழங்கப்பட்டு பெறப்பட்ட மண் மாதிரிகள் குறித்து அனைத்து விபரங்களும் மண்வள அட்டை செயலியில் நேரடியாக பதிவேற்றம் செய்யப்பட்டு மண்மாதிரி பையில் ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் என வழங்கப்பட்டுள்ள தனிப்பட்ட குறிப்பு குறியீடு அட்டை ஸ்கேன் செய்து இடப்படுகிறது.
இதன் மூலம் மண் பரிசோதனை செய்யும் அலுவலர்கள் இந்த தனிப்பட்ட குறிப்பு குறியீட்டினை உரிய கருவி மூலம் ஸ்கேன் செய்து விவரங்கள் மண்வள அட்டை செயலியில் நேரடியாக பதிவு செய்யப்படுகிறது.
விவசாயிகள் தங்களுடைய செல்போன் எண்ணினை பதிவு செய்தவுடன் அவர்களுடைய மண் மாதிரிக்கான அறிக்கை மற்றும் பரிந்துரைகளை நேரடியாக அவர்களுடைய செல்போனில் பார்த்துக் கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே விவசாயிகள் தமிழ்நாடு மண்வள செயலின் மூலம் தங்களுடைய செல்போன் எண் மற்றும் சர்வே எண்ணினை பதிவுசெய்து கடந்த வருடத்தில் வழங்கிய மண் மாதிரிகளின் அறிக்கையினையும் பார்த்துக் கொள்ளலாம்.
எனவே இவ்வருடம் கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள ஆவிக்கோட்டை நெம்மேலி, கன்னியாகுறிச்சி, பெரிய கோட்டை, சொக்கநாவூர், அண்டமி மற்றும் தளிக்கோட்டை கிராம விவசாயிகள் தங்கள் மண் மாதிரிகளை வேளாண் உதவி அலுவலரிடம் தனிப்பட்ட குறிப்பு குறியீட்டுடன் வழங்கிட கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி தெரிவித்தார்.
- சுற்றுலாத்துறை இணையதளத்தில் தங்கள் விபரங்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.
- தவறும் பட்சத்தில் மாவட்ட நிர்வாகம் மூலம் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளி யிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
மயிலாடுதுறை மாவட்ட த்தில் சாகச சுற்றுலா உண்டு, உறைவிடம் முகாம் நடத்துபவர், முகாம் சுற்றுலா, முகாம் நடத்துபவர்கள், கேரவன் இயக்குபவர், கேரவன் சுற்றுலா நடத்துபவர் ஆகியோர் https://www.tntourismtors.com என்ற சுற்றுலாத்துறை இணையதளத்தில் தங்கள் விபரங்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.
மாவட்டத்தில் பதிவு செய்யாமல் இயங்கும் சுற்றுலா சார்ந்த தொழில் நிறுவனங்கள் உடனடியாக பதிவு செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் மாவட்ட நிர்வாகம் மூலம் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பதிவு செய்வது மற்றும் வழிமுறைகள் குறித்த அரசாணை, மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் விபரங்களுக்கு: சுற்றுலா அலுவலகம், பூம்புகாரில் உள்ள மாவட்ட சுற்றுலா அலுவலரை தொடர்பு கொள்ளலாம் அல்லது 91769 95843 என்ற செல் நம்பரிலும், www.tourismpoompuhar@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விபரம் பெற்று, உடனுக்குடன் செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் போலீசார் ஒப்படைத்து வருகின்றனர்.
- நெடுங்காடு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.
புதுச்சேரி:
காரைக்காலில் செல்போன்களை தவறவிட்டாலோ அல்லது தொலையவிட்டாலோ, உடனடியாக,அந்தந்த போலீஸ் நிலையத்திலோ, அல்லது, காரைக்கால் சைபர் கிரைம் போலீசாரிடமோ புகார் தரலாம் என சமீபத்தில் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மணீஸ், போலீஸ் சூப்பிரண்டுகள் நிதின் கவ்ஹால் ரமேஷ், சுப்பிரமணியம் ஆகியோர் அறிவித்திருந்தனர். அதன்படி, புகார் தரும் நபர்களிடம் விபரம் பெற்று, உடனுக்குடன் செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் போலீசார் ஒப்படைத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, கடந்த சில நாட்களுக்கு முன், நெடுங்காடு பகுதியில், இருவர் தங்களது செல்போன்களை தவறவிட்டனர்.
இது குறித்து, சம்பந்தப்பட்டவர்கள், நெடுங்காடு போலீசில் புகார் அளித்தனர். நெடுங்காடு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் ஆகியோர், சி.ஐ.இ.ஆர்.போர்ட்டல் ஆப் மூலம் தொலைந்து போன செல்போன் எண்களை வைத்து அதை சம்பந்தப்பட்ட நபர்களிடமிருந்து மீட்டு நேற்று உரியவர்களிடம் ஒப்பைடைக்கும் நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. போலீஸ் சூப்பிரண்டு நிதின் கவ்ஹால் ரமேஷ் செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார். நெடுங்காடு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.