search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Devar statue."

    • நெல்லை சந்திப்பில் உள்ள தேவர் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் இன்று மாலை அணிவித்தனர்.
    • நிகழ்ச்சியில் மேயர் சரவணன், துணை மேயர் ராஜு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    பசும்பொன் முத்து ராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவையொட்டி நெல்லை சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் இன்று மாலை அணிவித்து மரியாதை செலு த்தினர்.

    தி.மு.க.

    தி.மு.க. சார்பில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம். மைதீன்கான் தலை மையில் நிர்வாகிகள் திரண்டு வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மேயர் சரவணன், துணை மேயர் ராஜு, பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், மாநில மகளிர் தொண்டரணி துணை செயலாளர் விஜிலா சத்யானந்த், தலைமை செயற்குழு உறுப்பினர் பேச்சிப் பாண்டியன், தச்சை பகுதி செயலாளரும், முன்னாள் மண்டல சேர்மனு மான தச்சை சுப்பிரமணியன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பொன்னை யா பாண்டியன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் கருப்பசாமி கோட்டையப்பன், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் ஆறுமுக ராஜா, மாவட்ட இளைஞரணி துணை அமை ப்பாளர் மீரான் மைதீன், சிறுபான்மை அணி முகமது அலி, முன்னாள் மாவட்ட பொருளாளர் அருண்குமார், முன்னாள் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட துணைச் செயலாளர் நவநீதன், ஒன்றிய செயலாளர் அருள்மணி உள்பட பலர் கலந்து கொண்டனா்.

    அ.தி.மு.க.

    நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம் தலைமையில் நிர்வாகிகள் திரளாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மாநில எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் கல்லூர் வேலாயுதம், முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.பி. ஆதித்தன், டவுன் கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் பால் கண்ணன், கவுன்சிலர் சந்திரசேகர், முன்னாள் எம்.பி. வசந்தி முருகேசன், பகுதி செயலாளர் திருத்து சின்னத்துரை, வக்கீல் ஜெய பாலன், மாவட்ட பிரதிநிதி ஈஸ்வரி கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    காங்கிரஸ்

    நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கலந்து கொண்டு தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் சொக்கலிங்க குமார், பொருளாளர் ராஜேஷ் முருகன், ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் நெல்லை மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் தனசிங் பாண்டியன், மண்டல தலைவர் அய்யப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து விட்டு பசும்பொன்னுக்கு காரில் புறப்பட்டு சென்றனர்.

    ம.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் நிஜாம் நிலைமையில் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். தே.மு.தி.க சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் சண்முகவேல் தலைமையிலும், பா.ஜ.க. சார்பில் மாவட்ட பொதுச் செயலாளர் வேல் ஆறுமுகம், மாவட்ட செயலாளர் நாகராஜன் ஆகியோர் தலைமையிலும், தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் சுத்தமல்லி முருகேசன் தலைமையிலும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    • அ.தி.மு.க. சார்பில் தேவா் சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது.
    • முன்னாள் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா் நினைவிடத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அ.தி.மு.க. சாா்பில் 2014-ம் ஆண்டு ரூ.4.50 கோடியில் 13 கிலோ எடையுள்ள தங்கக் கவசத்தை மறைந்த முன்னாள் முதல் வர் ஜெயலலிதா அணி வித்தாா்.

    இந்த தங்க கவசமானது குரு பூஜை விழாவுக்குப் பிறகு, மதுரையில் உள்ள வங்கிப் பெட்டகத்தில் இந்தக் கவசம் வைக்கப்பட்டு, பாதுகாக்கப்படும். பின்னா், குரு பூஜை விழாவின் போது, போலீஸ் பாதுகாப்பு டன் மதுரையில் இருந்து பசும்பொன்னுக்கு எடுத்து வரப்பட்டு தேவா் சிலைக்கு அணிவிப்பது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு குரு பூஜை விழாயொட்டி வங்கியில் இருந்த தங்கக் கவசத்தை அ.தி.மு.க. பொருளாளா் திண்டுக்கல் சீனிவாசன் எடுத்து வந்தார். பசும்பொன் தேவா் நினை விட பொறுப்பாளா் காந்தி மீனாள் அம்மாள் முன்னிலையில் தேவா் சிலையில் இருந்த வெள்ளி கவசம் கலையப்பட்டு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜைகள் நடந்தது.

    இந்த நிகழ்ச்சியில் சட்ட மன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார், முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், மணிகண்டன், மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ. முனியசாமி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகரன் நினை வாலய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் இன்று முதல் தேவர் நினைவிடத்தில் தங்ககவசம் ஒருவாரம் அணிவிக்கபட்டு அடுத்த வாரம் மதுரை வங்கி லாக்கருக்கு கொண்டு செல்லப்படும்.

    இதையடுத்து நினை விடத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • தேவர் சிலைக்கு ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் சங்கர் உள்ளிட்ட காங்கிரசார் கலந்து கொண்டனர்.

    தென்திருப்பேரை:

    பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115-வது ஆண்டு ஜெயந்தி விழா மற்றும் 60-வது குருபூஜையை முன்னிட்டு ஸ்ரீவைகுண்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட முத்துராமலிங்க தேவரின் முழு உருவ வெண்கல சிலைக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இதில் மாவட்ட தலைவர் சங்கர், காங்கிரஸ் பொருளாளர் எடிசன், எம்.எல்.ஏ.வின் நேர்முக உதவியாளர் சந்திரபோஸ், ஸ்ரீவைகுண்டம் வட்டார தலைவர் நல்லக்கண்ணு, கருங்குளம் வட்டார தலைவர் புங்கன், ஆழ்வார் திருநகரி வட்டார தலைவர் கோதண்டராமன், நகர தலைவர் கருப்பசாமி, மாவட்ட பொதுச் செயலாளர் அலங்கார பாண்டியன், சிவகளை பிச்சையா, மாவட்ட செயலாளர் சீனி ராஜேந்திரன், மங்களசெல்வி, மாரியம்மாள், பிரகாசி வட்டாரப் பொருளாளர் சந்திரன், மாவட்ட பேச்சாளர் ராஜவேல், நகரத் தலைவர் கருப்புசாமி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு பாலசுப்பிரமணியன், உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த தேவர் உருவப்படத்திற்கு ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    • தேவர் சிலைக்கு வழங்கப்பட்ட வெள்ளி கவசம் விஷேச நாட்களில் அணிவிக்கப்படும்.
    • முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தகவல் தெரிவித்துள்ளார்.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராம லிங்கத்தேவர் நினைவிடம் அமைந்துள்ளது. இங்கு தேவரின் 115-வது ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை நேற்று நடைபெற்றது.

    இதில் முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு தேவர் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.பின்னர் நினைவிடத்தில் உள்ள தேவர் சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் வெள்ளி ருத்ராட்ச மாலை அணிவித்து தீபாராதனை காட்டினார்.

    வெள்ளி கவசம்

    இதைத்தொடர்ந்து தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் மற்றும் நிர்வாகிகளை சந்தித்தார். அவர்களிடம் தேவர் சிலைக்கு அணிவிப்பதற்காக புதிதாக செய்யப்பட்ட வெள்ளி கவசத்தை ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார். வெள்ளி கவசம் 10 ½ கிலோ எடை கொண்டதாகும்.

    வெள்ளி கவசம் வழங்கும் நிகழ்ச்சியின் போது முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் மனோஜ்பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர், வெற்றிவேல், எம்.பி.க்கள் ரவீந்திரநாத், தர்மர், முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன், அய்யப்பன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    புதிதாக வெள்ளி கவசம் வழங்கியது குறித்து ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-

    இன்றைக்கு அ.தி.மு.க. சார்பில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு வெள்ளி கவசம் வழங்கியுள்ளோம். இங்குள்ள அறக்கட்டளை நிர்வாகத்தினர் அந்த வெள்ளி கவசத்தை அவர்கள் பொறுப்பில் வைத்துக் கொண்டு எப்போதெல்லாம் விஷேச நாட்களில் அதனை சாற்ற வேண்டுமோ அப்போ தெல்லாம் அவர்கள் முறைப்படி சாற்றுவதற்கு உரிமை கொடுத்துள்ளோம்.

    அ.தி.மு.க. ஒருங்கி ணைப்பாளர் நான் தான். அந்த அடிப்படையில் அ.தி.மு.க. சார்பில் நான் வெள்ளி கவசம் வழங்கியிருக்கிறேன். அ.தி.மு.க.வில் 1 ½ கோடி தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோவில்பட்டி அருகே வடக்கு திட்டங்குளத்தில் உள்ள தேவர் சிலைக்கு ம.தி.மு.க. சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
    • ஆர்.எஸ்.ரமேஷ், விநாயகா ரமேஷ் ஆகியோர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

    கோவில்பட்டி:

    பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு கோவில்பட்டி அருகே வடக்கு திட்டங்குளத்தில் உள்ள தேவர் சிலைக்கு ம.தி.மு.க. வடக்குமாவட்டச் செயலாளரும் நகர்மன்ற துணைத்தலைவருமான ஆர்.எஸ்.ரமேஷ், மாவட்ட இளைஞரணி செயலாளரும் ம.தி.மு.க. சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் விநாயக ரமேஷ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

    நிகழ்ச்சியில் மாநில விவசாய அணி துணை செயலாளர் கோடையடி ராமச்சந்திரன், ம.தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் கேசவ நாரயணன், மாவட்ட பிரதிநிதி முத்துப்பாண்டி, நகர துணை செயலாளர் வனராஜன், கிளை செயலாளர்கள் செண்பகராஜ், நாகராஜ், அரியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை மத்திய ஒன்றிய செயலாளர் சரவணன் செய்திருந்தார்.

    இதைத்தொடர்ந்து பசும்பொன்னில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு கிளம்பி சென்றனர்.

    ×