என் மலர்
நீங்கள் தேடியது "Devon Conway"
- திரிபாதிக்கு அணியில் இடம் கிடைக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை.
- பேட்டிங் செய்யும் போது நீங்கள் அதிகமாக உடலைக் குலுக்கினால் எப்போது பந்தைப் பார்ப்பீர்கள்.
சென்னை:
ஐ.பி.எல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 ஆட்டத்தில் ஒரு வெற்றி, 3 தோல்வி பெற்றுள்ளது. மும்பையை வீழ்த்தியது. பெங்களூரு, ராஜஸ்தான் ஆகிய அணிகளிடம் தோற்றது.
சென்னை அணியில் ராகுல் திரிபாதி , ரச்சின் ரவீந்திரா தொடக்க வீரர்களாக களம் இறங்கி வருகிறார்கள். இதில் ரவீந்திரா சிறப்பாக விளையாடினார். ஆனால் திரிபாதி போதுமான ரன்களை குவிக்கவில்லை.
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடக்க வீரராக நியூசிலாந்தை சேர்ந்த கான்வேயை களம் இறக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் ஹர்பஜன்சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
சென்னை அணி தொடர்ச்சியாக 2 போட்டிகளில் தோல்வியடைந்து உள்ளது. அவர்கள் அதிக தவறுகளைச் செய்கிறார்கள். ராகுல் திரிபாதியை தொடக்க வீரராக களம் இறக்குகிறார்கள்.
அவர் தனது உடலை அதிகமாக குலுக்குகிறார். ஆனால் அதற்கு தகுந்த ரன்கள் அடிக்கவில்லை. இப்படி சொல்வதற்கு மன்னித்து கொள்ளுங்கள். திரிபாதி மிகவும் கடினமாக உழைக்கக்கூடிய வீரர். ஆனால் அவர் ஆடும் லெவனில் இருக்க கூடாது என்பதில் நான் தெளிவாக சொல்கிறேன். பேட்டிங் செய்யும் போது நீங்கள் அதிகமாக உடலைக் குலுக்கினால் எப்போது பந்தைப் பார்ப்பீர்கள்? அவரிடம் இருந்து ரன்கள் வரவில்லை. அதற்கான நோக்கமும் தற்போது அவரிடம் தெரியவில்லை.
ருதுராஜ் கெய்க்வாட், சரியான தொடக்க வீரர் ஆவார். அவர் திரிபாதிக்காக 3-வது இடத்தில் களம் இறங்குகிறார். எப்போதும் தொடக்க ஜோடி சென்னை சூப்பர் கிங்சுக்கு ஒரு பெரிய பலமாக இருந்து வருகிறது. மேத்யூ ஹைடன், டுவைன் ஸ்மித், மைக் ஹசி, பிரண்டன் மெக்கல்லம், கான்வே ஆகியோர் தொடக்க வீரர்களாக இருந்தனர்.
தற்போது சென்னை அணியில் கான்வே இருக்கிறார். ஆனால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அணியைத் தேர்ந்தெடுக்கும் போது அவர்கள் இதுவரை எதுவும் தெரியாமல் இருந்தனர். திரிபாதிக்கு அணியில் இடம் கிடைக்க வேண்டும் என்று நான் நினைக்க வில்லை. ஆனால் கான்வே நிச்சயமாக இடம் பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தனிப்பட்ட விருதுகளை வெல்வது அல்லது இழப்பது பற்றி நான் கவலைப்படவில்லை.
- ஒரு அணியாக கோப்பையை வெல்ல வேண்டும் என கனவு கண்டேன்.
16-வது ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டனஸ் அணிகள் மோதின. இதில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில் ஐபிஎல் இறுதிப்போட்டியில் எனக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கியது வியப்பாக இருந்தது என சென்னை அணியின் தொடக்க ஆட்டகாரர் கான்வே கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
குஜராத் அணி வீரர் சாய் சுதர்சன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சென்னை வீரர் ஜடேஜா பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இப்படி இருக்க இறுதிப்போட்டியில் எனக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கியது வியப்பாக இருந்தது.
தனிப்பட்ட விருதுகளை வெல்வது அல்லது இழப்பது பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனால் ஒரு அணியாக கோப்பையை வெல்ல வேண்டும் என கனவு கண்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கான்வே ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.
- நியூசிலாந்து அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் ஆண்ட்ரே ஆடம்சுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிறிஸ்ட்சர்ச்:
நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் கிரிக்கெட் மோதும் நான்காவது 20 ஓவர் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நியூசிலாந்து அணி வீரர் கான்வேவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து அவர் ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். அணியில் அவருக்கு பதில் சாட்போவ்ஸ் சேர்க்கப்பட்டுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது. அதே போல் நியூசிலாந்து அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் ஆண்ட்ரே ஆடம்சுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டி20-யின் போது கான்வே காயமடைந்தார்.
- இதனால் முதல் இன்னிங்சின் போது போட்டியில் இருந்து வெளியேறினார்.
நியூசிலாந்து- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டி20 போட்டி இன்று ஆக்லாந்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி டி20 தொடரையும் வென்று அசத்தியுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியின் முதல் இன்னிங்சின் போது நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரரும் விக்கெட் கீப்பருமான கான்வே காயம் காரணமாக போட்டியிலிருந்து பாதியிலேயே வெளியேறினார்.
கான்வேவுக்கு மேற்கொள்ளபட்ட எக்ஸ்ரே முடிவுகளின் படி அவரது விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் அவரால் அடுத்த போட்டியில் விளையாட முடியுமா என்பது மருத்துவ சோதனைக்கு பிறகே தெரியவரும் என நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதனால் மூன்றாவது டி20 போட்டியில் டெவான் கான்வே இடம்பெறுவது கேள்விக்குறியாக மாறியுள்ளது.
முன்னதாக முதல் டி20 போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரச்சின் ரவீந்திராவும் தனது விரல் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இன்றைய போட்டியில் இடம்பெறவில்லை. இந்நிலையில் கான்வேவும் காயத்தை சந்தித்துள்ளது நியூசிலாந்து அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் கான்வே, ரச்சின் ரவீந்திரா இருவரும் வரவுள்ள ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தமாகியுள்ளனர். இத்தொடர் தொடங்குவதற்கு ஒருமாத காலமே உள்ள நிலையில் இருவரும் காயத்தை சந்தித்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் பெரும் பின்னடவைவாக பார்க்கப்படுகிறது.
- ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது.
- முதலில் நடைபெற்ற டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது.
வெல்லிங்டன்:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது.
இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி நாளை வெல்லிங்டனில் தொடங்குகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து நியூசிலாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் டெவான் கான்வே விலகி உள்ளார்.
நடப்பு தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியின்போது அவர் இடது கை கட்டை விரலில் காயம் அடைந்தார். அவரது காயம் இன்னும் குணமடையாததால் அவர் முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி உள்ளார். அவருக்கு பதிலாக முதல் டெஸ்ட் போட்டிக்கான நியூசிலாந்து அணியில் ஹென்றி நிக்கோல்ஸ் இடம் பெற்றுள்ளார்.
- கடந்த ஐ.பி.எல் தொடரில் சென்னை அணிக்காக டேவன் கான்வே 672 ரன்கள் குவித்தார்.
- சென்னை அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும், டேவான் கான்வே முதல் பாதியில் விளையாடமாட்டார் என்பது சென்னை அணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அதிரடி தொடக்க ஆட்டக்காரராக டேவன் கான்வே தனது, கட்டை விரலில் ஏற்பட்ட காயத்தால், வரும் மார்ச் 22-ம் தேதி ஆரம்பமாகும் ஐ.பி.எல் தொடரின் முதல் பாதியில் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் ஆஸ்திரேலியா -நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நடைபெற்றது. இதில், நியூசிலாந்து அணியின் இடதுகை தொடக்க ஆட்டக்காரரான கான்வேவின் கட்டைவிரலின் காயம் ஏற்பட்டது. இதற்காக வரும் வாரம் அவர் அறுவை சிகிக்சை மேற்கொள்ள இருப்பதாகவும், 8 வாரங்கள் அவர் ஓய்வெடுக்க வேண்டுமென்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக நியூசிலாந்து அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் மே மாதம் வரை அவர் கிரிக்கெட் விளையாடமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.பி.எல் 2024 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில் சிஎஸ்கே அணி தனது பயிற்சியை தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக சென்னை அணியின் தீபக் சஹார், சிமர்ஜித் சிங், ராஜவர்தன் ஹங்கேர்கர், முகேஷ் சௌதரி, பிரசாந்த் சோலங்கி, அஜய் மண்டல் ஆகியோர் பயிற்சிக்காக சென்னைக்கு வருகை புரிந்துள்ளனர். இதனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஐ.பி.எல் 2024 தொடரின் முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிகளுக்கு இடையே மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது.
கடந்த ஐ.பி.எல் தொடரில் சென்னை அணிக்காக டேவன் கான்வே 672 ரன்கள் குவித்தார். இந்நிலையில் சென்னை அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும், டேவன் கான்வே முதல் பாதியில் விளையாடமாட்டார் என்பது சென்னை அணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
- ஐபிஎல் தொடரிலிருந்து கான்வே முழுவதுமாக விலகுவதாக சிஎஸ்கே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது
- கடந்த ஐ.பி.எல் தொடரில் சென்னை அணிக்காக கான்வே 672 ரன்கள் குவித்தார்.
ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 4 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் சென்னை அணி சிறப்பாக விளையாடி வருகிறது.
முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அதிரடி தொடக்க ஆட்டக்காரராக கான்வே தனது, கட்டை விரலில் ஏற்பட்ட காயத்தால், வரும் ஐ.பி.எல் தொடரின் முதல் பாதியில் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியது.
கடந்த ஐ.பி.எல் தொடரில் சென்னை அணிக்காக கான்வே 672 ரன்கள் குவித்தார். இந்நிலையில் சென்னை அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும், கான்வே முதல் பாதியில் விளையாடமாட்டார் என்பது சென்னை அணிக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டது.
அதனால் அவருக்கு பதிலாக மற்றொரு நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா சிஎஸ்கே அணிக்காக துவக்க வீரராக விளையாடி வருகிறார். அந்த வாய்ப்பில் முதலிரண்டு போட்டிகளில் அதிரடியாக விளையாடிய அவர் அதன் பின் சற்று தடுமாற்றமாக விளையாடி இதுவரை 6 இன்னிங்ஸில் 133 ரன்கள் எடுத்துள்ளார்.
இந்நிலையில் காயம் இன்னும் குணமடையாததால் ஐபிஎல் 2024 தொடரிலிருந்து கான்வே முழுவதுமாக விலகுவதாக சிஎஸ்கே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அவருக்கு பதிலாக இங்கிலாந்தை சேர்ந்த ரிச்சர்ட் க்ளீசன் எனும் வீரரை 50 லட்சம் அடிப்படை விலைக்கு வாங்குவதாகவும் சென்னை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
36 வயதாகும் வலது கை வேகப்பந்து வீச்சாளரான அவர் 2022 முதல் இங்கிலாந்து அணிக்காக விளையாடி வருகிறார்.
- டி20 லீக் தொடர்களில் விளையாடுவதற்காக இந்த முடிவு எடுத்துள்ளார்.
- நியூசிலாந்து டெஸ்ட் அணிக்காக விளையாடுவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து அணியின் முன்னணி இடது கை பேட்ஸ்மேன் டேவன் கான்வே. இவர் நியூசிலாந்து அணியுடன் மத்திய ஒப்பந்தத்தில் கையெழுத்து இட மறுத்துள்ளார். உலகளவில் நடக்கும் பெரும்பாலான டி20 லீக் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்த முடிவை எடுத்து உள்ளார்.
ஆனால் நியூசிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டி மற்றும் அடுத்த வருடம் பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றில் விளையாடுவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மத்திய ஒப்பந்தத்தில் இருந்து விலகியது எளிதாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல. இது எனக்கும் எனது குடும்பத்திற்கும் இந்த நேரத்தில் சிறந்தது என நான் நம்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கேன் வில்லியம்சன், பெர்குசன் போன்ற முன்னணி வீரர்கள் இதே முடியை எடுத்துள்ளனர். இந்த பட்டியலில் தற்போது கான்வே இணைந்துள்ளார்.
மற்றொரு பேட்ஸ்மேனான பின் ஆலன் இதே முடிவை எடுத்து உள்ளார். ஆனால் நியூசிலாந்து இது தொடர்பாக இன்னும் முடிவு எடுக்கவில்லை.
நியூசிலாந்து கிரிக்கெட் போர்டின் மத்திய ஒப்பந்தத்தில் இடம் பெறவில்லை என்றால் நியூசிலாந்து அணிக்காக ஒரு வீரர் விளையாட வேண்டிய அவசியமில்லை. அவர்கள் வெளிநாட்டில் எந்த ஒரு லீக் போட்டிகளிலும் விளையாடலாம். லீக் போட்டியில் அதிக வருமானம் கிடைப்பதாலும், குடும்பத்தை விட்டு பிரிந்து செல்ல வெண்டியதில்லை என்பதாலும் பெரும்பாலான வீரர்கள் தற்போது இந்த முடிவை எடுத்து வருகிறார்கள்.
டேவன் கான்வே ஐபிஎல் லீக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
- நியூசிலாந்து வீரர் கான்வே 91 ரன்னில் அவுட் ஆனார்.
- நியூசிலாந்து அணி 134 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தது. இந்த அணியில் 5 பேர் டக் அவுட் ஆகி வெளியேறினர். அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 20 ரன்கள் எடுத்தார்.
மிரட்டாலாக பந்து வீசிய நியூசிலாந்து அணியில் ஹென்றி 5 விக்கெட்டும் வில்லியம் ஓரோர்கே 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக கான்வே- லாதம் களமிறங்கினர். நிதானமாக விளையாடிய லாதம் 15 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடக்கம் முதலே அதிரடி காட்டிய கான்வே அரைசதம் அடித்து அசத்தினார்.
நீண்ட நேரமாக விக்கெட் எடுக்க முடியாமல் திணறிய நிலையில் ஜடேஜா பந்து வீச்சில் வில் யங் 33 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த சிறிது நேரத்தில் கான்வே 91 ரன்னில் வெளியேறினார்.
இதனையடுத்து ரச்சின் ரவீந்திரா - டேரில் மிட்செல் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இறுதியில் 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் எடுத்தது. ரவீந்திரா 22 ரன்னிலும் மிட்செல் 14 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.
இந்திய தரப்பில் அஸ்வின், ஜடேஜா, குல்தீப் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர். நியூசிலாந்து அணி 134 ரன்கள் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- 5 பேரை சிஎஸ்கே அணி தக்கவைத்துள்ளது.
- 2 வருடமாக சிஎஸ்கே அணிக்காக கான்வே விளையாடி உள்ளார்.
ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக ஐந்து வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முடிவு செய்துள்ளது. இந்தப் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி, தற்போதைய சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, சிவம் துபே, மதீஷா பத்திரனா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில் சிஎஸ்கே அணியில் இருந்து நியூசிலாந்து வீரர் கான்வே விடுவிக்கப்பட்டார். 2 வருடம் ஆதரவளித்த சிஎஸ்கே ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில் கடந்த 2 ஆண்டுகளாக எனக்கு தொடர்ந்து ஆதரவளித்த விசுவாசமான சிஎஸ்கே ரசிகர்களுக்கு நன்றி என பதிவிட்டிருந்தார்.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கான்வே ஏலத்தில் வரும் பட்சத்தில் இவரை ஏலம் எடுக்க அனைத்து அணிகளும் மல்லுகட்டுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் டேவான் கான்வே காயம் காரணமாக விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- ஐபிஎல் 2023 இல் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய கான்வே 672 ரன்களை எடுத்தார்.
- 2025 ஐபிஎல் ஏலத்தை கான்வேவை ரூ.6.25 கோடிக்கு சென்னை அணியே விலைக்கு வாங்கியது.
ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக சிஎஸ்கே அணியில் இருந்து நியூசிலாந்து வீரர் டெவான் கான்வே விடுவிக்கப்பட்டார். பின்னர் ஐபிஎல் ஏலத்தை அவரை ரூ.6.25 கோடிக்கு சென்னை அணியே விலை கொடுத்து வாங்கியது.
வரும் ஐபிஎல் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட்டுடன் இணைந்து கான்வே தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், டெவான் கான்வே - கிம் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு ஒலிவியா கான்வே என பெயர் சூட்டியுள்ளனர்
ஐபிஎல் 2023 இல் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய கான்வே 672 ரன்களை எடுத்தார். ஆனால் 2024 ஆம் ஆண்டு காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் அவர் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்த 2 தொடர்களில் இருந்தும் வில்லியம்சன் மற்றும் கான்வே விலகியுள்ளனர்.
- இலங்கைக்கு எதிரான தொடரில் அதிரடி ஆட்டக்காரர் ஜேக்கப் அறிமுகமாகி உள்ளார்.
இலங்கை அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 தொடர்களில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதலில் டி20 தொடரும் அதன்பிறகு ஒருநாள் தொடரும் நடக்கவுள்ளது.
டி20 தொடர் வருகிற 28-ந் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு ஜனவரி 2-ந் தேதி முடிகிறது. ஒருநாள் தொடர் ஜனவரி 5-ந் தேதி தொடங்கி 11-ந் தேதி முடிவடைகிறது.
இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியின் கேப்டனாக மிட்செல் சாட்னர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த 2 தொடர்களில் இருந்தும் வில்லியம்சன் மற்றும் கான்வே விலகியுள்ளனர்.
இந்த தொடரில் அதிரடி ஆட்டக்காரர் ஜேக்கப் அறிமுகமாகி உள்ளார். இவர் இரு தொடர்களிலும் நியூசிலாந்து அணியில் இடம் பிடித்துள்ளார்.
நியூசிலாந்து டி20 அணி விவரம்:-
மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், ஜேக்கப் டஃபி, ஜாக் ஃபௌல்க்ஸ், மிட்ச் ஹே, மாட் ஹென்றி, பெவோன் ஜேக்கப்ஸ், டேரில் மிட்செல், க்ளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, டிம் ராபின்சன், நாதன் ஸ்மித்
நியூசிலாந்து ஒருநாள் அணி விவரம்:-
மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், ஜேக்கப் டஃபி, மிட்ச் ஹே, மாட் ஹென்றி, டாம் லாதம், டேரில் மிட்செல், வில் ஓ ரூர்க், க்ளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, வில் யங், நாதன் ஸ்மித்.