என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dies"

    • பெண் என்ஜினியர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்
    • கர்ப்பமாக இருந்தார்

    திருச்சி

    திருச்சி கே.கே. நகர் அம்மன் நகரை சேர்ந்தவர் பிரதீப் ராஜ். இவரது மனைவி சந்தியா (வயது 23). என்ஜினியர். இவருடைய கணவர் பிரதீப் ராஜ் பெங்களூரில் உள்ள தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சந்தியா அருகில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றிருந்தார். அப்போது சந்தியாவிற்குமயக்கம் வந்துள்ளது. இதையடுத்து அவரது பெற்றோர் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சந்தியாவை பரிசோதனை செய்து பார்த்த டாக்டர் சந்தியா கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார்.மேலும் உடல் நிலைக்கு வேறு எந்பாதிப்பும் இல்லை என்றும் கூறினார். இந்த நிலையில் கே கே நகர் அம்மன் நகரில் உள்ள வீட்டில் தனியாக இருந்த சந்தியாவிற்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டு உள்ளது .இதையடுத்து அவரை ஆபத்தான நிலையில் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்ற சந்தியா திடீரென இறந்து போனார். இந்த சம்பவம் குறித்து சந்தியாவின் தந்தை வெள்ளைச்சாமி கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் போலீசில் கொடுத்தார்.புகாரின் பேரில் போலீசார் மர்ம சாவு என வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாகன விபத்தில் ஒருவர் பலியானார்
    • மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிர் பிரிந்தது

    கரூர்

    கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே, சாலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குழந்தைசாமி (வயது 50), இவர் நேற்று மாலை, திண்டுக்கல் - கரூர் சாலை, ஜங்கல்பட்டி பகுதியில், இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, கர்நாடகா மாநிலம், பெங்களூருவை சேர்ந்த விஜய் (47) என்பவர் ஓட்டி வந்த கார், இவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த குழந்தைசாமி அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு, கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து, அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போட்டோகிராபர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
    • கிரகப்பிரவேச விழாவுக்கு சென்ற போது சம்பவம்

    திருச்சி

    திருச்சி உறையூர் குழு–மணி மெயின் ரோடு சுப்பி–ரமணியர் நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் குமார் (வயது 50). போட்டோகிரா–பரான இவர் திருச்சி சன்னா–சிப்பட்டியில் நடைபெற்ற புதிய வீடு கிரகப்பிரவேச விழாவுக்கு புகைப்படம் எடுக்கச் சென்றார்.

    இந்த நிலையில் அங்குள்ள பாத்ரூமில் சுரேஷ்குமார் மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு சுரேஷ்குமார் ஏற்க–னவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது தொடர்பாக அவரது மனைவி ஜோதி ராம்ஜி நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • லாரி மோதி பட்டு நூல் வியாபாரி பலியானார்
    • இருசக்கர வாகனத்தில் சென்ற போது சம்பவம்

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து ஆண்டிமடம் விளந்தை கிராமம் தியாகராஜ நகரை சேர்ந்த பக்தவச்சலம் (வயது 68). பட்டு நூல் வியாபாரியான இவர், கல்லாத்தூர் மெயின் ரோட்டில் தனது இருசக்கர வாகனத்தில் பட்டு நூல் கொடுத்தவர்களிடம் பணம் வசூல் செய்து விட்டு தனது இருசக்கர வாகனத்தில் வந்து ெகாண்டிருந்தார்.

    ஜெயங் கொண்டத்திலிருந்து விருத்தாச்சலம் நோக்கி வந்த லாரி இவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பக்தவசலம் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜாசோமசுந்தரம் தலைமையிலான போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், சப் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் உள்ளிட்ட போலீசார் பக்தவச்சலத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விசாரணையில லாரி டிரைவர் மதுபோதையில் வாகனம் ஓட்டி வந்தது தெரிய வந்தது.இதை அடுத்து லாரியை பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • தீக்குளித்த இளம் பெண் மூச்சு திணறி உயிரிழந்தார்
    • உதவி கலெக்டர் விசாரணை செய்து வருகிறார்

    திருச்சி:

    சென்னை சூளை திடீர் நகர் கண்ணப்பா திடல் பகுதியைச் சேர்ந்தவர் பாலன்.இவரது மகள் ஷர்மிளா (வயது 24). இவருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் கிருஷ்ணபுரம் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவருக்கும் கடந்த 2018 ல் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமண நடந்தது. பின்னர் சர்மிளா கணவருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே திடீர் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சர்மிளா தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தார். உறவினர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவரது பெற்றோர் மகளை சென்னைக்கு அழைத்துச் சென்று அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். அதன் பின்னர் கடந்த 7ம் தேதி ஆஸ்பத்திரியில் இருந்து ஷர்மிளா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

    இந்த நிலையில் அவருக்கு திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டது. உறவினர்கள் அவரை திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இவருக்கு திருமணம் ஆகி நான்கு ஆண்டுகள் மட்டுமே ஆவதால் உதவி கலெக்டர் விசாரணை செய்து வருகிறார். மேலும் காந்தி மார்க்கெட் உதவி போலீஸ் கமிஷனர் சுந்தரமூர்த்தியும் விசாரணை நடத்தி வருகின்றார்.இது தொடர்பாக கோட்டை அனைத்து மகளிர் 

    • கழிவறையில் மயங்கி கிடந்த இளம்பெண் பரிதாபமாக இறந்தார்.
    • போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை

    பெரம்பலூர்

    பெரம்பலூர் கல்யாண் நகர், கீத்துக்கடை பகுதியை சேர்ந்தவர் சர்வானந்தம். இவரது மகள் கிரிஜா (வயது 27). இவர் பி.எஸ்.சி. பி.எட். முடித்து விட்டு தனது தாய் ஆனந்தி, அண்ணன் ஸ்ரீராம்குமாருடன் வசித்து வந்தார். கிரிஜாவுக்கு உடலில் அடிக்கடி கட்டிகள் வருவதும், மறைவதுமாகவும் இருந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளான கிரிஜா கடந்த சில நாட்களாக யாரிடமும் பேசாமலும், சரியாக சாப்பிடாமலும் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை 8 மணியளவில் வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்ற கிரிஜா வெகு நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் கழிவறையின் கதவை திறந்து பார்த்துள்ளனர். அப்போது கிரிஜா மயங்கிய நிலையில் கிடந்தார். இதனை கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே கிரிஜா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை பிரேத கூடத்தில் வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிரிஜா எப்படி இறந்தார்? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மரக்கிளையில் சிக்கி மான் உயிரிழந்தது
    • மானை வனப்பகுதியில் புதைத்தனர்.

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், வெளிப்பிரிங்கியம் வனப்பகுதியில் உள்ள ஒரு மரக்கிளை இடையே ஒரு மான் சிக்கி இறந்த நிலையில் காணப்பட்டது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் அரியலூர் வனத்துறை அதிகாரி முத்துமணி, வனத்துறை காப்பாளர் பாலசுப்ரமணியன் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள் இறந்த மானை கைப்பற்றினர். பின்னர் கீழப்பழுவூர் கால்நடை மருத்துவர் உதவியுடன், அந்த மானை உடற்கூறு பரிசோதனை செய்து, பின்னர் மானை வனப்பகுதியில் புதைத்தனர்.

    • சுவர் இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.
    • திண்ணையில் விளையாடிக் கொண்டிருந்தான்

    அரியலூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் சின்னையன் பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி கண்மணி. இவர்களுடைய மகன் ரித்விக் (வயது 2). கடந்த 3 நாட்களுக்கு முன்பு மாரிமுத்து தனது குடும்பத்துடன் அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட மேலகருப்பூர் கிராமத்தில் உள்ள மாமியார் வீட்டிற்கு வந்துள்ளார்.நேற்று முன்தினம் அங்கிருந்து அவரது உறவினர் வீட்டிற்கு சென்ற போது அவர்களது குழந்தை ரித்விக் வீட்டின் முன்பு உள்ள திண்ணையில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக திண்ணையில் இருந்த சுவர் இடிந்து ரித்விக் மீது விழுந்தது.

    இதில் படுகாயம் அடைந்த ரித்விக்கை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரித்விக் பரிதாபமாக இறந்தான். இந்த சம்பவம் குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    "

    • நீரில் மூழ்கி வாலிபர் உயிரிழந்தார்
    • ஆற்றில் குளிக்க சென்றார்

    கரூர்:

    அமராவதி ஆற்றில் குளிக்க சென்ற வாலிபர், நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

    கரூர், வெங்கமேடு செல்வ நகர் பகுதியை சேர்ந்தவர் வரதராஜன் மகன் ஆனந்தகுமார் (வயது 26) இவர், சணப்பிரட்டி பகுதியில் அமராவதி ஆற்றில் குளிக்க சென்றார். குளித்துக் கொண்டிருந்த போது திடீரென நீரில் மூழ்கினார். அப்போது கைகளை தூக்கி காப்பாற்றுங்கள் என குறல் அபாய குறல் எழுப்பினார்.

    அதனை கேட்ட அக்கம் பக்கத்தில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் காப்பாற்ற முற்பட்டனர். காப்பாற்ற முடியாததால் தீயணைப்பு துறையினருக்கும் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் இறங்கி ஆனந்தகுமார் உடலை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து பசுபதிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மகன் வீட்டிற்கு வந்த பெண் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார்
    • தீராத வயிற்று வலியால் அவர் அவதிப்பட்டு வந்தார்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகேயுள்ள தெரணி கிராமம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தங்கராஜ் மனைவி மலர்கொடி (வயது 55). கணவர் இறந்துவிட்டதால் மலர்கொடி தனியாக வசித்து வந்தார். இவரது மகள் விஜயாவுக்கு திருமணமாக செட்டிக்குளத்தில் கணவருடன் வசித்து வருகிறார். இதற்கிடையே கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவர் அவதிப்பட்டு வந்தார்.

    இந்த நிலையில் நேற்று திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற மலர்கொடி செட்டிக்குளத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றார். இன்று அதிகாலை 2 மணிக்கு எழுந்து வெளியே சென்ற மலர்கொடி நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதையடுத்து அவரது மகள் விஜயா வெளியில் சென்று தேடிப்பார்த்தார். அப்போது வீட்டில் இருந்து சற்று தொலைவில் உள்ள கிணற்றின் அருகில் தாய் மலர்கொடியின் செருப்பு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் அவர் பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி பார்த்தபோது அங்கு இறந்த நிலையில் மலர்கொடி மீட்கப்பட்டார். அவர் தவறி விழுந்து இறந்தாரா அல்லது கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டாரா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கார் மோதி மூதாட்டி பலியானார்
    • ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது சம்பவம்

    கரூர்:

    அரவக்குறிச்சி அருகே கார் மோதிய விபத்தில் மூதாட்டி உயிரிழந்தார். பள்ளப்பட்டியை அடுத்துள்ள சூரிப்பாளி கிராமத்தை சேர்ந்தவர் அருக்காயம்மாள் (72). இவர் அப் பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டு சாலையோரம் நின்று கொண்டிருந்தார். அப்போது கரூர், பசுபதிபாளையம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் (25), என்பவர் காரில் மாம்பாறை முனியப்பன் கோவிலுக்கு சென்று விட்டு, கரூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். சூரிப்பாளி பகுதியில் வந்தபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் அருக்காயம்மாள் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பணியின் போது அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழந்தார்
    • மாரடைப்பு ஏற்பட்டதும் பேருந்தை நிறுத்தியுள்ளார்

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே பணியின் ே பாது ஏற்பட்ட மாரடைப்பால் அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழந்தார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டம், உலகம்பட்டி அருகே உள்ள படமிஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி மகன் குமார் (வயது40). இவர் பொன்னமராவதி அரசு போக்குவரத்து பணிமனையில் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்றுகாலை 8 மணியளவில் சிங்கம்புணரியிலிருந்து பொன்னமராவதி சென்ற அரசு பேருந்தை சுமார் 70 பயணிகளுடன் குமார் ஓட்டிவந்தார். மேலச்சிவபுரி அருகே வந்தபோது, அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனே பேருந்தை நிறுத்திய குமார் பேருந்திலேயே மயங்கி விழுந்தார். தகவலறிந்த பொன்னமராவதி போலீசார் அங்கு வந்து வலையப்பட்டி அரசு பாப்பாயி மருத்துவமனைக்கு அவரை அனுப்பிவைத்தனர். அவங்கு அவரை பரிசோதிதத் மருத்துவர்கள் குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். முன்னதாக உயிரிழந்த ஓட்டுநர் குமார், பேருந்தை உடனடியாக நிறுத்தி பயணிகளின் உயிரை காப்பாற்றியது குறிப்பிடத்தக்கது.

    ×