என் மலர்
நீங்கள் தேடியது "Diet"
- மனித உடலில் உள்ள முக்கியமான சுரப்பிகளில் ஒன்று தைராய்டு சுரப்பி.
- ரத்தத்தில் டி3,டி4 ,டி.எஸ்.ஹெச் ஹார்மோன்கள் எவ்வளவு உள்ளது என்று பார்க்கலாம்.
மனித உடலில் உள்ள முக்கியமான சுரப்பிகளில் ஒன்று தைராய்டு சுரப்பி. இது தைராக்ஸின் ஹார்மோனை தேவையான அளவு சுரக்காததைத் தான் குறை தைராய்டு நோய் என்கின்றோம். இதை மூன்று வகையாகப் பிரிக்கலாம். அவை:
சப் கிளினிக்கல் ஹைபோ தைராய்டு நோய். கிளினிக்கல் ஹைபோ தைராய்டு நோய். ஹாசிமோட்டோஸ் குறை தைராய்டு நோய்.

பரிசோதனைகள்
தைராய்டு நோய்களைக் கண்டறியப் பயன்படும் பரிசோதனைகள் வருமாறு:
1) ரத்தத்தில் டி3,டி4 ,டி.எஸ்.ஹெச் ஹார்மோன்கள் எவ்வளவு உள்ளது என்று பார்க்கலாம்
2) தைரோபெராக்சிடோஸ் ஆன்டிபாடி (டி.பி.ஓ), தைரோகுளோபுலின் ஆன்டிபாடி (டி.ஜி.ஹெச்)
3) நுண் ஊசி உறிஞ்சல் திசு பரிசோதனை (எப்.என்.ஏ.சி)
4)அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் (தைராய்டு சுரப்பியில் உள்ள புற்றுநோய் சதை முடிச்சுகள், காய்டர், நீர்க்கட்டிகள், தைராய்டு சுரப்பியின் அழற்சி வீக்கம் இவைகளை கண்டறிய உதவுகிறது.)
தைராய்டு நோய்களுக்குரிய உணவுப் பழக்க வழக்கங்கள்
1) இரும்புச் சத்து குறைபாட்டிற்கும், தைராய்டு குறைபாட்டிற்கும் நிறைய தொடர்புகள் உள்ளன. தைராய்டு ஹார்மோன் டி4 லிருந்து டி3-க்கு மாறுவதற்கு இரும்புச் சத்து தேவை. ரத்தத்தில் 'பெரிட்டின்' அளவு சரியாக இருக்க வேண்டும். இரும்புச்சத்து உடலில் சேர்வதற்கு போலிக் அமிலம், வைட்டமின்கள் பி12 மற்றும் சி தேவை.

இரும்புச்சத்து நிறைந்த உணவுகள்:
முருங்கைக்கீரை, கறிவேப்பிலைக் கீரை, கரிசலாங்கண்ணிக் கீரை, பேரீட்சை, சிவப்புக் கொண்டைக் கடலை, வேர்க்கடலை, சோயா பீன்ஸ், பீன்ஸ், அவரைக்காய், இறைச்சி வகைகள், பூசணி விதை, கோதுமை, தீட்டாத சிவப்பரிசி, அத்திப்பழம், ஆப்பிள், கொய்யா, பேரிக்காய், பாதாம், பிஸ்தா, முந்திரி பருப்பு மற்றும் அனைத்துக் கீரை வகைகளிலும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது.
2) வைட்டமின் டி குறைவால் தைராய்டு சுரப்பியில் உள்ள தைரோ பெராக்சிடோஸ், தைரோகுளோபுலின் போன்றவை பாதிக்கப்படுகிறது. ஆகவே, விட்டமின் டி சத்துக் குறையாமல் பார்க்க வேண்டும்.
நமது தோலில் எந்த அளவுக்கு சூரிய ஒளிபடுகிறதோ, அந்த அளவிற்கு வைட்டமின் டி உடலில் உருவாகும். உணவு வகைகளில் முட்டை மஞ்சள்கரு, மத்திச்சாளை மீன், சூரை, கானாங்கெளுத்தி, இந்தியன் சால்மன் போன்ற மீன்களிலும், சிப்பி, பால் பொருட்கள், பாதாம், பிஸ்தா, இறைச்சி வகைகள் இவற்றிலிருந்தும் வைட்டமின் டி கிடைக்கும்.
3) அயோடின்: தைராய்டு சுரப்பி செயல்படுவதற்கு அயோடின் மிக முக்கியமானது. கடல் உப்பு, கடல் மீன்கள், நண்டு, இறால், கணவாய், பால் பொருட்கள், முட்டை, இறைச்சி வகைகள், கடல் பாசிகள், ஸ்ட்ராபெர்ரி, க்ரான் பெர்ரி, அன்னாசிப் பழம் இவைகளில் இச்சத்து காணப்படுகிறது.
4) செலினியம்: தைராய்டு சுரப்பியின் டி3, டி4 ஹார்மோன்கள் சுரப்பதற்கு செலினியம் ஒரு முக்கியமான பொருள். உணவுப் பொருட்களில், பூசணி விதை, பாதாம், பிரேசில் நட், முட்டை, பால் பொருட்கள், மீன், இறைச்சி இவைகளில் செலினியம் அதிகமாகக் கிடைக்கிறது.
5) மெக்னீசியம்: தைராய்டு சுரப்பி டி4 ஹார்மோன் சுரக்க மெக்னீசியம் தேவை. டி4 தேவையான அளவு சுரந்தால் தான் உடலுக்குத் தேவைப்படும் டி3 ஹார்மோனாக மாற்றப்படும். ஆகவே, உணவில் மெக்னீசியம் குறைவில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எலும்பில் கால்சியம் வலிமையாக சேர்வதற்கும் மெக்னீசியம் இன்றியமையாதது. இது உணவுகளில், பாதாம், வாழைப்பழம், பூசணி விதை, முந்திரிப் பருப்பு, வேர்க்கடலை, கருப்பு சாக்லேட், ரொட்டி, உருளைக்கிழங்கு, பால் பொருட்கள், இறைச்சி, மீன் வகைகளில் உள்ளது.
6) துத்த நாகம்: மூளையின் ஹைப்போதலாமஸ் சுரக்கும் தைரோடிரோபின் ரிலீசிங் ஹார்மோன் சரியான அளவு சுரக்க துத்தநாகம் தேவை. கடல் சிப்பி, முந்திரிப்பருப்பு, பாதாம், வேர்க்கடலை, கொண்டக்கடலை, பூசணி விதை, கருப்பு சாக்லேட், இறைச்சி வகைகள், மீன் வகைகள், தயிர், பீன்ஸ், சோயாபீன்ஸ், மாதுளை பழம், கொய்யா, பெர்ரி வகைப் பழங்கள் இவைகளில் துத்தநாகம் அதிக அளவில் உள்ளது.
7) தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள் சிகிச்சை காலங்களில் முட்டைகோஸ், காலிப்ளவர், ப்ராக்கோலி, டர்னிப் போன்ற காய்கறிகளை தவிர்ப்பது நலம்.
- கோடைகால பயிற்சி முகாமானது கடந்த மே 2-ம் தேதி தொடங்கி இன்று வரை நடைபெற்றது.
- விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்ட உணவு பொருட்கள் குறித்து கேட்டறிந்தார்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்ட பிரிவு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் நிறைவு நாள் நிகழ்ச்சி அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் எஸ். எஸ். பழநிமாணிக்கம் எம்.பி. கலந்து கொண்டு விளையாட்டு வீராங்கனை களுக்கு சான்றிதழ் வழங்கினார்.
இந்த கோடைகால பயிற்சி முகாமானது கடந்த மே 2-ம் தேதி தொடங்கி இன்று வரை நடைபெற்றது. இந்த பயிற்சியில் வாலிபால், தடகளம், கூடைபந்து ஆகிய போட்டிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
இதில் பங்கு பெற்ற விளையாட்டு வீரர்களிடம் அவர்கள் கற்றுக் கொண்டது மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு பொருட்கள் குறித்து எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. கேட்டறிந்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் டேவிட் டேனியல், மாவட்ட ஹாக்கி கழக செயலாளர் ராஜ்குமார், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கற்பகம், வாலிபால் மண்டல முதுநிலை மேலாளர் காந்தி மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர்.
- அட்கின்ஸ் டயட் முறையை, மருத்துவரின் ஆலோசனையை பெற்று பின்பற்றலாம்.
- இளசுகளிடம் தற்போது பிரபலமாக இருக்கும் உணவு முறை 'அட்கின்ஸ் டயட்'.
இளசுகளிடம் தற்போது பிரபலமாக இருக்கும் உணவு முறை 'அட்கின்ஸ் டயட்'. வழக்கமான உணவு முறையில், சிறிய மாறுதல்கள் மட்டும் செய்வது இந்த உணவு முறையின் சிறப்பு. அதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
அட்கின்ஸ் முறையின் அடிப்படை விதி, கார்போஹைட்ரேட் இல்லாத அல்லது குறைவாக உள்ள உணவு வகைகளை சாப்பிடுவதாகும். நாம் சாப்பிடும் உணவில் இருக்கும் கார்போஹைட்ரேட் எனும் மாவுச்சத்து மற்றும் கொழுப்புச்சத்து தான், உடல் எடை அதிகரிப்புக்குக் காரணம். இதில், கொழுப்பைக் கரைப்பதிலேயே பலரும் கவனம் செலுத்துகின்றனர்.
ஆனால், மாவுச்சத்து அதிகரிப்பைப் பற்றி கவலை கொள்வதில்லை. அட்கின்ஸ் உணவு முறையில், கார்போஹைட்ரேட் அளவைக் குறைத்தால், உடல் எடையைக் குறைக்க முடியும் என்று உறுதியாக கூறப்படுகிறது. கார்போஹைட்ரேட்டை குறைக்கும் போது, உடலின் வளர்ச்சிதை மாற்றம் தூண்டப்பட்டு, இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்துகிறது. இது, குளுக்கோசை எரித்து சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் கொண்டு வர உதவும். உடலில் தேங்கியிருக்கும் கெட்ட கொழுப்புகளையும் கரைத்து வெளியேற்றும். இதனால் எடைக் குறைப்பு என்பது எளிதாகிறது.
அட்கின்ஸ் டயட்டின் 4 நிலைகள்:
ஆரம்ப நிலையில், நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் மாவுச்சத்து எனும் கார்போஹைட்ரேட் 20 கிராம் மட்டுமே இருக்க வேண்டும். அவற்றையும் காய்கறி சாலட், பழங்கள் ஆகியவற்றின் மூலமே பெற வேண்டும். கீரைகளை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். அடுத்த நிலையில், 30 கிராம் வரை கார்போஹைட்ரேட் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால், இவற்றில் அதிகம் உலர் பழங்கள், விதைகள், மாவுச்சத்து அதிகமில்லாத காய்கறிகள், குறைந்த அளவிலான பெர்ரி பழ வகைகள் ஆகியவற்றை சாப்பிடலாம்.
இதனால், 2-வது வாரத்திலேயே எடைக் குறைப்பைப் பார்க்க முடியும். மூன்றாவது நிலையில், பராமரித்தல் முறையில், எடைக் குறைப்பை மெதுவாகக் கொண்டு செல்ல வேண்டும். இதில் முழு தானியங்கள், புரதம் உள்ள உணவுகள், நல்ல கொழுப்புள்ள உணவுகள், பால் பொருட்கள் ஆகியவற்றை சாப்பிடலாம். இதில், உடல் எடை குறைய குறைந்தபட்சம் 1 மாதம் வரை தேவைப்படும்.
நான்காவது நிலையில், சீரான எடையை வாழ்நாள் முழுவதும் பராமரிப்பது முக்கியமானதாகும். இதற்கு அனைத்து சத்துக்களும் நிறைந்த சரிவிகித உணவைத் தொடர்ந்து சாப்பிட வேண்டும். எடைக் குறைப்பில் உணவுகள் மூலம் 70 சதவீத கலோரிகளை எரித்தால், மீதமுள்ள 30 சதவீத கலோரிகளை உடற்பயிற்சியால் மட்டுமே எரிக்க முடியும். தண்ணீர் போதுமான அளவு குடிக்க வேண்டும்.
கிழங்கு வகைகள், சோளம், மாம்பழம், சப்போட்டா, அன்னாசிப்பழம், வாழைப்பழம், பப்பாளி வகைகள், பேக்கரி உணவுகள், இனிப்பு வகைகள், எண்ணெய்யில் பொரித்த உணவுகள், துரித உணவுகள், பதப்படுத்திய உணவுகள், டின்களில் அடைக்கப்பட்ட உணவுகள், வெள்ளை நிறப் பொருட்கள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். அட்கின்ஸ் டயட் முறையை, மருத்துவரின் ஆலோசனையை பெற்ற பின்னரே பின்பற்ற வேண்டும்.
- இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம் உள்ளது.
- இந்த நோயால் பாதிக்கப்பட்டால், உணவுகளில் மிகவும் கவனம் தேவை.
உலகில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதிலும் இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டால், உணவுகளில் மிகவும் கவனம் தேவை.
நீரிழிவு பாதிப்பு உள்ள நோயாளிகள் தங்கள் உணவு முறையில் சிறு மாற்றத்தைச் செய்தாலேயே நீரிழிவு நோயைப் பெருமளவு குறைக்கலாம் என்பது புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
நெல்லை நேரடியாக வெயிலில் உலர்த்தி, வேக வைக்காமல், ஆலையில் அரைத்து அதன் உமி, தவிடு நீக்குவதால் கிடைக்கும் அரிசி பச்சரிசி ஆகும். நெல்லை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து பின்னர் ஊறிய நெல்லை அரைப்பதத்திற்கு வேகவைத்து, வெயிலில் உலர்த்தி, பின்னர் உமியை நீக்குவதால் கிடைக்கும் அரிசி புழுங்கல் அரிசி ஆகும்.
நெல்லை வேகவைக்கும்போது உமியில் உள்ள நார்ச்சத்து மற்றும் வைட்டமின் பி, ஒரைசினால் போன்ற ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் அரிசிக்குள் திணிக்கப்படுவதால் புழுங்கல் அரிசி அதிக ஊட்டச்சத்து உள்ளதாக திகழ்கிறது. புழுங்கல் அரிசியின் கிளைசிமிக் இன்டெக்ஸ் (சர்க்கரை உயர்தல் குறியீடு) 38 ஆகும், ஆனால் பச்சரிசியின் கிளைசிமிக் இன்டெக்ஸ் 55 ஆகும்.
புழுங்கல் அரிசியின் கிளைசிமிக் இன்டெக்ஸ் பச்சரிசியை விட குறைவாக இருப்பதாலும், புழுங்கல் அரிசியில் வைட்டமின் பி, ஆன்டி ஆக்சிடென்ட்ஸ், நார்ச்சத்து பச்சரிசியை விட அதிகமாக இருப்பதாலும், நீரிழிவு நோயாளிகளுக்கு பச்சரிசியை விட புழுங்கல் அரிசியே சிறந்தது.
புழுங்கல் அரிசி ஊற வைப்பது, வேக வைப்பது, உலர்த்துவது என்ற மூன்று நிலைகளை கடந்து பெறப்படுவதால் ஜீரணத்தை எளிதாக்கி வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கிறது. புழுங்கல் அரிசியில் ஆந்தோசையனின் என்ற ஆன்டி ஆக்சிடென்ட்ஸ் அளவு அதிகமாக உள்ளது.
இது செல்களில் ஏற்படும் அழற்சியையும், ஃபிரீரேடிகல்கள் பாதிப்பையும் குறைக்கிறது. பச்சரிசியை ஒப்பிட்டு பார்க்கும்போது, புழுங்கல் அரிசியில் அதிகமான அளவு கால்சியம், பொட்டாசியம், இரும்பு, மாங்கனீஸ் ஆகியவை இருக்கிறது. இத்தகைய நன்மைகளை பெற்றிருக்கும் புழுங்கல் அரிசி, நீரிழிவு நோயாளிகளுக்கு பச்சரிசியை விட சிறந்ததாக கருதப்படுகிறது.
நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம்
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- நீரிழிவு நோயாளிகளைப் பொறுத்தவரை எப்போதும் அனைத்து சத்துகளும் நிறைந்த உணவையே உண்ண வேண்டும்.
- நீரிழிவு நோயாளிகளுக்கு கால் நகங்கள் கருப்பாக மாறுவதற்கு முக்கிய காரணங்கள் வருமாறு:
பொதுவாக பலரையும் வாட்டக்கூடிய நீரிழிவு நோய் இரண்டாம் இடத்தில் உள்ளது. தலை முதல் கால் வரை எல்லா உறுப்புகளையும் பாதிக்கக் கூடிய ஒரே நோய் என்று இதனை கூறலாம். இதனை ஆரம்பத்திலே சரி செய்வது நல்லது. இல்லாவிடின் உயிர் ஆபத்தை ஏற்படுத்தி விடுகின்றது. நீரிழிவு நோயாளிகளுக்கு கால் நகங்கள் கருப்பாக மாறுவதற்கு முக்கிய காரணங்கள் வருமாறு:
பூஞ்சை தொற்று: இது விரலின் நுனியில் தொடங்கி பின்னர் மையத்திற்கு பரவுகிறது. பொதுவாக கால் விரல்களை பாதிக்கிறது. குறிப்பாக காலில் ஷூ அல்லது விரல்களை மூடுமாறு அணியும் காலணிகளை அணிபவர்களுக்கு இது அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. டெர்மெட்டோபைட் எனும் பூஞ்சையால் ஏற்படும் இந்த தொற்று ஒனைக்கோமைக்கோசிஸ் அல்லது டினியா உன்குயம் என்று அழைக்கப்படுகிறது.
நகங்களில் ஏற்படும் காயம்: நகத்தின் மேல் காயம் ஏற்பட்டால் நகத்தின் கீழ் உள்ள ரத்த நாளங்களை வெடிக்க செய்து, ரத்தம் அதிகமாக சேர்ந்து நகத்தின் நிறத்தை மாற்றும். பொருந்தாத காலணிகள் அல்லது இறுக்கமான காலணிகளை அணிந்து நடப்பது, ஓடுவது அல்லது வேலை செய்வதால் ஏற்படும் அழுத்தம் அல்லது காயங்களால் நகத்தின் நிறம் மாறலாம்.
மெலனோமா: சில சமயம் ஓர் அரிய நிகழ்வாக தோலில் ஏற்படக்கூடிய மெலனோமா புற்றுநோய் காரணமாக நகத்தின் நிறம் கருமையாக மாறும்.
நோய் பாதிப்பு: இதய நோய், சிறுநீரக பாதிப்பு அல்லது ரத்த சோகையினால் கூட நகத்தின் நிறம் கருப்பாக மாறலாம். உங்கள் கால் நகம் கருப்பாக மாறும் போது மருத்துவரிடம் சென்று கலந்தாலோசித்து அது குறித்து தகுந்த பரிசோதனை செய்து மருத்துவரின் பரிந்துரையை பின்பற்ற வேண்டும்.
நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம்
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- மாதவிலக்கு சுகாதாரம் குறித்தும் அவர்களுக்கு கட்டாயம் சொல்லித் தருதல் வேண்டும்.
- மாதவிடாய் சுகாதாரத்தை சுத்தமாக வைத்திருப்பதை போல் சுற்றுச்சூழலையும் தூய்மையாக வைத்திருப்பது அவசியம்.
பூப்படைந்த பெண்கள் என்னமாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம், அவர்களுக்கு கண்டிப்பாக கொடுக்க வேண்டிய உணவு முறைகள் எவை என்பதை பற்றி இன்று பார்க்கலாம்.
பூப்படைந்த குழந்தைகளுக்கு மன ரீதியிலும், உடல் ரீதியிலாகவும் நாம் ஆதரவு கொடுக்க வேண்டும். உடல்ரீதியாக வரக் கூடிய மாற்றங்களை அவர்கள் எப்படி சமாளிக்க வேண்டும். மாதவிலக்கு சுகாதாரம் குறித்தும் அவர்களுக்கு கட்டாயம் சொல்லித் தருதல் வேண்டும். உணவுமுறைகள் இதனை பின்பற்றுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி அவர்களுக்கு விழிப்புணர்களை ஏற்படுத்த வேண்டும். பெண் குழந்தை பூப்பெய்தியதும் உடலுக்குத் தேவையான அளவு மற்றும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டியவது அவசியம்.
கறுப்பு உளுந்து - தோல் நீக்காமல் உளுந்தில் வடை, களி, சத்துமாவாக பொடித்தும் சாப்பிடலாம். சத்துமாவு மற்றும் களி தயாரிப்பதற்கு கறுப்பு உளுந்தை நன்றாக வறுத்துப் பொடித்துக் கொள்ள வேண்டும். பின் நாட்டுச் சர்க்கரை அல்லது பனை வெல்லம் சேர்த்து சத்துமாவாகச் சாப்பிடலாம். அதே மாவைக் கூழ் போன்று காய்ச்சி, நல்லெண்ணெய், காய்ந்த திராட்சை, முந்திரி மற்றும் பாதாம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடக் கொடுக்கலாம். எலும்புகள் வலுவாகவும், சீரான மாதவிடாய்சுழற்சிக்கும், ஹார்மோன்கள் சீராகச் செயல்படவும் கறுப்பு உளுந்து உதவும்.
நல்லெண்ணெய் - நல்லெண்ணெய்யில் இருந்து கிடைக்கும் கொழுப்பு, நல்ல கொழுப்பு வகையைச் சேர்ந்தது. எனவே, உணவில் அடிக்கடி நல்லெண்ணெய் மற்றும் நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
நாட்டு முட்டை - பெண் குழந்தைகள் பூப்பெய்திய உடன் உடலுக்குத் தேவையான கொழுப்புச்சத்தை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் ஒன்று அல்லது இரண்டு நாட்டு முட்டையை மஞ்சள் கருவுடன் சேர்த்து சமைத்துச் சாப்பிட வேண்டும்.
கம்பு - வறுத்த கம்பு தானியத்தைப் பொடித்து, கூழாகவோ அல்லது களியாகவோ சமைத்து சாப்பிடலாம். எலும்புகள் வலுப்பெற கம்பு உறுதுணை புரியும்.
பொட்டுக் கடலை - பொட்டுக்கடலையை அப்படியே சாப்பிடலாம் அல்லது பொடித்து நாட்டுச் சர்க்கரை சேர்த்து சத்துமாவாக சாப்பிடலாம். இதுவும் எலும்பை வலுப்படுத்த உதவும்.
அசைவ உணவுகள் - மீன், ஆட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சி ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் குறைவான அளவு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.
கீரை வகைகள் - மாதவிடாய் நாள்களில் ரத்தப்போக்கு ஏற்படுவதால், சிலருக்கு ரத்தச்சோகை வர வாய்ப்பு உள்ளது. இதைத் தடுக்க முருங்கைக் கீரை, அரைக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை, பசலைக் கீரை மற்றும் முள்ளங்கி கீரை இவற்றில் ஏதேனும் ஒரு கீரையை வாரத்திற்கு 3 முறை எடுத்துக் கொள்ள வேண்டும்.
பாகற்காய், சுண்டைக்காய் - சில பெண் குழந்தைகளுக்கு மாதவிடாய் நாள்களில் ரத்தப்போக்கு சற்று குறைவாக இருக்கும். மேலும் உடலில் ரத்தத்தின் அளவும் குறைய நேரிடும். இதற்கு வயிற்றில் இருக்கும் நாக்குப் பூச்சியும் காரணமாக இருக்கலாம். உணவில் பாகற்காய், சுண்டைக்காய் ஆகிய இரண்டையும் அதிக அளவில் சேர்த்துக்கொண்டால் நாக்குப்பூச்சி தொந்தரவு ஏற்படாது.
சத்து மாவு உருண்டை - கேழ்வரகு, கம்பு, நாட்டுச் சோளம், பொட்டுக்கடலை மற்றும் பயத்தம் பருப்பு ஆகியவற்றால் தயாரிக்கப்படும் சத்து மாவு உருண்டையை மாதத்திற்கு 3 நாள்கள் சாப்பிட வேண்டும். மாதவிடாய் நாள்களில் சாப்பிட்டால் அதிக அளவு பலன் பெறலாம்.
கொண்டைக் கடலை - கருப்பு அல்லது வெள்ளைக் கொண்டைக் கடலையை வாரத்திற்கு 2 முறை சேர்த்துக் கொண்டால் கர்ப்பப்பை ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.
சத்துகள்
பூப்படைந்த முதல் 3 நாட்கள் நாம் தர வேண்டியது என்னவென்றால் வேப்பங்கொழுந்தும் மஞ்சளும்தான். இந்த இரண்டையும் அரைத்து சிறிய நெல்லிக்காய் அளவுக்கு மூன்று நாள்களும் தர வேண்டும். உடலில் இருக்கக் கூடிய கழிவுகள் வெளியேறவும், தொற்றுகள் ஏற்படாமலும் உடலை சுத்தப்படுத்த இந்த உருண்டை மிகவும் உதவும்.
புரதச்சத்து
இரும்புச் சத்து, கால்சியம் சத்து, புரதச் சத்து ஆகிய மூன்றும் தேவைப்படுகிறது. இந்த மூன்றையும் நாம் சம அளவில் தர வேண்டும். எள் உருண்டை பூப்படைந்த பெண்களுக்கு கொடுக்கலாம். இதை முதல் இரு தினங்கள் கொடுக்கலாம். ஒரு வேளை ரத்த போக்கு அதிகமாக இருந்தால் அதை நிறுத்திவிடலாம். எள்ளுடன் பனை வெல்லத்தையும் சேர்த்து நாம் தரும்போது இதில் இருக்கக் கூடிய ஜின்க், இரும்புச் சத்து, கால்சியம் ஆகியவை நாம் கொடுத்தால் அதிக ரத்த போக்கை சீர் செய்ய இது உதவுகிறது.
பனை வெல்லத்தை காய்ச்சி வறுத்த எள்ளுடன் உருண்டை செய்து கொடுக்கலாம். ஒரு சில குழந்தைகளுக்கு உடல் உஷ்ணம் அதிகமாகவே இருக்கும். அந்த சமயத்தில் கற்றாழையை நாம் தர வேண்டும். கற்றாழையில் உள்ள ஜெல்லை நன்றாக கழுவிவிட்டு பனை வெல்லத்துடன் சேர்த்து நாம் மோர் போல் அடித்து தரலாம். மோருடன் இந்த கற்றாழை ஜெல்லை சேர்த்து கொடுக்கலாம்.
இதை கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு உடல் உஷ்ணம் குறைந்து சீரான ரத்த போக்கு ஏற்படும். ஒரு சில குழந்தைகளுக்கு வெள்ளைப்படுதல் இருக்கும். இது அதிகரித்தால் சிறுநீர் தொற்றுநோய் ஏற்பட வாய்ப்புண்டு. இதை சரி செய்ய முள்ளங்கி, சுரக்காய், வெள்ளை பூசணி ஆகியவற்றை சாப்பிட வேண்டும். இதன் மூலம் வெள்ளைப்படுதல் இல்லாமல் உடல் உஷ்ணம் குறைந்து சீரான ஹார்மோன் பேலன்சை தக்க வைத்துக் கொள்ள உதவும். இதனை அவர்களுக்கு ஒவ்வாமை இருக்கும் பட்சத்தில் இதனை எடுத்துக்கொள்ளலாம்.
- நோய்களில் இருந்து நம் உடலை காக்க உணவு முறைகள் அவசியம்.
- வாரத்திற்கு ஒரு முறையாவது உண்ணாவிரதம் இருப்பது நல்லது.
மனிதனுக்கு அடிப்படையான ஆதாரம், உணவு. சித்த மருத்துவ முறைப்படி வாதம், பித்தம் மற்றும் கபம் என்ற மூன்று கூறுகளும், அதேமாதிரி ஏழு உடல் கூறுகளும் எப்பொழுதும் சமநிலையில் இருக்க வேண்டும். உணவு தான் நம் உடலுக்கு ஆற்றலை கொடுப்பதோடு மலம், சிறுநீர் மற்றும் வியர்வை போன்ற கழிவுப் பொருளாகவும் மாறுகிறது. இந்த செயல்பாட்டில் எப்பொழுதும் சமநிலை இருந்தால் நாம் ஆரோக்கியமாக வாழ முடியும். இந்த சமநிலை மாறு பட்டால் உடல்நிலை நோய்களை உருவாக்க ஆரம்பித்து விடும். எனவே நோய்களில் இருந்து நம் உடலை காக்க உணவு முறைகள் அவசியம்.
உணவு நன்றாக செரிமானம் அடைய வேண்டும் என்றால் வயிற்றில் பாதி பகுதியை காலியாக விட்டு விட வேண்டும். அதேபோல் வாரத்திற்கு ஒரு முறையாவது உண்ணாவிரதம் இருப்பது அல்லது ஒரு நாளைக்கு ஒரு முறையாவது உணவு சாப்பிடுவது செரிமான அமைப்புக்கு நல்லது. இது அஜீரணத்தை குறைக்கிறது.
பழங்கள், நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள், காய்கறிகள், தானியங்கள், பருப்பு வகைகள், மீன், இறைச்சி போன்றவை நமது உணவின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். மணி சம்பா போன்ற அரிசி வகைகள் நீரிழிவு நோயாளிகளுக்கும், ஜீரக சம்பா மற்றும் குந்திரமணி சம்பா வாத நோய்களுக்கும் நல்லது. அரிசி, கோதுமை, ஓட்ஸ் ஆகியவற்றில் இருந்து தயாரிக்கப்படும் கூழ்கள் மிகவும் நல்லது.
சோயா, காலிஃபிளவர், பட்டாணி பருப்புகள், கிரீன் டீ போன்றவை மூட்டு அழற்சியை போக்குகிறது. இதயம், செரிமான அமைப்பு, முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், வயிற்றுக்கோளாறுகள் உள்ளவர்களுக்கு இது நல்லது.
பாலில் காணப்படும் ஒரு வகை கொழுப்பு கீல்வாதத்தில் காணப்படும் மூட்டுகளில் வீக்கம் மற்றும் சேதத்தை தடுக்கிறது. இதில் காணப்படும் லினோலெனிக் அமிலம் அழற்சியை தடுக்கிறது. இரவில் பால், மோர் குடிப்பது வெப்ப உணர்வு, ரத்த சோகை, வயிற்று வலி போன்றவற்றை நீக்குகிறது. நெய்யை சேர்த்துக் கொள்வதும் நல்லது.
ரத்த சோகை, பலவீனமாக இருத்தல், மனநல கோளாறுகள் போன்றவற்றுக்கு ஆட்டு இறைச்சி நல்லது. மனநல கோளாறுகள் மற்றும் காசநோய்க்கு முயல் இறைச்சியும் பரிந்துரைக்கப்படுகிறது. கோழி முட்டை வாதம் மற்றும் கபம் நோய்களுக்கு நல்லது.
ஏலக்காய் வெப்பத்தை குறைத்து செரிமான சக்தியை அதிகரிக்கிறது. சீரக விதைகள் பசி ஏற்படுத்தும் தன்மையை அதிகரிக்கிறது. இஞ்சி கீல்வாதம் மற்றும் முடக்கு வாதத்திற்கு நல்லது. மேலும் கருப்பை புற்றுநோயை தடுக்கிறது. பூண்டு கொழுப்பின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. பெருங்காயம் குடற் புழுத்தொல்லை மற்றும் அஜீரணத்தை போக்க உதவுகிறது.
வெந்தயம் பித்தத்தை குறைக்கிறது. மிளகு கபம் நோய்களை போக்குகிறது. காது கோளாறுகள், கல்லீரல் நோய்கள், அஜீரணம், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, தோல் நோய்கள் போன்ற பல்வேறு நோய்களை சரி செய்கிறது.
தவிர்க்க வேண்டியவை
டால்டா, வனஸ்பதி போன்ற எண்ணெய் வித்துக்கள் தவிர்க்க வேண்டும். பலாப் பழம் ஆசைக்கு எடுத்துக்கொள்ளலாம். அளவுக்கு மீறி உண்ண வேண்டாம்.
செம்மறி, மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சியையும் தவிர்க்க வேண்டும். கோழியின் தோல் பகுதி வாத நோய்களை ஏற்படுத்துகிறது மற்றும் மூல நோயை அதிகரிக்க செய்கிறது. எனவே இதனை தவிர்ப்பது நல்லது.
- உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க மிகவும் முக்கியமான வழி 'உணவுக்கட்டுப்பாடு' ஆகும்.
- கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது.
தற்போது பெரும்பாலான பெண்களின் கவலையை அதிகரிப்பது அதிக உடல் எடை மற்றும் உடல் பருமன் பிரச்சினைதான். இதனால் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, புற்றுநோய், பித்தப்பை நோய்கள், பெருங்குடல் மற்றும் கருப்பை புற்றுநோய், கீல்வாதம், பக்கவாதம், மனி அழுத்தம் போன்ற பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாக நேரிடும்.
உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க மிகவும் முக்கியமான வழி 'உணவுக்கட்டுப்பாடு' ஆகும். இதை தவறாக புரிந்துகொண்டு சாப்பிடாமல் இருப்பது, காலை உணவை தவிர்ப்பது போன்ற விஷயங்களை பலரும் செய்து வருகின்றனர்.
காலை உணவை தவிர்த்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். இதனால் வளர்சிதை மாற்றத்தில் முரண்பாடு ஏற்படும். இது உடல் பருமன் பிரச்சினை மேலும் அதிகரிப்பதற்கு வழிவகுக்கும், காலை உணவை தவிர்ப்பதால் பசியைக் கட்டுப்படுத்த முடியாமல் நொறுக்குத்தீனிகள் மீது கவனம் செல்லும், மதிய உணவை அளவுக்கு அதிகமாக சாப்பிட நேரிடும்.
முதலில் எந்தெந்த உணவுகள் உடல் பருமனை ஏற்படுத்தும் என்று தெரிந்துகொண்டு அவற்றை தவிர்க்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிர்பானங்கள். துரித உணவுகள், சர்க்கரை மற்றும் கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது.
நமது உடலுக்கு தேவையான கார்போஹைட்ரேட், புரதச்சத்து. வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள் ஆகியவை சரிவிகிதத்தில் கலந்திருக்கும் உணவுமுறையை பின்பற்ற வேண்டும். பெண்களின் ஆரோக்கியத்திற்கு கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் 'டி' மற்றும் பி காம்ப்ளக்ஸ் போன்ற சத்துக்கள் அவசியமானதாகும் இவை நிறைந்த உணவுகளை தினசரி உணவுப் பட்டியவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
காலை உணவாக முழு தானியங்கள் பழங்கள், புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடலாம். மதிய மற்றும் இரவு உணவாக கோழி இறைச்சி அல்லது மீன், வேகவைத்த காய்கதிகள் போன்றவற்றை சாப்பிடுவது நல்லது. நொறுக்குத் தீனிகளுக்கு பதிலாக பழங்களை சாப்பிடலாம். தினமும் போதுமான அளவு தண்ணிர் குடிக்க வேண்டும். உணவுக் கட்டுப்பாட்டை பின்பற்றுவதோடு சீரான தூக்கமும் முக்கியமானது. இவற்றோடு நடைப்பயிற்சி போன்ற மிதமான உடற்பயிற்சிகளையும் செய்துவந்தால் உடல் எடை எளிதாக குறையும்.
- பொதுவாக உடல் எடையை குறைப்பது என்பது மிகவும் கடினமான விஷயம்.
- முறையான உடற்பயிற்சியின் மூலமே இதனை குறைக்க முடியும்.
பொதுவாக உடல் எடையை குறைப்பது என்பது மிகவும் கடினமான விஷயம். ஒருதடவை உடல் எடை அதிகரித்துவிட்டால் அதனை குறைப்பது கடினம் தான். அப்படி முழு உடல் எடையை குறைப்பதே அவ்வளவு கடினம் என்றால் உடலில் உள்ள ஒரு பாகத்தின் எடையை குறைப்பது என்பது அவ்வளவு சாதாரணமானதல்ல.
முறையான உடற்பயிற்சியின் மூலமே இதனை குறைக்க முடியும். ஒரு பயிற்சியை செய்வதற்கு முன்பு நாம் அதனை கடைசிவரைக்கும் கடைபிடிக்க வேண்டும். ஆனால் நாளாக நாளாக நமக்கு ஒரு சோம்பேறித்தனம் வந்திடுகிறது. இதனால் அது நமக்கு கைகொடுக்க முடியாமல் போய்விடுகிறது.
இந்த தொடை சதை என்பது நம் உடலில் உள்ள ஒரு பகுதிதான். இதில் சிலருக்கு இயற்கையாகவே அமைந்திருக்கும். அதாவது குடும்ப அமைப்பாகவோ கூட இருக்கலாம். இது ஒன்றுடன் ஒன்று உரசுவதால் அவர்கள் நடப்பதற்கே மிகவும் பயப்படுவார்கள். அதனால் அதை குறைப்பதற்கு முதலில் என்ன வழி என்றால் உணவு முறைதான் இதற்கு சிறந்த தீர்வு. உணவுமுறைகளால் மட்டுமே இதனை கட்டுப்படுத்த முடியும்.
முறையான உணவு பழக்கவழக்கங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். உப்பு அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும். காரம் அதிகமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. வறுத்தது, பொறித்தது, மசாலா பொருட்கள் ஆகியவற்றை தவிர்த்துவிட வேண்டும். அதிகமாக காய்கறிகள், கீரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதன்பிறகு முக்கியமான விஷயம் என்னவென்றால் உடற்பயிற்சிகள் தான். இந்த தொடை தசைகள் மிகவும் பெரியதாக இருக்கிறது என்றால் அதற்கென்று கொடுக்கப்பட்டுள்ள உடற்பயிற்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதற்கு ஸ்கிப்பிங், சைக்கிளிங் ஆகியவற்றின் மூலம் இந்த தசைகளை குறைக்க முடியும்.
தசைகளை இறுகச்செய்யக்கூடிய யோகாசனங்களான படுத்துக்கொண்டே சைக்கிளிங் செய்வது, பட்டர்பிளை எக்சசைஸ். இதில் பட்டர்பிளை எக்சசைஸ் தொடையில் உள்ள தசைகளை இறுகச்செய்வதற்கு மிகவும் ஏற்றது. அல்லது சூரிய நமஸ்காரம் செய்யலாம். அல்லது இதற்கென்றே பிரத்தியேகமாக இருக்கக்கூடிய உடற்பயிற்சி என்னவென்றால் ஸ்குவாட். இந்த ஸ்குவாடை முறைப்படி செய்து வந்தால் நிச்சயமாக தசைகள் சுருங்க ஆரம்பிக்கும்.
ஒரு சேரில் கையை நீட்டி அமர்ந்து இருப்பதுபோல் சேரே இல்லாமல் அமர்ந்த நிலையில் கைகளை நீட்டி அமர்ந்து இருப்பது ஸ்குவாட். இந்த பயிற்சியை ஆரம்பத்தில் எடுப்பது கடினமாக தான் இருக்கும். ஆரம்பத்தில் கால்கள் மிகவும் வலியாக இருக்கும். எனவே கொஞ்சம் கொஞ்சமாக பயிற்சி செய்ய வேண்டும். இதுபோன்ற உடற்பயிற்சிகளின் மூலம் இந்த தொடை தசைகளை குறைக்க முடியும். நல்ல சாப்பாடு, நல்ல உடற்பயிற்சியும் தான் தொடையில் உள்ள தசையினை குறைக்க ஒரே வழி.
- காலைநேரங்களில் பொதுவாக எல்லோருக்கும் பித்தம் அதிகமாக இருக்கும்.
- ஆவாரை கஷாயம் மிகவும் நம் உடலுக்கு முக்கியமானது.
காலைநேரங்களில் பொதுவாக எல்லோருக்கும் பித்தம் அதிகமாக இருக்கும். எனவே பித்தத்தை குறைக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் நாம் அதற்கு நேர்மாறாக பித்தத்தை அதிகரிக்கும் காபியை காலைநேரங்களில் அதிகம் எடுத்துக்கொள்கிறோம்.
விருப்பமான உணவுகள், மசாலா உணவுகள் பேன்றவற்றை சாப்பிடலமா சாப்பிட்டால் ஜீரணமாகுமா நெஞ்சு கறிக்குமா எதுக்களித்துக்கெண்டே இருக்குமா இதுபோன்ற கேள்விகளுக்கெல்லாம் முக்கிய காரணமாக விளங்குவது பித்தம்.
காலையில் சாப்பிடக்கூடிய கஷாயம் பித்தத்தை குறைப்பதாக இருந்தால் அது சிறப்பு. கரிசலாங்கன்னி, மொசுமொசக்கை, திரிகடுகம், ஆவாரம்பூ கசாயம். நெல்லிக்காய் குடிநீர் இந்த வகையான கஷாயங்களை காலையில் குடித்து வந்தால் பித்தம் குறையும்.
உணவுமுறைகள்
ஆவாரை கஷாயம் மிகவும் நம் உடலுக்கு முக்கியமானது. அவாரம்பூ குடிநீர் உடலுக்கு குளிர்ச்சியூட்டுகிறது. பித்தம் அதிகரிப்பதனால் வரக்கூடிய முதல் நோய் சர்க்கரை நோய். பித்தம் அதிகரித்து இருக்கும் போது கபம் அதிகரிப்பதால் சர்க்கரை நோய் வரும் வாய்ப்புகள் அதிகம். ஆவாரம்பூ தேநீர் குடித்து வருபவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு இல்லை.
இஞ்சித் துண்டை தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தெளிந்து ஆயுள் பெருகும். இஞ்சிச் சாறு, வெங்காயச் சாறு, தேன் கலந்து குடித்தால் பித்த மயக்கம் தீரும்.
பழுத்த மாம்பழத்தை சாறு பிழிந்து அந்த சாறை அடுப்பில் லேசாக சூடேற்றி பின் ஆறவைத்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும். எலுமிச்சை சாதம் வாரத்தில் மூன்று நாள் காலையில் சாப்பிட்டால் பித்தத்தை தணிக்கும்.
ரோஜாப்பூ கஷாயம் பால் சர்க்கரை கூட்டி சாப்பிட்டால் பித்த நீர் மலத்துடன் வெளியேறும். பொன்னாவரை வேர், சுக்கு, மிளகு, சீரகம் கஷாயம் குடித்தால் பித்தபாண்டு தீரும்.
விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டு வந்தால் பித்தத்தை குறைக்கலாம். அகத்திக்கீரை சாப்பிட்டு வந்தால் பித்தக்கோளாறுகள் அகலும். பனங்கிழங்கு சாப்பிட்டால் பித்தம் நீக்கி உடல் பலம் பெருகும்.
கமலா பழம் (ஆரஞ்சு) சாப்பிட்டால் உடல் உஷ்ணத்தை தணிக்கும். நத்தைசூரி விதையை வறுத்து பொடித்து காய்ச்சி கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர கல்லடைப்பு தீரும்.
எலுமிச்சை இலையை மோரில் ஊறவைத்து அந்த மோரை உணவில் பயன்படுத்தி வந்தால் பித்த சூடு தணியும். அரச மரக்குச்சியை சிறு துண்டுகளாக வெட்டி சட்டியில் போட்டு காய்ச்சி ஆறவைத்து, அந்த நீரில் தேன் கலந்து குடித்தால் ரத்தத்தில் உள்ள பித்தம் குறையும்.
- யூரிக் அமிலம் என்பது பியூரின்களின் சிதைவால் உடல் உற்பத்தி செய்யும் ஒரு கழிவாகும்.
- யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிப்பதால் பல்வேறு நோய்கள் உருவாகும்.
யூரிக் அமிலம் என்பது பியூரின்களின் சிதைவால் உடல் உற்பத்தி செய்யும் ஒரு கழிவாகும். இந்த யூரிக் அமிலத்தின் அளவு உடலில் அதிகரிப்பதால் பல்வேறு நோய்கள் உருவாகும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.
* உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிப்பதால் ஹைப்பர்யூரிசிமியா என்ற நிலை ஏற்படும்.
* யூரிக் அமிலம் அதிகரிப்பதன் பொதுவான அறிகுறிகளில் கீல்வாதம் முக்கியமான ஒன்று.
* இது மூட்டுகளில் வலி, சிவந்து போவது மற்றும் விறைப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும் ஒரு மூட்டுவலி.
* யூரிக் அமிலம் உடலில் அதிகரித்தால் சிறுநீரகத்தில் கல் போன்ற பிரச்சினைகள் உருவாகும்.
* மேலும் வயிற்று வலி, சிறுநீர் கழிப்பதில் சிரமம், காய்ச்சல் போன்றவையும் யூரிக் அமில அதிகரிப்பின் விளைவுகளாக இருக்கலாம். மருத்துவர்கள் ரத்தத்தில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவை கணக்கிட சில சோதனைகளை செய்கின்றனர்.
* யூரிக் அமில அளவின் அடிப்படையில் மருந்துகள், உணவு முறை, தினசரி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்
* யூரிக் அமில அதிகரிப்பு குறித்த சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைக்கு மருத்துவ நிபுணரை அணுகுவது சிறந்தது.
- அதிக ஆயுளுடன் மக்கள் வாழும் நாடுகளின் பட்டியலில் ஜப்பான் 3-வது இடம்.
- ஜப்பானிய மக்களின் சராசரி ஆயுட்காலம் 83 ஆண்டுகள்.
உலக அளவில் அதிக ஆயுளுடன் மக்கள் வாழும் நாடுகளின் பட்டியலில் ஜப்பான் 3-வது இடத்தில் உள்ளது. ஐ.நா.வின் மக்கள் தொகை கணக்கெடுப்பு பிரிவின் மதிப்பீடுகளின்படி ஜப்பானிய மக்களின் சராசரி ஆயுட்காலம் 83 ஆண்டுகள். அங்கு வசிக்கும் ௧௪௫௦ பேரில் ஒருவர் 100 வயதுக்கு மேற்பட்டவராக இருக்கிறார் என்பதை அந்நாட்டு சுகாதார அமைச்சகமும் உறுதிப்படுத்தியுள்ளது.
ஜப்பானியர்கள்தான் உலகிலேயே கட்டுக்கோப்பான உடல்வாகுவுடன் கூடிய ஆரோக்கியமான மக்களாக அறியப்படுகிறார்கள். அதன் பின்னணி ரகசியம் என்ன தெரியுமா? உடற்பயிற்சியும், உணவுப்பழக்கமும்தான். மற்ற நாட்டவர்களிடம் இருந்து வேறுபடும். அவர்களின் வாழ்க்கை முறை பற்றியும், அவர்களை நீண்ட காலம் வாழ வைக்கும் பழக்கவழக்கங்கள் பற்றியும் பார்ப்போம்.
கடல் உணவுகளும், இறைச்சி வகைகளும் ஜப்பானியர்களின் உணவு பட்டியலில் முக்கிய அங்கம் வகிக்கின்றன. அதே அளவுக்கு காய்கறிகளையும் விரும்பி சாப்பிடுகிறார்கள். அதிலும் பூமிக்கு அடியில் விளையும் வேர் காய்கறிகள்தான் அவர்களின் தேர்வாக இருக்கிறது. காய்கறிகள் மீதான அவர்களின் நாட்டம் ஆரோக்கியத்தை பேணுவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
கராத்தே, டேக் வாண்டோ, ஜூடோ, அக்கிடோ போன்ற தற்காப்புக் கலைகளின் பிறப்பிடமாக ஜப்பான் அறியப்படுகிறது. அந்த கலைகளின் முக்கியத்துவத்தை ஜப்பானியர்கள் ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்படுகிறார்கள். தற்காப்பு கலை வடிவில் மூதாதையர்கள் கடைப்பிடித்த உடற்பயிற்சி பழக்கவழக்கங்களை இன்றைய தலைமுறையினர் தவறாமல் பின்பற்றுகிறார்கள்.
உடலை வலுவாக்கும் பயிற்சிகளில் கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள். ஜப்பானில் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் டேக் வாண்டோ பயிற்சி பெற்றுள்ளனர் என்று ஒரு ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. அந்த அளவுக்கு அவர்களின் ஆரோக்கியமான வாழ்க்கை முறையில் உடற்பயிற்சி பெரும் பங்கு வகிக்கிறது.
ஜப்பானியர்கள் 5 வகையான உணவு தயாரிக்கும் முறைகளை பின்பற்றுகிறார்கள். முதல் முறைக்கு 'நமோ' என்று பெயர். அதற்கு பச்சையாக உண்பது என்று பொருள். சில காய்கறிகள், உணவு பதார்த்தங்களை பச்சையாக சாப்பிடும் வழக்கத்தை தொடர்கிறார்கள். இரண்டாவது முறை 'நிரு' எனப்படுகிறது. இது உணவு பொருட்களை துல்லியமாக சமைக்கும் சமையல் கலையாகும்.
உணவை சரியான பதத்தில் வேகவைத்து சுவையை கூட்டுகிறார்கள். அடுத்து, வறுத்தல் முறையை 'யாகு' என்று குறிப்பிடுகிறார்கள். கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றியோ அல்லது சிறு தீயில் நேரடியாக உணவு பொருட்களை வறுத்தெடுத்தோ ருசிக்கிறார்கள். நான்காவது முறையான 'மூசு' நீராவி மூலம் சமைக்கும் செயல்முறையை கொண்டது.
ஐந்தாவது முறைக்கு 'அஜெரு' என்று பெயர். இது அதிக வெப்பநிலையில் உணவு பொருட்களை வறுத்தெடுக்கும் முறையாகும். இந்த உணவுப்பழக்கங்கள் உடல் எடையை அதிகரிக்கச் செய்யாமல் கட்டுடல் அழகை பேண வழிவகை செய்கின்றன.
ஜப்பானியர்கள் கிரீன் டீ பருகும் பழக்கத்தை தவறாமல் பின்பற்றுகிறார்கள். காலையிலும், மதிய உணவுக்கு, முன்னும் பின்னும் அவர்களின் விருப்பமான பானமாக இது பரிமாறப்படுகிறது.
ஜப்பானியர்கள் தங்கள் உணவில் சால்மன், கானாங்கெளுத்தி, மத்தி போன்ற மீன்களை தவறாமல் சேர்த்துக்கொள்கிறார்கள். அவை புரதம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை.