search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DMK General Meeting"

    • அப்புவிளை பஞ்சாயத்து காமராஜர் திடலில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
    • திராவிட முன்னேற்ற கழக ஆட்சியின் திராவிட மாடல் ஆட்சி உங்களுக்கு புரிகிறது. ஆனால் கவர்னருக்கு புரியவில்லை.

    திசையன்விளை,மே.11-

    திசையன்விளை அருகே உள்ள அப்புவிளை பஞ்சாயத்து காமராஜர் திடலில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. ராதாபுரம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் நடந்த கூட்டத்திற்கு ராதாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளரும், மாவட்ட பஞ்சாயத்து தலைவருமான வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் தலைமை தாங்கினார்.

    அமைச்சர் ராஜகண்ணப்பன்

    ராதாபுரம் யூனியன் துணைத்தலைவர் இளையபெருமாள் மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் சித்திக், மாவட்ட முன்னாள் பிரதிநிதி ஐ.ஆர். ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராதாபுரம் யூனியன் பஞ்சாயத்து தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் அனிதா பிரின்ஸ் வரவேற்று பேசினார்.

    சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிற்படு த்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேசியதாவது:-

    தி.மு.க. ஆட்சி அனைத்து சமுதாய மக்களும் ஒன்றுபட்டு இணைந்து கலைஞருக்கு பிறகு இவர்தான் தகுதியான தலைவர் என முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினை தேர்வு செய்துள்ளனர். திராவிட முன்னேற்ற கழக ஆட்சியின் திராவிட மாடல் ஆட்சி உங்களுக்கு புரிகிறது. ஆனால் கவர்னருக்கு புரியவில்லை.

    திராவிட மாடல் ஆட்சி

    எல்லோரும் எல்லாம் பெற வேண்டும் என்பது தான் திராவிட மாடல் ஆட்சி. கூட்டணி தர்ம த்தை மதிப்பவர் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின். அதனால் தான் தொழிலாளர் சட்டத்தை வாபஸ் பெற்றார். அ.தி.மு.க. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவோடு காலாவதியாகி விட்டது. இனி தி.மு.க. தான் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும். அண்ணா மலைக்கும், கவர்னர் ரவிக்கும் அரசியல் தெரியாது. அவர்கள் முன்னாள் போலீஸ் அதிகாரிகள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் அப்புவிளை பஞ்சாயத்து தலைவர் சாந்தா மகேஷ்வரன், மாவட்ட விவசாய அணி செயலாளர் நாகமணி, மார்த்தாண்டம், மாவட்ட பிரதிநிதி சமுகை முரளி, ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, திசையன்விளை நகர இளைஞரணி அமைப்பாளர் நெல்சன் ராஜா, உவரி பஞ்சாயத்து முன்னாள் தலைவர் எஸ்.வி. அந்தோணி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் எம்.என். கண்ணன் நன்றி கூறினார்.

    • தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.
    • திருவேடகம் நீலமேகம், ஒன்றிய இளைஞரணி பால்கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே உள்ள முள்ளிப்பள்ளத்தில் தி.மு.க. கிளை சார்பில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் சேகர், மாநில பொதுக்குழு ஸ்ரீதர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் கேபிள்ராஜா வரவேற்றார். வெங்கடேசன் எம்.எல்.ஏ., மாவட்ட அவைத்தலைவர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    பேரூராட்சி சேர்மன்கள் ஜெயராமன், பால்பாண்டி, பேரூர் செயலாளர் சத்தியபிரகாஷ், நகர துணைசெயலாளர் ஸ்டாலின், பொருளாளர் கண்ணன், அண்ணாதுரை, இளைஞரணி வெற்றிசெல்வம், ஊராட்சி தலைவர்கள் ஆனந்தன், சிறுமணி, சகுபர் சாதிக், ஒன்றிய கவுன்சிலர்கள் சுப்பிரமணி, கோகிலா சரவணன், கார்த்திகா ஞானசேகரன், ரேகா வீரபாண்டியன், விவசாய அணி முருகன் மற்றும் ராஜாராம், ராஜா, பெரியகருப்பன், திருவேடகம் நீலமேகம், ஒன்றிய இளைஞரணி பால்கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    தமிழக அரசுக்கு எதிராக வழக்குகளை தொடுக்க தி.மு.க. வக்கீல்கள் செலவு மற்றும் கோர்ட்டு வகைக்காக ரூ.11 கோடிவரை செலவழித்துள்ளதாக பொதுக்குழுவில் தாக்கல் செய்யப்பட்ட கணக்கு தணிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #DMK #DMKGeneralMeeting
    சென்னை:

    தமிழக அரசுக்கு எதிராக தி.மு.க. பல்வேறு வழக்குகளை கோர்ட்டில் தொடர்ந்து இருந்தது.

    அமைச்சர், போலீஸ் உயர் அதிகாரிகள் தொடர்புடைய குட்கா ஊழல் வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க கோரி வழக்கு தொடர்ந்தது.

    எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்த துணை முதல்-மந்திரி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் 10 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு தொடர்ந்தது. இது தவிர தமிழக அரசுக்கு எதிராக தி.மு.க. பல்வேறு வழக்குகளை கோர்ட்டில் தொடுத்தது.

    இந்த நிலையில் தமிழக அரசுக்கு எதிராக வழக்குகளை தொடுக்க தி.மு.க. வக்கீல்கள் செலவு மற்றும் கோர்ட்டு வகைக்காக ரூ.11 கோடிவரை செலவழித்துள்ளது. தி.மு.க. பொதுக்குழுவில் தாக்கல் செய்யப்பட்ட கணக்கு தணிக்கையில் இதுபற்றி தெரிவிக்கப்பட்டுள்ளதாக தி.மு.க. கணக்கு தணிக்கை குழு உறுப்பினர் தெரிவித்தார்.


    ஆர்.கே. நகர் தேர்தல் பிரசாரத்துக்கு ரூ.10 லட்சம் செலவழிக்கப்பட்டது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல தி.மு.க.வுக்கு வந்த பணம் விவரம், செலவழித்த மற்ற விவரம் ஆகியவை பற்றியும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    ஆண்டு தோறும் கணக்கு தணிக்கை தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டு தேர்தல் கமி‌ஷனிடம் அனுப்பப்படும். பின்னர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யப்படும். #DMK #DMKGeneralMeeting
    தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தி.மு.க. பொதுக்குழுவை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. #DMK
    சென்னை:

    அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழுவையும், 2 முறை செயற்குழுவையும் கூட்ட வேண்டும் என்று தேர்தல் ஆணைய விதி இருக்கிறது. அந்த வகையில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கத்தில் தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டு ஜனவரி மாதம் பொதுக்குழு கூடியிருக்க வேண்டும்.

    ஆனால், தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் வீட்டில் ஓய்வெடுத்து வந்த நிலையில், பொதுக்குழுவை கூட்ட முடியவில்லை. இது தொடர்பாக, தேர்தல் ஆணையத்துக்கும் தி.மு.க. சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தி.மு.க. பொதுக்குழுவை கூட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் இதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. வழக்கமாக, இந்த மண்டபத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு, செயற்குழு கூட்டங்கள் தான் ஆண்டுதோறும் நடைபெற்று வந்திருக்கின்றன. தே.மு.தி.க.வின் பொதுக் குழுவும் நடைபெற்று இருக்கிறது.

    ஆனால், தி.மு.க. பொதுக்குழு கூட்டம் இங்கு நடைபெறுவது இதுதான் முதல் முறையாகும். இதற்கு முன்பு அண்ணா அறிவாலயத்தில் தான் தி.மு.க. பொதுக்குழு, செயற்குழு கூட்டங்கள் நடைபெற்று வந்திருக்கின்றன.


    தற்போது, தி.மு.க.வில் அணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், பொதுக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையும் கூடியுள்ளது. அதிகம் பேர் அமரும் வகையில் அண்ணா அறிவாலயத்தில் இடவசதி இல்லாததால் தான், இந்தமுறை வெளியேயுள்ள திருமண மண்டபத்தில் பொதுக்குழுவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    ஆனால், தற்போது தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தி.மு.க. பொதுக்குழுவை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட திருமண மண்டப நிர்வாகத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மாற்று தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. #DMK
    தி.மு.க. செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வான பிறகு முதல் முறையாக பொதுக்குழு ஆகஸ்டு 19-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கூடுகிறது. #DMK #MKStalin
    சென்னை:

    தேசிய மற்றும் மாநில அளவில் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு அரசியல் கட்சியாக இருந்தாலும் ஆண்டுக்கு ஒருமுறை பொதுக்குழுவையும், 2 முறை செயற்குழுவையும் கூட்ட வேண்டும் என்பது தேர்தல் ஆணைய விதியாகும். அந்த வகையில், கடந்த ஆண்டு (2017) ஜனவரி மாதம் தி.மு.க. பொதுக்குழு கூட்டப்பட்டது. தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலிவுற்றிருந்ததால், இந்தக் கூட்டத்தில் கட்சியின் செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.



    அதன்பிறகு, இந்த ஆண்டு ஜனவரி மாதம் தி.மு.க. பொதுக்குழு கூட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலையை காரணம்காட்டி தேர்தல் ஆணையத்தில் அவகாசம் கேட்கப்பட்டது. இதனால், கடந்த 6 மாத காலமாக தி.மு.க. பொதுக்குழு கூட்டப்படவில்லை.

    இந்த நிலையில், அடுத்த மாதம் (ஆகஸ்டு) 19-ந் தேதி தி.மு.க. பொதுக்குழு கூட இருக்கிறது. இதுவரை நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழு, செயற்குழு கூட்டங்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில்தான் நடைபெற்று வந்திருக்கிறது. ஆனால், இந்த முறை அ.தி.மு.க.வுக்கு ராசியான சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற இருக்கிறது.

    முதலில், ஆகஸ்டு மாதம் 28-ந் தேதி தி.மு.க. பொதுக்குழுவை கூட்ட திட்டமிட்டு, இந்த மண்டபத்திற்கு அட்வான்ஸ் கொடுக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு, 19-ந் தேதிக்கு அது மாற்றப்பட்டது. இந்த பொதுக்குழு கூட்டத்தில், தி.மு.க. மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 4 ஆயிரம் பேர் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

    எனவே, ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. வருகை தரும் தி.மு.க. நிர்வாகிகள் அனைவருக்கும் மதிய உணவு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட உள்ளன. பொதுக்குழு கூட்டத்தில் என்னென்ன தீர்மானங்களை நிறைவேற்றுவது? என்பது குறித்து மூத்த நிர்வாகிகளுடன் கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    இந்தக் கூட்டத்தில், தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஆனால், அதுபோன்ற எந்த முடிவும் இந்த பொதுக்குழுவில் எடுக்கப்படாது என்று தி.மு.க. வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. #DMK #MKStalin
    ×