search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DMK Youth team"

    • சட்டசபை பொதுத் தேர்தலுக்கு இன்னும் 17 மாதங்கள் தான் உள்ளன.
    • 700-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர்.

    சென்னை:

    2026-ம் ஆண்டு நடைபெறும் தமிழக சட்டசபை பொதுத் தேர்தலுக்கு இன்னும் 17 மாதங்கள் தான் உள்ளன.

    இந்த தேர்தலுக்கு வியூகம் வகுக்க தி.மு.க.வில் தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது.

    இந்த குழுவில் துணை முதலமைச்சரான இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு ஆகி யோர் இடம் பெற்றுள்ளனர்.

    இவர்கள் தி.மு.க.வில் உள்ள ஒவ்வொரு அணி வாரியாக மாநில நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்து ஆலோசனை நடத்தி வந்தனர். இதில் எடுக்கப்படும் விவரங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் சட்டமன்ற தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளை பொறுப்பாளர்களாக நியமித்தது போல் இப்போது சட்டசபை பொதுத் தேர்தலுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆனதும் ஒரு வாரத்தில் பொறுப்பாளர்கள் நியமனம் அறிவிப்பு வெளியாகி இருந்தது.

    அதில் நாடாளுமன்ற தேர்தலில் பணியாற்றிய பொறுப்பாளர்களில் பலரை மாற்றி விட்டு அந்த தொகுதிகளுக்கு வேறு புதிய நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    அதில் இளைஞரணி மாநில துணைச் செயலாளர்கள் 7 பேருக்கு தொகுதி பொறுப்பாளர்கள் பதவி யும், இளைஞரணி அமைப் பாளர்கள் 22 பேருக்கு தொகுதி பொறுப்பாளர்கள் பதவியும் கொடுக்கப்பட்டு உள்ளது.

    இது தவிர பெண்களுக்கும் தொகுதி பொறுப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. பல்லாவரம் சட்டமன்ற தொகுதியை மேற்பார்வையிட விருகம் பாக்கம் மாமன்ற உறுப்பினர் ரத்னா லோகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

    ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு முன்னாள் எம்.எல்.ஏ. ரவிச்சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதே போல் 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நிய மிக்கப்பட்டுள்ளனர்.

    இவர்கள் தொகுதியில் என்ன நடக்கிறது என்பதை கட்சித் தலைமைக்கு அவ்வப்போது தெரிவிக்க வேண்டும்.

    வாக்குச் சாவடி வாரியாக நியமிக்கப்பட்டுள்ள பி. எல்.ஏ.2 நிர்வாகிகளும், அவர்களுடன் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளும் சரிவர பணியாற்றுகிறார்களா? என்பதையும் ஆய்வு செய்து வருகின்றனர். இளைஞரணி உறுப்பினர் சேர்க்கையையும் கவனிக்கின்றனர்.

    இவை அனைத்தும் உதய நிதியின் ஆலோசனையின் பேரில் நடைபெற்று வருகிறது.

    இப்போது நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்களில் பலர் வயதில் குறைந்தவர்களாக துடிப்பானவர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளதால் கட்சிப் பணிகள் வேகப்படுத்தப்பட்டு வருகின்றன.

    இதன் தொடர்ச்சியாக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இப்போது ஒவ்வொரு மாவட்டமாக சென்று இளைஞரணி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை வழங்கி உள்ளார்.

    அந்த வகையில் சேலத்தில் இன்று மாலை கருப்பூரில் உள்ள தீர்த்தமலை கவுண்டர் திருமண மண்டபத்தில் மாநில அளவிலான தி.மு.க. இளைஞர் அணி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு உதயநிதி ஸ்டாலின் பேசுகிறார்.

    இந்த கூட்டத்தில் மாநில துணை செயலாளர்கள் ஜோயல், சீனிவாசன், இன்பாரகு, இளையராஜா, அப்துல்மாலிக், கோல்டு பிரகாஷ், பிரபு, ராஜா, ஆனந்தகுமார் மற்றும் மாவட்ட, மாநகர இளை ஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உள்பட 700-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர்.

    துணை முதல்-அமைச்ச ரான பின்னர் முதன்முத லாக இன்று நடைபெறும் இந்த இளைஞரணி கூட்டம் "களத்தில் இளைஞர் அணி" என்ற நோக்கில் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் வகையில் இளைஞரணியின் செயல் பாடுகளை தற்போதே தீவிரப்படுத்தும் வகையில் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. இதனால் தமிழகம் முழுவதும் இருந்து இளைஞ ரணியினர் ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர்.

    மேலும் தமிழகம் முழு வதும் இளைஞர்களை கவரும் வகையில், திறக்கப் படாமல் உள்ள கலைஞர் நூலகங்களை திறப்பது, எனது உயிரினும் மேலான இறுதிப்போட்டியில் வெல்பவர்களுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பரிசளிப்பு விழா நடத்துவது, இளைஞர் அணியின் மூலம் சமூக வலை தள பயிற்சிகளை சிறப்பாக நடத்தி வாக்கா ளர்களை கவருவது, நகர, பகுதி, பேரூர்களுக்கு திறமையான புதிய நிர்வாகி களை அறிவித்தல் உள்பட பல்வேறு பணிகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவா திக்கப்படுகிறது.

    மேலும் இந்த கூட்டத்தில் சிறப்பு நிகழ்வாக கூட்டத்தில் பங்கேற்கும் ஒவ்வொரு இளைஞரணி நிர்வாகிகளையும் உற்சாகப்படுத்தும் வகையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனிதனியாக போட்டோ எடுத்து கொள்கிறார்.

    இந்த கூட்டத்தில் இளைஞரணி நிர்வாகிகளின் தேர்தல் பணிகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்குவதுடன் பல்வேறு தேர்தல் வியூகங்களையும் உதயநிதி ஸ்டாலின் வெளியிட இருக்கிறார்.

    இளைஞரணி நிர்வாகி கள் ஐ.டி.விங்கில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதுடன் சமூக வலைதள பதிவில் அவ்வப்போது எவ்வாறு பதிவுகள் போட வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்ட உள்ளார்.

    வருகிற சட்டசபை தேர்தலில் இளைஞரணி நிர்வாகிகளுக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்பதால் மூத்த அமைச்சர் பொன்முடி சமீபத்தில் பேசும் போது தேர்தலில் தனக்கு சீட் கிடைக்குமா? கிடைக்காதோ? என்று பேசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மாவட்ட செயலாளர் அமைச்சர் ஆர்.காந்தி அறிக்கை
    • வருகிற 28-ந் தேதி மாலைக்குள் மாவட்ட அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க செயலாளரும், தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சருமான ஆர்.காந்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு முதல் அமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரும், தி.மு.க இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அறிவுறுத்தலின்படி, ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க இளைஞர் அணி ஒன்றிய, நகர,பேரூர் ஆகிய பகுதிகளுக்கு அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    இந்த பொறுப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் விண்ணப்ப படிவங்கள் பெற்று அதை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் வருகிற 28-ந் தேதி (புதன்கிழமை) மாலைக்குள் மாவட்ட அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

    ஒன்றிய, நகர, பேரூர் பொறுப்புகளுக்கு விண்ணப்பிப்போர் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். கல்வி சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை நகல் ஆகியவை இணைத்து, விண்ணப்பத்தில் பாஸ்போர்ட் அளவு வண்ண புகைப்படம் ஒட்டி , விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவர ங்களையும் தெளிவா கவும், முழுமையாகவும் நிரப்ப வேண்டும்.

    ஏற்கனவே இப்பொறுப்புகளில் உள்ள தற்போதைய நிர்வாகிகள் மீண்டும் அப்பொறுப்பிற்கு வர விரும்பினால் அவர்களும் புதிதாக விண்ணப்பிக்க வேண்டியது அவசியம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பாகூர், ஏம்பலம், நெட்டப்பாக்கம் தொகுதிகளின் சார்பில் தி.மு.க இளைஞர் அணி திராவிட மாடல் பயிற்சிப் பாசறை நிகழ்ச்சி பாகூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
    • சிறப்பு விருந்தினர்களாக, தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா எம்.பி. மாநில மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி ஆகியோர் பங்கேற்று, இளைஞர்களுக்கு திராவிட மாடல் குறித்து பயிற்சி அளித்தனர்.

    புதுச்சேரி:

    பாகூர், ஏம்பலம், நெட்டப்பாக்கம் தொகுதிகளின் சார்பில் தி.மு.க இளைஞர் அணி திராவிட மாடல் பயிற்சிப் பாசறை நிகழ்ச்சி பாகூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு, மாநில தி.மு.க. அமைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சிவா தலைமை தாங்கினார்.

    செந்தில்குமார் எம்.எல்.ஏ., வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக, தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா எம்.பி. மாநில மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி ஆகியோர் பங்கேற்று, இளைஞர்களுக்கு திராவிட மாடல் குறித்து பயிற்சி அளித்தனர்.

    இந்நிகழ்ச்சியில், சம்பத் எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சர் எஸ் .பி.சிவக்குமார், பாகூர் தொகுதி தி.மு.க., செயலாளர் பாண்டு அரிக்கிருஷ்ணன், ஏம்பலம் தொகுதி செயலாளர் ரவிச்சந்திரன், நெட்பப்பாக்கம் தொகுதி செயலாளர் வெங்கடாசலபதி, மணவெளி தொகுதி நிர்வாகி சன்.சண்முகம், மாநில இளைஞரணி செயலாளர் காந்தி, பாகூர் பாஸ்கரன், சேகர், ரவிந்திரன், அமிர்தலிங்கம், நெட்டப்பாக்கம் மதி, திருநாவுக்கரசு, ஏம்பலம் ஜெகநாதன், தனபால், பன்னீர், நடராஜன், அருண் உள்ளிட்ட நிர்வாகிகள், மற்றும் இளைஞரணியினர் பலர் கலந்து கொண்டனர்.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளில் 70 சதவீதம் நிறைவேற்றி உள்ளார்
    • தூத்துக்குடி மாவட்டத்தில் பர்னிச்சர் பார்க், டைட்டல் பார்க், ஆயில் நிறுவனம் என 4 பெரிய தொழில் நிறுவனங்கள் அமைய உள்ளன

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட மாநகர தி.மு.க. இளைஞரணி சார்பில் இல்லம் தோறும் இளைஞரணி உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் போல்டன்புரத்தில் மாநகர இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த கப்ரேல்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

    புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர் அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:-

    கலைஞர் வழியில் ஆட்சி செய்யும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளில் 70 சதவீதம் நிறைவேற்றி உள்ளார். தமிழில் கல்வி படித்தால் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என்ற அடிப்படையில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு மூலம் பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் பர்னிச்சர் பார்க், டைட்டல் பார்க், ஆயில் நிறுவனம் என 4 பெரிய தொழில் நிறுவனங்கள் அமைய உள்ளன. அதன் மூலம் படித்த இளைஞர்கள் உட்பட பலருக்கும் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

    கல்வி தரம் உயருவதற்கும், தனியார் கல்வி நிறுவனங்கள் அரசு கூறியுள்ள கருத்துக்களை ஏற்றுத் தான் கல்விக்கட்டணம் பெற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் முதல்-அமைச்சரின் பணிகள் எல்லோராலும் பாராட்டப்படுகின்றன.

    திராவிட மாடல் என்பது எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற தாரக மந்திரத்தை கொண்டதாகும். இதையெல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் தி.மு.க. மீது குற்றம் சுமத்த வேண்டும் என்பதற்காக பேசுகிறார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில், 2 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு தொகுதிக்கு புதிதாக 10 ஆயிரம் பேர் சேர்க்க வேண்டும் என்ற உத்தரவிற்கிணங்க வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம் ஆகிய தொகுதிகளில் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் பலனாக சட்டமன்ற தேர்தலின்போது நல்ல மாற்றம் கிடைத்தது.

    20 மணி நேரம் நாட்டு மக்களுக்காக பணியாற்றி வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனைவரும் துணை நிற்க வேண்டும். மற்ற மாவட்டத்திற்கு தூத்துக்குடி மாவட்டம் முன்னுதாரணமாக செயல்பட வேண்டும் என்றார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், துணை செயலாளர் பிரமிளா, பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதியழகன், துணை அமைப்பாளர் பிரதிப், இலக்கிய அணி துணை அமைப்பாளர் நலம் ராஜேந்திரன், ஆதிதிராவிடர் நல அணி துணை அமைப்பாளர் பெருமாள், மாநகர விவசாய அணி அமைப்பாளர் தேவதாஸ், பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன், மாணவரணி துணை அமைப்பாளர் பால்மாரி, மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் அருண் சுந்தர், செல்வின், கவுன்சிலர்கள் சரவணகுமார், வைதேகி, விஜயலெட்சுமி, கண்ணன், ஜெயசீலி, வட்ட செயலாளர்கள் செல்வராஜ், கங்காராஜேஷ், மூக்கையா, சுரேஷ், வட்ட பிரதிநிதிகள் ரஜினி முருகன், பாஸ்கர் மற்றும் மணி, மகேஸ்வரன்சிங் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னாள் கவுன்சிலரும், வட்ட செயலாளருமான செல்வராஜ் நன்றி கூறினார்.

    • துணை அமைப்பாளர்கள் கோகுல்,சுரேஷ், சிவ சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    • திருப்பூர் வடக்கு மாவட்ட துணைச் செயலாளரும், பொங்கலூர் சேர்மனுமான எஸ்.குமார் தலைமை வகித்தார்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் கள்ளிப்பாளையத்தில் திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி சார்பாக இல்லம் தோறும் இளைஞர் அணிக்கு உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு திருப்பூர் வடக்கு மாவட்ட துணைச் செயலாளரும், பொங்கலூர் சேர்மனுமான எஸ்.குமார் தலைமை வகித்தார். திருப்பூர் வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செ.ராஜசேகரன்,பொங்கலூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பொங்கலூர் மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் லோகு பிரசாத், துணை அமைப்பாளர்கள் கோகுல்,சுரேஷ், சிவ சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரத்தில் தி.மு.க. இளைஞரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • மாணவரணி மாவட்ட அமைப்பாளர் சுரேஷ் நன்றி கூறினார்.

    ராமநாதபுரம்

    அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்ற குழு அளித்துள்ள இந்தி திணிப்பிற்கான பரிந்துரைகளையும், ஒரே பொது நுழைவுத் தேர்வு திட்டத்தையும் மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி ராமநாதபுரம் அரண்மனை அருகே மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் இன்பா ரகு ஏற்பாட்டில் தி.மு.க.இளைஞர் அணி மாணவர் அணி சார்பில் மாவட்ட திமுக செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    பரமக்குடி எம்எல்ஏ முருகேசன், ராமநாதபுரம் நகர செயலாளர், நகர் மன்ற தலைவர் கார்மேகம், நகர் மன்ற துணைத் தலைவர் பிரவீன் தங்கம் முன்னாள் அமைச்சர்கள் சத்தியமூர்த்தி, சுந்தர்ராஜன், முன்னாள் எம்எல்ஏ முருகவேல், முன்னாள் மாவட்ட செயலாளர் திவாகரன், கீழக்கரை நகர் செயலாளர் பஷீர் அகமது, தி.மு.க.இளைஞர் அணி அமைப்பாளர் வழக்கறிஞர் ஹமீது சுல்தான், துணை செயலாளர் ஜெய்னுதீன், நகர் மாணவர் அணி அமைப்பாளர் இப்திகார் ஹசன், கீழக்கரை கவுன்சிலர் சர்ப்ராஸ் நவாஸ், ராமேசுவரம் நகர் செயலாளர் நாசர்கான், ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மத்திய அரசு கண்டித்து ஏராளமானோர் கோஷமிட்டனர். மாணவரணி மாவட்ட அமைப்பாளர் சுரேஷ் நன்றி கூறினார்.

    ×