என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dravida Model"

    • பல்லடத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொலை செய்யப்பட்டனர்.
    • போலி துப்பாக்கிச்சூட்டில் சுட்டுக்கொல்வதற்கு பெயர்தான் திராவிட மாடலா?

    பல்லடம் மூவர் கொலை வழக்கில் செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ளச் சொல்லி பழங்குடியின மக்களை மிரட்டுவதற்கு பெயர்தான் திராவிட மாடலா?" என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள சேமலைக் கவுண்டன்பாளையத்தில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொலை செய்யப்பட்ட கொடூர நிகழ்வில் மூன்று மாதமாக துப்பு துலங்காத காரணத்தால், செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ளச்சொல்லி பழவஞ்சிபாளைத்தைச் சேர்ந்த பழங்குடி மக்களை தமிழ்நாடு காவல்துறை மிரட்டுவது வன்மையான கண்டனத்துக்குரியது.

    தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்ற கடந்த நான்கு ஆண்டுகளில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, கஞ்சா - கள்ளச்சாரய விற்பனை நிகழாத நாட்களே இல்லை என்ற அளவிற்கு சட்டம் ஒழுங்கு முற்று முழுதாக சீரழிந்துள்ளது.

    குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளை பிடிக்கவும் திறனற்றதாக திணறிவரும் திமுக அரசின் காவல்துறை, குற்றம் நடைபெற்றதற்கு பொய்க்காரணம் கற்பிக்கவும், அப்பாவிகளை குற்றவாளிகளாக கட்டமைக்கவும் முயல்வது வெட்கக்கேடானது. திமுக அரசுக்கு ஏற்படும் அவப்பெயரை தடுக்க வேண்டுமென்றால், குற்றங்களை தடுக்கவும், உண்மைக்குற்றவாளிகளை விரைந்து தேடிப்பிடிக்க வேண்டுமே தவிர, குற்றத்தை மூடிமறைக்க முயல்வது காவல்துறையின் செயலற்ற தன்மையையே காட்டுகிறது.

    அப்பாவிகள் மீது கொலைக்குற்றம் சுமத்தி அவர்களை போலி துப்பாக்கிச்சூட்டில் சுட்டுக்கொல்வதற்கு பெயர்தான் திராவிட மாடலா?

    ஜெய்பீம் படம் பார்த்து கலங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்கள், தமது ஆட்சியில் தன்னுடைய நேரடிக்கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை தொடர்ச்சியாக பழங்குடி மக்கள் மீது பொயக்குற்றம் சுமத்தி பழிவாங்கும் கொடுமைகளுக்கு என்ன பதில் கூறப்போகிறார்? இதுதான் இந்தியாவே திரும்பி பார்க்கும் திமுக அரசின் சாதனையா? இதுதான் திராவிடம் கட்டிக்காக்கும் சமூகநீதியா? சமத்துவமா? விளிம்பு நிலை பழங்குடி மக்கள் மீதான இத்தகைய அதிகார வன்முறைகளை திராவிட ஆட்சியாளர்கள் எப்போது கைவிடப் போகிறார்கள்? காவல்துறை மூலம் எதிர்க்கட்சியினர் மீது பொய் வழக்கு புனையவும், அவதூறு பரப்புவும் காட்டும் வேகத்தில், அணுவளவு வேகத்தையாவது மக்களை காப்பதற்கும், குற்றங்களை தடுப்பதற்கும் தமிழ்நாடு காவல்துறை காட்டினால் சட்டம் ஒழுங்கு எப்போதோ சீரடைந்திருக்கும்!

    ஆகவே, திருப்பூர் மாவட்டம், சேமலைக் கவுண்டன்பாளைய மூவர் கொடூர கொலை வழக்கில் உண்மைக் குற்றவாளிகளை கண்டறிந்து தமிழ்நாடு காவல்துறை விரைந்து கைது செய்ய வேண்டுமெனவும், விசாரணை என்ற பெயரில் பழவஞ்சிபாளைத்தைச் சேர்ந்த பழங்குடி மக்களை துன்புறுத்தும் கொடும்போக்கினை திமுக அரசு கைவிட வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்" என்று தெரிவிதித்துள்ளார்.

    • தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
    • தென்காசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திராவிட மாடல் பயிற்சி கலந்தாய்வு கூட்டத்திற்கு தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வழக்கறிஞர் பொ. சிவபத்மநாதன் தலைமை தாங்கினார்.

    தென்காசி:

    தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

    தென்காசி அருகே உள்ள குத்துக்கல்வலசை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தென்காசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திராவிட மாடல் பயிற்சி கலந்தாய்வு கூட்டத்திற்கு தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வழக்கறிஞர் பொ. சிவபத்மநாதன் தலைமை தாங்கினார்.

    தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார் முன்னிலை வகித்தார். தென்காசி மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் இலத்தூர் ஆறுமுகச்சாமி வரவேற்றுப் பேசினார் . இந்த நிகழ்ச்சியில் மாநில சுயாட்சி குறித்து தி.மு.க.மாநில தகவல் தொழில் நுட்ப அணி இணைச் செயலாளர் கோவை லெனின், திராவிட இயக்க வரலாறு குறித்து அயலக தி.மு.க.தொடர்பு இணைச் செயலாளர் எம்.எம்.அப்துல்லா. எம்.பி ஆகியோர் கருத்துரை ஆற்றினார்கள்.

    இக்கூட்டத்தில் தென்காசி நகர தி.மு.க. செயலாளர் ஆர்.சாதிர், மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் எம்.ஏ.எம்.ஷெரீப், ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆர்.எம்.அழகு சுந்தரம், க.சீனித்துரை, எம்.பி.எம்.அன்பழகன், சுரண்டை நகர திமுக செயலாளர் வே.ஜெயபாலன், பேரூர் தி.மு.க. செயலாளர்கள் மேலகரம் இ.சுடலை, குற்றாலம் குட்டி, இலஞ்சி மு.முத்தையா, சுந்தரபாண்டிபுரம் பண்டாரம், மாலை அமைப்பாளர்கள் ஜேசுராஜன், குற்றாலம் இரா.பேச்சி முத்து, உதயநிதி நற்பணி மன்ற துணைச் செயலாளர் சிவ அருணன், வீராணம் சேக் முகமது, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சீவநல்லூர் சாமித்துரை, குற்றாலம் சுரேஷ், கண்ணன், செல்வம், தென்காசி நகர தி.மு.க. நிர்வாகிகள் சி.மணிமாறன், அ.சேக்பரீத், பால்ராஜ், த.ராமராஜ், நா.பாலசுப்பிரமணியன், ரஹ்மத்துல்லா, தொண்டரணி பரமசிவன், உ‌.இசக்கித்துரை, வடகரை ராமர், பழக்கடை கோபால் ராம், சே.தங்கப்பாண்டியன், ராம்துரை, வெங்கடேஷ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த பயிற்சி பாசறை கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்கள் அனைவரும் வெள்ளை நிற சீருடை அணிந்து கலந்து கொண்டனர்.

    முடிவில் தென்காசி மாவட்ட தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் சே. தங்கப் பாண்டியன் நன்றி கூறினார்.

    • காரைக்குடியில் திராவிட மாடல் பயிற்சி கருத்தரங்கம் நடந்தது.
    • இதில் அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்றார்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் காரைக்குடியில் திராவிட மாடல் குறித்த பயிற்சி கருத்தரங்கு கூட்டம் நடந்தது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகனி செந்தில்குமார் வரவேற்றார். அமைச்சரும், மாவட்ட செயலாளருமான கே.ஆர்.பெரியகருப்பன் தலைமை தாங்கினார். திராவிட இயக்க வரலாற்றை எதிர்கால சந்ததியினர் தெரிந்துகொள்ளும் வகையில் நடந்த இந்த கருத்தரங்கில், ''திராவிட இயக்க வரலாறு'' என்ற தலைப்பில் பேராசிரியர் சுப.வீரபாண்டியனும், ''மாநில சுயாட்சி'' என்ற தலைப்பில் மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் கருணாவும் பேசினர்.

    மாவட்ட துணை செயலாளர்கள் சேங்கை மாறன், மணிமுத்து, ஜோன்ஸ்ரூசோ, மாவட்ட பொருளாளர் துரைராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சேதுபதி ராஜா, சிக்கந்தர் பாதுஷா, பொற்கோ, ரவி, காரைக்குடி நகர்மன்ற தலைவர் முத்து துரை, துணை தலைவர் குணசேகரன், சாக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ஆனந்த், பள்ளத்தூர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர். துணை அமைப்பாளர் துஷாந்த் பிரதீப்குமார் நன்றி கூறினார்.

    • தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில் பயிற்சிப் பாசறை நடைபெற்றது.
    • தமிழன் பிரசன்னா, கோவி.லெனின் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திராவிட மாடல் பயிற்சிப் பாசறை நடைபெற்றது.

    கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதி தி.மு.க. இளைஞரணியினருக்கான இப்பயிற்சிப் பாசறை நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சி கோவில்பட்டி சவுபாக்யா திருமண மண்டபத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில் நடைபெற்றது.

    மாநில செய்தித் தொடர்பு இணைச் செயலர் தமிழன் பிரசன்னா, சமூக சிந்தனையாளர் கோவி.லெனின் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர். நகர்மன்றத் தலைவரும், தி.மு.க. நகரச் செயலருமான கா.கருணாநிதி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவி கஸ்தூரி சுப்புராஜ், தி.மு.க. ஒன்றியச் செயலர்கள் பீக்கிலிப்பட்டி வீ.முருகேசன், ராதாகிருஷ்ணன், அ.சுப்பிரமணியன், ஆ.சின்னப்பாண்டியன், தி.மு.க. நிர்வாகிகள் ராமர், ராஜகுரு, சண்முகராஜ், ரமேஷ், நகர இளைஞரணி அமைப்பாளர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×