search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Drinking water pipe"

    • கேரள மாநிலத்திற்கு தினந்தோறும் ஏராளமான கனரக லாரிகளில் கனிம வளங்கள் எடுத்துச்செல்லப்படுகிறது.
    • குழாய் உடைப்பு ஏற்பட்ட இடத்திற்கு மாலை அணிவித்து இறுதிச்சடங்குகள் செய்து எதிர்ப்பை தெரிவித்தனர்.

    கடையம்:

    தென்காசி மாவட்டம் கடையம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து கேரள மாநிலத்திற்கு தினந்தோறும் ஏராளமான கனரக லாரிகளில் கனிம வளங்கள் எடுத்துச்செல்லப்படுகிறது. அந்த லாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவில் கனிம வளங்களை எடுத்துச் செல்வதற்கே அப்பகுதி மக்கள் நாள்தோறும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், விதிகளை பின்பற்றாமல் தொடர்ந்து அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி சென்று வருகின்றனர். இதனை கண்டித்து பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டும் இதுவரை அதற்கு நிரந்தர தீர்வு என்பது இல்லாமல் இருந்து வருகிறது.

    இதற்கிடையே அதிக பாரம் ஏற்றி செல்லும் கனிமவள லாரிகளால் குடிதண்ணீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு குடிதண்ணீர் சாலைகளில் வெளியேறி வீணாகி வருகிறது. கடுமையான கோடையால் மக்கள் தண்ணீரின்றி தவிக்கும் நிலையில் கனிம வள லாரிகளால் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாவதை கண்டித்தும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்தும் கீழக்கடையம் ஊராட்சி மன்ற தலைவரும், அ.தி.மு.க. நிர்வாகியுமான பூமிநாத் தலைமையில் ஏராளமானோர் திரண்டு குடிநீர் குழாய் செத்துவிட்டது எனக் கூறி குழாய் உடைப்பு ஏற்பட்ட இடத்திற்கு மாலை அணிவித்து இறுதிச்சடங்குகள் செய்து எதிர்ப்பை தெரிவித்தனர்.

    இந்த எதிர்ப்பு போராட்ட நிகழ்வில் சமூக ஆர்வலர் கஜேந்திரன், தெற்கு கடையம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மகாலிங்கம், சிவ எழிலரசன், சுப்புக்குட்டி உள்ளிட்டர்கள் கலந்து கொண்டனர்.

    • அம்ருத் திட்டத்தின்கீழ் 16,462 குடிநீா் இணைப்புகள் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது
    • புதிய குடிநீா் இணைப்பு தேவையென்றால் நகராட்சி அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

    வெள்ளக்கோவில்:

    வெள்ளக்கோவில் நகராட்சி பகுதியில் அம்ருத் திட்டத்தின்கீழ் 16,462 குடிநீா் இணைப்புகள் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.நகராட்சியில் அம்ருத் 2.0 திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டு நகா்ப்புற உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    அம்ருத் 2022 - 23 திட்டத்தின் கீழ் ரூ. 36.44 கோடி மதிப்பீட்டில் நெருக்கடி மிகுந்த நகா்ப்புற வசிப்பிட மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் செயல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

    இப்பணிகள் 2024 பிப்ரவரி மாதத்துக்குள் முடிக்கப்படும். 10 புதிய மேல்நிலை குடிநீா் தொட்டிகள், 142.17 கிலோ மீட்டா் நீளத்துக்கு குடிநீா் குழாய் பதிப்பு, 16,462 குடிநீா் குழாய் இணைப்புகள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    புதிய குடிநீா் இணைப்பு தேவையென்றால் நகராட்சி அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். 

    • 80 சதவீத பணிகள் முடிந்த நிலையில் 20 சதவீத பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
    • பொதுமக்கள் தனியார் லாரி மூலம் வரும் தண்ணீரை வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள்.

    கொளத்தூர்:

    சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை நீர் வடிகால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை விரைந்து முடிக்க அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

    பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் மழை நீர்கால்வாய் பணி காரணமாக குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் கலந்து வருகிறது. கால்வாய் பணி இன்னும் முழுமையாக முடியாததால் இந்த பிரச்சினை தொடர்ந்து நீடித்து வருகிறது.

    கொளத்தூர் தொகுதியில் சுமார் ரூ.120 கோடி மதிப்பில் 70 கிலோ மீட்டர் தூரத்திற்கு மழை நீர் வடிகால் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் 80 சதவீத பணிகள் முடிந்த நிலையில் 20 சதவீத பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    இதனால் கொளத்தூர் திருமுருகன் நகர், டீச்சர்ஸ் கில்ட் காலனி, வி.வி. நகர் பூம்புகார் நகர், ஜெயராம் நகர், ஜி.கே.எம். காலனி உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் வடிகால் பணி நிறைவடையாமல் பள்ளம் தோண்டப்பட்ட நிலையில் உள்ளன. அதில் உள்ள கான்கிரீட் கம்பிகள் வாகன ஓட்டிகளையும், அவ்வழியே செல்பவர்களை அச்சுறுத்தும் வகையில் காணப்படுகிறது.

    மேலும் பல இடங்களில் கால்வாய்க்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் கழிவு நீர் குளம்போல் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. கொளத்தூர் மூகாம்பிகை கோவில் மெயின் ரோட்டில் கட்டப்பட்டு வரும் மழைநீர் வடிகால்வாயில் கழிவுநீர் குளம்போல் தேங்கி காணப்படுகிறது.

    பூம்புகார் நகர், வி.வி.நகர் பகுதியில் கால்வாய்க்கு பள்ளம்தோண்டியபோது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர்கலந்தது. இதனால் அப்பகுதியில் குடியிருப்பவர்கள் குடிநீரை பயன்படுத்த முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். பொதுமக்கள் தனியார் லாரி மூலம் வரும் தண்ணீரை வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள்.

    மேலும் மழை நீர் வடிகால் பணி முடிந்த பல சாலைகள் சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளதால் வாகனங்களில் செல்வோர் பள்ளத்தில் விழுந்து காயம் அடைந்து வருகிறார்கள்.

    எனவே கொளத்தூர் பகுதியில் மழைநீர் வடிகால் பணியை விரைந்து முடித்து தோண்டப்பட்ட இடங்களில் தரமான சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து பூம்புகார் நகரை சேர்ந்த ஒருவர் கூறும்போது, மழைநீர் கால்வாய்க்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் கழிவுநீரால் நிரம்பி உள்ளன. குடிநீர் வாரிய அதிகாரிகள் அதனை சீரமைத்தாலும், அது தற்காலிக தீர்வாகவே உள்ளது. மீண்டும் சில நாட்களில் மற்ற தெருக்களில் இதே பிரச்னை ஏற்படுகிறது. கால்வாய் பணி காரணமாக குடிநீர் குழாய், மின்வயர்கள் சேதம் அடைந்து உள்ளன. உடைந்த குடிதண்ணீர் குழாய்களில் கழிவு நீர் கலந்து வருகிறது. கால்வாய் பணி முடியாததால் இதனை சீரமைப்பதிலும் சிரமம் ஏற்படுகிறது. மழைநீர் வடிகால் பணியை உரிய நேரத்தில் முடிக்க வேண்டும். கழிவு நீர் கலந்த குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய ரூ.3 ஆயிரம் வரை செலவு செய்ய வேண்டி உள்ளது என்றார்.

    • இரண்டாவது திட்ட குடிநீர் குழாயின் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறியது.
    • நீர்வீழ்ச்சி போல தண்ணீர் 7 அடி உயரத்திற்கு அடித்தது

    அவினாசி :

    திருப்மாவட்டம் அவினாசி ஒன்றியத்திற்குட்பட்ட ராமநாதபுரம் ஊராட்சிகிருஷ்ணாபுரம் பகுதியில் மேட்டுப்பாளையத்தில் இருந்து திருப்பூர் மாநகராட்சிக்கு செல்லும் இரண்டாவது திட்ட குடிநீர் குழாயின் குழாய் உடைந்து நீர்வீழ்ச்சி போல தண்ணீர் பீறிட்டு வெளியேறியது .

    சில நாட்களாக சிறிதளவு தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்று திடீரென்று நீர்வீழ்ச்சி போல தண்ணீர் 7 அடி உயரத்திற்கு அடித்தது . பள்ளி மாணவர்கள் அந்த செயற்கை நீர்வீழ்ச்சியில் விளையாடினர்.தண்ணீர் வீணாவதை தடுக்க குடிநீர் வடிகால் வாரியத்தினர் உடனடியாக உடைந்த குடிநீர் குழாயை சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • வழுக்கோடையில் இருந்து தொண்டர் சன்னதி வரையிலும் வாறுகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
    • ஜே.சி.பி. எந்திரம் மூலமாக பள்ளங்கள் தோண்டப்பட்டபோது குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதியில் வழுக்கோடையில் இருந்து தொண்டர் சன்னதி வரையிலும் வாறுகால் அமைக்கும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. இதற்காக வழுக்கோடையில் இருந்து ஜே.சி.பி. எந்திரம் மூலமாக வாறுகால் அமைக்க பள்ளங்கள் தோண்டப்பட்டது. அப்போது சில இடங்களில் குடிநீர் திட்டப் பணிக்காக போடப்பட்டிருந்த குழாய்களில் இன்று உடைப்பு ஏற்பட்டது. இதனால் அதிலிருந்து அதிக அளவில் குடிநீர் வெளியேறியது. குடிநீர் வாறுகாலில் முழுவதுமாக நிரம்பி சாலையில் ஆறாக ஓடியது. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து குடிநீர் வினியோகத்தை நிறுத்தி குழாயை அடைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    • விழுப்புரம் நகரில் குடிநீர் குழாய் உடைந்து கழிவுநீர் கலப்பதாக போராட்டம் நடைபெற்றது.
    • சம்பவத்தை அறிந்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது வடக்கு தெரு ,மாசிலாமணி பேட்டை,முகமதியார் தெரு உள்ளிட்ட தெருக்களை உள்ளடக்கியது 9-வதுவார்டு.

    இப்பகுதியில் உள்ள பிரதான குடிநீர் குழாயில் கசிவு ஏற்படுவதாகவும் கழிவுநீர்கள் இக்குழாய் வழியாக வந்து குடிநீர் கலப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக குடியிருப்பு வாசிகள் அப் பகுதி கவுன்சிலர் வக்கீல் ராதிகாவிடம் முறையிட்டனர்.

    இது சம்பந்தமாக அதிகாரிகளிடம் முறையிடுவதாக தெரிவித்திருந்தனர் கவுன்சிலர் அதிகாரியிடம் முறையிட்டும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இதனைத் தொடர்ந்து கவுன்சிலர்ராதிகா தலைமையில் பொதுமக்கள் குடிநீர் குழாய் கசிவு ஏற்பட்ட இடத்தில் திடீரென்று ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

    சம்பவத்தை அறிந்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர் அதனை தொடர்ந்துகவுன்சிலர் ராதிகா உள்ளிட்டோர் அனைவரும் கலைந்து சென்றனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    பரமக்குடி தேசிய நெடுஞ்சாலையில் குடிநீர் குழாய் உடைந்து கடந்த 5 நாட்களாக தண்ணீர் வீணாகி ஓடுகிறது. இதனை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.
    பரமக்குடி:

    பரமக்குடி பகுதி ஒழுங்குமுறை விற்பனை கூடம் அருகே மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குடிநீர் குழாய் உடைந்து 5 நாட்களாக குடிநீர் வீணாகிறது. இரவு-பகலாக குழாயில் இருந்து வெளியேறும் குடிநீரால் அப்பகுதி முழுவதும் தண்ணீர் தேங்கி குளம் போல காட்சி அளிக்கிறது.

    பஸ், லாரி உள்பட கனரக வாகனங்கள் செல்லும் போது சாலையில் கிடக்கும் தண்ணீர் சிதறி நடந்து செல்பவர்களின் மீது பட்டு அவர்களின் ஆடைகள் அசுத்தம் அடைகின்றன. அப்பகுதியிலேயே அரசு ஐ.டி.ஐ., பொதுப்பணித்துறை அலுவலகம் ஆகியவையும் உள்ளன. எத்தனையோ அதிகாரிகள் அந்த சாலையின் வழியாக சென்று வருகின்றனர். ஆனால் குழாய் உடைந்து 5 நாட்களாக வீணாகி ஓடும் குடிநீரை தடுக்க யாரும் நடவடிக்கை எடுக்காதது வேதனைக்குரியதாகும். பல பகுதிகளில் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    சாலை மறியல், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இங்கு குடிநீர் வீணாகி வருகிறது என்பதை அறிந்து பொதுமக்கள் அதிருப்தி அடைந்துஉள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    ×