search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Drinking Water Wasted"

    • காய்கறி மார்க்கெட் வளாகத்தில் குடிநீர் வினியோகத்திற்காக நீர்த்தேக்க தொட்டி அமைந்துள்ளது.
    • பழுதின் காரணமாக இரும்புக் குழாய் உடைந்து தொட்டியிலுருந்து தண்ணீர் கொட்ட தொடங்கியது.

    கடலூர்:

    விருத்தாசலம் காட்டுக்கூடலூர் ரோட்டில் உள்ள தினசரி காய்கறி மார்க்கெட் வளாகத்தில் குடிநீர் வினியோகத்திற்காக நீர்த்தேக்க தொட்டி அமைந்துள்ளது. விருத்தாசலம் நகராட்சிக்குட்பட்ட இந்த நீர்த்தேக்க தொட்டியிலிருந்து பங்களா தெரு, புதுப்பேட்டை, காட்டுகூடலூர் ரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. 4 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த நீர் தேக்க தொட்டியின் மூலம் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்பெற்று வருகின்றனர். 

    இன்று காலை குடிநீர் விநியோகம் செய்ய நீர்த்தேக்க தொட்டியை திறக்க முற்படும்போது ஏற்பட்ட பழுதின் காரணமாக இரும்புக் குழாய் உடைந்து தொட்டியிலுருந்து தண்ணீர் கொட்ட தொடங்கியது. அதிர்ச்சியடைந்த நகராட்சி ஊழியர்கள் குழாயை சரி செய்ய முற்பட்டனர். ஆனால் மேலும் அந்த இரும்பு குழாய் உடைந்து தண்ணீர் அதிகமாக வெளியேறத் தொடங்கியது. இதனால் ஏற்பட்ட திடீர் நீர்பெருக்கம் காரணமாக மார்க்கெட் வளாகம் முழுவதும் தண்ணீர் ஓட தொடங்கியது. காய்கறி வியாபாரிகள் விற்பனைக்காக வைத்திருந்த காய்கறிகள் தண்ணீரில் மிதக்க தொடங்கின.

    அதிர்ச்சி அடைந்த காய்கறி வியாபாரிகள் தங்களது காய்கறிகளை வேறு இடத்தில் எடுத்து வைக்க முயற்சி செய்வதற்குள் நீர் அதிவேகமாக வெள்ளம் போல ஓட தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீர்த்தேக்க தொட்டியிலிருந்த நீர் காலியாகும் வரை சாலையில் வீணாக ஓடிக்கொண்டிருந்தது. இதனால் தினசரி மார்க்கெட் வளாகம் மற்றும் காட்டுக்கூடலூர் சாலையில் தண்ணீர் வெள்ளம் போல தேங்கி நின்றது.

    • குஜிலியம்பாறை பெட்ரோல் பங்க் அருகே காவிரி கூட்டுகுடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது.
    • தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் சுமார் 12 அடி உயரத்திற்கு அலைபோல் எழும்பி சாலையில் ஆறாக ஓடியது.

    வடமதுைர:

    திண்டுக்கல் மாவட்டத்தின் குடிநீர் ஆதாரமாக ஆத்தூர் காமராஜர்அணை உள்ளது. மேலும் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் கரூர் மாவட்டத்தில் இருந்து காவிரி கூட்டுகுடிநீர் கொண்டுவரப்படுகிறது.

    காவிரியாற்றில் இருந்து குஜிலியம்பாறை, எரியோடு, வடமதுரை, தாடிக்கொம்பு வழியாக திண்டுக்கல், நத்தம் பகுதிகளுக்கு காவிரி கூட்டுகுடிநீர் ராட்சத குழாய் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.

    இதன்மூலம் ஓரளவு குடிநீர் பற்றாக்குறையை சமாளித்து வருகின்றனர். இந்த நிலையில் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டபோதும் மெத்தனமாக செயல்படுவதால் தாமதமாகவே குழாய் உடைப்பு சரிசெய்யப்படுகிறது.குஜிலியம்பாறை பெட்ரோல் பங்க் அருகே காவிரி கூட்டுகுடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது.

    தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் சுமார் 12 அடி உயரத்திற்கு அலைபோல் எழும்பி சாலையில் ஆறாக ஓடியது. திண்டுக்கல் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை என்பது நிரந்தரமாக உள்ளது. இதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்த போதிலும் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க முடியவில்லை. இந்த ஆண்டு பருவமழை கைகொடுத்ததால் ஓரளவு சிரமம்இன்றி பொதுமக்கள் சமாளித்தனர்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குடிநீருக்காக கிராமமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல், முற்றுகை போராட்டங்களில் ஈடுபட்டனர். தற்போது மழை ஓய்ந்த நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் குடிநீர் வீணாக செல்வதை சீரமைக்காமல் அதிகாரிகள் அலட்சியமாக உள்ளது பொதுமக்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இதற்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • செம்பட்டி - மதுரை சாலையில் விரிவாக்கப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • மேட்டுப்பட்டியில் பணியின் போது குழாய் உடைப்பால் 1 மணி நேரம் குடிநீர் வீணாகி சென்றது.

    செம்பட்டி:

    செம்பட்டியில் இருந்து மதுரை செல்லும் மெயின் ரோட்டில் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக பல்வேறு இடங்களில் பாலம் கட்டும் பணிகளுக்காக ஜே.சி.பி. எந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நிலக்கோட்டை அருகே உள்ள அணைப்பட்டி பேரணையில் இருந்து சின்னாளப்பட்டி பேரூராட்சிக்கு ராட்சத குழாய் மூலம் குடிநீர் கொண்டு வரப்படுகிறது.

    இந்த நிலையில் சாலை அகலப்படுத்தும் பணியின் போது மதுரை ரோடு மேட்டுப்பட்டியில் குடிநீர் குழாய் உடைந்து சேதப்படுத்தப்பட்டது.

    இதனால் குடிநீர் வீணாக சாலையில் சென்றது. அப்பகுதி முழுவதும் குளம் போல் தேங்கி காட்சியளித்தது. இது குறித்து அதிகாரிகளுக்கும் குடிநீர் ஆபரேட்டர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக குடிநீர் வீணாக சென்றது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. அதன் பின்னர் குடிநீர் குழாய் சீரமைக்கப்பட்டது

    • சாலை அமைக்கும் பணியில் ஊழியர்கள்மெத்தனமாக செயல்பட்டு வருகின்றனர்.
    • கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைப்பால் தண்ணீர் வீணாகி வருகிறது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கம்பம், கூடலூர், உத்தமபாளையம், பண்ணைப்புரம் ஆகிய பகுதிகளுக்கு லோயர்கேம்ப் கூட்டு குடிநீர் திட்டத்தில் குழாய்கள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.

    கடந்த சில நாட்களாக கூடலூரில் இருந்து மந்தைவாய்க்கால் வரை சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் அதிகாரிகள் மேற்பார்வை இல்லாமல் ஊழியர்களே ஈடுபட்டு வருவதால் அடிக்கடி குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி செல்வது வாடிக்கையாக உள்ளது.

    நேற்று இரவு கூடலூரில் இருந்து கம்பம் செல்லும் சாலையில் அரசு கள்ளர் பள்ளி அருகே குழாய் உடைப்பு ஏற்பட்டு நீரூற்று போல தண்ணீர் வெளியேறி வீணாகி செல்கிறது. இது குறித்து இன்று அப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளுக்கு புகார்அளித்தனர். அடிக்கடி இதுபோல குழாய் உடைப்பு ஏற்படுவதால் மெத்தனமாக பணியில் ஈடுபடும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அதிகாரிகள் மேற்பா ர்வையில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெறுவதை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


    ×