என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "drug smuggling"
- ஐதராபாத்தில் 2.6 கிலோ கோகோயின் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டது.
- போலீஸ் குழு போதைப்பொருள் கடத்தல் முயற்சியை முறியடித்தது.
போதைப்பொருள் வழக்கில் பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் சகோதரர் அமன் ப்ரீத் சிங் உள்பட 5 பேரை ஐதராபாத் போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் 2.6 கிலோ கோகோயின் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டதை அம்மாநில போதைப்பொருள் தடுப்புத் துறைக்கு தகவல் தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸ் குழு போதைப்பொருள் கடத்தல் முயற்சியை முறியடித்தது. இந்த சம்பவத்தில், அமன் மற்றும் மற்ற குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
மேலும், 30 கடத்தல் வாடிக்கையாளர்களை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்ட அமன் ப்ரீத் சிங், அனிகேத் ரெட்டி, பிரசாத், மதுசூதன் மற்றும் நிகில் தமன் ஆகிய 5 பேரும் தற்போது போலீஸ் காவலில் உள்ளனர். மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
ராஜேந்திர நகர் மண்டலத்தின் சைபராபாத் காவல்துறையின் டிசிபி ஸ்ரீனிவாஸ் கூறுகையில், " நுகர்வோர்கள் ஐந்து பேரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தோம். அவர்ளுக்கு சிறுநீர் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அனைவரும் போதைப்பொருள் எடுத்துக்கொண்டது உறுதியானது.
பிறகு, அவர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். நாங்கள் இப்போது அவர்களை விரிவான மருத்துவ பரிசோதனைக்கு அனுப்புகிறோம்" என்றார்.
2021 மற்றும் 2022ம் ஆண்டுகளில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் நுகர்வு வழக்கு தொடர்பாக ரகுல் ப்ரீத் சிங்கிற்கு கூட அமலாக்க இயக்குனரகம் சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ரவடிகள் சர்வ சாதாரணமாக சுற்றித்திரிவதாக குற்றச்சாட்டுகள்.
- கத்தி உள்ளிட்ட ஆயுதங்களும் சிக்கியதாக கூறப்படுகிறது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் குண்டர்கள் மற்றும் போதை பொருள் கடத்தல் கும்பலால் சமீபகாலமாக அதிக குற்றங்கள் நடந்தன. ஏராளமான ரவடிகள் சர்வ சாதாரணமாக சுற்றித்திரிவதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது.
அடாவடியில் ஈடுபடும் நபர்களை பிடிக்க அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் மட்டுமின்றி, பல்வேறு அரசியல் கட்சியினரும் வலியுறுத்தினர். இந்நிலையில் அதற்கான நடவடிக்கையை போலீசார் எடுத்தனர். அதன்படி மாநிலம் முழுவதும் போலீசார் நேற்று குற்றவாளிகளை கைது நடவடிக்கையில் ஈடுபட்டார்கள்.
இதில் போதைப்பொருள் வியாபாரிகள், குண்டர்கள், பழைய குற்றவாளிகள், வாரண்டு பிறப்பிக்கப்பட்ட வர்கள் என நேற்று ஒரே நாளில் 300 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்க ளில் பலரது வீடுகளில் போலீசார் சோதனையும் நடத்தினர். இதில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களும் சிக்கியதாக கூறப்படுகிறது.
300 பேர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை போலீசார் தேடி வருகின்ற னர். அவர்களை பிடிக்கும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தலைமறைவு குற்ற வாளிகள், போதை பொருள் விற்பனை கும்பல், ரவுடிகள் உள்ளிட்டோரை கைது செய்யும் நடவடிக்கை தொடரும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ள னர். கடந்த ஆண்டு இதே போன்று நடத்தப்பட்ட போலீஸ் ஆபரேசனில் 2ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- அதிகாரி சமீர் வான்கடே ரூ.25 கோடி லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்தது.
- புகார் தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அதிகாரி சமீர் வான்கடேவுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி உள்ளது.
புதுடெல்லி:
மும்பையில் போதைபொருள் கடத்தல் தொடர்பாக கடந்த 2021-ம் ஆண்டு ஒரு சொகுசு கப்பலில் திடீர் சோதனை நடத்தப்பட்டது.
இதில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் கைது செய்யப்பட்டார். அவரை போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடே கைது செய்து விசாரணை நடத்தினார்.
இந்நிலையில் ஆர்யன்கான் மீது வழக்கு பதியாமல் இருக்க அதிகாரி சமீர் வான்கடே ரூ.25 கோடி லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டது.
இந்த புகார் தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அதிகாரி சமீர் வான்கடேவுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி உள்ளது. அதில் அவர் இன்று மும்பை சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என கூறியுள்ளது.
- சாராயம் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- 60 லிட்டர் சாரயத்தை 2 லாரி ட்யூபில் கடத்தி வந்த ஐயப்பனை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
கள்ளக்குறிச்சி:
சின்ன சேலம் பகுதியில் சாராயம் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தின் பேரில் எஸ்ஐ மணிகண்டன் தலைமையில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது செல்லியம்பாளையம் ரயில்வே பெரிய பாலம் அருகே 60 லிட்டர் சாரயத்தை 2 லாரி ட்யூபில் கடத்தி வந்த ஐயப்பனை போலீசார் மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவரிடம் இருந்த 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து அய்யப்பனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள பெரிய சாமியை சின்னசேலம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
- தமிழக - கேரள எல்லையான குமுளி வழியே அடிக்கடி போதைப்பொருள் கடத்தப்பட்டுவதை தடுப்பதற்காக இரு மாநில காவல் துறை சார்பில் குமுளியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
- வாகன சோதனைகளை மேலும் தீவிரபடுத்த வேண்டும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கூடலூர்:
தமிழக - கேரள எல்லையான குமுளி வழியே அடிக்கடி போதைப்பொருள் கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுப்பதற்காக இரு மாநில காவல் துறை சார்பில் குமுளியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தேனி மாவட்ட எஸ்.பி. பிரவீன் உமேஷ் டோங்கரே, இடுக்கி மாவட்ட எஸ்.பி. சூரிய கோஸ் ஆகியோர் தலைமை வகித்தனர். உத்தமபாளையம் ஏ.எஸ்.பி. ஸ்ரேயா குப்தா, மது விலக்கு அமலாக்கப்பிரிவு டி.எஸ்.பி. சுரேஷ், பீர் ேமடு டி.எஸ்.பி. குரியா கோஸ், இடுக்கி தனிப்பிரிவு டி.எஸ்.பி. ஜார்ஜ், போதைப்பொருள் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி. மேத்யூ மற்றும் வனத்துறையினர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் கஞ்சா மற்றும் புகையிலைப் பொருட்கள் புழக்கத்தை தடுக்க போலீசார் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வெளியூர்களில் இருந்து கடத்தி வருபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
எல்லை வழியாக நடைபெறும் கஞ்சா கடத்தலை தடுப்பது குறித்து போலீசார் ஆலோசனை மேற்கொண்டனர். கேரளாவில் கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டாலும் அதனை விற்பவர்கள் தமிழகத்தில்தான் இருக்கின்றனர்.
எனவே ஒரு தரப்பினர் மீது நடவடிக்கை எடுப்பதால் இந்த குற்றம் தொடர்ந்து கொண்டே உள்ளது. எனவே தொடர்புடைய போதை வழக்கு விபரங்களை இரு மாநில போலீசாரும் பரிமாறிக் கொள்ள வேண்டும். இதற்காக தமிழக, கேரள போலீசார் இணைந்து செயல்பட்டு போதைப் பொருள் கடத்தலை முற்றிலும் ஒழிக்க வேண்டும். வாகன சோதனைகளை மேலும் தீவிரபடுத்த வேண்டும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
- அதிகாலையில் பெங்களூரில் இருந்து புதுவை நோக்கி ஒரு தனியார் சொகுசுபஸ் வந்தது.
- பஸ்சை மடக்கி போலீசார் சோதனை செய்தபோது அப்போது அந்த பஸ்சில் 5 மூட்டைகளில் 150 கிலோ குட்கா, புகையிலை பொருள்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.
விழுப்புரம்:
விழுப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.அதன்படி செஞ்சி போலீஸ் டி.எஸ்.பி. பிரியதர்ஷினி மேற்பார்வையில் சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபா நல்லான் பிள்ளை பெற்றால் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திவாகர் தலைமையிலான போலீசார் கடலாடிகுளம் கூட்ரோடு பகுதியில் தீவிரவாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அதிகாலையில் பெங்களூரில் இருந்து புதுவை நோக்கி ஒரு தனியார் சொகுசுபஸ் வந்தது. அந்த பஸ்சை மடக்கி போலீசார் சோதனை செய்தனர். அப்போது அந்த பஸ்சில் 5 மூட்டைகளில் 150 கிலோ குட்கா, புகையிலை பொருள்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.
உடனே போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து ஆம்னி பஸ்சை ஓட்டி வந்த தர்மபுரி மாவட்டம் அரூர்் பகுதியைச் சேர்ந்த டிரைவர் மூர்த்தி (வயது60) மற்றும் அதே பகுதியை சேர்ந்த கண்டக்டர் முனுசாமி (47) என்பவரை கைது செய்தனர். 180 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் போலீசார் பஸ்சில் வந்த பயணிகளுக்கு மாற்று பஸ் மூலம் அவர்களை அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து டிரைவர்் கண்டக்டரிடம் இதை உங்களுக்கு யார் அனுப்பியது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
- திண்டிவனத்தில் போலீசார் போதை பொருட்கள் கடத்தலை தடுக்க விடிய விடிய வாகன சோதனை ஈடுப்பட்டனர்.
- விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர்.
விழுப்புரம்:
திண்டிவனம் பகுதிகளில் அதிக அளவில் கஞ்சா, அந்நிய மதுபானகள்,போதை மாத்திரைகள்,ஆகியவை அதிகளவில் விற்பதாக தகவலின் பெயரில் விற்பனையை தடுக்கும் வகையில் திண்டிவனம் ஏ.எஸ்.பி.அபிேஷக் குப்தா பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன் பெயரில் நேற்று இரவு திண்டிவனம் மரக்காணம் சாலையில், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் காந்தி, போலீஸ்காரர்கள் செல்வம், வரதராஜ், மற்றும் போலீசார் நேற்று இரவு திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இருசக்கர வாகனத்தில் வந்த சந்தேகத்துக்கிடமான நபர்கள் ஏதேனும் கஞ்சா, மதுபானம், போதை மாத்திரைகள் மறைத்து வைத்திருக்கிறார்களா? என அவர்களிடமும், வாகனத்திலும் சோதனை மேற்கொண்டனர். நேற்று இரவு திண்டிவனம் மரக்காணம் சாலையில், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் காந்தி, போலீஸ்காரர்கள் செல்வம், வரதராஜ், மற்றும் போலீசார் நேற்று இரவு திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இருசக்கர வாகனத்தில் வந்த சந்தேகத்துக்கிடமான நபர்கள் ஏதேனும் கஞ்சா, மதுபானம், போதை மாத்திரைகள் மறைத்து வைத்திருக்கிறார்களா? என அவர்களிடமும், வாகனத்திலும் சோதனை மேற்கொண்டனர்.விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர்.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கடம்பூரை சேர்ந்தவர் பிரசாந்தகுமார் (வயது 32). இவர் சென்னையில் வசித்து வருகிறார். சென்னையில் இருந்து தனியார் கூரியர் சர்வீஸ் மூலம் கொச்சிக்கு துணி பண்டல்களை பார்சல் செய்தார்.
கொச்சிக்கு பார்சல் சென்றதும் அங்கு வந்து பார்சல்களை பெற்றுக்கொண்ட பிரசாந்தகுமார் அவைகளை மலேசியாவுக்கு அனுப்ப வேறொரு பார்சல் கூரியரை அணுகினார்.
அப்போது பார்சல் ஊழியருக்கு சந்தேகம் ஏற்பட்டது. சென்னையில் இருந்து நேரடியாக மலேசியாவுக்கு பார்சல்களை அனுப்பலாமே? ஏன் சென்னையில் இருந்து இங்கு கொண்டு வந்து, இங்கிருந்து மலேசியாவுக்கு பார்சல்களை அனுப்ப வேண்டும் என்று கேட்டார். அதற்கு பிரசாந்தகுமார் முறையாக பதில் கூறவில்லை.
இதனையடுத்து கூரியர் ஊழியர் எர்ணாகுளம் மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து குறிப்பிட்ட பார்சல்களை பிரித்து பார்த்தபோது ரூ.200 கோடி மதிப்புள்ள 32 கிலோ மெத்தடின் என்ற போதை பொருள் இருந்தது. இதனையடுத்து பிரசாந்தகுமார் தலைமறைவனார். அவரை கேரள போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் சென்னையில் வைத்து பிரசாந்தகுமாரை கேரள போலீசார் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருள் குறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்