search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Duck"

    • கோழி பண்ணையில் உயிர் பாதுகாப்பு (பயோ செக்யூரிட்டி) முறைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    • இறைச்சி மற்றும் முட்டைகளை விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    நாமக்கல்:

    கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் குட்டநாடு பகுதியில் உள்ள வாத்து பண்ணைகளில் ஏராளமான வாத்துகள் தொடர்ச்சியாக உயிரிழந்தன. இதனையடுத்து இறந்த வாத்துகளின் மாதிரிகளை சேகரித்து சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. சோதனை முடிவில் இறந்த வாத்துகளுக்கு பறவைக் காய்ச்சல் (எச்5என்1) நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனைத் தொடர்ந்து அப்பகுதிகளில் உள்ள சுமார் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் வளர்க்கப்படும் வாத்துகள், கோழிகள் மற்றும் காடை போன்ற பறவையினங்களை அழிக்கும் பணியில் கேரள மாநில கால்நடை பராமரிப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் இருந்து வாத்து மற்றும் கோழிகளை வெளியே எடுத்துச்செல்லவும், அவற்றின் இறைச்சி மற்றும் முட்டைகளை விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கேரள மாநிலத்தில் பறவைக்காய்ச்சல் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளதால் நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதிக அளவில் கோழிப்பண்ணைகள் உள்ள நாமக்கல் மாவட்டத்தில் பண்ணையாளர்கள் தங்கள் பண்ணைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். கோழி பண்ணையில் உயிர் பாதுகாப்பு (பயோ செக்யூரிட்டி) முறைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    நாமக்கல், சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதியில் சுமார் 1000 முட்டை கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 5 கோடி முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தற்போது, கோழிகளுக்கு கிருமி நாசினி மருந்து தெளித்தல் உள்ளிட்ட நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை பண்ணையாளர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

    கோழிப்பண்ணை வாசலில் பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசல் கலந்த தண்ணீர் வைக்கப்பட்டு வெளி ஆட்களும், வாகனங்களும் அதன் வழியாக மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

    வெளியில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளித்த பின்னரே பண்ணைக்குள் அனுமதிக்கின்றனர். இங்கு நிலவும் தட்பவெப்பநிலை மற்றும் பண்ணைகளில் பின்பற்றப்படும் பயோ செக்யூரிட்டி முறைகளால், பறவைக் காய்ச்சல் நோய் கிருமிகள், நாமக்கல் பகுதியில் பரவ வாய்ப்பு இல்லை என வல்லுனர் குழு தெரிவித்து இருந்தாலும், நாமக்கல் மற்றும் சுற்று வட்டாரங்களில் உள்ள கோழிப் பண்ணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பண்ணையாளர்கள் தீவிரப்படுத்தி உள்ளனர்.

    • சளி இருமலுக்கு ஆஸ்த்துமா நோய்க்கு நல்ல மருந்தாக இருப்பதால் வாத்து முட்டை விலை உயர்ந்தாலும், வாடிக்கையாளர்கள் தொடர்ந்து வாங்கி வருகின்றனர்.
    • சில வாரத்துக்கு முன்பு 8 ரூபாய்க்கு விற்ற வாத்து முட்டை தற்போது 4 ரூபாய் உயர்ந்து 12 ரூபாய்க்கு விற்பனை.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அசைவ பிரியர்கள் உள்ளதால் ஆடு, கோழி, காடை, வாத்து இறைச்சி விற்பனை ஜோராக நடக்கிறது.

    பருவநிலை மாற்றத்தால் தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி, இருமலால் அவதிப்படுகின்றனர். சளி இருமலுக்கு ஆஸ்த்துமா நோய்க்கு நல்ல மருந்தாக இருப்பதால் வாத்து முட்டை விலை உயர்ந்தாலும், வாடிக்கையாளர்கள் தொடர்ந்து வாங்கி வருகின்றனர்.

    சில வாரத்துக்கு முன்பு 8 ரூபாய்க்கு விற்ற வாத்து முட்டை தற்போது 4 ரூபாய் உயர்ந்து 12 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

    இது குறித்து வாத்து முட்டை விற்பனை செய்யும் கடை உரிமையாளர் கூறியதாவது, தேவை அதிகரித்ததால், வாத்து முட்டை கடும்தட்டு பாடு ஏற்பட்டதால் வாத்து முட்டை விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. கறிக்கோழி முட்டையை விட வாத்து முட்டைகள் அதிக சத்துக்கள் உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள வாத்து பண்ணைகள் மூலம் முட்டை கொள்முதல் செய்து பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்கிறோம். வாத்து முட்டை 12 ரூபாய்க்கும், வேக வைத்த வாத்து முட்டை 15 ரூபாயும், வாத்து முட்டை ஆம்லெட் ரூ.30 ஆகும் விலை உயர்ந்துள்ளது என கூறினார்.

    • மதுரைக்கு பவளக்கனிவாய் பெருமாள்-சுப்பிரமணியசுவாமி இன்று புறப்பாடாகிறார்கள்.
    • மீனாட்சி அம்மனை சுந்தரேசுவரருக்கு தாரை வார்த்து கொடுப்ப தற்காக பவளக்கனிவாய் பெருமாளும் உடன் செல்கிறார்.

    திருப்பரங்குன்றம்

    மதுரை சித்திரை திருவிழாவையொட்டி நாளை (2-ந் தேதி) மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடக்கிறது. பெற்றோர் திருமணத்தில் பங்கேற்பதற்காக திருப்பரங்குன்றத்தில் இருந்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் இன்று மாலை 5 மணிய ளவில் மதுரைக்கு புறப்பாடாகிறார்கள்.

    அவர்களுடன் மீனாட்சி அம்மனை சுந்தரேசுவரருக்கு தாரை வார்த்து கொடுப்ப தற்காக பவளக்கனிவாய் பெருமாளும் உடன் செல்கிறார்.

    மதுரை செல்லும் சுப்பிரமணிய சுவாமி வருகிற 4-ந் தேதி வரை ஆவணி மூல வீதிகளில் தெய்வானையுடன் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

    5-ந் தேதி மாலை பூப்பல்லக்கில் எழுந்தருளி சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் திருப்பரங்குன்றம் வந்தடைவார். அவருடன் பூ பல்லக்கில் பவளக்கனிவாய் பெருமாளும் திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வந்தடைவார்.

    இதற்கான ஏற்பாடுகளை திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    • அழகு, நல்லக்கண்ணு ஆகியோர் வாத்துகளை மேய்த்து கொண்டிருந்தனர்.
    • வயலில் பலத்த சத்ததுடன் இடி விழுந்ததில் 20 வாத்துகள் உயிரிழந்தது.

    கல்லிடைக்குறிச்சி:

    அம்பாசமுத்திரத்தில் நேற்று இடி மின்னல் தாக்கி 20 வாத்துகள் பலியானதுடன் 300-க்கும் மேற்பட்ட வாத்துகள் மயங்கி விழுந்தது.

    அம்பாசமுத்திரம் சுற்று வட்டார பகுதிகளில் அறுவடை முடிவடைந்த நிலையில் அம்பை ஊர்க்காடு பகுதியில் உள்ள வயல்வெளியில் மதுரையை சேர்ந்த சின்ன அழகு, நல்லக்கண்ணு ஆகியோர் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாத்துகளை மேய்த்து கொண்டிருந்தனர். அப்போது நேற்று மதியம் பயங்கர இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. உடனே வாத்து மேய்த்து கொண்டிருந்த 2பேரும் அருகில் இருந்த மரத்தடியில் ஒதுங்கி நின்று கொண்டிருந்தனர்.

    இந்நிலையில் வாத்துகள் மேய்ந்து கொண்டிருந்த வயலில் பலத்த சத்ததுடன் இடி விழுந்துள்ளது. இதில் அங்கிருந்த 20 வாத்துகள் அதிர்ச்சியில் உயிரிழந்தது. மேலும் 300-க்கும் மேற்பட்ட வாத்துகள் மயக்கமடைந்து விழுந்தது. மேலும் இடி, மின்னல் தாக்கியதில் இப்பகுதியில் பல வீடுகளில் டிவிகள் பழுதாகி உள்ளது.

    ×