என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "education department"
- ஒரு சில தனியார் பள்ளிகள் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களை வரவழைத்து சிறப்பு வகுப்புகள் நடத்தி வருகின்றன.
- விதிமுறையை மீறி வகுப்புகள் நடத்தும் தனியார் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
சென்னை:
அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை கடந்த மாதம் 28-ந் தேதி முதல் விடப்பட்டது. வருகிற 7-ந் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. காலாண்டு விடுமுறை 9 நாட்கள் கிடைத்ததால் மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆனால் ஒரு சில தனியார் பள்ளிகள் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களை வரவழைத்து சிறப்பு வகுப்புகள் நடத்தி வருகின்றன.
காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது, மீறினால் அந்த பள்ளிகள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பள்ளிக்கல்வித் துறை எச்சரித்து இருந்தது.
இந்த நிலையில் சென்னை தாம்பரம், மேடவாக்கம், நாமக்கல், ராசிபுரம், கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சில தனியார் பள்ளிகள் தங்கள் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தி வருவதாகவும் இதில் மாணவர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என வற்புறுத்தப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.
தனியார் பள்ளிகளின் இந்த நடவடிக்கை பெற்றோர்களின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. சிறப்பு பாட வேளை குறித்த அட்டவணையை சமூக வலைதளங்களில் பகிர்ந்து தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
இதுபற்றி பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, கல்வித் துறையின் எச்சரிக்கையை மதிக்காமல் சில தனியார் பள்ளிகள் இணைய வழியில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்துவதாக புகார்கள் வந்தால், விதிமுறையை மீறி வகுப்புகள் நடத்தும் தனியார் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
- மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து கல்வி உதவித்தொகை தொடர்பாக எந்தவொரு அதிகாரியும் தங்கள் கைப்பேசிகளுக்கு தொடர்பு கொள்ள மாட்டார்கள்.
- யாரும் இது போன்று பேசுபவர்களின் வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம்.
சென்னை:
பள்ளிக்கல்வித்துறை, சைபர் குற்றப்பிரிவு இணைந்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து கல்வி உதவித்தொகை தொடர்பாக எந்தவொரு அதிகாரியும் தங்கள் கைப்பேசிகளுக்கு தொடர்பு கொள்ள மாட்டார்கள்.
ஆனால் சைபர் குற்றவாளிகள் கரூர் மாவட்டத்தில் மாணவ-மாணவிகள் பலரிடம் கல்வித்துறை அதிகாரிகள் என்று என்று கூறி வாட்ஸ்அப் செயலி மூலம் 'கியூஆர்' குறியீட்டை அனுப்பி அதை ஸ்கேன் செய்யும்போது பணம் பறித்து உள்ளனர். எனவே யாரும் இது போன்று பேசுபவர்களின் வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஆசிரியர்களின் நலன் கருதி வரும் கல்வியாண்டில் பள்ளிக் கல்வித் துறைக்காக ரூ.44,042/- கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.
- பள்ளிக் குழந்தைகளின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு ஆர்ப்பாட்டத்தினைக் கைவிட்டு உடனடியாக பணிக்குத் திரும்புமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்
சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு ஒரு வார காலமாக தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்கள் தங்களது போராட்டத்தை கைவிட வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார் .
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு ஒரு வார காலமாக தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்களின் நிலையை கருத்தில் கொண்டு மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் ஆசிரியர்களுக்கு விடுக்கும் அன்பான வேண்டுகோள்.
கடந்த ஒரு வார காலமாக தங்களின் கோரிக்கையினை நிறைவேற்றிட தொடர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு வருகின்றீர்கள். பள்ளிகளில் தற்போது தேர்வு காலமாக இருப்பதனாலும் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதாக ஊடகங்களின் வழியாக கருத்துக்கள் தெரிவிப்பதனையும் கருத்தில் கொண்டு ஆர்ப்பாட்டத்தில் இருந்து விலகி தத்தமது பள்ளிகளுக்கு சென்று கல்விப் பணியாற்றிட வேண்டுமாய் இதன் மூலம் கேட்டுக் கொள்கின்றேன்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் மனதில் ஆசிரியர்கள் என்றும் நீங்கா இடம் பெற்று இருப்பதால் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி வரும் கல்வியாண்டில் பள்ளிக் கல்வித் துறைக்காக ரூ.44,042/- கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.
தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட 50,000 ஆசிரியர்களின் இன்னல்களை தீர்க்கும் வகையில் நமது கழக அரசு கால முறை ஊதியத்தினை ஒரே நாளில் வழங்கி சிறப்பித்துள்ளது. மேலும், நமது கழக அரசு ஆசிரியர்களின் கோரிக்கைகளை பல்வேறு நிலையில் தீர்த்து வைத்து ஆசிரியர்களின் நலனுக்காக செயல்படும் அரசாக இருந்து வருகிறது.
தமிழ்நாடு அரசு இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து பரிந்துரைகள் அளிக்க மூவர் குழு ஒன்றை அமைத்து அரசாணை வெளியிட்டுள்ளது.
சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மூன்று சுற்று கருத்து கேட்புக் கூட்டங்களை நடத்தியுள்ளது. மற்ற சங்கப் பிரதிநிதிகளுடன் அடுத்த சுற்று கருத்துக் கேட்பு நடைபெற வேண்டியுள்ளது. அதன் பின்னர் இப்பொருள் சார்ந்து விரிவான அறிக்கையினைப் பெற்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் எனத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
கல்வியாண்டின் இறுதி நிலையில் இருப்பதால் மாணவர்கள் தேர்வுகளை எதிர்கொள்வதற்கு ஆயத்தப்படுத்த வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். கற்றல் கற்பித்தல் மற்றும் தேர்வு பணியில் கவனம் செலுத்தி மாணவர்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக பணிபுரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
ஆசிரியர்களாகிய நீங்கள் தான் குழந்தைகளின் இரண்டாவது பெற்றோர்கள் என்பதால் பள்ளிக் குழந்தைகளின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு ஆர்ப்பாட்டத்தினைக் கைவிட்டு உடனடியாக பணிக்குத் திரும்புமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
- இறுதிப்போட்டிக்கு சென்னை மற்றும் தூத்துக்குடி அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
- பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் குழு பாராட்டி சான்றிதழ் மற்றும் பரிசு கோப்பையை வழங்கியது.
தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில், மாவட்டந்தோறும் குடியரசு தினத்தையொட்டி 14 வயதுக்குட்பட்டோருக்கான குழு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு குடியரசு தினத்தையொட்டி, கடந்த மாதம் குழு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.
இதில் மண்டல மற்றும் மாவட்ட அளவில் வெற்றிபெற்ற மாணவர்கள் புதுக்கோட்டையில் நடந்த மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டனர். இதில் பேட்மிண்டன், டென்னிஸ், கோகோ, கபடி, எறிபந்து, கூடைப்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
3 நாட்கள் நடைபெற்ற இந்த விளையாட்டு போட்டிகளில் 38 மாவட்ட அணிகள் பங்கேற்று அசத்தின. இறுதிப்போட்டிக்கு சென்னை மற்றும் தூத்துக்குடி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் தூத்துக்குடி முதலிடத்தை பிடித்தது. சென்னை 2-ம் இடம் பிடித்தது.
சென்னை அணியில் இடம்பிடித்த புழுதிவாக்கத்தை சேர்ந்த வியாசா வித்யாலயா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஆ.ஜோன்ஸ்ராஜ் எறிபந்து (த்ரோபால்) விளையாட்டில் அசத்தினார். இதுதவிர அந்த பள்ளி மாணவர்கள் 12 பேர் சென்னை அணியில் இடம்பிடித்தனர்.
மாணவர் ஜோன்ஸ் ராஜ், கராத்தே மற்றும் ஜூடோ போன்ற வீர கலைகளில் பயிற்சி பெற்று சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் குவித்தவர் ஆவார். வெற்றிபெற்ற தூத்துக்குடி மற்றும் சென்னை அணிகளில் இடம்பெற்ற மாணவ-மாணவிகளுக்கு, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் குழு பாராட்டி சான்றிதழ் மற்றும் பரிசு கோப்பையை வழங்கியது.
- இந்த பள்ளியில் பாரதிதாசன், வாணிதாசன் ஆகியோர் தமிழ் ஆசிரியர்களாக பணியாற்றியுள்ளனர்.
- இந்த பள்ளி கட்டடம் சேதமடைந்து பலவீனமானது.
புதுச்சேரி:
புதுவை மிஷன் வீதியில் உள்ள வ.உ.சி. பள்ளி 1886-ம் ஆண்டு எக்கோல் பிரைமரி என்ற பெயரில் தொடங்கப்பட்டது.
ஆரம்பகாலத்தில் பிரெஞ்சு மொழியில் கல்வி போதிக்கப்பட்டது. இந்த பிரெஞ்சு கல்வி முறை 1960-ம் ஆண்டு வரை நீடித்தது. அதன்பிறகு தமி ழ்மொழியில் கல்வி போதி க்கப்பட்டது. இந்த பள்ளியில் பாரதிதாசன், வாணிதாசன் ஆகியோர் தமிழ் ஆசிரியர்களாக பணியாற்றியுள்ளனர்.
வ.சுப்பையா, பாரூக் உட்பட பல்வேறு தலைவர்களை இந்த பள்ளி உருவாக்கியுள்ளது. எதிர்க்கட்சித்தலைவர் சிவா இந்த கல்லூரியின் முன்னாள் மாணவர் நூற்றாண்டு கண்ட இந்த பள்ளி கட்டடம் சேதமடைந்து பலவீனமானது.
இதையடுத்து புதுவை அரசு 2021-ல் பழமை மாறாமல் புதுப்பிக்க திட்டமிட்டது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.3 கோடி பாரம்பரிய கட்டிடங்களை பாதுகாக்கும் இன்டாக் அமைப்பு உதவியுடன் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 2 ஆண்டாக புதுப்பிப்பு பணிகள் நடந்து வந்தது. கட்டிடத்தின் மீது வளர்ந்த மரங்கள், செடிகள் அகற்றப்பட்டது.
சுவற்றில் பூச்சுகள் சுரண்ட ப்பட்டது. கட்டிட மேல்தளத்தை தாங்கும் வகையில் ஆங்காங்கே இரும்பு கம்பிகள் பொருத்தி, பலம் சேர்க்கப்ப ட்டது. பள்ளிக்கு வர்ணம் பூசப்பட்டு அழகு படுத்தப்பட்டது. இப்போது அனைத்து பணிகளும் முடிந்து புதுப்பொலிவு பெற்ற பள்ளியை கல்வித்துறை யிடம் ஒப்படைக்கும் விழா இன்று நடந்தது.
கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து புனரமைக்கப்பட்ட பள்ளி கட்டடத்தை கல்வித்துறையிடம் ஒப்படைத்தனர். நிகழ்ச்சியில் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், தலைமை செயலாளர் ராஜீவ்வர்மா, அரசு செயலர்கள் மணிகண்டன், முத்தம்மா, கலெக்டர் வல்லவன், அரசு அதிகாரிகள், வ.உ.சி. அரசு பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பலர் கலந்துகொ ண்டனர்.
இதே விழாவில் முதல்-அமைச்சர், கவர்னர் அலுவலகங்களில் தகவல் பலகை அமைப்பு, புயல் எச்சரிக்கை செயலி சீற்றம் அறிமுகம் செய்யப்பட்டது. தொடர்ந்து புதுவை அரசின் பொதுப்பணி துறை, இந்தியன் வங்கி இடையிலான சாலை மேம்பாடுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெ ழுத்தானது.
- பலமுறை கோரிக்கை விடுத்தும், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை.
- பள்ளி மாணவிகள் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
பீகார் மாநிலத்தின் பாட்னாவை அடுத்த வைஷாலி மாவட்டத்தில் உள்ள மனார் பிளாக்-இல் அரசு பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லாததை கண்டித்து மாணவிகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தின் போது அங்கு வந்த கல்வித்துறை அதிகாரிகளின் வாகனத்தை பள்ளி மாணவிகள் அடித்து நொறுக்கிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போராட்டத்தில் ஈடுபட்ட போது, பெண் காவல் துறை அதிகாரி ஒருவர் தங்களை அடித்த காரணத்தால் தான், கல்வித்துறை அதிகாரியின் வாகனத்தை அடித்து நொறுக்கியதாக பள்ளி மாணவிகள் தெரிவித்து உள்ளனர்.
மதன் சவுக் மற்றும் படேல் சவுக் அருகில் உள்ள மனார் மௌதிநகர் பிரதான சாலையை மாணவிகள் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பலமுறை கோரிக்கை விடுத்தும், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்று மாணவிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.
பள்ளி மாணவிகள் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டது, போராட்டத்தின் போது கல்வித் துறை அதிகாரியின் வாகனம் மாணவிகளால் அடித்து நொறுக்கப்பட்டது போன்ற சம்பவங்களால் அந்த பகுதியில் பதற்ற நிலை உருவாகி இருக்கிறது. மேலும் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
- வாரத்திற்கு 2 முறை மட்டுமே பள்ளிக்கு வந்து வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போட்டு வந்துள்ளார்.
- பெற்றோர்கள் தலைமை ஆசிரியரிடம் பலமுறை புகார் அளித்தும், அவரை தலைமை ஆசிரியர் கண்டிக்கவில்லை என தெரிகிறது.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் கலபுராகி மாவட்டம் வாடி அருகே உள்ள பாலிநாயக் தாண்டாவில் அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் மகேந்திரகுமார். இவர் வாரத்திற்கு 2 முறை மட்டுமே பள்ளிக்கு வந்து வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போட்டு வந்துள்ளார்.
இந்த பள்ளியில் 25 மாணவர்களும் 2 ஆசிரியர்களும் உள்ளனர். அங்கு தலைமை ஆசிரியராக அய்யப்ப குண்டகுர்த்தியும், ஆசிரியராக மகேந்திரகுமார் மட்டுமே வேலை செய்து வந்துள்ளனர்.
மகேந்திரகுமார் சரிவர பள்ளிக்கு வராததோடு மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்க தனது சார்பாக பெண் ஒருவரை நியமித்துள்ளார். இதற்காக அந்த பெண்ணுக்கு மாத ஊதியமாக ரூ.6 ஆயிரம் வழங்கி உள்ளார். இதுகுறித்து பெற்றோர்கள் தலைமை ஆசிரியரிடம் பலமுறை புகார் அளித்தும், அவரை தலைமை ஆசிரியர் கண்டிக்கவில்லை என தெரிகிறது.
இதுகுறித்து கல்வித்துறை துணை இயக்குநரின் கவனத்துக்கு பெற்றோர்கள் கொண்டு சென்றனர்.
இது கல்வித்துறை அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதை தொடர்ந்து மகேந்திரகுமாருக்கு பொதுக்கல்வித்துறை துணை இயக்குநரகம் பணிக்கு திரும்ப வேண்டும் என நோட்டீஸ் அனுப்பிள்ளது. மாவட்ட அதிகாரிகள் அவர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.
இதை குறித்து கல்வி அதிகாரி சக்ரப்பகவுடா பிரதார் கூறும்போது, ஒரு ஆசிரியராக ஆள்மாறாட்டம் செய்வது ஒரு குற்றமாகும். எனவே அந்த ஆசிரியர்மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
- அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் உடல்நலம் குறித்து தகவல் சேகரிக்க வேண்டும்.
- மாணவர்களை ஆசிரியர்களும், மாணவிகளை ஆசிரியைகளும் மட்டுமே ஆய்வு செய்ய வேண்டும்.
சென்னை:
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட இயக்குனர் ஆர்த்தி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் உடல்நலம் குறித்து ஆய்வு செய்து தகவல்களை சேகரிக்க வேண்டும்.
மத்திய அரசின் திட்டத்தின்கீழ் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உடல்நல சோதனை நடத்தப்படுகிறது.
இதில் மாணவர்களை ஆசிரியர்களும், மாணவிகளை ஆசிரியைகளும் மட்டுமே ஆய்வு செய்ய வேண்டும்.
ஆய்வின்போது மாணவ, மாணவிகளுக்கு ஏதேனும் உடல்நல பாதிப்பு கண்டறியப்பட்டால் தேவையான சிகிச்சைகள் அளிப்பதற்கு அந்தந்தப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது
- அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
- அதனால் 1- வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
அதனால் 1- வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 1 முதல் 8-ம் வகுப்பு வரை ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 9-ஆம் வகுப்பு மாணவர்களும் ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- மாணவர்களிடையே வாசிப்பு பழக்கம் வளர்க்கவும், புத்தகம் வாங்கவும் நூலக மானியம் வழங்கப்படுகிறது.
- அரசு பள்ளிகளுக்கு நூலகங்களை வலுப்படுத்த ரூ.40.56 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
சமக்ரா சிக்ஷா மத்திய நிதியுதவி திட்டத்தில் அனைத்து வயது மாணவர்களிடையே வாசிப்பு பழக்கம் வளர்க்கவும், புத்தகம் வாங்கவும் நூலக மானியம் வழங்கப்படுகிறது.
இந்த கல்வியாண்டில் 47 நடுநிலை பள்ளிகளுக்கு தலா ரூ.13 ஆயிரம் வீதம் ரூ.6.11 லட்சம், 233 தொடக்க பள்ளிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.11.65 லட்சம், 9,10-ம் வகுப்பு வரை உள்ள 72 பள்ளி களுக்கு தலா ரூ.15 ஆயிரம் வீதம் ரூ.10.8 லட்சம், 60 மேல்நிலைப் பள்ளிகளுக்கு தலா ரூ.20 ஆயிரம் வீதம் ரூ.12 லட்சம் என மொத்தம் 412 அரசு பள்ளிகளுக்கு நூலகங்களை வலுப்படுத்த ரூ.40.56 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த தகவலை புதுவை பள்ளி கல்வித்துறையின் சமக்ரா சிக்சா திட்ட இயக்குனர் தினகர் தெரிவித்துள்ளார். மேலும் அனைத்து பள்ளிகளுக்கும் இது தொடர்பான சுற்றறி க்கையும் அனுப்பியுள்ளார்.
- சூழல் காக்கும் பணியில் சிறப்பாக செயல்படும் 5 மாணவ, மாணவிகள் அடங்கிய குழு ஏற்படுத்த வேண்டும்.
- ஆசிரியர்களை தேர்வு செய்து சுழற்சி முறையில் ஒருங்கிணைப்பாளர் நியமிக்க வேண்டும்.
மடத்துக்குளம் :
நடப்பு கல்வியாண்டில் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், சுற்றுச்சூழல் மன்றம் ஏற்படுத்த வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.அதன்படி மாணவர்களுக்கு சுற்றுச்சூழலை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பசுமையான சூழலை மாணவர்கள் வாயிலாக ஏற்படுத்த சூழல் மன்றம் அமைக்க வேண்டும்.
துவக்கப்பள்ளியில் 3 முதல் 5ம் வகுப்பு, நடுநிலைப்பள்ளியில் 6 முதல் 8ம் வகுப்புகளில் சூழல் காக்கும் பணியில் சிறப்பாக செயல்படும் 5 மாணவ, மாணவிகள் அடங்கிய குழு ஏற்படுத்த வேண்டும்.அதேபோல 6 முதல் 10ம் வகுப்பு, 9 முதல் பிளஸ் 2 வகுப்பில் தலா 15 பேர் கொண்ட குழு ஏற்படுத்த வேண்டும். இந்த மன்றத்திற்கு ஆசிரியர்களை தேர்வு செய்து சுழற்சி முறையில் ஒருங்கிணைப்பாளர் நியமிக்க வேண்டும்.
மரக்கன்று நடுதல், மூலிகை தோட்டம் அமைத்தல் உள்ளிட்ட களப்பணி துவங்கி சூழல் விழிப்புணர்வு சார்ந்த போட்டிகளையும் நடத்த வேண்டும் என பல்வேறு வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உடுமலையில் உள்ள பள்ளிகளில் சூழல் மன்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும் அவற்றின் செயல்பாடு தொய்வாக உள்ளது.இது குறித்து திருப்பூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ஆசிரியர்களின் ஒத்துழைப்பு, மாணவர்கள் மீதான அக்கறை உள்ளிட்டவைகளைப்பொறுத்தே சூழல் மன்றங்களின் செயல்பாடு சுறுசுறுப்பு அடையும்.இனிவரும் நாட்களில் சூழல் மன்றங்களின் செயல்பாடு, திறன்பட இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
- கூடுதல் விசாரணை நடத்த ரவியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு உள்ளார்.
- விசாரணை நடத்திய பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள வனவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 தேர்வு மையம் அமைக்கப்பட்டு உள்ளது. கடந்த 20-ந் தேதி இந்த தேர்வு மையத்தில் பொருளியல் தேர்வு நடைபெற்றது. அப்போது இந்த தேர்வு மையத்தின் ஒரு அறையில் சரியாக படிக்காத மாணவர்களை புத்தகத்தை பார்த்து எழுத மைய முதன்மை அலுவலர் ரவி அனுமதித்தாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக 8.30 நிமிட ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த ஆடியோவில் உதவியாளர் மகாலிங்கம் தொலைபேசி அழைப்பில் தேர்வு மைய முதன்மை அலுவலர் ரவியிடம் புத்தகத்தை பார்த்து எழுவதை நீங்கள் கண்டு கொள்ளவில்லை. இது எல்லாருக்கும் பிரச்சினை ஆகி விடும் என்று கூறுகிறார்.
அப்போது பேசிய தேர்வு மைய முதன்மை அதிகாரி ரவி அவர்களுக்கு பாடங்கள் தெரியாது. அதனால் எழுதி தேர்ச்சி பெறட்டும் என்று விட்டு விட்டேன் என்று கூறுகிறார்.
இந்த ஆடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முருகன் விசாரணை நடத்தி வருகிறார்.
மேலும் இதுபற்றி கூடுதல் விசாரணை நடத்த ரவியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு உள்ளார். விசாரணை நடத்திய பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்