search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Educational institutions"

    • 52 தொழில்நுட்பக் கல்லூரிகள், சிறப்பு நிறுவனங்கள், 162 அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.
    • அனுபவம் வாய்ந்த பணியாளர்களைக் கொண்ட ஓர் உதவி மையம் கல்லூரியின் முதன்மையான இடத்தில் ஏற்படுத்தப்படும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுரையின்படி உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியர், பெற்றோர், பொதுமக்கள் ஆகியோருக்குத் தேவைப்படும் தகவல்களை வழங்கும் உதவி மையம் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் அமைக்கப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    தமிழ்நாட்டில் உயர்கல்வித் துறையின்கீழ் 13 பல்கலைக் கழகங்கள், 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 7 கல்வியியல் கல்லூரிகள், 10 பொறியியல் கல்லூரிகள். 52 தொழில்நுட்பக் கல்லூரிகள், சிறப்பு நிறுவனங்கள், 162 அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.

    இக்கல்வி நிறுவனங்களில் மாணவ, மாணவியருக்கு வெளிப்படையான, பதிலளிக்கக்கூடிய மற்றும் அணுகுவதற்கு எளிமையான ஒரு சூழலை ஏற்படுத்தும் விதமாக, அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் மாணவர் சேர்க்கைக்காகவும் மற்றும் இதர காரணங்களுக்காகவும் மேற்குறிப்பிட்டுள்ள கல்வி நிறுவனங்களுக்கு வருகை தரும் மாணவியர், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் அந்நிறுவனங்களில் வழங்கப்படும்.

    பட்டப்படிப்புகள், பட்ட மேற்படிப்புகள், ஆராய்ச்சிப் படிப்புகள், மாணவர் சேர்க்கை பற்றிய விவரங்கள், துறை அலுவலகங்களின் அமைவிடம், தனியார்களின் கோரிக்கை தொடர்பாக எந்த அலுவலரை அணுகுவது.

    அலுவலக நடைமுறைகள், தனியார்களின் கோரிக்கைகள் தொடர்பான முன்னேற்றம் போன்ற விவரங்களை ஒரே இடத்தில் தெரிந்து கொள்ள ஏதுவாக மேற்குறிப்பிட்டுள்ள உயர்கல்வித்துறையின்கீழ் இயங்கும் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் அக்கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து விவரங்களையும் நன்கு அறிந்த, அனுபவம் வாய்ந்த பணியாளர்களைக் கொண்ட ஓர் உதவி மையம்" கல்லூரியின் முதன்மையான இடத்தில் ஏற்படுத்தப்படும்.

    இந்த மையம் பயனாளிகளுக்கு எளிதில் உதவும் வகையில் அமைக்கப்படும்.

    இவ்வாறு அமைச்சர் கோவி.செழியன் கூறி உள்ளார்.

    • 30.6.2023 வரை விண்ணப்பிக்க காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
    • இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவுசெய்யலாம் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகின்றது.

    திருப்பூர் :

    நகர்ஊரமைப்பு இயக்ககத்தின் எல்லைக்குள் அமையும் திட்டமில்லாப குதிகளில் 1.1.2011-ற்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கி வரும் அனுமதியற்ற கல்விநிறு வனக் கட்டிட ங்களுக்கு இத்துறையால் இசைவு வழங்கும் திட்டத்தின் வழிகாட்டுநெ றிமுறைகள் அரசாணை வெளியிடப்பட்டன. இத்திட்டத்தின் கீழ்நிகழ் நிலை ஆன்லைனில் 14.6.2018 முதல் 13.9.2018 வரை மூன்று மாதகாலத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்க ளுக்கு இசைவு வழங்குவதற்கு சென்னை உயர்நீதிமன்றத்தால் விதிக்க ப்பட்டிருந்த தடையை நீக்கிட மேல்முறையீட்டு மனுக்கள் மற்றும் பலவற்றில் வழங்கப்பட்டுள்ள 10.2.2021 தேதிய தீர்ப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்தநீதிமன்ற உத்தரவின்படி 22.3.2021 முதல் 4.4.2021 வரை இருவாரகாலத்திற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மீண்டும் இத்திட்டத்தின் கீழ்விண்ண ப்பிக்க தவறியவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கும் விதமாக விண்ணப்பம் சமர்ப்பிக்க மேலும் ஆறு மாதகாலம் காலநீட்டிப்பு அரசால் 24.6.2022 முதல்31.12.2022 வரை வழங்கப்பட்டது. தற்போது இத்திட்டத்தின் கீழ் விண்ண ப்பிக்க தவறியவர்களுக்கு மற்றுமொரு வாய்ப்பாக 30.6.2023 வரை விண்ணப்பி க்க காலநீட்டிப்பு வழங்கப்ப ட்டுள்ளது.

    விண்ணப்பித்தவர்கள் உரிய விபரங்களை சமர்ப்பித்து இசைவு பெற திருப்பூர் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலக த்தினை அணுகலாம். இத்திட்டத்தின் கீழ் விண்ண ப்பிக்க விரும்புவர்கள் https://tcp.tn.gov.in என்ற இணையதள முகவரியில்வி ண்ணப்பம் பதிவுசெய்யலாம் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகின்றது. இதுஒருமுறை மட்டுமே வழங்கப்படும் அரிய வாய்ப்பு என்பதால் இதனை தவறாது பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    • வைமா கல்வி நிறுவனங்களின் 27-வது ஆண்டு விழா நடந்தது.
    • மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் வைமா கல்வி நிறுவனங்களான கேசா டி மிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வைமா வித்யாலயா, பிரசார்தா பாடசாலா, வைமா கிட்ஸ் பள்ளிகளின் 27-வது ஆண்டு விழா பி.எஸ். குமாரசாமி ராஜா நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடந்தது. நகர் மன்றத் தலைவி பவித்ரா ஷியாம், நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி ஆகியோர் கவுரவ விருந்தினர்களாகவும், சாத்தூர் சவுத் சைடு மெட்ரிக்குலேசன் பள்ளி நிறுவனர் சீனிவாசன், தங்கமயில் ஜுவல்லரி முதன்மை செயல் அதிகாரி விஸ்வநாராயன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்க செயலாளர் கவிஞர் லட்சுமி காந்தன் ஆகியோர் முக்கிய விருந்தினர்களாகவும் பங்கேற்றனர். லட்சுமி மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ராஜாகுணசீலன், லட்சுமி என்ஜினீயரிங் மேனேஜிங் டைரக்டர் ரவிசங்கர் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    வைமா கல்வி நிறுவனங்களின் நிறுவனர்-தலைவர் வைமாதிருப்பதி செல்வன் தலைமை தாங்கினார். மேனேஜிங் டிரஸ்டி அருணா திருப்பதி செல்வன் பேசினார். ஒருங்கிணைப்பாளர் முத்துமாரி வரவேற்றார். நிர்வாக ஒருங்கிணைப்பாளர் பானுப்பிரியா, வைமா வித்யாலயா பள்ளி முதல்வர் கற்பக லட்சுமி, பிரசார்தா பாடசாலா பள்ளி முதல்வர் செண்பககனி, வைமா கிட்ஸ் பள்ளியின் ஆசிரியை பாக்கியலட்சுமி ஆகியோர் ஆண்டறிக்கை வாசித்தனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர். கேசா டி மிர் பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் சித்ரா நன்றி கூறினார்.

    • கீழக்கரை இஸ்லாமியா கல்வி நிறுவனங்களின் சார்பில் குடியரசு தின விழா கொண்டாட்டப்பட்டது.
    • மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

    கீழக்கரை

    கீழக்கரை இஸ்லாமியா கல்வி நிறுவனங்களின் சார்பில் நடந்த 74-வது குடியரசு தின விழாவுக்கு பள்ளி தாளாளர் எம்.எம்.கே.முகைதீன் இப்ராஹிம் தலைமை தாங்கினார். கீழக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பால முரளி சுந்தரம் தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.

    தொடக்க நிகழ்ச்சியில் 7-ம் வகுப்பு மாணவி முஷ்ரிபா, 6-ம் வகுப்பு மாணவிகள் அகமது அலினா, ஷானா ஹயா கிராஅத் ஒதினர். 5-ம் வகுப்பு மாணவர் முகம்மது பைஜான் வரவேற்றார். பிளஸ்-2 (மெட்ரிக்) மாணவி சித்தி ஹனூனா, 7-ம் வகுப்பு (உயர்நிலைப்பள்ளி) மாணவி எகிதா, 5-ம் வகுப்பு (தொடக்கப்பள்ளி) மாணவி அல்சனா ஆகியோர் குடியரசு தின உரையாற்றினர்.

    மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக மாணவர்களின் உடல் வலிமை, மன உறுதியை சோதிக்கும் வகையில் பள்ளியின் தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராஹிம் 5 ஓடுகளை அடுக்கி வைத்து அதன் மீது தீப்பற்ற வைத்து ஒரே தடவையில் அடித்து சிதறடித்து் பார்வையாளர்களின் பாராட்டை பெற்றார்.

    ராமநாதபுரம் அரசு மருத்துவமனை மனநல மருத்துவர் பெரியார் லெனின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசினார்.சர்வதேச அளவிலான சிறந்த கல்வியாளர் விருது பெற்ற இஸ்லாமியா கல்வி நிறுவனங்கள் தலைவர் வழக்கறிஞர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராகிமுக்கு முதல்வர், தலைமை ஆசிரி யர்கள், அலுவலர்கள், பணியாளர்கள், மாணவ- மாணவிகள் சார்பில் நினைவுப்பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

    11-ம் வகுப்பு மாணவி சம்சூன் பசிகா நன்றி கூறினார். தாளாளர் எம்.எம்.கே.முகைதீன் இப்ராகிம் ஆலோசனையின் படி இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி முதல்வர் மேபல் ஜஸ்டஸ், இஸ்லாமியா உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முஸ்தபா, இஸ்லாமியா துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை தனலட்சுமி, நிர்வாக அலுவலர் மலைச்சாமி மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் ஏற்பாடுகளை செய்தனர்.

    • யு.ஜி.சி.யின் கட்டுப்பாட்டில், நாடு முழுதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் செயல்ப–டுகின்றன.
    • முைறயாக அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்கள் மட்டுமே பட்டங்களை வழங்க முடியும்.

    சேலம்:

    பல்கலைக்கழக மானியக் குழுவான யு.ஜி.சி.யின் கட்டுப்பாட்டில், நாடு முழுதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் செயல்ப–டுகின்றன.ஒவ்வொரு பல்கலைக்கழகமும் பட்டப்படிப்புகளை நடத்த, யு.ஜி.சி.யின் ஒப்புதல் பெற வேண்டும். முைறயாக அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்கள் மட்டுமே பட்டங்களை வழங்க முடியும்.

    21 போலி பல்கலைக்கழகங்கள்

    இந்த நிலையில் நாடு முழுவதும் 21 போலி பல்கலைக்கழகங்கள் உரிய அங்கீகாரமின்றி செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது. இந்த 21 போலி பல்கலைக்கழகங்களின் பெயர் பட்டியலை யு.ஜி.சி. தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

    இந்த பட்டியலில் பக்கத்து மாநிலங்களான கேரளாவில் செயின்ட் ஜான்ஸ் பல்கலைக்கழகம், புதுச்சேரி ஸ்ரீபோதி அகாடமி உயர்கல்வி நிறுவனம், ஆந்திராவில் கிறிஸ்ட் நியூ டெஸ்ட்மென்ட் நிகர்நிலை பல்கலைக்கழகம், மகாராஷ்டிரா ராஜா அரபிக் பல்கலைக்கழகம், கர்நாடகாவில் படகன்வி சர்கார் வேர்ல்டு திறந்தநிலை பல்கலைக்கழகம் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.

    வேண்டுகோள்

    உரிய அங்கீகாரம் இன்றி செயல்படும் இந்த 21 பல்கலைக்கழகங்களிலும் உள்ள படிப்புகளில் மாணவ- மாணவிகள் சேர வேண்டாம் என யு.ஜி.சி. கேட்டுக்கொண்டுள்ளது.

    இந்த பட்டியலில் தமிழக கல்வி நிறுவனங்கள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ஜம்மு காஷ்மீரில் முக்கிய பயங்கரவாதி ஜாகீர் மூசாவை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றதையடுத்து, பதற்றம் நீடிப்பதால், நான்காவது நாளாக இன்று பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் டிரால் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு கடந்த 23ம் தேதி போலீசார் மற்றும் ராணுவம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த சண்டையில், நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த பயங்கரவாதி ஜாகீர் மூசா உள்ளிட்ட 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    அன்சர் கஸ்வத்துல் ஹிந்த் அமைப்பின் தலைவரான ஜாகீர் மூசா கொல்லப்பட்டதால் பதற்றமான சூழல் உருவானது. போராட்டங்கள் நடைபெறலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டன.

    நான்காவது நாளாக இன்றும் ஸ்ரீநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறுவதாக இருந்த பி.எட். தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    புல்வாமாவில் அனைத்து பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அனந்த்நாக் மாவட்டத்தில் அனந்த்நாக் மற்றும் பிஜ்பெகரா நகரில் டிகிரி கல்லூரிகள், மேல்நிலைப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மற்ற பகுதிகளில் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. 
    ×