என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Egypt"
- இந்த வார தொடக்கத்தில் எகிப்து அதிபர் துருக்கி சென்று எர்டோகனுடன் காசா போர் நிலவரம் குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.
- துருக்கிய மற்றும் அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்த ஐசெனுா் எஸ்கி இஸ்ரேலிய ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டார்
இஸ்ரேலிய பயங்கரவாதம்
பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 40,000 துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். போர் முழுவீச்சில் நடந்து வரும் நிலையில் துருக்கி நாட்டின் அதிபர் இஸ்ரேலிய பயங்கரவாதத்துக்கு எதிராகக் கூட்டணி அமைக்க இஸ்லாமிய நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இஸ்லாமிய நாடுகளின் கூட்டணி
நேற்று இஸ்தான்புல் அருகே கூட்டம் ஒன்றில் பேசிய துருக்கி அதிபர் தாயேப் எர்டோகன், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு விரிவாகிக்கொண்டே வருகிறது. இஸ்ரேலின் இந்த திமிரையும், அடாவடித்தனத்தையும், இஸ்ரேலிய பயங்கரவாதத்ததையும் அடக்க ஒரே வழி இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைப்பதே என்று தெரிவித்துள்ளார்.
ராஜாங்க உறவுகள்
மேலும் எகிப்து மற்றும் சிரியா உடனான ராஜாங்க உறவுகளை மேம்படுத்தும் முயற்சியில் துருக்கி உள்ளது. இதன்மூலம், அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக ஒன்று திரண்டு ஒரே அணியாக நிற்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. லெபனான் மற்றும் சிரியாவும் ஆக்கிரமிக்கப்படும் ஆபத்தில் உள்ளது என்று எர்டோகன் தெரிவித்துள்ளார். இந்த வார தொடக்கத்தில் எகிப்து அதிபர் துருக்கி சென்று எர்டோகனுடன் காசா போர் நிலவரம் குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார். 12 வருடங்களுக்குப் பிறகு எகிப்து அதிபர் ஒருவர் துருக்கி வந்துள்ளது கவனிக்கத்தக்கது.
உயிரிழந்த பெண்ணும் உலக அரசியலும்
பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பெய்டா பகுதியில் யூத குடியிருப்புகள் விரிவாக்கத்துக்கு எதிராகப் போராட்டம் நடைபெற்றது. போராட்டக்காரர்களை நோக்கி இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சமூக செயல்பாட்டாளரான ஐசெனுா் எஸ்கி (26) என்ற அமெரிக்கப் பெண் தலையில் குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.
துருக்கிய மற்றும் அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்த ஐசெனுா் எஸ்கி சர்வதேச ஒற்றுமை இயக்கத்தில் உறுப்பினராக இருந்நதவர். அவரது கொலைக்கு வெள்ளை மாளிகை கண்டனம் தெரிவித்திருந்தது. இந்த கொலைக்கு துருக்கி அதிபர் எர்டோகன் தனது பேச்சின்போது கண்டனம் தெரிவித்து ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான இஸ்லாமிய நாடுகளின் கூட்டணிக்கு அழைப்பு விடுத்துள்ளது மத்திய கிழக்கில் முக்கிய நகர்வாக பார்க்கப்டுகிறது.
- இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
- நேற்று முன்தினம் ஜூலை 29 சுற்று 16 போட்டியில் தென்கொரிய வீராங்கனை ஜியோன் ஹயோங் [Jeon Hayoung] உடன் மோதினார்
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த ஜூலை 28 ஆம் தேதி முதல் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் தங்களது திறமையையும், மன உறுதியையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், எகிப்து நாட்டு வாள்வீச்சு [Fencing] வீராங்கனை நாடா ஹபீஸ் [Nada Hafez] 7 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையிலும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் கலந்துகொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,"களத்தில் இருந்தது 2 பேர் என்று நினைக்கிறீர்கள். ஆனால் இருந்தது 3 பேர். ஒன்று நான், ஒன்று என் எதிரணி வீராங்னை, மற்றொன்று இந்த உலகத்தை இன்னும் காணாத என் குட்டிக் குழந்தை" என்று தான் கர்ப்பமாக இருப்பதை வெளிப்படுத்தியுள்ளார்.
பாரீஸ் ஒலிம்பிக்ஸ் தனிநபர் பெண்கள் வாள்வீச்சு போட்டிகளில் முதலில் அமெரிக்க வீராங்கனை எலிஸபத் ட்ரக்கோவ்ஸ்க்கியுடன் விளையாடி வெற்றி பெற்ற நாடா ஹபேஸ் சுற்று 16 க்கு முன்னேறினார்.
நேற்று முன்தினம் ஜூலை 29 சுற்று 16 போட்டியில் தென்கொரிய வீராங்கனை ஜியோன் ஹயோங் [Jeon Hayoung] உடன் மோதிய நாடா ஹபேஸ் 15-7 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியைத் தழுவினார். இந்நிலையில் அவரது மன உறுதிக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
- வீட்டுக்குள்ளேயே இருக்கும்படியும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியது.
- மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிஷ்கேக்:
கிர்கிஸ்தான் நாட்டு தலைநகர் பிஷ்கெக்கில் உள்ள மருத்துவப் பல்கலைக்கழகங்களில் படிக்கும் கிர்கிஸ்தான் மற்றும் எகிப்து மாணவர்களுக்கிடையே சில நாட்களுக்கு முன்பு மோதல் வெடித்தது. இதற்கிடையே வெளிநாட்டு மாணவர்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
விடுதிக்குள் புகுந்த கும்பல், பாகிஸ்தான் மாணவர்கள் உள்பட வெளிநாட்டு மாணவர்களை சரமாரியாக தாக்கினர். இதனால் அங்கு வன்முறை வெடித்தது.
இதையடுத்து கிர்கிஸ்தானில் உள்ள இந்திய மாணவர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும், வீட்டுக்குள்ளேயே இருக்கும்படியும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியது.
இந்த நிலையில் வெளிநாட்டு மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவத்தால் கிர்கிஸ்தானில் இந்திய மாணவர்கள் தவித்து வருகிறார்கள். சிலர் பயத்தில் தாங்கள் தங்கியிருந்த விடுதியில் விளக்குகளை அணைத்துவிட்டு பதுங்கி இருந்துள்ளனர்.
மேலும் வெளியில் சென்றால் தாக்கப்படலாம் என்ற அச்சத்தில் சாப்பிட செல்லாமல் இருந்துள்ளனர்.
இதுகுறித்து மருத்துவ படிப்பின் இறுதியாண்டு படிக்கும் தெலுங்கானா மாணவி ஒருவர் கூறும்போது, `தாக்குதல்கள் அதிகரித்ததை அடுத்து, தலைநகரில் உள்ள தனியார் விடுதியில் இருந்து பல்கலைக்கழக விடுதிக்கு மாற்றப்பட்டோம்.
பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு இருந்தாலும், பிஷ்கெக்கில் நடக்கும் வெறுப்புணர்வு காரணமாக நாங்கள் அச்சத்தில் இருக்கிறோம். தொடர்ந்து தாக்குதல்கள் நடப்பதாக செய்திகள் வருகின்றன. இது மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் வெளிநாட்டு மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவத்தில் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று பாகிஸ்தான் ஊடகங்களை கிர்கிஸ்தான் அரசு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து கிர்கிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் கூறும்போது, வெளிநாட்டு ஊடகங்கள், சமூக வலைப்பின்னல்கள், குறிப்பாக பாகிஸ்தானில் உள்ள சிலர் கிர்கிஸ்தானில் உள்ள நிலைமை குறித்து உண்மைக்கு புறம்பான,முற்றிலும் தவறான தகவல்களை பரப்புவதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
- தலைவர்களின் வருகையின்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படும்.
- மூன்று ஆண்டுகளில் மானியங்கள் மற்றும் கடன்கள் இரண்டும் இந்த தொகுப்பில் அடங்கும்.
பொருளாதார அழுத்தம் மற்றும் மோதல்கள் மற்றும் அண்டை நாடுகளில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் ஆகியவை ஐரோப்பியக் கரைகளுக்கு அதிக குடியேற்றங்களைத் தள்ளக்கூடும் என்ற கவலைகளுக்கு மத்தியில் பணப் பற்றாக்குறை உள்ள எகிப்துக்கு 8 பில்லியன் டாலர் உதவிப் பொதியை ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வொன் டெர் லெனெ் மற்றும் பெல்ஜியம், இத்தாலி, ஆஸ்திரியா, சைப்ரஸ் மற்றும் கிரீஸ் தலைவர்களின் வருகையின்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என்று எகிப்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.
கெய்ரோவில் உள்ள ஐரோப்பிய யூனியன் மிஷன் படி, "அரபு உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டிற்கான அடுத்த மூன்று ஆண்டுகளில் மானியங்கள் மற்றும் கடன்கள் இரண்டும் இந்த தொகுப்பில் அடங்கும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
- அலெக்சாண்ட்ரியாவில் போம்பே தூண் எனும் பிரபலமான சுற்றுலா தலம் உள்ளது
- காயமடைந்தவரை இஸ்ரேலுக்கு அனுப்பும் முயற்சி நடைபெற்று வருகிறது
மத்தியதரைக்கடல் பகுதியில் உள்ள அரபு நாடான எகிப்தின் முக்கிய சுற்றுலா நகரம் அலெக்சாண்ட்ரியா (Alexandria).
கடற்கரை நகரமான அலெக்சாண்ட்ரியாவில் உள்ள பிரபலமான "போம்பே தூண்" (Pompey's Pillar) எனும் சுற்றுலா தலத்திற்கு வந்திருந்த ஒரு குழுவினரின் மீது அந்நாட்டு காவல்துறை அதிகாரி ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
இதில் 2 இஸ்ரேல் நாட்டை சேர்ந்தவர்களும் ஒரு எகிப்து நாட்டை சேர்ந்தவரும் உயிரிழந்தனர்; மற்றொரு இஸ்ரேல் நாட்டை சேர்ந்தவர் காயமடைந்தார். அவரை இஸ்ரேலுக்கு அனுப்பும் முயற்சியில் எகிப்தும் இஸ்ரேலும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன.
துப்பாக்கி சூடு நடத்திய அந்த அதிகாரி காவலில் எடுக்கப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்தப்பட்ட அந்த சுற்றுலா பகுதியை காவல்துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
சமூக வலைதளங்களில் இது குறித்து வெளியாகியுள்ள ஒரு வீடியோவில் சுடப்பட்ட இருவர் தரையில் கிடப்பதையும், அதில் ஒருவருக்கு தலையிலிருந்து ரத்தம் வெளியாவதும் காண முடிகிறது. சுற்றுலா குழுவை சேர்ந்த இஸ்ரேலி பெண்கள் "ஆம்புலன்ஸ், ஆம்புலன்ஸ்" என உரத்த குரலில் உதவி கேட்பதையும் காண முடிகிறது.
நேற்று முன் தினம் இஸ்ரேல் மீது பாலஸ்தீன ஹமாஸ் தாக்குதல் நடத்தியதனால், பதிலடியாக இஸ்ரேல் பாலஸ்தீன காசா பகுதிக்குள் பெரும் தாக்குதல் வேட்டையை நடத்தி வருகிறது. இப்பின்னணியில், எகிப்தில் இஸ்ரேலியர் சுட்டு கொல்லப்பட்டுள்ளது உலகெங்கும் உள்ள இஸ்ரேலியர்களிடையே பதட்டத்தை அதிகரித்துள்ளது.
- அல்-ஹக்கீம் மசூதி நிர்வாகம் சார்பில் பிரதமர் மோடிக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.
- அமெரிக்கா மற்றும் எகிப்து பயணங்களை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி இந்தியா புறப்பட்டார்.
பிரதமர் மோடி அரசு முறைப்பயணமாக கடந்த 21ம் தேதி அமெரிக்கா சென்றார். பின்னர் வாஷிங்டனில் இருந்து எகிப்து நாட்டுக்கு தனி விமானத்தில் புறப்பட்டுச் சென்றார்.
அங்கு பிரதமர் மோடிக்கு அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது. 26 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் எகிப்து சென்றிருப்பது இதுவே முதல் முறை ஆகும்.
எகிப்தின் ஹெலியோபொலிஸ் போர் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார். உலக போரின்போது வீர மரணம் அடைந்த 3,799 இந்திய படைவீரர்கள் நினைவாக அங்கு அமைக்கப்பட்டுள்ள நினைவுச்சின்னத்தைப் பிரதமர் மோடி பார்வையிட்டு மரியாதை செலுத்தினார்.
மேலும், 11-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டு இந்தியாவைச் சேர்ந்த தாவூதி போரா சமூகத்தினரால் புதுப்பிக்கப்பட்டுள்ள அல்-ஹக்கீம் மசூதியை பிரதமர் மோடி பார்வையிட்டார்.
மசூதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள புகைப்படம், பொருட்கள் உள்ளிட்டவற்றை பிரதமர் மோடி பார்வையிட்டார். அல்-ஹக்கீம் மசூதி நிர்வாகம் சார்பில் பிரதமர் மோடிக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.
அதை தொடர்ந்து கெய்ரோவில் உள்ள மசூதிக்கு சென்ற பிரதமர் மோடி அங்கிருந்தவர்களுடன் கலந்துரையாடினார். பிரதமர் மோடிக்கு எகிப்து நாட்டின் உயரிய விருது என கூறப்படும் ஆர்டர் ஆப் தி நைல் விருது வழங்கி அந்நாட்டு அதிபர் சிசி கவுரவித்தார்.
பின்னர், அமெரிக்கா மற்றும் எகிப்து பயணங்களை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி இந்தியா புறப்பட்டார்
இந்நிலையில், எகிப்து பயணம் குறித்து பிரதமர் மோடி, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "எகிப்து பயணம் வரலாற்று சிறப்புமிக்கதாக அமைந்தது. இந்த பயணம் மூலம் இந்திய- எகிப்து உறவு மேலும் பலப்படுத்தப்படும். எகிப்து அதிபர் மற்றும் அந்நாட்டு மக்களின் அன்பிற்கு நன்றி". இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பிரதமர் மோடி 5 நாள் அரசுமுறை பயணமாக அமெரிக்கா, எகிப்துக்கு புறப்பட்டுச் சென்றார்.
- எகிப்து நாட்டிற்கு முதல் முறையாக பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசுமுறை பயணமாக கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அங்கு அவர் சர்வதேச யோகா தினம் சிறப்பு நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அமெரிக்கா பாராளுமன்றத்திலும் சிறப்புரை ஆற்றினார்.
இதற்கிடையே, அமெரிக்காவில் தனது பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர் மோடி 2 நாள் பயணமாக எகிப்து புறப்பட்டுச் சென்றார்.
இந்நிலையில், எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு சென்றடைந்தார் பிரதமர் மோடி. விமான நிலையத்தில் எகிப்து பிரதமர் முஸ்தபா மாட்போலி உற்சாகமாக வரவேற்றார்.
எகிப்து நாட்டிற்கு முதல் முறையாக பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- எகிப்து ஹெர்ஹெடா மாகாணத்தில் செங்கடல் பகுதி அமைந்துள்ளது.
- சுற்றுலா பயணிகள் யாரும் இந்த பகுதிக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
கெய்ரோ:
எகிப்து ஹெர்ஹெடா மாகாணத்தில் செங்கடல் பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள ஷஹெல் ஹெஷ்ரிப் கடற்கரை சிறந்த சுற்றுலா தளமாக திகழ்ந்து வருகிறது.
இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது உண்டு. நேற்று விடுமுறையை கழிக்க பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் இந்த கடற்கரையில் குவிந்தனர். அவர்கள் உற்சாகமாக கடலில் இறங்கி குளித்தனர். சிலர் படகில் சென்று இயற்கை அழகை ரசித்தனர்.
அப்போது கடலில் குளித்துக்கொண்டு இருந்தவர்களை சுறா திடீரென தாக்கியது. இதில் 2 பெண்கள் கடலுக்குள்ளே இறந்தனர். இதனால் அந்த பகுதி கடல் தண்ணீர் ரத்தமாக காட்சிஅளித்தது. மேலும் சிலர் சுறா தாக்கியதில் படுகாயம் அடைந்தனர். இதை பார்த்த மற்ற சுற்றுலா பயணிகள் பயத்தால் அலறினார்கள். அவர்கள் அவசர, அவசரமாக நீச்சல் அடித்து கரைக்கு வந்தனர்.
காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிசிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியை சுற்றி உள்ள கடற்கரைகளை 3 நாட்கள் மூட அந்நாட்டு அரசு உத்தரவிட்டு உள்ளது. சுற்றுலா பயணிகள் யாரும் இந்த பகுதிக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
எகிப்தில் கொடூர குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. அந்தவகையில் இந்த மாதத்தில் இதுவரை 15 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. அவர்களிடம் சித்ரவதை செய்து வலுக்கட்டாயமாக ஒப்புதல் வாக்குமூலம் பெற்று இருந்ததாகவும், வழக்கு விசாரணையை நேர்மையாக நடத்தாமலும் மரண தண்டனை விதிக்கப்பட்டு இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த புகார்கள் ஐ.நா. மனித உரிமை ஆணையத்துக்கு எட்டியது. இதைத்தொடர்ந்து எகிப்து அரசுக்கு ஐ.நா. மனித உரிமை ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறது. மேலும் மரண தண்டனை நிறைவேற்றுவதை நிறுத்தி வைக்குமாறு அந்த நாட்டு அரசை வலியுறுத்தி உள்ளது.
இது குறித்து மனித உரிமை ஆணைய செய்தி தொடர்பாளர் ருபெர்ட் கால்வில்லே கூறுகையில், ‘மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்பதே ஐ.நா.வின் பொதுவான நிலை. எனினும் சர்வதேச சட்டங்களின்படி மரண தண்டனை அனுமதிக்கப்படுகிறது. ஆனால் இந்த விவகாரத்தில் நேர்மையான விசாரணை இல்லை, சித்ரவதை, வலுக்கட்டாயமாக வாக்குமூலம் பெறுதல் போன்ற பிரச்சினைகள் உள்ளன’ என்று தெரிவித்தார்.
எகிப்து நாட்டின் மூத்த அரசு வக்கீலாக இருந்து வந்தவர் காசிம் பராகாத். இவர் பயங்கரவாதிகளுக்கு எதிரான வழக்கில் அரசு தரப்பில் ஆஜராகி, எண்ணற்ற பயங்கரவாதிகளுக்கு தண்டனை வாங்கி கொடுத்துள்ளார்.
கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் 29-ந் தேதி தலைநகர் கெய்ரோவில் காசிம் பராகாத் சென்று கொண்டிருந்த கார் மீது, பயங்கரவாதிகள் வெடிகுண்டு நிரப்பிய காரை மோதி வெடிக்க செய்தனர். இந்த தாக்குதலில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காசிம் பராகாத் கொலை வழக்கில் பயங்கரவாதிகள் 28 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கு விசாரணையில் 28 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு, கடந்த 2017-ம் ஆண்டு அவர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த நிலையில், அந்த 28 பேரில் 9 பேருக்கு நேற்று முன்தினம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. கெய்ரோவில் உள்ள சிறையில் 9 பேரும் தூக்கிலிடப்பட்டனர். இந்த மாதத்தில் மட்டும் இவர்களுடன் சேர்த்து மொத்தம் 15 பேருக்கு மரண நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்