என் மலர்
நீங்கள் தேடியது "elderly couple"
- தம்பதிக்கு மெஹந்தி வைத்து ஊர்வலமாக அழைத்து வந்தனர்.
- திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் ஹர்ஷ். அதே ஊரை சேர்ந்தவர் மிருதுளா. இருவரும் சிறு வயது முதலே நண்பர்களாக பழகி வந்தனர். பள்ளியிலும் ஒன்றாக படித்து வந்தனர்.
அப்போது அவர்களிடையே காதல் மலர்ந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டது.
கடந்த 1961-ம் ஆண்டு கடுமையான கட்டுப்பாடுகள் நிறைந்த காலம். காதல் திருமணம் என்பது அரிதானது.
இதனால் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த தங்களது காதலை பெற்றோர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை இல்லை.
இதனால் ஹர்ஷ் மற்றும் மிருதுளா பள்ளி பருவத்திலேயே வீட்டை விட்டு வெளியேறி எளிமையான முறையில் கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். அப்போது அவர்கள் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுப்பதில்லை என சபதம் ஏற்றனர்.
இந்த நிலையில் தம்பதிக்கு குழந்தைகள் பிறந்தன. குழந்தைகளை நல்லபடியாக படிக்க வைத்து ஆளாக்கினர்.
அவர்களுக்கும் குழந்தை பிறந்து மகன்கள், மருமகள்கள், பேரக்குழந்தைகள், கொள்ளு பேர குழந்தைகள் என பெரிய குடும்பமாக வளர்ச்சி பெற்றது.
பேரன், பேத்திகளுடன் வாழ்ந்தாலும் தங்களுடைய திருமணம் உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் நடைபெறவில்லை. பிரமாண்ட முறையில் விருந்து வைக்கவில்லை என வயதான பிறகும் தம்பதி ஏக்கத்துடன் இருந்தனர்.
64 ஆண்டுகளுக்குப் பிறகு அவருடைய மகன்கள் தங்களது பெற்றோர் எளிமையான முறையில் காதல் திருமணம் செய்து கொண்டதால் அவர்களுக்கு பிரமாண்ட முறையில் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி பத்திரிகை அச்சடிக்கப்பட்டு உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. மேலும் பெரிய திருமண மண்டபத்தில் பிரம்மாண்டமான முறையில் திருமண ஏற்பாடுகள் நடந்தன.
இன்னிசை கச்சேரி ஆட்டம், பாட்டம் என திருமண மண்டபம் களை கட்டியது. தம்பதிக்கு மெஹந்தி வைத்து ஊர்வலமாக அழைத்து வந்தனர்.
மகன்கள், மருமகள்கள், பேரன்கள், பேத்திகள், கொள்ளுப்பேர குழந்தைகள் முன்னிலையில் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.
திருமண விழாவில் உறவினர்கள் நண்பர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருமண விழாவில் போட்டோ ஷூட் நடந்தது. மண மேடையில் மாலையும் கழுத்துமாக நின்ற தாத்தா, பாட்டியிடம் ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டனர்.
மேலும் செல்பி எடுத்துக் கொண்டனர். திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
இந்த திருமண வீடியோவை பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்பினர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த வீடியோவை பார்த்த சமூக வலைதளவாசிகள் இந்த தலைமுறைக்கு நீங்கள் முன்மாதிரி என பதிவு செய்து வருகின்றனர்.
- வயதான இரு தம்பதியர்கள் தர்மம் எடுத்து சேர்ந்த பணத்தையும், சில்லறை காசுகளையும் செட்டியாபத்து ரோட்டில் உள்ள ஒரு பஸ் நிறுத்த நிழற்குடையில் வைத்து மாலையில் எண்ணிக் கொண்டிருந்தனர்.
- அப்போது அங்கு வந்த டிப்டாப் ஆசாமி என்னிடம் இருக்கும் கருப்பட்டி கொட்டானை வைத்துக் கொள்ளுங்கள் நான் போய் சில்லறையை கொடுத்து விட்டு பணத்தை வாங்கிக் கொண்டு வருகிறேன் என்று கூறிவிட்டு சென்றார்.
உடன்குடி:
உடன்குடியில் நேற்று முன்தினம் வழக்கமாக நடைபெறும் வாரச்சந்தை நடந்தது. இதில் பல ஊர்களில் இருந்து தர்மம் எடுக்க வருவார்கள். அப்படி வந்த வயதான இரு தம்பதியர்கள் காலையில் வந்து உடன்குடி பஜார் வீதிகள் மற்றும் வாரச்சந்தையில் கடை கடையாக தர்மம் எடுத்து சேர்ந்த பணத்தை யும், சில்லறை காசு களையும் செட்டியாபத்து ரோட்டில் உள்ள ஒரு பஸ் நிறுத்த நிழற்குடையில் வைத்து மாலையில் எண்ணிக் கொண்டி ருந்தனர்.
டிப்- டாப் ஆசாமி
அப்போது ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத நேரத்தில் இரு சக்கர வாகனத்தில் அங்கு வந்த டிப்டாப் ஆசாமி, சில்லரைகாசு வேணும் எவ்வளவு இருக்கிறது என்று கேட்டார்? தம்பதியினர் ரூ.1055 இருப்பதாக சொன்னார்கள். என்னிடம் இருக்கும் கருப்பட்டி கொட்டானை வைத்துக் கொள்ளுங்கள் நான் போய் சில்லறையை கொடுத்து விட்டு பணத்தை வாங்கிக் கொண்டு வருகிறேன். அதுவரை இந்த கருப்பட்டி கொட்டான் உங்களிடம் இருக்கட்டும் இதன் விலை ரூ.3000 ஆகும் என்று சொல்லிவிட்டு சில்லரையை வாங்கி சென்றுவிட்டார். மாலை 5 மணிக்கு சென்ற ஆசாமி இரவு 7 மணி வரை காத்திருந்து வரவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த தம்பதியினர் கருப்பட்டி கொட்டானை பிரித்து பார்க்கும் போது அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே கற்கள் மற்றும் கழிவு பொருட்கள் இருந்தது. அதற்கு பின் தான் நாம் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்பது தெரிந்து யாரிடம் போய் சொல்வது, யாரிடம் கேட்பது என வயதான தம்பதி புலம்பிக்கொண்டே இருந்தனர். நூதனமாக நடந்த மோசடி அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.
- வயதான தம்பதி இருவரும் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
- அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்குமாறு டாக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து வயதான தம்பதி இருவருக்கும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ராமேசுவரம்:
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதை தொடர்ந்து, உணவு, காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்தது.
இதனால் அங்குள்ள தமிழர்கள் பலர் அகதிகளாக தமிழகத்திற்கு வர தொடங்கினர். கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து தற்போது வரை ராமேசுவரம் மற்றும் தனுஷ்கோடி பகுதிக்கு சுமார் 100 பேர் அகதிகளாக வந்துள்ளனர்.
இலங்கையில் இருந்து இரவு நேரத்தில் படகு மூலம் குடும்பம் குடும்பமாக வந்து தனுஷ்கோடி பகுதியில் உள்ள மணல்திட்டுகளில் தவித்தப்படி நின்ற அவர்களை, கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மீட்டு மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைத்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று தனுஷ்கோடி கோதண்டராமர் கோவில் எதிரே உள்ள மணல் திட்டில் வயதான தம்பதி இருவர் மயங்கி கிடந்தனர். இலங்கையில் இருந்து அகதியாக வந்த அவர்களை, கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மீட்டனர்.
விசாரணையில் அவர்கள் இலங்கை மன்னார் மாவட்டம் பிருங்கன்பட்டியை சேர்ந்த சிவன் (வயது 82), அவரது மனைவி பரமேஸ்வரி (75) என்பது தெரியவந்துள்ளது. இலங்கையில் கூலி வேலை பார்த்து வந்த அவர்கள், அங்கு நிலவிய விலைவாசி உயர்வால் வாழ முடியாத நிலை ஏற்பட்டு தமிழகத்திற்கு வந்துள்ளனர்.
அவர்களை படகில் அழைத்து வந்தவர்கள் இரவு நேரத்தில் ஆழம் குறைந்த தண்ணீரின் நடுவே இறக்கி விட்டு சென்றதால், வழி தெரியாமல் நடந்து வந்து மணல் திட்டு பகுதிக்கு வந்திருக்கின்றனர். பின்பு வயது முதிர்வு காரணமாக தொடர்ந்து செல்ல முடியாமல் மயங்கி விட்டனர்.
அவர்கள் கிடந்த பகுதிக்கு ஆம்புலன்சு செல்ல முடியாது என்பதால் ஹோவர்கிராப்ட் கப்பல் வரவழைக்கப்பட்டு அதன் மூலம் கரைக்கு கொண்டு வரப்பட்டு ராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். பின்பு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு அவர்களை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்க்கீஸ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த நிலையில் வயதான தம்பதி இருவரும் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்குமாறு டாக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து வயதான தம்பதி இருவருக்கும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள காடையூர் கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சாத்தப்பன் (வயது 78). இவரது மனைவி சுப்பாத்தாள் (63). இவர்கள் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறினர்.
ஆங்காங்கே சென்று வந்த அவர்கள் சமீபத்தில் திருச்சி அருகே உள்ள பெட்டவாய்த்தலை பகுதிக்கு வந்தனர். அங்குள்ள பஸ் நிலையம் பகுதியில் சுற்றித்திரிந்த அவர்கள் நேற்று அதிகாலையில் அங்குள்ள ரெயில்வே தண்டவாளத்தில் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த ஜங்ஷன் ரெயில்வே போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் 2 பேரும் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதைதொடர்ந்து 2 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக சாத்தப்பனின் மகன் குடும்பத்தினருக்கு ரெயில்வே போலீசார் தகவல் தெரிவித்தனர். இதைதொடர்ந்து 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்குப்பின் இன்று அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.
வயதான தம்பதி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த இவர்கள் பெட்டவாய்த்தலை வந்தது ஏன்? தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.