என் மலர்
நீங்கள் தேடியது "Election commission"
- 2-வதாக வந்த கடிதத்தையும் தலைமைக் கழகத்தில் வாங்காமல் தேர்தல் கமிஷனுக்கு திருப்பி அனுப்பி விட்டனர்.
- தபால் திரும்பி வந்ததற்கான அத்தாட்சி நேற்று தேர்தல் கமிஷனுக்கு வந்து விட்டது.
சென்னை:
அ.தி.மு.க. இரு அணிகளாக பிளவுபட்டுள்ள நிலையில் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமியும், ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் ஓ.பன்னீர்செல்வமும் அ.தி.மு.க.வை வழி நடத்தி செயல்பட்டு வருகின்றனர்.
தற்போது வரை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகம் எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. அ.தி.மு.க.வுக்கு வருகிற கடிதங்கள் அனைத்தும் தலைமைக் கழகத்துக்கு தான் அனுப்பப்படுகிறது.
அந்த வகையில் தேர்தல் கமிஷனில் இருந்து அதிகாரப்பூர்வமாக வழங்கப்படும் கடிதங்களும் அ.தி.மு.க.வின் தலைமை கழகத்துக்குதான் அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்த சூழலில் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக அண்மையில் இந்திய சட்ட ஆணையம் அனுப்பிய கடிதம் கூட அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று பெயரிட்டு ராயப்பேட்டையில் உள்ள அதி.மு.க. தலைமைக் கழகத்துக்கு வந்திருந்தது.
இதற்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதுடன், சட்ட ஆணையத்துக்கு தங்களது ஆட்சேபனைகளையும் தெரிவித்திருந்தனர்.
இப்படி எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் இடையே பனிப்போர் நிலவி வருகிறது.
இந்த சூழ்நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்று வரும்போது ஒருவர் எங்கிருந்தாலும் வாக்களிக்கும் வகையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வசதிக்காக ஆர்.வி.எம். என்ற புதிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை (ரிமோட் எலெக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்) தலைமை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்ய உள்ளது.
இது தொடர்பாக வருகிற 16-ந்தேதி ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் அந்தந்த மாநிலத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளிடம் கருத்து கேட்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
அது மட்டுமின்றி தமிழ்நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளான அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு யார் பெயரில் கடிதம் அனுப்ப வேண்டும் என்று அந்த கடிதத்தில் விளக்கி இருந்தது.
அதன்படி அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கும், தி.மு.க., பா.ம.க.வில் தலைவர்களுக்கும், தே.மு.தி.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் பொதுச் செயலாளர்களுக்கும் பதவிகளை குறிப்பிட்டு அழைப்பு அனுப்ப வேண்டும் என்று கூறி இருந்தது.
இந்திய தேர்தல் கமிஷனின் இந்த விளக்க கடிதம் கடந்த வியாழக்கிழமை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவுக்கு கிடைத்ததும் அதன் அடிப்படையில் அவர் ஒவ்வொரு கட்சிக்கும் தேர்தல் கமிஷனின் தபால் பட்டுவாடாவை ஊழியர் மூலம் (மெசேஞ்சர்) ஒவ்வொரு கட்சிக்கும் கொடுத்து அனுப்பினார். அதில் ஒருங்கிணைப்பாளர்-இணை ஒருங்கிணைப்பாளர் என்று இருந்ததால் அந்த கடிதத்தை அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் பெற்றுக்கொள்ளாமல் வியாழக்கிழமையே திருப்பி அனுப்பி விட்டனர்.
இதன் பிறகு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மறுபடியும் வெள்ளிக்கிழமை ஸ்பீடு போஸ்ட் மூலம் அ.தி.மு.க. தலைமைக் கழகத்துக்கு அழைப்பு கடிதம் அனுப்பி வைத்தார்.
2-வதாக வந்த அந்த கடிதத்தையும் தலைமைக் கழகத்தில் வாங்காமல் தேர்தல் கமிஷனுக்கு திருப்பி அனுப்பி விட்டனர். தபால் திரும்பி வந்ததற்கான அத்தாட்சி நேற்று தேர்தல் கமிஷனுக்கு வந்து விட்டது.
இதனால் 16-ந்தேதி நடைபெறும் கூட்டத்தில் அ.தி.மு.க. பங்கேற்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கூறுகையில், "அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர் பதவி இல்லை என்றும் இடைக்கால பொதுச்செயலாளர் பதவிதான் உள்ளது என்றும் இந்திய தேர்தல் கமிஷனுக்கு அ.தி.மு.க. சார்பில் ஏற்கனவே 3 கடிதங்கள் கொடுத்து இருக்கிறோம்.
அ.தி.மு.க. பொதுக்குழு கூடிய விவரங்கள், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், சட்ட திட்டங்கள் எல்லாவற்றையும் அதில் குறிப்பிட்டுள்ளோம்.
எனவே இடைக்கால பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டு மறுபடியும் கடிதம் அனுப்ப வேண்டும் என எதிர்பார்ப்பதாக" தெரிவித்தார்.
எனவே வருகிற 16-ந்தேதி கூடும் தேர்தல் கமிஷன் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் யார்-யார் பங்கேற்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
- 2-வதாக வந்த கடிதத்தையும், அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் வாங்காமல் தேர்தல் கமிஷனுக்கு திருப்பி அனுப்பி விட்டனர்.
- தபால் திரும்பி வந்ததற்கான அத்தாட்சி நேற்று முன்தினம் தேர்தல் கமிஷனுக்கு வந்து விட்டது.
சென்னை:
அ.தி.மு.க. இரு அணிகளாக பிளவுபட்டு உள்ள நிலையில் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமியும், ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் ஓ.பன்னீர்செல்வமும் அ.தி.மு.க.வை வழி நடத்தி வருகின்றனர்.
இதில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகம் எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. அ.தி.மு.க.வுக்கு வரும் கடித தொடர்புகள் அனைத்தும் தலைமைக் கழகத்துக்குதான் அனுப்பப்படுகிறது.
அந்த வகையில் தேர்தல் கமிஷனில் இருந்து அதிகாரப்பூர்வமாக வழங்கப்படும் கடிதங்களும் அ.தி.மு.க. தலைமைக் கழகத்துக்குதான் அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்த நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக அண்மையில் இந்திய சட்ட ஆணையம் அனுப்பிய கடிதம் கூட அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று பெயரிட்டுதான் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்துக்கு வந்திருந்தது.
இதற்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதுடன் சட்ட ஆணையத்துக்கு தங்களது ஆட்சேபனைகளையும் தெரிவித்திருந்தனர்.
இப்படி எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் இடையே பனிப்போர் நிலவி வருகிறது.
இந்த நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்று வரும்போது ஒருவர் எங்கிருந்தாலும் வாக்களிக்கும் வகையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வசதிக்காக ஆர்.வி.எம். என்ற புதிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை (ரிமோட் வாக்குப்பதிவு) தலைமை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்ய உள்ளது.
இது தொடர்பான ஆலோசனை கூட்டம் வருகிற 16-ந்தேதி ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநில தலைமை தேர்தல் அதிகாரியால் நடத்தப்பட உள்ளது.
இந்த கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளான அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் கருத்தை கேட்டறிய யார் பெயருக்கு கடிதம் அனுப்ப வேண்டும் என்பதை விளக்கி இந்திய தேர்தல் ஆணையம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு ஒரு விளக்க கடிதம் அனுப்பி இருந்தது.
அதில் அ.தி.மு.க.வுக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் கடிதம் அனுப்ப வேண்டும் என்றும் தெளிவுபடுத்தி இருந்தது.
இதன் அடிப்படையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கடந்த வியாழக்கிழமை தபால் பட்டுவாடா செய்யும் மெசேஞ்சர் மூலம் அ.தி.மு.க. தலைமைக் கழகத்துக்கு கடிதம் கொடுத்து அனுப்பி இருந்தார். இதே போல் தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளுக்கும் தபால் கொடுத்து அனுப்பினார்.
இதில் அ.தி.மு.க. தலைமைக் கழகத்துக்கு வந்த கடிதத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று இருந்ததால் அந்த கடிதத்தை அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் பெற்றுக் கொள்ளாமல் திருப்பி அனுப்பி விட்டனர்.
இதன் பிறகு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மறுபடியும் வெள்ளிக்கிழமை 'ஸ்பீடு போஸ்ட்' மூலம் அ.தி.மு.க. தலைமைக் கழகத்துக்கு அழைப்பு கடிதம் அனுப்பி வைத்தார்.
2-வதாக வந்த அந்த கடிதத்தையும், அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் வாங்காமல் தேர்தல் கமிஷனுக்கு திருப்பி அனுப்பி விட்டனர். தபால் திரும்பி வந்ததற்கான அத்தாட்சி நேற்று முன்தினம் தேர்தல் கமிஷனுக்கு வந்து விட்டது.
இதனால் கடிதம் திரும்பி வந்த விசயத்தை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று இ.மெயில் மூலம் தெரிவித்துள்ளார். இனி மேல் தேர்தல் ஆணையம் என்ன முடிவு செய்யும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்த சூழ்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்துக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் என்ற வகையில் பிரதிநிதியை அனுப்பி வைப்பதாக தெரிவித்துள்ளார்.
அது மட்டுமின்றி இனிவரும் கடிதங்களை தங்களுக்கு இ.மெயில் மூலம் அனுப்பி வைக்குமாறும் அதில் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆனால் எடப்பாடி பழனிசாமி தரப்பில் அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணிப்பது என முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது. சேலத்தில் இருந்து நேற்று சென்னை வந்த எடப்பாடி பழனிசாமி இது தொடர்பாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்துள்ளார்.
அப்போது நடைபெற்ற ஆலோசனையில் தேர்தல் கமிஷன் மறுபடியும் நமக்கு இடைக்கால பொதுச்செயலாளர் என்று கடிதம் அனுப்பினால் நேரில் சென்று பங்கேற்கலாம். அப்படி கடிதம் அனுப்பாத நிலையில் தேர்தல் கமிஷனின் கூட்டத்தில் பங்கேற்றால் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் நாம் கலந்து கொண்டதாக பதிவு செய்யப்பட்டு விடும்.
எனவே இதை தவிர்ப்பதற்காக அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பெயரில் கடிதம் வாயிலாக அ.தி.மு.க.வின் கருத்துக்களை எழுதி கொடுத்து விடலாம் என்று தெரிவித்ததாக தெரிகிறது.
தேர்தல் கமஷனின் ஆலோசனை கூட்டத்துக்கு இன்னும் 12 நாட்கள் அவகாசம் இருப்பதால் பொறுத்திருந்து அதற்கேற்ப முடிவு செய்யலாம் என்றும் கருத்து பரிமாற்றம் நடந்துள்ளது.
அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர் செல்வம் இடையேயான பனிப்பேர் எப்போது முடிவுக்கு வரும் என்பதை கட்சி நிர்வாகிகள் ஆதங்கத்துடன் எதிர்பார்க்க தொடங்கி விட்டனர்.
- தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
- ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்முறை குறித்து காங்கிரஸ் கேள்வி எழுப்பியது.
புதுடெல்லி:
இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் வாக்களிக்க வகை செய்யும் ரிமோட் வாக்குப் பதிவு இயந்திரங்களை தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது. இந்த ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசிக்க இன்று (திங்கட்கிழமை) அரசியல் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை தேர்தல் ஆணையம் கூட்டியது.
இக்கூட்டத்தில் தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அப்போது, ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மாதிரியை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தேர்தல் ஆணையம் காட்சிப்படுத்தியது. இந்த இயந்திரத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
தேர்தல் ஆணையத்தின் தொழில்நுட்ப குழுவினர் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்கும் இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து செயல் விளக்கம் அளிப்பதாக இருந்தது. ஆனால் எதிர்க்கட்சிகள் இந்த பிரச்சனை குறித்து விவாதிக்க கூடுதல் அவகாசம் கோரியதை அடுத்து, ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பற்றி விளக்கம் அளிக்கவில்லை.
பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், இந்த வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்முறை குறித்து கேள்வி எழுப்பியது. தொலைதூர வாக்காளர்களை அடையாளம் காண்பது முதல் வெவ்வேறு இடங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் நடைமுறை வரை பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது.
இந்த வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஜனவரி 31ஆம் தேதிக்குள் எழுத்துப்பூர்வ கருத்துக்களை தெரிவிக்கும்படி தேர்தல் ஆணையம் கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளை நீக்க வாக்காளர் பதிவு அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
- சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி :
நாட்டில் நடைபெறும் உள்ளாட்சி, சட்டப்பேரவை, பாராளுமன்ற தேர்தல்களுக்கு ஒரே வாக்காளர் பட்டியலை பயன்படுத்தவும், வாக்காளர் பட்டியலிருந்து நீக்கப்பட்டு வாக்குரிமை மறுக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க மத்திய அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எம்.ஜி.தேவசகாயம் என்பவர் தாக்கல் செய்த இந்த பொதுநல மனுவை நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் சார்பில் தாக்கலான பதில்மனுவில், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்படுவதற்கு முன் வாக்காளர்களுக்கு முறையாக நோட்டீஸ் அனுப்பப்பட்டு அவர்களின் கருத்து கேட்கப்படுகிறது. அதன்பிறகுதான் பெயர் நீக்கம் செய்யப்படுகிறது. வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளை நீக்க வாக்காளர் பதிவு அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் முறையான நோட்டீஸ் இல்லாமல், கருத்தைக் கேட்காமல் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்க அதிகாரம் இல்லை என தெரிவித்துள்ளது.
- நாங்கள் எங்கள் அலுவலக புதிய முகவரியை ஏற்கனவே தேர்தல் அதிகாரியிடம் கொடுத்து இருந்தோம்.
- தேர்தல் ஆணையம் வழங்கிய அனைத்துக்கட்சிகளின் முகவரிக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேர்தல் விதிமுறைகளை கடைபிடிப்பது பற்றி ஆலோசிக்க அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான கிருஷ்ணனுண்ணி அழைப்பு விடுத்து இருந்தார்.
இந்த ஆலோசனை கூட்டத்துக்கு அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் துரைசாமி என்பவர் கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு அழைப்பு கிடைக்காததால் யாரும் கலந்து கொள்ளவில்லை. இதுபற்றி ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மாவட்ட செயலாளர் முருகானந்தம் கூறும்போது, கலெக்டரிடம் இருந்து முறையான அழைப்பு கடிதம் வராததால் கலந்து கொள்ளவில்லை.
நாங்கள் எங்கள் அலுவலக புதிய முகவரியை ஏற்கனவே தேர்தல் அதிகாரியிடம் கொடுத்து இருந்தோம். இந்த கூட்டத்தில் பங்கேற்க முடியாததால் எங்கள் வெற்றி வாய்ப்பு பாதிக்காது. விரைவில் தேர்தல் பணிகளை தொடங்குவோம் என்றார்.
அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, தேர்தல் ஆணையம் வழங்கிய அனைத்துக்கட்சிகளின் முகவரிக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது என்று கூறினார்கள்.
கட்சி அலுவலகம் தற்போது எடப்பாடி பழனிசாமி அணியினரின் கட்டுப்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
- ஜூலை 11ம் தேதி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளவில்லை
- இரட்டை இலை சின்னம் குறித்த எந்த வழக்கும் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யப்படவில்லை.
புதுடெல்லி:
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி, உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 3 நாட்களில் எதிர் மனுதாரர்கள் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்தனர். தேர்தல் ஆணையத்துக்கும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பினருக்கும் பதிலளிக்க நோட்டீசு அனுப்ப உத்தரவு பிறப்பித்தனர்.
அதன்படி தேர்தல் ஆணையம் பதில் மனுவை தாக்கல் செய்துள்ளது. அதில், ஜூலை 11ம் தேதி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்றுக்கொள்ளவில்லை, பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கு உள்ளதால் ஏற்றுக்கொள்ளவில்லை, என கூறப்பட்டுள்ளது.
மேலும், இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது இடைத்தேர்தல் நடத்தும் அலுவலரின் முடிவுக்கு உட்பட்டது. இரட்டை இலை சின்னம் குறித்த எந்த வழக்கும் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யப்படவில்லை. இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவு எடுப்பார், என்றும் தேர்தல் ஆணையம் தனது பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த பதில் எடப்பாடி பழனிசாமிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
- இரட்டை இலை சின்னத்தை சட்ட ரீதியாக பெற அனைத்து முயற்சிகளையும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் எடுக்கப்பட்டு வருகிறது.
- சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணை இன்று நடைபெற உள்ள நிலையில் சி.வி.சண்முகம் தேர்தல் ஆணையத்தை நாடுவது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை:
சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. வழக்கு விசாரணை நடந்து முடிந்துள்ள நிலையில் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பில் இடையூட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதற்கு பொதுக்குழுவை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை. வழக்கு நிலுவையில் உள்ளதால் இடைக்கால பொதுச்செயலாளராக ஏற்கவில்லை என்று பதில் அளித்து இருந்தது.
பொதுக்குழு முடிவை தேர்தல் ஆணையம் ஏற்காத நிலையில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு எம்.பி.யான சி.வி.சண்முகம் இன்று டெல்லி சென்றார்.
இந்திய தேர்தல் ஆணையத்திடம் ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட ஏதுவாக இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று நேரில் முறையிடுகிறார்.
இரட்டை இலை சின்னத்தை சட்ட ரீதியாக பெற அனைத்து முயற்சிகளையும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் எடுக்கப்பட்டு வருகிறது.
சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பாக வழக்கு விசாரணை இன்று நடைபெற உள்ள நிலையில் சி.வி.சண்முகம் தேர்தல் ஆணையத்தை நாடுவது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- எடப்பாடி பழனிசாமி தரப்பில் 40 பேர் அடங்கிய நட்சத்திர பேச்சாளர் பட்டியல் தேர்தல் கமிஷனில் கொடுக்கப்பட்டிருந்தது.
- ஓ.பன்னீர்செல்வம் கொடுத்த பட்டியலை தேர்தல் கமிஷன் நிராகரித்து விட்டது.
சென்னை:
ஈரோடு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. தென்னரசு போட்டியிடுகிறார்.
இவரை ஆதரித்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் பலர் ஓட்டு கேட்டு வருகின்றனர்.
அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்ய தேர்தல் கமிஷனில் அனுமதி பெற வேண்டும் என்பதால் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் 40 பேர் அடங்கிய நட்சத்திர பேச்சாளர் பட்டியல் தேர்தல் கமிஷனில் கொடுக்கப்பட்டிருந்தது.
இதே போல் ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் ஆரம்பத்தில் நட்சத்திர வேட்பாளர் பட்டியல் கொடுக்கப்பட்டிருந்தது. அ.தி.மு.க. தரப்பில் இரு பட்டியல் கொடுக்கப்பட்டதால் அதை இந்திய தேர்தல் கமிஷன் அனுமதிக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அனுப்பி இருந்தார்.
இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தனது அணி வேட்பாளரான செந்தில்முருகனை போட்டியில் இருந்து வாபஸ் பெற வைத்தார்.
இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. வேட்பாளராக தென்னரசு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
இவரை ஆதரித்து பிரசாரம் செய்யும் நட்சத்திர பேச்சாளர்கள் 40 பேர்களுக்கு இப்போது தேர்தல் கமிஷன் அனுமதி அளித்தது.
1. எடப்பாடி பழனிசாமி, 2. கே.ஏ.செங்கோட்டையன், 3. தமிழ்மகன் உசேன், 4. கே.பி.முனுசாமி, 5. திண்டுக்கல் சீனிவான், 6. நத்தம் விசுவநாதன், 7.பொன்னையன், 8. தங்கமணி, 9. எஸ்.பி.வேலுமணி, 10. பொள்ளாச்சி ஜெயராமன், 11. டி.ஜெயக்குமார், 12.சி.வி.சண்முகம், 13. வளர்மதி, 14. செல்லூர் ராஜூ, 15. கே.பி.அன்பழகன், 16.ஆர்.காமராஜ், 17. ஓ.எஸ்.மணியன், 18. கோகுல இந்திரா, 19. ஆர்.பி.உதயகுமார், 20. ராஜேந்திர பாலாஜி, 21. கடம்பூர் ராஜூ, 22. வைகைச் செல்வன், 23. கே.வி.ராமலிங்கம், 24. கே.சி.பழனிசாமி உள்பட 40 பேர் இடம் பெற்றுள்ளனர்.
ஓ.பன்னீர்செல்வம் கொடுத்த பட்டியலை தேர்தல் கமிஷன் நிராகரித்து விட்டது.
- தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி 5-ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
- ஈரோடு கிழக்கு தொகுதியில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 25 ஆண் வாக்காளர்கள்; 1 லட்சத்து 16 ஆயிரத்து 497 பெண் வாக்காளர்கள்.
சென்னை:
தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி 5-ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி ஈரோடு கிழக்கு தொகுதியில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 713 ஆண் வாக்காளர்கள்; 1 லட்சத்து 16 ஆயிரத்து 140 பெண் வாக்காளர்கள்; 23 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 876 வாக்காளர்கள் இருந்தனர்.
மேலும் வழக்கம்போல தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்குவது, திருத்துவது ஆகியவற்றுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தன.
இந்த நிலையில் அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வெ.ரா. இறந்ததால் அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
எனவே இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதில் இருந்து இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியான நாள் வரையில் வரப்பெற்ற விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, வாக்காளர் பட்டியலில் இருந்து 145 பெயர்கள் நீக்கப்பட்டன.
இடைத்தேர்தல் நடப்பதால் அந்தத் தொகுதியில் 7-ந்தேதிவரை (வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள்) வாக்காளர் பெயர்களை சேர்க்க முடியும். அந்த வகையில் 375 ஆண் வாக்காளர்கள், 439 பெண் வாக்காளர்கள், 2 மூன்றாம் பாலினத்தவர் என 816 பெயர்கள் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் தற்போதுள்ள ஈரோடு கிழக்கு தொகுதியின் துணை வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்டது. அதன்படி அங்கு 1 லட்சத்து 11 ஆயிரத்து 25 ஆண் வாக்காளர்கள்; 1 லட்சத்து 16 ஆயிரத்து 497 பெண் வாக்காளர்கள்; 25 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 வாக்காளர்கள் இடம்பெற்று உள்ளனர்.
- புகார் அளித்தும் இதுவரை தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை.
- திமுக மாவட்ட நிர்வாகத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு தொகுதியில் பல்வேறு அராஜகங்களை செய்து வருகிறது.
டெல்லியில் அதிமுக எம்.பி சிவி சண்முகம் கூறியதாவது:
ஈரோடு தொகுதி இடைத் தேர்தல் தொடர்பான முறைகேடுகள் குறித்து கடந்த 3ம் தேதி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தோம். ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 2,26,876 வாக்களர்கள் உள்ளதாக பட்டியல் கொடுக்கப்பட்டிருந்தது. இறந்தவர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது. புகார் அளித்தும் இதுவரை தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை.
வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறது ஆனால் அந்த வாக்காளர்கள் அங்கு குடியிருக்கவில்லை. வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறது ஆனால் சரிபார்க்கும் போது அவர் இறந்திருக்கிறார், பெயர் நீக்கப்படவில்லை. வாக்காளர் பட்டியலில் ஒரு இடத்தில் இருக்கும் வாக்காளர் மற்றொரு இடத்திலும் இருக்கிறார். இப்படி குளறுபடி ஏற்பட்டிருக்கிறது. ஒரு குடும்பத்தில் 5 வாக்குகள் இருந்தால் அந்த 5 வாக்குகளும் ஒரே விலாசத்தில் இல்லை. இந்த வாக்காளர் பட்டியல் முழுமையாக திருத்தப்படவில்லை. ஒரு மோசடியான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் ஒவ்வொரு பூத் வாரியாக முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். அந்த வாக்காளர் பட்டியலை நீக்கி முழுமையான தகுதியுள்ள வாக்காளர் பட்டியலை வெளியிடவேண்டும் என்று நாங்கள் குறிப்பிட்டிருக்கிறோம்.
திமுக மாவட்ட நிர்வாகத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு தொகுதியில் பல்வேறு அராஜகங்களை செய்து வருகிறது. காவல் துறை திமுகவின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறது. தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முறையாக செயல்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
- பாதுகாப்புப்பணியில் 5 கம்பெனி துணை ராணுவப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
- தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
சென்னை :
தலைமைச்செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அளித்த பேட்டி வருமாறு:-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக, இந்திய தேர்தல் கமிஷனின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றுள்ளது. துணைத் தேர்தல் கமிஷனர் அஜய் தலைமையில் காணொலிக்காட்சி மூலம் இந்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில், ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான கிருஷ்ணன் உன்னி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர். இடைத்தேர்தலை அமைதியாகவும், சுதந்திரமாகவும் நடத்த தேவையான ஆலோசனைகளை இந்திய தேர்தல் கமிஷன் அளித்துள்ளது.
அந்தத்தொகுதியில் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பறக்கும் படைக்குழுக்கள் மற்றும் நிலையான கண்காணிப்புக்குழுக்களின் எண்ணிக்கை 3-ல் இருந்து 4-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவார்கள். தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதற்காக ஆயிரத்து 430-க்கும் அதிகமான வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. 16-ந்தேதி (இன்று) இந்த எந்திரங்களில் 2-ம் கட்ட சோதனைகள் நடத்தப்படுகின்றன.
பாதுகாப்புப்பணியில் 5 கம்பெனி துணை ராணுவப்படையினர் ஈடுபட்டுள்ளனர். மத்திய தொழில் பாதுகாப்புப்படையைச் சேர்ந்த 2 கம்பெனிகளும், ரிசர்வ் பாதுகாப்புப்படையை சேர்ந்த 2 கம்பெனிகளும், இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப்படையை சேர்ந்த ஒரு கம்பெனியும் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளது. மேலும், அந்தத் தொகுதியில் பாதுகாப்புப்பணியை அதிகரிக்கும் வகையில், தமிழ்நாடு ஆயுதப்படையை சேர்ந்த 2 கம்பெனிகளும் அந்தத்தொகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் சம்பந்தமாக எந்தவித புகார்கள் அளிக்கப்பட்டாலும் அதில் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இந்திய தேர்தல் கமிஷனின் சார்பில் தேர்தல் பார்வையாளர்கள், அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அந்தத்தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக பெறப்பட்ட புகார்கள் மற்றும் அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான விவரங்களை தேர்தல் கமிஷனிடம் பார்வையாளர்கள் அனுப்பி வைப்பார்கள்.
புகார்களை ஆதாரத்துடன் அளித்தால் அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க பார்வையாளர்கள் மற்றும் அனைத்து தேர்தல் தொடர்பான அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் கமிஷன் அறிவுரை வழங்கியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று டெல்லியில் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுக்கப்பட்டது.
- நடைபெறும் முறைகேடுகள், ஆளும் கட்சியின் அராஜகங்கள் பற்றி எந்த புகார் கொடுத்தாலும் ஏற்க அதிகாரிகள் தயாராக இல்லை.
புதுடெல்லி:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று டெல்லியில் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுக்கப்பட்டது.
அந்த கட்சியின் சட்டப்பிரிவு நிர்வாகி ஜெகதீஸ்வரன் நேரில் சென்று புகார் அளித்தார். அந்த புகாரில் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு சேகரிக்க முடியாத நிலை உள்ளது. அங்கு நடைபெறும் முறைகேடுகள், ஆளும் கட்சியின் அராஜகங்கள் பற்றி எந்த புகார் கொடுத்தாலும் ஏற்க அதிகாரிகள் தயாராக இல்லை. இது தொடர்பாக ஏற்கனவே மாநில தேர்தல் அலுவலகத்தில் புகார் தெரிவித்து இருக்கிறோம். இதுவரை எந்த நடவடிக்கை எடுக்காததால் தங்கள் பார்வைக்கு கொண்டு வருகிறோம்.
இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.