search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "electricity facility"

    • தனது குடிசை வீட்டில் இதுவரை மின்சார வசதி இல்லாததால் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் தான் படித்தேன்.
    • மின்வசதி இல்லாத போது படித்ததை விட மேலும் சிறப்பாக இனிமேல் படிப்பேன் என்று மாணவி தெரிவித்தார்.

    மின் வசதி இன்றி குடிசை வீட்டில் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் படித்து 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவாரூர் மாவட்ட அளவில் 2ம் பிடித்த அரசுப்பள்ளி மாணவி துர்காதேவியின் வீட்டிற்கு இலவச மின்சார இணைப்பு வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

    திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு தேர்வு எழுதிய பாலா மற்றும் சுதா தம்பதியின் மகளான துர்காதேவி 492 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதல் இடத்தையும் மாவட்ட அளவில் 2ம் இடமும் பிடித்து சாதனை படைத்துள்ளார். இவரது தந்தை பாலா மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார்.

    மாணவி துர்கா தேவி கூறுகையில், "தனது குடிசை வீட்டில் இதுவரை மின்சார வசதி இல்லாததால் தொடர்ந்து சார்ஜர் விளக்கு மற்றும் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் தான் படித்தேன். எனவே என்னுடைய வீட்டிற்கு மின்சார வசதி கொடுப்பதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

    இந்த தகவல் அறிந்த திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் நேரில் சென்று மாணவியின் வீட்டை ஆய்வு செய்தனர். பின்னர் மாணவியின் வீட்டின் முன் 3 மின்கம்பங்களை நட்டு மின் இணைப்பு தந்துள்ளனர்.

    இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த மாணவி, என்னுடைய நோக்கம் மருத்துவராக வேண்டும் என்பதுதான், மின்வசதி இல்லாத போது படித்ததை விட மேலும் சிறப்பாக இனிமேல் படிப்பேன் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 

    • தொரடி ப்பட்டு ஊராட்சியில் ஆத்து வளவு என்கிற ஆத்துக்காடு கிராமம் உள்ளது.
    • மின்சாரம் இல்லாத ஒரு கிராமமாக இந்த கிராமம் உள்ளது

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை ஒன்றி யத்திற்கு உட்பட்ட தொரடி ப்பட்டு ஊராட்சியில் ஆத்து வளவு என்கிற ஆத்துக்காடு கிராமம் உள்ளது. தொரடிப்பட்டு கிராமத்தில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தூரம் ஒத்தையடிப் பாதை வழியாகச் சென்றால் ஆத்துக்காடு என்கிற ஆத்து வளவு கிராமத்திற்கு செல்லலாம். அங்கு சுமார் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல தலைமுறையாக இந்த பகுதியில் வசித்து வந்தாலும் ,இதுவரை மின்சாரம் இல்லாமல் மின் துறையினரின் கண்ணில் படாத ஒரு கிராமமாக இந்த ஆத்துக்காடு கிராமம் உள்ளது. செல்போனுக்கு சார்ஜ் வேண்டுமென்றாலும் அருகில் உள்ள கிராம த்திற்குச் சென்று தான் செல்போன் சார்ஜ் செய்து வருகிறார்கள். உலகமே டிஜிட்டல் மயமாக இருந்து வரும் இந்த கால கட்டத்தில் கல்வரா யன்மலை ஆத்துக்காடு கிராமத்தில் மின்சாரம் இல்லாத ஒரு கிராமமாக இந்த கிராமம் உள்ளது என்பது வேடிக்கை யாகத்தான் உள்ளது. ஆகையால் இப்பகுதி மக்கள் அரசு அதிகாரிகளின் கண்ணில் படாத ஒரு தனி தீவு போல் வசித்து வருகிறார்கள். ஆகையால் இப்பகுதி மக்களுக்கு மின்சாரம் வசதி அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • சில ஆண்டுகளுக்கு பின் சோலார் பேனல்கள் படிப்படியாக பழுதடைந்தன.
    • சில ஆண்டுகளுக்கு பின் சோலார் பேனல்கள் படிப்படியாக பழுதடைந்தன.

    உடுமலை:

    ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை அமராவதி வனச்சரகத்தில் 13 மலைவாழ் குடியிருப்பு பகுதிகள் உள்ளன. தளிஞ்சி, மாவடப்பு ,ஈசல் தட்டு உள்பட குடியிருப்புகளில் தலா 200-க்கும் அதிகமான வீடுகள் உள்ளன .அடர்ந்த வனப்பகுதியில் இருப்பதால் இங்கு உள்ள குடியிருப்புகளுக்கு மின் வசதி இதுவரை அளிக்கப்படவில்லை.சில ஆண்டுகளுக்கு முன்பு தளிஞ்சி உட்பட்ட பகுதிகளுக்கு சூரிய ஒளியில் மின்சாரம் உற்பத்தி செய்து விளக்குகளை பயன்படுத்த தேவையான சோலார் பேனல்கள் அரசால் வழங்கப்பட்டன. இம்முறையில் தெரு விளக்குகளும் வீடுகளுக்கான பேனல்களும் அமைக்கப்பட்டன .நீண்ட கால கோரிக்கை நிறைவேறிய மகிழ்ச்சியில் பகுதி மக்கள் இருந்தனர். இதனால் இருளில் தவித்து வந்த கிராமங்களுக்கு சூரிய ஒளியும் மின்விளக்குகள் சிறிய ஒளி அளித்தது. இந்த பேனல்களை பயன்படுத்தி சில மின்சார பொருள்களையும் அங்குள்ள மக்கள் பயன்படுத்தி வந்தனர் .

    இதன் மூலம் வனவிலங்குவருவதை அறிந்து கொள்ள குடியிருப்புகளுக்கு தெருவிளக்குகள் பயன்பட்டன .இவ்வாறு பல பயன்களை அளித்துவந்த சோலார் பேனல்களை பராமரிப்பது குறித்துஇப் பகுதி மக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை. சில ஆண்டுகளுக்கு பின் சோலார் பேனல்கள் படிப்படியாக பழுதடைந்தன.

    சரி பார்க்கும் தொழில்நுட்பம் தெரியாததால் பல மலைவாழ் குடியிருப்புகளில் தெரு விளக்குகள் தற்போது எரிவதில்லை. வீடுகளுக்கு வழங்கப்பட்ட பேனல்களும் அடிக்கடி பழுதடைவதால் அப்பகுதி மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

    தெருவிளக்குகளும் காட்சி பொருளாக உள்ளது. மலைவாழ் கிராமங்கள் சிறப்பு திட்டத்தின் கீழ் சோலார் பேனல்களை புதுப்பிக்கவும் மாற்றி அமைக்கவும் மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைவாழ் கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • உயர் கோபுர மின் விளக்கு அமைப்பதற்கான பணி நடந்து வருகிறது.
    • கோவிலுக்கு வேண்டிய மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம்.

    திருப்பூர்:

    திருமுருகன்பூண்டியில் புகழ்பெற்ற திருமுருகநாத சுவாமி கோவில் உள்ளது. கோவில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.பக்தர்கள் வசதிக்காக கோவில் வளாகத்தில் உயர் கோபுர மின் விளக்கு அமைக்க நீலகிரி எம்.பி ராசா, தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 10 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார்.உயர் கோபுர மின் விளக்கு அமைப்பதற்கான பணி நடந்து வருகிறது. விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அதுபோல் கோவில் மற்றும் பக்தர்கள் பாதுகாப்பு கருதி பக்தர்கள் பங்களிப்பில் கோவில் கர்ப்பகிரகம், சன்னதி, மண்டப உட்பகுதி உள்ளிட்டவற்றில் 16 சி.சி.டி.வி.கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.8 லட்சம் ரூபாய் செலவில் சோலார் மின் தகடு அமைக்கப்பட உள்ளது. கோவிலுக்கு வேண்டிய மின்சாரத்தை இதன் மூலம் உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    • மாநகராட்சி சார்பில் புதிதாக பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது.
    • பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதை, மின்விளக்கு வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அமைய உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் நாஞ்சிக்கோ ட்டை சாலை வருமான வரித்துறை அலுவலகம் பின்புறம் நியூ காவேரி நகர் (பாத்திமா நகர்) அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் மாநகராட்சி சார்பில் புதிதாகபூங்கா அமைக்க முடிவு செய்யப்ப ட்டது. அதற்கான பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது.இதில் மாநகராட்சி மேயர் சண் ராமநாதன் தலைமை தாங்கி பூங்கா அமைக்கும் பணிக்கான பூமி பூஜையை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்த பூங்காவானது 16410 சதுர அடியில் ரூ.31.5 லட்சம் மதிப்பீட்டில் அமைய உள்ளது. பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதை, மின்விளக்கு வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அமைய உள்ளது.

    இந்த பூமி பூஜை விழாவில் மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மண்டல தலைவர் ரம்யா சரவணன், கவுன்சிலர் தமிழரசி, சுகாதார ஆய்வாளர் மோகன பிரியதர்ஷினி, பணி ஆய்வாளர் ராமலிங்கம், துப்புரவு மேற்பார்வையாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அனைத்து வார்டுகளிலும் உள்ள தெருக்களின் சாலைகளை பருவமழை தொடங்குவதற்கு முன்பாக சீரமைக்க வேண்டும்.
    • தொழிலாளர்களுக்கு நகர்ப்புற வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு திட்டத்தை செயல்படுத்திட வேண்டும்.

    பாநாசம்:

    பாநாசம் இந்திய மக்கள் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மக்கள் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பாபநாசம் பேரூராட்சியில் அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்ற வலியுறுத்தி பாபநாசம் பழைய பஸ் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் உமாபதி தலைமை வகித்தார். பாபநாசம் பழைய பஸ் நிலையத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இலவச கழிப்பறை வசதி கட்டி தர வேண்டும்.

    பாபநாசம் பேரூரா ட்சியில் வசிக்கும் தொழிலா ளர்களுக்கு நகர்ப்புற வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு திட்டத்தை செயல்படுத்திடவேண்டும். பாபநாசம் பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டு களிலும் உள்ள தெருக்களின் சாலைகளை பருவமழை தொடங்குவதற்கு முன்பாக சீரமைக்க வேண்டும்.

    திருப்பாலைத்துறை எஸ்.பி.ஜி மிஷின் தெரு, காளியம்மன் கோவில் தெரு பகுதிகளுக்கு சுடுகாட்டுக்கு மின்விளக்கு வசதி அமைக்க வேண்டும், ஆழ்குழாய் பம்பு அமைத்திட வேண்டும், சுகாதார வளாகத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு உட்படு த்த வேண்டும் ஆகிய கோரி க்கைகளைவலியுறு த்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில்ஈடுப ட்டனர்.

    இந்த ஆர்ப்பா ட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் ரபீக், மாநில பொருளாளர் அபிபுல்லா, மாநில அமைப்பாளர் அப்பாஸ் மந்திரி, தஞ்சை மாவட்ட தலைவர் அன்புராஜ், தஞ்சை மாவட்ட செயலாளர் செம்மலர்ச் செல்வி, பாபநாசம் ஒன்றிய தலைவர் கஸ்தூரி, பாபநாசம் ஒன்றிய செயலாளர்கள் ஷீலா, துரைகண்ணன், சீனிவாசன், மாநில துணைச் செயலாளர் ஜான், தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ்குமார், பாபநாசம் ஒன்றிய தலைவர் வீரமணி, அய்யம்பேட்டை நகர தலைவர் மகாலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மின்சார வசதி கேட்டு செந்துறையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    செந்துறை:

    செந்துறை-உடையார் பாளையம் சாலையில் உள்ள திடீர் குப்பம் பகுதியில் இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் முன்பு செந்துறை சித்தேரி கரையில் வசித்தனர். ஏரியில் அதிக அளவில் நீர் வந்ததையடுத்து உடையார் பாளையம் சாலையில் அரசுக்கு சொந்தமான இடத்தில் வசித்து வருகின்றனர்.

    இவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் வீட்டுமனை பட்டா கேட்டு மனு அளித்தும் பட்டா வழங்கவில்லை, இதனால் மின்சாரம் பெற முடியாமல் உள்ளனர். அரசின் குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் கார்டு விலையில்லா மிக்சி, கிரைண்டர், பேன் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் கிடைத்தும் அதனை பயன்படுத்த மின் வசதி இல்லாததால் மிகவும் சிரமப்படுகின்றனர்.

    இதனால் மின் வசதி கேட்டு செந்துறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டையுடன் பெண்கள், சிறுவர்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் செந்துறை இன்ஸ் பெக்டர் ராஜ்குமார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அப்போது இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    இதனால் செந்துறை -உடையார்பாளையம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ×