என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Elimination of plastic"
- மாணவ- மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர்.
- பேரணியானது தலைஞாயிறு பள்ளியில் இருந்து தொடங்கி பேரூராட்சி அலுவலகத்தில் முடிவடைந்தது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த தலைஞாயிறு பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
ஊர்வலத்தை பேரூராட்சி தலைவர் செந்தமிழ் செல்வி பிச்சையன் தொடங்கி வைத்தார்.
பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன் முன்னிலை வகித்தார்.
முன்னதாக இளநிலை உதவியாளர் குமார் அனை வரையும் வரவேற்றார்.
ஊர்வலமானது தலைஞாயிறு மேல்நிலைப் பள்ளியில் இருந்து தொடங்கி சின்ன கடற்கரை, மேலத்தெரு அக்ரஹரம், பஸ் நிலையம் வழியாக பேரூராட்சி அலுவலகம் சென்றடைந்தது.
இதில் மாணவ- மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர்.
இதில் ஏராளமான பொதுமக்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள், ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- வேலூரில் பொதுமக்கள் வரவேற்பு
- நெல்லூரில் பயணத்தை நிறைவு செய்ய உள்ளார்
வேலூர்:
ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்தவர் குர்ரம் பெஞ்சாலா சைதன்யா (வயது 22). இவர் பிளாஸ்டிக் ஒழிப்பையும், பிளாஸ்டிக் மறுசுழற்சி, பசுமை இந்தியாவை வலியுறுத்தி, ஆந்திர மாநிலம் நெல்லூரிலிருந்து இந்தியா முழுவதும் 50 ஆயிரம் கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இவர் ஆந்திரா, கர்நாடக மாநிலங்கள், தமிழகம் வழியாக இதுவரை 3 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டத்திற்கு இன்று வந்தார் அவருக்கு பொதுமக்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக சைதன்யா கூறுகையில்:-
'மரம் நடுதலை' வலியுறுத்தி, கடந்த ஆண்டு மே முதல் ஜூன் வரை நெல்லூர் முதல் கன்னியாகுமரி வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டேன். மேலும், அதே ஆண்டில், 'உணவை வீணாக்கக் கூடாது' என்பதை வலியுறுத்தி, நெல்லூரிலிருந்து குஜராத் மாநிலத்தில் உள்ள பாகிஸ்தான் எல்லை வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டேன்.
தற்போது, 'பிளாஸ்டிக் மறுசுழற்சியை' வலியுறுத்தி, இந்தியா முழுவதும் சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறேன். ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக்கால் சுற்றுச்சூ ழலுக்கு மாசு ஏற்படுகிறது.
அதன் புழக்கம் தவிர்க்க முடியாமல் உள்ள நிலையில் அதை மறு சுழற்சி மூலம் மாசை கட்டுப்படுத்த முடியும். இதை மையமாகக் கொண்டு சைக்கிள் பயணத்தை தொடங்கி யுள்ளேன்.
625 நாட்கள் நடைபெறும் இந்த சைக்கிள் பயணத்தில், ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, கோவா, குஜராத், மகாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட 30 மாநிலங்களில் உள்ள 700 மாவட்டங்களில் 50 ஆயிரம் கிலோமீட்டர் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு, பயணம் மேற்கொண்டு வருகிறேன்.
நெல்லூரில் பயணத்தை நிறைவு செய்ய உள்ளேன் என்றார்.
- “மீண்டும் மஞ்சப்பை” பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், 2022-23-ம் நிதியாண்டிற்காக மஞ்சப்பை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
- பிளாஸ்டிக் ஒழிப்பில் சிறந்த சேவையாற்றியவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 லட்சம், 2-வது பரிசாக ரூ.5 லட்சம் மற்றும் 3-வது பரிசாக 3 லட்சம் வழங்கப்படும்.
சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
"மீண்டும் மஞ்சப்பை" பிரசாரத்தை முன்னெ டுத்துச் செல்லும் வகையில்,
2022-23-ம்நி தியாண்டிற்காக மஞ்சப்பை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருமுறை பயன்படுத்தும் நெகிழியின் தடையை திறம்பட செயல்படுத்தி, மாற்று பொருட்களான மஞ்சப்பை, பாக்குமட்டை, காகிதங்களால் ஆன பைகள், உரைகள் ஆகிய
சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களின் பயன்பாட்டை ஊக்குவித்து தங்கள் வளாகத்தை நெகிழி இல்லாததாக மாற்றும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்களைத் தேர்வு செய்து இந்த விருது வழங்கப்படும்.
மாநில அளவில் ஒரு முறை பயன்படுத்தும் நெகி ழியின் தடையை திறம்பட செயல்படுத்தி, நெகிழி இல்லாத வளாகத்தை உரு வாக்கும் 3 சிறந்த பள்ளிகள், 3 சிறந்த கல்லூரிகள் மற்றும்
3 சிறந்த வணிக நிறுவனங்க ளுக்கு இந்த விருது வழங்கப்படும். மேலும் முதல் பரிசாக ரூ. 10 லட்சம், 2-வது பரிசாக ரூ.5 லட்சம் மற்றும் 3-வது பரிசாக 3 லட்சம் வழங்கப்படும்.
இந்த விருதிற்கான விண்ணப்ப படிவங்களை சேலம் மாவட்ட இணையதள
மானல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்துடன் இணைக்கப்படும் ஆவ ணங்களில் தனிநபர், துறைத்தலைவர் கையொப்பமிட வேண்டும். விண்ணப்பத்தின் இரண்டு பிரதிகள் மற்றும் மென் நகல்களை, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், சிவா டவர்ஸ், 2-ம் தளம், எண்.1/276எ, மெய்யனூர் மெயின் ரோடு,
சேலம் -636004 என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 1.5.2023 ஆகும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளார்.
- பேரணியில் பள்ளி மாணவ மாணவிகள் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.
- தாராபுரம் தேன்மலர் பள்ளி மாணவிகள் மற்றும் அரசு பள்ளி மாணவ மாணவிகள், புனித அலோசியஸ் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
தாராபுரம்:
தாராபுரத்தை பிளாஸ்டிக் இல்லாத தூய்மை நகராக மாற்ற பள்ளி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். தாராபுரம் பேருந்து நிலையத்திலிருந்து தாராபுரம் நகராட்சி கமிஷனர் ராமர் கொடியரசு பேரணியை துவக்கி வைத்தார் .இதில் தாராபுரம் தேன்மலர் பள்ளி மாணவிகள் மற்றும் அரசு பள்ளி மாணவ மாணவிகள், புனித அலோசியஸ் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். பேரணியானது தாராபுரம் பஸ் நிலையத்தில் இருந்து பொள்ளாச்சி சாலை வழியாக பூக்கடை கார்னர் சர்ச் வீதி ,தாலுகா அலுவலகம் வரை சென்றது. பேரணியில் பள்ளி மாணவ மாணவிகள் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.
- மக்காத நெகிழி பொருள்களைப் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதிப்படைகிறது.
- உணவகங்களுக்குச் செல்லும்போது துணிப்பைகளை எடுத்துச் செல்ல வேண்டும்.
திருப்பூர்:
திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டுநலப் பணித்திட்ட அலகு 2 மாணவா்கள் சாா்பில் பிளாஸ்டிக் பொருள்களை ஒழிப்பது தொடா்பான பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக இடுவாய் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியா் காளீஸ்வரி தலைமை வகித்தாா். இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இடுவாய் ஊராட்சி மன்றத் தலைவா் க.கணேசன் பேசியதாவது:-
மக்காத நெகிழி பொருள்களைப் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதிப்படைகிறது. இவை மண்ணின் வளத்தை சிதைப்பதுடன், நிலத்தடி நீா்மட்டத்தையும் வெகுவாகப் பாதிக்கிறது. உணவகங்களில் நெகிழிப் பைகளில் உணவுப் பொருள்களை வாங்குவதால் உடலுக்கு பல்வேறு உபாதைகள் ஏற்படுகின்றன. ஆகவே நெகிழிப் பயன்பாட்டை ஒழிக்கும் வகையில் மளிகைக் கடைகள், உணவகங்களுக்குச் செல்லும்போது துணிப்பைகளை எடுத்துச் செல்ல வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவா்கள், ஆசிரியா்கள் நெகிழி இல்லாத தமிழகத்தை உருவாக்கி சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம் என்ற உறுதி மொழியை எடுத்துக் கொண்டனா். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் செய்திருந்தாா்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்