என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Emergency Helpline"

    • இந்திய தூதரகம் அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது.
    • தமிழ்நாட்டினர் நிலை குறித்து குவைத் தூதரகத்திடம் அயலக தமிழர் நலத்துறை தகவல்.

    குவைத்தில் கேரளாவை சேர்ந்த ஆபிரகாம் என்பவருக்கு சொந்தமான அடுக்குமாடி கட்டிடத்தில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    இதில், 53 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 40 பேர் இந்தியர்கள் எனவும் தகவல் வெளியானது. தமிழகர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் 90 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், குவைத் தீ விபத்து தொடர்பாக உதவிகளைப் பெற இந்திய தூதரகம் அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது.

    குவைத் தீ விபத்து தொடர்பாக +965 65505246 என்ற உதவி எண்ணை இந்திய வெளியுறவுத்துறை அறிவித்தது.

    மேலும், தீ விபத்தில் சிக்கிய தமிழ்நாட்டினர் நிலை குறித்து குவைத் தூதரகத்திடம் அயலக தமிழர் நலத்துறை தகவல் கேட்டுள்ளது.

    குவைத் தமிழ் சங்கங்களின் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு முழு விவரங்களையும் கோரியுள்ளோம்.

    உயிரிழந்தவர்களின் உடலை தமிழ்நாடு கொண்டுவர நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம் எனவும் அயலக தமிழர் நலத்துறை தெரிவித்துள்ளது.

    • 500 வீடுகளில் வசித்து வரும் சுமார் 400 குடும்பங்களைச் சேர்ந்த 1000 பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • தமிழகத்தில் இருந்து வயநாடு சுற்றுலா சென்றவர்களை தொடர்பு கொள்ள முடியாவிட்டால், மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ளலாம்,

    கேரளாவில் கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்ய தொடங்கியது. நேற்றும் கனமழை கொட்டி தீர்த்தது.

    இதில் வயநாட்டில் பெய்த கனமழையால் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வயநாடு மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி, சூரல்மலை, முண்டகை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதில் முண்டகையில் பெய்த கனமழையால் பாலமும் அடித்துச் செல்லப்பட்டது.

    இந்த நிலச்சரிவுகளில் சிக்கி பலர் உயிரிழந்துள்ள நிலையில் 500 வீடுகளில் வசித்து வரும் சுமார் 400 குடும்பங்களைச் சேர்ந்த 1000 பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில் காளிதாஸ், கல்யாண குமார் ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர். காளிதாஸ் என்பவர் கட்டிட வேலைக்காக அங்கு சென்றுள்ளார். இந்நிலையில் காளிதாஸ் நிலச்சரிவில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காளிதாஸின் உடல் மேப்படி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து, கேரளா வயநாடு நிலச்சரிவு தொடர்பாக தமிழக அரசு சார்பில் 1070 என்ற அவசர எண் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து வயநாடு சுற்றுலா சென்றவர்களை தொடர்பு கொள்ள முடியாவிட்டால், மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ளலாம் என மாநில அவசர கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

    இதுவரை உதவிக்கோரி எந்த அழைப்பும் வரவில்லை என்றும் மாநில அவசர கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • ஆடம் வான் என்ற நபர் அவசர உதவி எண்ணான 911-க்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
    • போலீசின் வாகனத்தில் வந்து தன்னை இறக்கி விடுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    அமெரிக்காவின் அவசர உதவி எண்ணான 911-க்கு தொடர்ந்து 17 முறை அழைத்து போலீசை தொந்தரவு செய்த 24 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    ஆடம் வான் என்ற நபர் அவசர உதவி எண்ணான 911-க்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அருகில் இருக்கும் மளிகை கடைக்கு செல்வதற்கு பொது போக்குவரத்தை பயன்படுத்தாமல், போலீசின் வாகனத்தில் வந்து தன்னை இறக்கி விடுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இதனை கேட்டு கடுப்பான போலீசார் ஆடம் வான் இருப்பிடத்திற்கே சென்று அவரை எச்சரித்துள்ளனர். அவசர உதவிக்கு மட்டும் தான் 911 எண்ணை தொடர்பு கொள்ளவேண்டும் என்று போலீசார் அவரிடம் தெரிவித்துள்ளனர்.

    ஆனால் இதனையடுத்து 911 எண்ணுக்கு ஆடம் வான் 17 ஆவது முறையாக மீண்டும் அழைத்துள்ளார். பின்னர் அவசர உதவி எண்ணை தவறாக பயன்படுத்தியதாக கூறி ஆடம் வானை போலீசார் கைது செய்தனர்.

    ×