search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Entrance Test"

    • பேர் முறைகேடு செய்து இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது.
    • சி.பி.ஐ. அதிகாரிகள் ஆவணங்களை திரட்ட திட்டமிட்டுள்ளனர்.

    புதுடெல்லி:

    இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5-ந்தேதி நடத்தப்பட்டது. தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) இந்த நுழைவுத் தேர்வை நடத்தியது.

    வெளிநாடுகளில் உள்ள 14 நகரங்கள் மற்றும் இந்தியாவில் 557 நகரங்கள் என மொத்தம 571 நகரங்களில் அமைக்கப்பட்டு இருந்த 4,750 மையங்களில் நீட் தேர்வு நடத்தப்பட்டது. 23 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இந்த நீட் தேர்வை எழுதினார்கள்.

    கடந்த 4-ந்தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்து இருப்பது வெளிச்சத்துக்கு வந்தது. இதற்கிடையே நீட் தேர்வு எழுதியவர்களில் 1,563 பேருக்கு கருணை மதிப்பெண் கொடுத்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதையடுத்து அந்த 1,563 பேருக்கு நேற்று மறுத்தேர்வு நடத்தப்பட்டது. ஆனால் அந்த தேர்வை 813 பேர் தான் எழுதினார்கள். மற்றவர்கள் தேர்வு எழுத வரவில்லை.

    நீட் தேர்வு முறைகேடு களில் ராஜஸ்தான், மராட்டி யம், குஜராத், பீகார் மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஈடுபட்டு இருப்பது விசா ரணையில் தெரிய வந்தது. குறிப்பாக பீகாரில் நிறைய பேர் முறைகேடு செய்து இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து நீட் தேர்வு முறைகேடுகள் பற்றி விரிவாக விசாரணை நடத்த சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் சி.பி.ஐ. அதிகாரிகள் இந்திய தண்டனை சட்டத் தின் 120பி (குற்ற சதி), 420 (மோசடி) ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    நீட் முறைகேடுகள் தொடர்பாக பீகார் மாநிலத்தில் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு தொடர்பு இருப்பதை அந்த மாநில போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அங்கு 20-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். அதுபோல மராட்டியம், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களை சேர்ந்தவர்களும் கைதாகி இருக்கிறார்கள்.

    இவர்களிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது. இதற்காக பல்வேறு குழுக்களை சி.பி.ஐ. அமைத்து இருக்கிறது.

    அந்த சி.பி.ஐ. சிறப்பு குழுக்கள் குஜராத், பீகார் மாநிலங்களுக்கு விரைந்து உள்ளன. குஜராத் மாநிலம் கோத்ராவில் நீட் முறைகேடு தொடர்பாக கைதானவர்கள் மற்றும் விசாரணை வளையத்தில் இருப்பவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் வாக்கு மூலம் பெற திட்டமிட்டு இருக்கிறார்கள்.

    அதுபோல பீகாரில் பாட்னா நகரில் நீட் தேர்வு முறைகேடு நடந்த இடங்கள் மற்றும் அதில் தொடர்புடையவர்களை சி.பி.ஐ. அதிகாரிகள் சந்தித்து தகவல்களை திரட்ட உள்ளனர். இந்த முறைகேடுகளில் நடந்துள்ள ஆள் மாறாட்டம், நம்பிக்கை மீறல், ஆதாரங்கள் அழிப்பு ஆகியவை தொடர்பாகவும் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆவணங்களை திரட்ட திட்டமிட்டுள்ளனர்.

    • திருச்சியில் அக்னிபாத் திட்டத்தின்கீழ் ராணுவ வீரர்களை தேர்வு செய்யும் வகையில் இளைஞர்களுக்கு நுழைவுத்தேர்வு நடந்தது
    • திருச்சியில் அக்னிபாத் திட்டத்தின்கீழ் ராணுவ வீரர்களை தேர்வு செய்யும் வகையில் இளைஞர்களுக்கு நுழைவுத்தேர்வு நடந்தது


    திருச்சி:

    இந்திய ராணுவத்தின் முப்படைகளில் வீரர்களை தேர்வு செய்ய 'அக்னிபாத்' என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் நபர்கள் 'அக்னி வீரர்கள்' என அழைக்கப்படுவார்கள்.

    இந்த முறையில் தேர்வாகும் வீரர்கள் 4 ஆண்டுகள் ராணுவ பணியில் இருப்பர். இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 45 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வீரர்கள் வரை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான வீரர்கள் தேர்வு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது

    தமிழகத்தில் திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை உட்பட 15 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியின் காரைக்கால் என 16 மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களை அக்னி வீரர் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர்ப்பதற்கான நுழைவுத் தேர்வு இன்று திருச்சி தேசியக்கல்லூரியில் நடைபெற்றது.

    கடந்த ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபரில் உடல் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. அதில் தேர்ச்சி பெற்றவர்கள் இதில் பங்கேற்றனர்.

    நுழைவுத் தேர்வுக்கு 2,307 இளைஞர்கள் இன்று அதிகாலை 4 மணி முதல் சோதனைக்கு பிறகு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

    இவர்களுக்கான நுழைவுத் தேர்வு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து இரண்டு மணி வரை சுழற்சி முறையில் நடைபெற்றது.

    இதையொட்டி தேசியக்கல்லூரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் தேர்வில் பங்கேற்றவர்களுக்காக திருச்சி மாநகராட்சி சார்பில் சுகாதாரமான குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டு இருந்தன.




    • நீட், செட், யூ.ஜி.சி., ஜே.ஆர்.எப், கேட்தேர்ச்சி பெற்றவர்களும் மற்றும் வெளிநாட்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
    • முனைவர் பட்ட சேர்க்கைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தமிழ் பல்கலைக்கழகத்தில் புதிதாக நடத்தப்பெறும் நுழைவு தேர்வினை எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.

    தஞ்சாவூர் :

    தஞ்சை தமிழ்பல்கலைக் கழக பதிவாளர் முனைவர் தியாகராஜன் வெளியி–ட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டச் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு (TURCET 2020) எழுதித் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்க 1.8.2022 வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

    டார்செட் 2020-ல் தேர்ச்சி பெற்றவர்கள் முனைவர் பட்டச் சேர்க்கைக்கு 2022 ஜூலை பருவத்தில் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். அதன்பிறகு 2020 தேர்வுத் தகுதி செல்லாது. நீட், செட், யூ.ஜி.சி., ஜே.ஆர்.எப், கேட்தேர்ச்சி பெற்றவர்களும் மற்றும் வெளிநாட்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். ஜூலை 2022 பருவத்திற்குப் பிறகு முனைவர் பட்டச் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் புதிதாக நடத்தப்பெறும் நுழைவுத் தேர்வினை எழுதித் தேர்ச்சி பெற வேண்டும் என்று பதிவாளர் முனைவர் தியாகராஜன் தெரிவித்தார்.

    தற்போது ஆய்வியல் நிறைஞர் (எம்பில்) பட்டப் படிப்புகள், முதுகலைப் பட்டப் படிப்புகள், முதுநிலைப் பட்டப் படிப்புகளுக்கும் விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் 15.8.2022 வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு https://www.tamiluniversity.ac.in என்ற இணையதளத்தைப் பார்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×