search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Eradication"

    • நாமக்கல் நகராட்சியில் 39 வார்டுகள் உள்ளன. இப்பகுதிகளில் மழைக்கால நோய் பரவாமல் தடுக்கும் வகையில் தொடர்ச்சியாக வார்டு வாரியாக சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
    • நாமக்கல் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் மழைக்கால நோய் பரவாமல் தடுக்கும் வகையில் வீதி, வீதியாக கொசு மருந்து அடிக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் நகராட்சியில் 39 வார்டுகள் உள்ளன. இப்பகுதிகளில் மழைக்கால நோய் பரவாமல் தடுக்கும் வகையில் தொடர்ச்சியாக வார்டு வாரியாக சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    நாமக்கல் நகரை பொறுத்த வரை கடந்த வாரத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் நகரின் பல்வேறு இடங்கங்களில் மழைநீர் தேங்கியது.

    கொசுப்புழு ஒழித்தல்

    இதையடுத்து நாமக்கல் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் மழைக்கால நோய் பரவாமல் தடுக்கும் வகையில் வீதி, வீதியாக கொசு மருந்து அடிக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

    மேலும் வீடு, வீடாக சென்று கொசு மருந்து அடித்தல், கொசுப்புழு ஒழித்தல் உள்ளிட்ட பணிகளில் நகராட்சி பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்த பணி வாரம் தோறும் வார்டு வாரியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தினமும் 45 பணியாளர்கள் நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் ஏற்பட்ட 12 இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

    நகராட்சி ஆணையாளர் சென்னுகிருஷ்ணன் உத்தரவின்படி நகராட்சி பணியாளர்கள் மற்றும் தற்காலிக பணியாளர்கள் தண்ணீரில் கொசுப்புழு உற்பத்தியாகாமல் பார்த்து கொள்ளும்படி அறிவுறுத்தி வருகிறார்கள். மேலும், வீடுகளின் முன்புறம் உள்ள தொட்டிகளில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றும்படி அறிவுறுத்தி வருகிறார்கள்.

    டெங்கு

    இதுகுறித்து நகராட்சி துப்புரவு ஆய்வாளர் திருமூர்த்தி கூறுகையில் மழைக் காலங்களில் கொசுவால் ஏற்படும் நோய்களை தடுக்க நகராட்சி பகுதியில் தொடர்ச்சியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    நல்ல தண்ணீரில் உற்பத்தியாகும் கொசுக்கள் மூலம் டெங்கு பரவுகிறது. இதுதொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி கொசு உற்பத்தியை தடுக்க மருந்து தெளிக்கப்படுகிறது. பொதுமக்கள் தங்கள் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    இதன் மூலம் டெங்கு பரவலை தடுக்க முடியும் என்றார்.

    • திருச்செங்கோடு நகராட்சி சார்பில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை ஒட்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். பேரணியை திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு நகராட்சி சார்பில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை ஒட்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். பேரணியை திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் நடேசன், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் சுரேஷ்பாபு, மருத்துவ அணி மாவட்ட துணை அமைப்பாளர் ரவிசங்கர், கே.எஸ்.ஆர் பல் மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி கல்லூரி முதல்வர் சரத் அசோகன், நர்சிங் கல்லூரி முதல்வர் ருத்ரா மணி, நகர் மன்ற உறுப்பினர்கள் ராதா, சேகர், மகேஸ்வரி, செல்வி ராஜவேல், செல்லம்மாள் தேவராஜன், புவனேஸ்வரி உலகநாதன், தாமரைச் செல்வி மணிகண்டன், திவ்யா வெங்கடேசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகில் இருந்து தொடங்கிய பேரணி 4 ரத வீதிகள் வழியாக சென்றது. பேரணியில் சென்றவர்கள் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய போர்டுகளை ஏந்தியபடி சென்றனர்.

    புகையிலை ஒழிப்பு பிரசாரம் நடந்தது.
    குமாரபாளையம்:

    குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட், பள்ளிபாளையம் பிரிவு, ஆனங்கூர் பிரிவு, காவேரி நகர், சின்னப்பநாயக்கன்பாளையம், உள்ளிட்ட பல்வேறு பகுதியில்  பிரம்ம குமாரிகள் அமைப்பின் சார்பில் புகையிலை ஒழிப்பு பிரசாரம் நடந்தது. 

    ஜவுளி உற்பத்தியாளர் அண்ணாதுரை தலைமை வகித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி பங்கேற்று, பிரசாரத்தை தொடங்கி வைத்தார். புகையிலை பாக்கெட், பீர் பாட்டில் போன்று வேடமிட்டு வந்து பிரசாரம் செய்தனர்.

    பொதுமக்களுக்கு இது குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை சப்-இன்ஸ்பெக்டர் மலர்விழி, தே.மு.தி.க. மாவட்ட துணை செயலர் மகாலிங்கம் வழங்கினர். இதற்கான பிரசார வாகனத்தை இன்ஸ்பெக்டர் ரவி உள்ளிட்ட பலர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
    • குழந்தைகளை பணியில் ஈடுபடுத்தும் நிறுவனங்கள், பெற்றோர்கள் மீது நடவடிக்கை.
    • 18 வயதிற்கு கீழ் உள்ள அனைவரும் படிக்க வேண்டும்.

    நெல்லை:

    தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்கள் இல்லா நிலையை உருவாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தையொட்டி நெல்லையில் இன்று விழிப்புணர்வு வாகன பேரணி நெல்லை அறிவியல் மையத்தில் நடைபெற்றது.

    மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, காவல்துறை சார்பில் நடைபெற்ற பேரணியை தேசிய குழந்தைகள், உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் சரண்யா ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    குழந்தை தொழிலாளர் ஒழிப்பு மிகவும் அவசியம். 18 வயதிற்கு கீழ் உள்ள அனைவரும் படிக்க வேண்டும். குறிப்பாக 6 முதல் 14 வயது உடையோருக்கு கல்வி என்பது கட்டாயம்.

    குழந்தைகளை பணியில் ஈடுபடுத்தும் நிறுவனங்கள், பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    2012-ம் ஆண்டே போக்சோ சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் தற்போது தான் அதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

    இதனால்தான் தற்போது அதிகளவிலான புகார்கள் வருகிறது. குழந்தைகளை பிச்சை எடுக்க வைக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் 3 வாகனங்கள் மாவட்டம் முழுவதும் சென்று பொதுமக்கள் இடையே குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்.

    நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அருள்செல்வி, குழந்தைகள் நலக்குழு தலைவர் சந்திரகுமார், சைல்டு லைன் 1,098 இயக்குனர் ஞானதினகரன், மாவட்ட போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு மாரிராஜன், இன்ஸ்பெக்டர்கள் மீராள்பானு, ஷோபா ஜென்சி, ஆன்ட்ரீஜெகதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • பழைய டயர்கள், உரல்கள் உள்ளிட்ட பொருட்களில் தேங்கிக்கிடந்த தண்ணீரை ஊழியர்கள் அகற்றினர்.
    • மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொசு மருந்து அடிக்கும்பணி நடைபெற்றது.

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம்,திருப்பூர் ஒன்றியம்,மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொசு ஒழிப்பு பணி நடைபெற்று வருகிறது. அதில் பழைய டயர்கள்,உரல்கள் உள்ளிட்ட பொருட்களில் தேங்கிக்கிடந்த தண்ணீரை ஊழியர்கள் அகற்றினர்.

    மேலும் மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொசு மருந்து அடிக்கும்பணி நடைபெற்றது. தொடர்ந்து சுகாதார பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதில் மங்கலம் ஊராட்சிமன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி சுகாதார பணிகளை பார்வையிட்டார். 

    நெல்லை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு வாகன பிரசாரம் மற்றும் கையெழுத்து இயக்கம், நெல்லை கோர்ட்டு வளாகத்தில் தொடங்கியது.
    நெல்லை:

    நெல்லை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு வாகன பிரசாரம் மற்றும் கையெழுத்து இயக்கம், நெல்லை கோர்ட்டு வளாகத்தில் தொடங்கியது. மாவட்ட முதன்மை நீதிபதி ராஜசேகர் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர், கையெழுத்து இயக்கத்தையும் தொடங்கி வைத்தார்.

    பாளையங்கோட்டை மார்க்கெட், புதிய பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசார வாகனத்தில் சென்று, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துகிறவர்களுக்கு கிடைக்கும் தண்டனைகள் குறித்த கையேடுகளும் பொதுமக்களுக்கு வழங்கினர். நீதிபதிகள் அருள் முருகன், ஜெயராஜ், சந்திரா, ஹேமானந்த குமார், கங்கராஜன், தனஞ்செயன், வக்கீல்கள் சங்க தலைவர் சிவசூரிய நாராயணன், குழந்தை தொழிலாளர் நல அலுவலர் சந்திரகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    ×