search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "events"

    • பாரதமாதா முதியோா் இல்ல நிறுவனா் எடையூா் மணிமாறன் அனைவரையும் வரவேற்றார்.
    • முதியோா்கள் கலை நிகழ்ச்சிகளை நடத்தி தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்ட சமூக நலத்துறை சாா்பில் உலக முதியோா் தினவிழா திருத்துறைப்பூண்டி பாரதமாதா முதியோா் இல்லத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு திருவாரூர் மாவட்ட சமூகநல அலுவலா் காா்த்திகா தலைமை தாங்கினார். வக்கீல் அரசு தாயுமானவா் முன்னிலை வகித்தாா். முன்னதாக பாரதமாதா முதியோா் இல்ல நிறுவனா் எடையூா் மணிமாறன் அனைவரையும் வரவேற்றார்.

    தொடர்ந்து, மூத்தக்குடி மக்களுக்கு சால்வை அணிவித்து சிறப்பு பரிசுகள் வழங்கி கவுரவிக்க ப்பட்டனர். இதில் திருவாரூர் மாவட்டத்தில் செயல்படும் அரசு உதவிப்பெறும் முதியோா் இல்லங்களில் இருந்து சமூக பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

    பின்னர், முதியோா்கள் கலை நிகழ்ச்சிகளை நடத்தி தங்களின் திறமைகளை வெளி ப்படுத்தி அனைவரையும் மகிழ்வித்தனா். முதியோா் இல்லங்களை நடத்தி வரும் நிா்வாகிகளை மாவட்ட சமூகநல அலுவலா் பாராட்டி பாிசுகள் வழங்கி சிறப்பித்தாா்.

    விழாவில் திருத்து றைப்பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் முக்கிய சேவிகா, கிராம சேவிகாக்கள், வக்கீல் இன்குலாப், திருவாரூர் மாவட்ட சமூக நலத்துறை ஒருங்கிணைந்த சேவை மைய உளவியல் ஆலோசகர் மெர்லின் ஆகியோா் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினா்.

    பாரதமாதா முதியோா் இல்ல காப்பாளா் புனிதா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா்.

    முடிவில் திருவாரூர் மாவட்ட வரதட்சணை தடுப்புக்குழு உறுப்பினா் சங்கீதா மணிமாறன் நன்றி கூறினாா்.

    • மனநலம் பாதிக்கப்பட்டவரை எவ்வாறு வழிநடத்துவது, குணப்படுத்துவது குறித்து விளக்கப்பட்டது.
    • தொடர்ந்து, விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

    மன்னார்குடி:

    உலக மனநல தினத்தை யொட்டி மன்னார்குடி இந்தியன் ரெட் கிராஸ் அமைப்பு, நேசக்கரம், திருத்துறைப்பூண்டி நம்பிக்கை தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து மன்னார்குடி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியை துணை போலீஸ் சூப்பிரண்டு அஸ்வத் ஆண்டோ தொடங்கி வைத்து துண்டு பிரசுரங்களை வெளியிட அதனை பள்ளியின் தலைமை ஆசிரியர் சுப்பு லட்சுமி பெற்றுக்கொண்டார்.

    நிகழ்ச்சியில் நம்பிக்கை தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் சவுந்தர்ராஜன் தலைமை தாங்கினார்.

    திட்ட இயக்குனர் விஜயா, மன்னார்குடி இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் வட்ட செயலாளர் கோபால கிருஷ்ணன், துணை தலைவர் ஆசிரியர் ராஜப்பா, நேசக்கரம் ஆசிரியர் தங்கபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நேசக்கரம் ஒருங்கிணை ப்பாளர்கள் கார்த்திகேயன், தீனதயாளன், நேசக்கரம் தன்னார்வலர் குழு ஒருங்கிணைப்பாளர்கள் பெலிக்ஸ், எழிலரசன் மற்றும் கலை குழுவினர் கலந்து கொண்டனர்.

    அதனைத் தொடர்ந்து, விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

    மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் தத்ரூபமாக நடித்து, அவரை எவ்வாறு வழிநட த்துவது, குணப்படுத்துவது என்று நாடகம் மூலம் விளக்க ப்பட்டது.

    நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சியில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
    • அரசு விழாக்கள் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சியில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்தும் தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும் பேரூராட்சி மன்ற தலைவர் பூங்கொடி அலெக்சாண்டரிடம் கேட்டறிந்தார்.

    தொடர்ந்து சீர்காழி தீயணைப்பு நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தீயணைப்பு நிலையத்திற்கு சிறிய வாகனம் மற்றும் வீடுகளில் புகும் பாம்புகளைப் பிடிக்க பாம்பு பிடி கருவி வழங்கிட வேண்டும் என நிலைய அலுவலர் ஜோதி கோரிக்கை வைத்தார்.

    அதனை ஏற்று உபகரணங்கள் வாங்கிட நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்தார். தொடர்ந்து சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் அர்ச்சனா மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    பின்பு சீர்காழி தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

    இதை குறித்து சீர்காழி தமிழிசை மூவர் மணிமண்டபத்தில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் அங்கு ரூ.47 லட்சத்தில் சீரமைக்கும் பணி நடந்து வருவதை ஆய்வு செய்து, பணிகளை தரமாக செய்திட ஒப்பந்ததாரிடம் அறிவுறுத்தினார்.

    மேலும் தமிழிசை மூவர் மணிமண்டபத்தில் பொதுமக்களும் வந்து செல்லும் வகையில் அரசு விழாக்கள் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடத்திட வருங்காலங்களில் நடத்திட தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    பின்னர் சீர்காழி நகராட்சியில் அவர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நகராட்சி ஆணையர் வாசுதேவன் மற்றும் நகர மன்றத் தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர் பழைய பஸ் நிலைய பகுதியில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    அப்போது மாவட்ட தி.மு.க. பிரதிநிதி அன்பழகன், ஒப்பந்ததாரர் விஜி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    அரியானாவில் ஜாட் சமூகத்தினருக்கு அளித்த வாக்குறுதிகளை ஆகஸ்ட் 16-ம் தேதிக்குள் நிறைவேற்றாவிட்டால், முதல்வர் பங்கேற்கும் எந்த நிகழ்ச்சியையும் நடத்த விட மாட்டோம் என ஜாட் சமூகத்தினர் எச்சரித்துள்ளனர். #haryana #jatscommunity
    கொல்கத்தா:

    அரியானா மாநிலத்தில் பாஜகவைச் சேர்ந்த மனோகர் லால் கட்டார் ஆட்சி செய்து வருகிறார். இவரது ஆட்சியில் கடந்த 2016-ம் ஆண்டு இடஒதுக்கீடு வேண்டி ஜாட் சமூகத்தினர் கலவரத்தில் ஈடுபட்டனர். அப்போது, இடஒதுக்கீடு பிரச்சனை தொடர்பாக குழு அமைத்து முடிவெடுக்கப்படும் என மாநில அரசு சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், நேற்று அகில இந்திய ஜாட் ஆரக்‌ஷான் சங்கர்ஷ் சமிதியின் பேரணி நடத்தப்பட்டது. அதில் பேசிய சமிதியின் தலைவர் யஷ்பால் மாலிக், மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் சிறப்பாக வாதிட்டு ஜட்ஸ் சமூகத்தினருக்கான இடஒதுக்கீட்டை பெற்று தருமாறு கோரிக்கை விடுத்தார். மேலும், மத்திய அரசும், வரும் பாராளுமன்ற தேர்தலில் ஓபிசி பிரிவில் போட்டியிடுவதை எளிமையாக்கும் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

    மேலும், பாஜக அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனவும், 2016-ல் அமைதியாக நடத்தப்பட்ட போராட்டத்தை வன்முறையாக மாற்றியது பாஜகவினரே எனவும் அவர் குற்றம்சாட்டினார்.

    அதைத்தொடர்ந்து ஆகஸ்ட் 16-ம் தேதிக்குள் தங்களது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் எனவும், இல்லையெனில், அரியானா மாநிலத்தில் ஒரு பகுதியிலும் கூட முதல்மந்திரி உட்பட எந்த பாஜக தலைவர்களால் எவ்வித நிகழ்ச்சிக்கும் செல்ல முடியாது எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். #haryana #jatscommunity
    ×