search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Exam centre"

    • தேர்வு மையங்களில் மாணவ-மாணவிகள் முறைகேட்டில் ஈடுபடாமல் தவிர்க்க 3200 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன.
    • பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் பதட்டம் அடையாமல் தேர்வு எழுதுவதற்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டது.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்தில் படிக்கும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அடுத்தடுத்து தொடங்கி நடைபெற உள்ளது. பிளஸ்-2 தேர்வு நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் 9.25 லட்சம் மாணவ-மாணவிகள் இத்தேர்வினை எழுதுகிறார்கள். தமிழகத்தில் 3302 மையங்களில் தேர்வை நடத்த அரசு தேர்வுத்துறை அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

    தேர்வுக்கு முன்னதாக வினாத்தாள் கசியாமல் இருக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் தேர்வு மையங்களில் மாணவ-மாணவிகள் முறைகேட்டில் ஈடுபடாமல் தவிர்க்க 3200 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன.

    தேர்வு கூடங்களில் காப்பி அடித்தல், துண்டு சீட்டு வைத்து எழுதுதல், விடைத்தாள்களை மாற்றுதல் போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

    1-ந்தேதி தொடங்கும் பிளஸ்-2 தேர்வு 22-ந்தேதி வரை நடைபெறுகிறது. முதலில் தமிழ் தேர்வும் அதனை தொடர்ந்து 5-ந்தேதி ஆங்கிலம், 8-ந்தேதி கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ கெமிஸ்ட்ரி, அட்வான்ஸ் தமிழ், ஹோம் சயின்ஸ், புள்ளியியல் ஆகிய பாடப்பிரிவுகள், 11-ந்தேதி வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல், 15-ந்தேதி இயற்பியல், பொருளியல், கம்ப்யூட்டர் டெக்னாலஜி, 19-ந்தேதி கணிதம், விலங்கியல், வணிகவியல், 22-ந் தேதி பயாலஜி, தாவரவியல், வரலாறு உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு தேர்வு நடைபெறுகிறது. ஒவ்வொரு தேர்வுக்கும் 3, 4 நாட்கள் இடைவெளி உள்ளது.

    பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் பதட்டம் அடையாமல் தேர்வு எழுதுவதற்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டது. வினாத்தாள்கள் கட்டுகாப்பு மையங்களில் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மேற்பார்வையில் தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லப்படும். ஒவ்வொரு நாளும் தேர்வு முடிந்தவுடன் விடைத்தாள்களை பாதுகாப்பாக விடைத்தாள் சேகரிப்பு மையங்களுக்கு கொண்டு செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    • நந்திகிராமில் முழங்கால் அளவு வெள்ளத்தில் சிக்கிய பி-டெக் மாணவர்களைக் காவல் துறையினர் மீட்டு உதவியுள்ளனர்.

    ஆந்திரப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையில் சாலை எங்கும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. குறிப்பாக, நந்திகிராமுக்கு அருகே உள்ள நெடுஞ்சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள் முற்றிலும் நீரில் மூழ்கின.

    இந்நிலையில், என்டிஆர் மாவட்டத்தின் நந்திகிராமில் முழங்கால் அளவு வெள்ளத்தில் சிக்கிய பி-டெக் மாணவர்களைக் காவல் துறையினர் மீட்டு உதவியுள்ளனர்.

    சம்பந்தப்பட்ட பி-டெக் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், குறித்த நேரத்தில் கல்லூரிக்கு செல்ல முடியாது என்ற அச்சத்தில் மாணவர்கள் நந்திகம போலீசாரிடம் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து, அவர்களுக்கு உதவியாக, நிரம்பி வழியும் நெடுஞ்சாலையை கடந்து, மாணவர்களை தேர்வு மையத்தில் இறக்கிவிட, போலீசார் கிரேன் ஏற்பாடு செய்தனர்.

    இதேபோல் தேர்வு முடிந்து மாணவர்கள் வீடு திரும்பவும் போலீசார் உதவினர். இந்த மீட்பு குறித்த காணொளியை ஆந்திர காவல்துறை தங்களது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

    இந்த கானொலியை காணும் பலர், ஆந்திரா காவல்துறையை பாராட்டி வருகின்றனர்.

    • மதுரை மாணவி தேர்வு மைய ஒதுக்கீட்டில் குளறுபடி ஏற்பட்டுள்ளது.
    • தமிழகம் முழுவதும் யு.ஜி.சி. நுழைவுத்தேர்வுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

    மதுரை

    தமிழகம் முழுவதும் யு.ஜி.சி. நுழைவுத்தேர்வுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்காக மதுரையில் இருந்து ஒரு மாணவி விண்ணப்பித்து இருந்தார். அவருக்கு காலை நேரத்தில் ஒரு கடிதம் வந்தது. அதில் அந்தப் மாணவிக்கு மதுரையில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் அவருக்கு மாலை நேரத்தில் நுழைவுச்சீட்டு வந்தது. அதில் உங்களுக்கு கன்னியாகுமரியில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி இது தொடர்பாக 

    • கோவில் செயல் அலுவலர் நிலை 4-க்கான எழுத்து தேர்வு இன்று நடைபெற்றது.
    • விண்ணப்பித்தவர்களில் 50 சதவீதம் பேர் தேர்வு எழுத வரவில்லை.

    நெல்லை:

    தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணையம் சார்பில் குரூப்-8 பணியில் அடங்கிய கோவில் செயல் அலுவலர் நிலை 4-க்கான எழுத்து தேர்வு இன்று நடைபெற்றது.

    காலை, மாலை என இரு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்வை எழுதுவதற் காக 2,576 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

    இந்த தேர்வு நெல்லை மாவட்டத்தில் இன்று நெல்லை சந்திப்பில் உள்ள ம.தி.தா. இந்து கல்லூரி மேல்நிலைப்பள்ளி, வண்ணார்பேட்டை விவே கானந்தா வித்தி யாஷ்ரம் மேல்நிலைப்பள்ளி, கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, டவுன் சாப்டர் மேல்நிலைப்பள்ளி உட்பட 10 மையங்களில் இன்று காலை தொடங்கியது.

    தேர்வை 1,294 பேர் மட்டுமே எழுதினர். விண்ணப்பித்தவர்களில் 50 சதவீதம் பேர் தேர்வு எழுத வரவில்லை.

    தேர்வை தாசில்தார் மற்றும் துணை தாசில் தார் நிலையில் 3 சுற்றுக்குழு அலுவலர்கள் கண்காணித் தனர். தேர்வு மையங்கள் முழுவதும் வீடியோபதிவு செய்யப்பட்டது.

    மேலும் கலெக்டர் விஷ்ணு உத்தரவின்பேரில் தேர்வு மையங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டது. இதேபோல தேர்வு மையங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டது.

    ×