என் மலர்
நீங்கள் தேடியது "execution"
- 12 மணி நேர வேலை சட்டத்தை முழுமையாக திரும்ப பெற வேண்டும்.
- எஸ்.டி.பி.ஐ. தீர்மானம் எழுந்துள்ளது.
மதுரை
எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட தலைவர்கள் கூட்டம் திருச்சியில் நடந்தது. மாநில தலைவர் நெல்லை முபாரக் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். மாநில பொதுச் செயலாளர்கள் அகமது நவாபி, நிஜாம் முகைதீன், கோவை மண்டல செயலாளர் லுக்மனாக்தீன், மதுரை மண்டல தலைவர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு வி.ஏ.ஓ. லூர்து பிரான்சிஸ் படுகொலை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிப்பது, மணல் கடத்தல் மற்றும் போதை கும்பலை தடுக்கும் அரசு அதிகாரிகளுக்கு முழுமை யான பாதுகாப்பு வழங்க வேண்டும், தொழிலாளர் உழைப்பை சுரண்டும் 12 மணி நேர வேலை திருத்த சட்டத்தை தமிழக அரசு முழுமையாக வாபஸ் பெற வேண்டும், திருச்சியில் மே 5-ந் தேதி நடைபெற உள்ள எஸ்.டி.பி.ஐ. வர்த்தகர் அணி முதல் மாநில மாநாட்டை வெற்றி பெற செய்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மா–னங்கள் நிறைவேற்றப்பட்டன.
- மே 2024-ல் ஜனாதிபதியாக லாய் சிங்-தே பதவியேற்ற பின் நிறைவேற்றப்படும் முதல் மரணதண்டனை இதுவாகும்.
- 36 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதில் தற்போது ஹுவாங் லின் காய் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
தைவான் நாட்டின் சான்சாங் மாவட்டத்தில் ஹுவாங் லின் காய் (32) என்பவர் கடந்த 2013-ம் ஆண்டு தனது முன்னாள் காதலியையும் அவரது தாயையும் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த 2017-ம் ஆண்டு ஹுவாங் லின் காய்க்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது.
அதனைத் தொடர்ந்து சட்ட அமைச்சர் செங் மிங்-சியென் மரண தண்டனையை நிறைவேற்றும் கோப்பில் கையெழுத்திட்டார். அதன்படி தைபே தடுப்பு மையத்தில் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஹுவாங் ஈடுபட்ட குற்றங்கள் கொடூரமானவை மற்றும் இரக்கமற்றவை. அவை மனிதாபிமானமற்றவை, மிகவும் கொடூரமானவை மற்றும் குற்றம் மிகவும் தீவிரமானது என்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பின்னர் நீதித்துறை தெரிவித்துள்ளது.
மே 2024-ல் ஜனாதிபதியாக லாய் சிங்-தே பதவியேற்ற பின் நிறைவேற்றப்படும் முதல் மரணதண்டனை இதுவாகும்.
2020 ஏப்ரல் 1-ந்தேதிக்குப்பின் நிறைவேற்றப்படும் முதல் மரண தண்டனை இதுவாகும். 36 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதில் தற்போது ஹுவாங் லின் காய் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
மரண தண்டனையைப் பயன்படுத்துவது தைவானின் மனித உரிமைகளுக்கு "பெரிய பின்னடைவு" என்று உரிமைக்குழுக்கள் விமர்சித்துள்ளன.
கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ந் தேதி இரவு, டெல்லியில், ஓடும் பஸ்சில் ‘நிர்பயா’ (கற்பனை பெயர்) என்ற மருத்துவ மாணவி, கற்பழித்து கொல்லப்பட்டார். இதுதொடர்பாக, முகேஷ், பவன் குப்தா, வினய் சர்மா, அக்ஷய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதை கடந்த ஜூலை 9-ந் தேதி, சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது.
இருப்பினும், 4 பேருக்கும் இன்னும் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை. அதை உடனே நிறைவேற்ற உத்தரவிடக்கோரி, அலக் அலோக் ஸ்ரீவஸ்தவா என்ற வக்கீல், சுப்ரீம் கோர்ட்டில் நேற்று பொதுநல மனு தாக்கல் செய்தார். #Nirbhaya #SupremeCourt