search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Eye checkup"

    • அண்ணா நகர் பஸ் டெப்போவில் பணியாற்றும் ஒருவர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
    • சான்றிதழில் பரிசோதனை செய்ததாக கூறப்பட்ட பெயர் கொண்ட டாக்டர்கள் அங்கு பணியிலேயே இல்லை என்பது விசாரணையில் தெரியவந்து உள்ளது.

    சென்னை:

    சென்னையில் மாநகர பஸ் போக்குவரத்தை ஏராளமானோர் பயன்படுத்தி வருகிறார்கள். மாநகர பஸ்களில் டிரைவராக பணியாற்றும் 40 வயது மற்றும் அதற்குமேல் வயது உள்ள டிரைவர்கள் ஆண்டுதோறும் தங்களது கண்பரிசோதனை அறிக்கையை சம்பந்தப்பட்ட பணிமனையில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் தற்காலிக கண்பார்வை பிரச்சினை மற்றும் உடல் நலக்குறைவு உள்ளவர்களுக்கு இதன் மூலம் எளிதான மாற்றுப் பணிகள் வழங்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் வழக்கமான பஸ் ஓட்டும் பணியை தவிர்ப்பதற்காகவும், அதற்கு மாற்றாக எளிதான வேலைக்கு செல்லவும் 8 மாநகர பஸ் டிரைவர்கள் போலியான கண்பரிசோதனை அறிக்கையை சமர்ப்பித்து இருப்பது தற்போது தெரியவந்து உள்ளது. அவர்களில் அண்ணா நகர் பஸ் டெப்போவில் பணியாற்றும் ஒருவர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

    அவர் எழும்பூரில் உள்ள அரசு கண் மருத்துவமனையில் கண்பரிசோதனை செய்து சான்றிதழ் பெற்ற போது போல் போலியான அறிக்கையை சமர்ப்பித்து உள்ளார். இதில் அந்த சான்றிதழில் பரிசோதனை செய்ததாக கூறப்பட்ட பெயர் கொண்ட டாக்டர்கள் அங்கு பணியிலேயே இல்லை என்பது விசாரணையில் தெரியவந்து உள்ளது.

    இதே போல் மற்ற பணிமனைகளிலும் டிரைவர்கள் போலியான கண்பரிசோதனை அறிக்கை வழங்கி எளிதான வேலைக்கு மாறி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து சமீபத்தில் டிரைவர் பணியை தவிர்த்து மற்ற வேலைக்கு மாற்றப்பட்டவர்கள் சமர்ப்பித்த டாக்டர்களின் பரிசோதனை அறிக்கைகள் அனைத்தையும் ஆய்வு செய்ய அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    மதுக்கூரில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
    மதுக்கூர்:

    மதுக்கூர்  அரிமா சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் மற்றும் வைசிய சங்கமும் இணைந்து  இலவச கண் பரிசோதனை முகாமை நடத்தியது. 

     கண்புரை , சர்க்கரை நோய், கண் நீர் அழுத்த நோய், குழந்தைகளின் கண்நோய், கிட்டப்பார்வை, தூரப்பார்வை, வெள்ளெ ழு த்து உள்ளிட்ட பிரச்சனை களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. 

    இதில் 465 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 198 பேர் அறுவை கண் அறுவை சிகிச்சைக்காக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

    இந்த  முகாமில் மதுக்கூர் அரிமா சங்க தலைவர் மனோகரன், செயலாளர் வீரபாண்டியன், பொருளாளர் வினோத், மாவட்ட தலைவர்கள் பண்ணீர்செல்வம், கோவிந்த ராஜ் மற்றும் சுப்புக்கண்ணு, ரவிசந்திரன், சுரேஷ் , நந்தகு மார், நடேசன், கோவிந்தன், கருணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • காளீஸ்வரி கல்லூரியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
    • கண்புரை அறுவை சிகிச்சைக்கான நோயாளிகளை அடையாளம் காணுதல் போன்ற சிகிச்சை அளிக்கப்பட்டது.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரி (தன்னாட்சி), விரிவாக்க நடவடிக்கைகள், என்எஸ்எஸ் பிரிவுகள் (எண். 192 & 209), உன்னத் பாரத் அபியான் திட்டம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை, ஆகியவை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாமை நடத்தியது. கல்லூரி முதல்வர் பாலமுருகன், துணை முதல்வர் முத்துலட்சுமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் கண் சோர்வு. நீண்ட பார்வை, குறுகிய பார்வை, கண் விழித்திரை நோய்கள், குழந்தைகளுக்கான கண் பராமரிப்பு மற்றும் கண்புரை அறுவை சிகிச்சைக்கான நோயாளிகளை அடையாளம் காணுதல் போன்ற சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 183 பேர் பயனடைந்தனர். என்.எஸ்.எஸ் மாணவர்கள் மற்றும் என்.சி.சி. கேடட்கள் தன்னார்வ தொண்டு செய்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை விரிவாக்கம் மற்றும் உன்னத பாரத் அபியான் ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன், என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் பிரிவு எண்.209 ராஜீவ்காந்தி, பிரிவு எண். 192 மாரீசுவரன் செய்திருந்தனர்.

    • யங் இண்டியா பப்ளிக் பள்ளி வளாகத்தில் இலவச கண் மற்றும் பல் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.
    • 600 மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்குப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இச்சிப்பட்டியில் அமைந்துள்ள யங் இண்டியா பப்ளிக் பள்ளி வளாகத்தில் இலவச கண் மற்றும் பல் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.இந்த முகாமை யங் இண்டியா பப்ளிக் பள்ளி நிர்வாகம், திருப்பூர் தி ஐ பவுண்டேசன்,மலர் பல் மருத்துவமனை இணைந்து நடத்தியது. யங் இண்டியா பப்ளிக் பள்ளி செயலர் டி.சிவசண்முகம் இந்த முகாமை தொடங்கி வைத்தார்.

    முகாமிற்கு யங் இண்டியா பப்ளிக் பள்ளியின் முதல்வர் கே.அண்ணாமலை தலைமை வகித்தார். இந்த முகாமில் திருப்பூர் தி ஐ பவுண்டேஷனைச் சேர்ந்த டாக்டர் .வர்ஷா,சரவணகுமார், மற்றும் மலர் பல் மருத்துவமனையைச் சேர்ந்த பல் மருத்துவர் டாக்டர். நவமணி ஆகியோர் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு பரிசோதனை மேற்கொண்டனர்.இம்முகாமில் சுமார் 600 மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்குப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. தேவைப்படுவோருக்கு உயர்சிகிச்சைக்குப் பரிந்துரை செய்யப்பட்டது.பள்ளி துணைமுதல்வர்கள் சசிகலா மற்றும் நிஜிலாபானு ஆகியோர் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • செஞ்சிலுவை சங்கம், நெல்லை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் தூத்துக்குடி மோகன்ஸ் நீரிழிவு மையம் ஆகியவை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தியது
    • சிவந்தி சமுதாய வானொலி சார்பாக கண் மருத்துவர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணரிடம் நேர்காணல் செய்தார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் இளையோர் செஞ்சிலுவை சங்கம், நெல்லை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் தூத்துக்குடி மோகன்ஸ் நீரிழிவு மையம் ஆகியவை இணைந்து இலவச கண் பரிசோதனை மற்றும் நீரிழிவு நோய் கண்டறிதல் முகாமை நடத்தியது.

    கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார். கல்லூரி செயலர் ச.ஜெயக்குமார் முகாமில் பங்கேற்றார். இளையோர் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் ச.மோதிலால் தினேஷ் ஏற்பாடுகளை செய்திருந்தார். முகாமில் முத்துக்குமார், சிவந்தி சமுதாய வானொலி சார்பாக கண் மருத்துவர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணரிடம் நேர்காணல் செய்தார்.

    முகாமில் 50 ஆசிரியர்கள் மற்றும் அலுவலக கண்காணிப்பாளர் பெ.பொன்துரை, அலுவலர்கள், மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக ரத்த அழுத்தம், கிட்டப்பார்வை, தூரப்பார்வை பரிசோதனை செய்யப்பட்டது.


    • டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவ குழுவினர் ஆதரவில் செபத்தையாபுரத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
    • 100-க்கும் அதிகமானோர் முகாமில் பங்கேற்று கண்பரிசோதனை செய்து கொண்டனர்.

    சாயர்புரம்:

    சாயர்புரம் செபத்தை யாபுரம் லயன்ஸ் சங்கம் மற்றும் பேய்க்குளம் நிலச்சு வான்தார்கள் விவசாயிகள் அபிவிருத்தி சங்கம் இணைந்து டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவ குழுவினர் ஆதரவில் செபத்தையாபுரத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

    சாயர்புரம் செபத்தை யாபுரம் லயன்ஸ் சங்க தலைவர் ஜெயராஜ் தலைமை தாங்கினார். வட்டாரத் தலைவர் டாக்டர் ஆலயமணி முகாமை தொடங்கி வைத்தார். விவசாய சங்க செயலர் ஜெய பொன்ராஜ் மற்றும் பொருளாளர் கார்த்திக் குணசேகரன் முன்னிலை வகித்தனர். நல்லா சிரியர் ஞானராஜ் மருத்துவ குழுவினரை வரவேற்றார்.

    100-க்கும் அதிகமானோர் முகாமில் பங்கேற்று கண்பரிசோதனை செய்து கொண்டனர். மேலும் கண் மருத்துவ சிகிச்சை தேவையுற்ற 10 பேர் மாலை தூத்துக்குடி டாக்டர் அகர்வால் கண் மருத்துவ மனைக்கு அழைத்து செல்லப்பட்டு கண் சிகிச்சை செய்யப்பட்டு மருந்துகள் மற்றும் கண் கண்ணாடிகள் இலவசமாக வழங்கப்பட் டன. விவசாய சங்க தலைவர் குணசேகரன் மற்றும் செபத் தையாபுரம் ஊர் நலத்த லைவர் லயன் அமிர்தராஜ் ஆகியோர் இணைந்து முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்த னர்.

    • நோய்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு ஆலோசனை மற்றும் சிகிச்சை,மருந்துகள் அளிக்கப்பட்டது.
    • முகாமில் 236 பேருக்கு கண்புரை, பார்வை குறைபாடு, கண்ணில் நீர் வடிதல் உள்ளிட்ட நோய்களுக்கு பரிசோதனை செய்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அரிமா சங்கம், நகராட்சி நிர்வாகம், திருப்பூர் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம், கோவை அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை,மற்றும் சிகிச்சை முகாம் பல்லடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

    இந்த முகாமில் 236 பேருக்கு கண்புரை, பார்வை குறைபாடு, கண்ணில் நீர் வடிதல் உள்ளிட்ட நோய்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு ஆலோசனை மற்றும் சிகிச்சை,மருந்துகள் அளிக்கப்பட்டது. 26 நபர்கள் கண் புரை அறுவை சிகிச்சைக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு, கோவை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இலவச கண் சிகிச்சை முகாமை பல்லடம் நகர மன்றத்தலைவர் கவிதாமணி ராஜேந்திர குமார் துவக்கி வைத்தார். அரிமா சங்க நிர்வாகிகள் நடராஜன், குமார், பாலன், மற்றும் நிர்வாகிகள், மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×