என் மலர்
நீங்கள் தேடியது "Falls"
- மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நேற்று மாலை பரவலாக மழை பெய்தது.
- மழை காரணமான அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வந்தது.
இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் மாவட்டங்களின் பெரும்பாலான இடங்களில் நேற்று மாலை பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக கருப்பாநதி பகுதியில் 15.5 மில்லிமீட்டரும், அடவிநயினார், ஆய்க்குடி பகுதியில் 11 மில்லிமீட்டரும் மழை பதிவானது.
இதேபோல் சேர்வலாறு, பாபநாசம், தென்காசி, செங்கோட்டை, ராமநதி, குண்டாறு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இதனால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
இதேபோல் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமான குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக வெயில் காரணமாக வறண்டு காணப்பட்ட அருவிகளில் தண்ணீர்வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டுள்ளது.
தற்போது பள்ளி காலாண்டு விடுமுறை மற்றும் சரஸ்வதி பூஜை தொடர் விடுமுறை காரணமாக இன்று காலை முதலே மெயினருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளிலும் பொதுமக்கள் குடும்பத்துடன் உற்சாக குளியல் போட்டனர்.
இதேபோல் பாபநாசம் அகஸ்தியர் அருவி உள்ளிட்ட அருவிகளிலும் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
- ஆப்பக்கூடல் அருகே கிணற்றில் தவறி விழுந்து பெண் பலியானார்.
- இது குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அடுத்த ஓரிச்சேரிபுதூர், அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மனைவி சாந்தி (52). இந்நிலையில் நேற்று சாந்தி ஓரிச்சேரிபுதூர், அய்யர் தோட்டத்திற்கு அருகே உள்ள ராட தன்னாட்சி முனியப்பன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.
தோட்டத்தின் வண்டி தடத்திற்கு மேற்புறம் உள்ள விவசாயத் தோட்ட கிணறு அருகே சாந்தி நின்று கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்தார். இதில் தண்ணீரில் மூழ்கி அவர் பரிதாபமாக இறந்தார்.
அக்கம் பக்கத்தினர் இது குறித்து ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாந்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கும்பாவுருட்டி அருவிக்கு காட்டு பாதையில் பயணித்து செல்லுவதால் சுற்றுலா பயணிகள் ரம்மியமான இயற்கை சூழலை அனுபவிக்க ஆர்வம் காட்டி வருவார்கள்.
- கேரளாவில் பெய்துவரும் மழையால் அருவிகளில் அதிகளவில் தண்ணீர் வருவதையொட்டி சீசனுக்காக திறக்கப் பட்டுள்ளது.
செங்கோட்டை:
தென்காசி மாவட்டம் மேக்கரைக்கு மிக அருகே கும்பவுருட்டி அருவி இயற்கை அழகுடன் அடர்ந்த வனபகுதியில் அமைந்துள்ளது.
இதனை கேரள வனத்துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வந்தது. ஆண்டுதோறும் குற்றால சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து குவிவது வழக்கமாக இருந்தது. காட்டு பாதையில் பயணித்து செல்லுவதால் சுற்றுலா பயணிகள் ரம்மியமான இயற்கை சூழலை அனுபவிக்க ஆர்வம் காட்டி வருவார்கள். இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் அருவிக்கு கீழே உள்ள குழியில் விழுந்து 2 சுற்றுலா பயணிகள் இறந்ததையடுத்து அருவி பகுதியில் குளிக்க வனத்துறை சார்பில் பாதை மூடப்பட்டது. சுற்றுலாபயணிகள் மற்றும் பொதுமக்களின் நீண்ட கோரிக்கைக்கு பின்னர் ரூ.25 லட்சம் செலவில் பாதை புதுப்பிக்கப்பட்டது. பெரிய பள்ளங்கள் முழுமையாக காங்கிரீட் போடப்பட்டு விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அருவியில் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டு திறப்புவிழா நடந்தது. கிராம பஞ்சாயத்து தலைவர் சுஜா தாமஸ் தலைமை தாங்கினார்.
அஞ்சல் தொகுதி பஞ்சாயத்து தலைவர் ராதா ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் அனில்குமார், தொகுதி உறுப்பினர் லேகா கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடக்க நாளான நேற்று நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிப்பதற்காக வந்தனர். ஏற்கனவே கேரளாவில் பெய்துவரும் மழையால் அருவிகளில் அதிகளவில் தண்ணீர் வருவதையொட்டி சீசனுக்காக திறக்கப் பட்டுள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்யும் போது நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் குளுகுளு சீசன் நிலவும். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு ஆகிய 3 மாதங்கள் குற்றாலத்தில் சீசன் ஜோராக இருக்கும்.
சீசன் காலங்களில் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். அதில் குளித்து மகிழ தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குற்றாலத்துக்கு வருவார்கள்.
இந்த ஆண்டு கேரளாவில் தென்மேற்கு பருவமழை மே மாத இறுதியில் தொடங்கியது. இதையடுத்து அப்போதே குற்றாலத்திலும் சீசன் ஆரம்பித்தது. சீசன் தொடங்கிய போது முதல் 3 நாட்கள் சாரல் மழை, குளிர்ந்த காற்று என ரம்மியமான சூழல் நிலவியது.
அப்போது கோடை விடுமுறை என்பதால் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இந்த மாத தொடக்கத்தில் குற்றாலத்தில் சாரல் மழை பெய்யவில்லை. இதனால் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்தது. மெயினருவி, ஐந்தருவியில் பாறையை ஒட்டியவாறு தண்ணீர் விழுந்து வந்தது. அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் வருகையும் குறைந்தது.
இந்நிலையில் நேற்று குற்றாலம் மலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மீண்டும் சாரல்மழை பெய்யத் தொடங்கியது. மேலும் குளிர்ந்த காற்றும் வீசுகிறது. நேற்று இரவு முதல் இன்று காலை வரை தொடர்ந்து சாரல் மழை பெய்ததால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.
மெயினருவி, ஐந்தருவி மற்றும் பழைய குற்றால அருவியில் மிதமான அளவில் தண்ணீர் விழுகிறது. சாரல் மழையில் நனைந்தபடி சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்தனர். வேலை நாள் என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை இன்று குறைவாகவே காணப்பட்டது.
இந்நிலையில் காலை 8 மணி அளவில் குற்றாலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென பலத்த மழை பெய்தது. 9 மணி வரை நீடித்தது. மலைப்பகுதியிலும் பலத்த மழை பெய்ததால் பிற்பகலுக்கு பிறகு அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என கருதப்படுகிறது.
இதனால் அருவியில் வரும் தண்ணீர் வரத்தை போலீசார் கண்காணித்து வருகின்றனர். அவ்வப்போது சாரல்மழை, குளிர்ந்த காற்று என ரம்மியமான சூழலுடன் குற்றாலத்தில் சீசன் ஜோராக இருக்கிறது.