search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Family Planning"

    • சக்தி கிருஷ்ணன் 3 மணி நேரம் அறிவுரைகள் கூறி ஆண்கள் கருத்தடை செய்து கொள்வதால் எந்த தொந்தரவும் இருக்காது.
    • 75 பேருக்கு மேல் இதே போன்று செய்துள்ளார்கள் என்று எடுத்துக் கூறினார்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அத்தாணி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண்களுக்கான கருத்தடை முகாம் நடைபெற்றது. இதில் தகுதி வாய்ந்த 9 பேர் கருத்தடை செய்து கொள்ள வந்திருந்தனர்.

    இதில் பர்கூர் மலைப்பகுதி ஓசூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் தாசன், மனிஷா தம்பதியினர். இவர்களுக்கு 4 ஆண் குழந்தைகள் மற்றும் 3 பெண் குழந்தைகள் என மொத்தம் 7 குழந்தைகள் உள்ளனர். மனிஷாவிற்கு இதய பிரச்சனை உள்ளதன் காரணமாக அவருக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியாத சூழ்நிலையில் அவரது கணவர் தாசனுக்கு நவீன குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.

    வட்டார மருத்துவ அலுவலர் சக்தி கிருஷ்ணன் 3 மணி நேரம் அறிவுரைகள் கூறி ஆண்கள் கருத்தடை செய்து கொள்வதால் எந்த தொந்தரவும் இருக்காது. மேலும் இதுவரை 75 பேருக்கு மேல் இதே போன்று செய்துள்ளார்கள் என்று எடுத்துக் கூறினார். பல மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு அறிவுரைகளை ஏற்று அந்தியூர் அரசு மருத்துவமனையில் டாக்டர்.பிரகாஷ் நவீன வாசக்டமி குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடித்தார்.

    மேலும் ஆபரேஷன் முடிந்தவுடன் தாசன் 108 ஆம்புலன்ஸ் மூலம் சுகாதார ஆய்வாளர் கிருபநாதன் மற்றும் கிராமப்புற செவிலியர்களுடன் சென்று அவரது இல்லத்தில் விட்டு வந்துள்ளனர்.

    • தெரு நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
    • 298 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து வெறிநாய்க்கடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் நகராட்சி பகுதியில் சுற்றித் திரியும் தெரு நாய்களுக்கு விலங்குகள் பிறப்பு கட்டுப்பாடு (குடும்ப கட்டுப்பாடு) விதிகள் 2001-ல் தெரிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகளின் படி, பட்டர்பிளை நைலான் வலைகளைக் கொண்டு நாய்கள் பிடித்து அறுவை சிகிச்சை மையத்திற்கு கொண்டு சென்று, மயக்க மருந்து செலுத்தி அவைகளுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

    வெறிநாய்க்கடி தடுப்பூசியும் போடப்படுகிறது. அதன் பின்பு பராமரிப்பு மையத்தில் வைத்து பராமரித்து காயங்கள்ஆறிய பிறகு மீண்டும் பிடித்த இடங்களிலேயே விடப்படுகிறது.

    கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் இது வரை 298 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து வெறிநாய்க்கடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

    மேலும் கருத்தடை செய்யாத நாய்களை பிடிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    • ஈரோடு மாநகராட்சி பகுதியில் தெருநாய்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
    • அங்கீகரிக்கப்பட்ட என்.ஜி.ஓ. மூலம் கருத்தடை மேற்கொள்ளப்பட உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சி பகுதியில் சமீப காலமாக தெருநாய்கள் தொல்லை அதிகரித்த வண்ணம் உள்ளது.

    குறிப்பாக இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை நாய்களை துரத்துவதும், தெருவில் விளையாடும் சிறுவர், சிறுமிகளை நாய்கள் கடிக்க துரத்துவதும் தொடர்கதையாகி வருகிறது.

    பல்வேறு பகுதிகளில் தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக நின்று கொண்டு அப்பகுதி பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. சமீப காலமாக குடும்ப கட்டுப்பாடுகள் செய்யாததால் நாய்கள் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது.

    இதனையடுத்து சுற்றி திரியும் தெரு நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இதுகுறித்து நகர் நல அலுவலர் பிரகாஷ் கூறியதாவது:

    மாநகராட்சியில் தெரு நாய்களை கட்டுப்படுத்த ஏற்கனவே தெரு நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போது அங்கீகரிக்கப்பட்ட என். ஜி. ஓ. மூலம் அடுத்த வாரம் கருத்தடை மேற்கொள்ளப்பட உள்ளது.

    இதற்காக சோலாரில் உள்ள நாய்கள் கருத்தடை மையம் புனரமைக்கப்பட்டுள்ளது. நாய்களை பயிற்சி பெற்ற தூய்மை பணியாளர்கள் மூலம் பிடிக்கப்பட்டு கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்படும்.

    3 நாள் அங்கேயே வைக்கப்பட்டு பின்னர் எங்கிருந்து பிடிக்கப்பட்டதோ அதே இடத்தில் விடுவிக்கப்படும். இதனால் தெரு நாய்கள் கட்டுப்படுத்தப்பட வாய்ப்பாக அமையும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை தீவிரமாக அமல்படுத்துவது தொடர்பாக புதிய கொள்கைகளை உருவாக்க வேண்டும் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் பா.ஜ.க. எம்.பி.க்கள் மனு அளித்தனர்.
    புதுடெல்லி:

    இந்தியாவில் மக்கள் தொகை அதிகரிப்பை தடுக்கும் வகையில் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்று கொள்ள கூடாது என்ற குடும்ப கட்டுப்பாடு திட்டம் கொண்டு வரப்பட்டது.

    ஆனால், இந்த திட்டம் தீவிரமாக அமல்படுத்தப்படவில்லை. ஆந்திரா, குஜராத், மராட்டியம், ஒடிசா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மட்டும் ஓரளவு தீவிரமாக திட்டங்கள் அமலில் உள்ளன.

    மற்ற மாநிலங்கள் எதுவும் இதை கண்டு கொள்ளவில்லை. மேலும் ஒரு சில சமூகத்தினர் குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை கடைபிடிப்பதை விரும்பவில்லை. இந்த திட்டத்தை பற்றி விமர்சனமும் எழுப்பப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் பாரதிய ஜனதா எம்.பி.க்கள் மத்திய பிரதேசத்தை சேர்ந்த கணேஷ்சிங் தலைமையில் 4 எம்.பி.க்கள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அதில், 125 எம்.பி.க்கள் கையெழுத்திட்டு இருந்தனர்.

    2 குழந்தைகள் திட்டத்தை தீவிரமாக அமல்படுத்துவது தொடர்பாக புதிய கொள்கைகளை உருவாக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    ஏற்கனவே இது சம்பந்தமாக சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டு இருந்தது. அதில், இருகுழந்தைகள் திட்டத்தை நாடு முழுவதும் ஒரே மாதிரி அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

    ஆனால், அந்த மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்துவிட்டது. கடந்த டிசம்பர் மாதம் பாராளுமன்ற கூட்டத்தில் பாரதிய ஜனதா எம்.பி. ராகவ்லக்கன்பால் சர்மா இது சம்பந்தமாக தனி நபர் தீர்மானம் ஒன்று கொண்டு வந்தார்.

    இந்த நிலையில்தான் பாரதிய ஜனதா எம்.பி.க்கள் ஜனாதிபதியிடம் மனு கொடுத்து இருக்கிறார்கள்.

    சீனாவில் மக்கள் தொகை கட்டுப்பாட்டு திட்டம் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. 1979-ம் ஆண்டு அங்கு குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்ற திட்டம் கொண்டு வரப்பட்டது.

    இதனால் குழந்தை பிறப்பு விகிதம் ஆண்டுக்கு 6 லட்சத்து 30 ஆயிரம் வரை குறைந்தது. எனவே, கடந்த ஆண்டு இந்த திட்டத்தை விலக்கி கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    ×