search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தெரு நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு
    X

    தெரு நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு

    • ஈரோடு மாநகராட்சி பகுதியில் தெருநாய்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
    • அங்கீகரிக்கப்பட்ட என்.ஜி.ஓ. மூலம் கருத்தடை மேற்கொள்ளப்பட உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சி பகுதியில் சமீப காலமாக தெருநாய்கள் தொல்லை அதிகரித்த வண்ணம் உள்ளது.

    குறிப்பாக இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை நாய்களை துரத்துவதும், தெருவில் விளையாடும் சிறுவர், சிறுமிகளை நாய்கள் கடிக்க துரத்துவதும் தொடர்கதையாகி வருகிறது.

    பல்வேறு பகுதிகளில் தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக நின்று கொண்டு அப்பகுதி பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. சமீப காலமாக குடும்ப கட்டுப்பாடுகள் செய்யாததால் நாய்கள் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது.

    இதனையடுத்து சுற்றி திரியும் தெரு நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இதுகுறித்து நகர் நல அலுவலர் பிரகாஷ் கூறியதாவது:

    மாநகராட்சியில் தெரு நாய்களை கட்டுப்படுத்த ஏற்கனவே தெரு நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போது அங்கீகரிக்கப்பட்ட என். ஜி. ஓ. மூலம் அடுத்த வாரம் கருத்தடை மேற்கொள்ளப்பட உள்ளது.

    இதற்காக சோலாரில் உள்ள நாய்கள் கருத்தடை மையம் புனரமைக்கப்பட்டுள்ளது. நாய்களை பயிற்சி பெற்ற தூய்மை பணியாளர்கள் மூலம் பிடிக்கப்பட்டு கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்படும்.

    3 நாள் அங்கேயே வைக்கப்பட்டு பின்னர் எங்கிருந்து பிடிக்கப்பட்டதோ அதே இடத்தில் விடுவிக்கப்படும். இதனால் தெரு நாய்கள் கட்டுப்படுத்தப்பட வாய்ப்பாக அமையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×