search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "farmers worried"

    • நத்தம் சுற்று வட்டார பகுதியில் செவ்வந்தி பூக்கள் பூத்துக்குலுங்கி அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளது.
    • பூக்களுக்கு எதிர்பார்த்த விலை கிடைக்காத நிலையில் சாகுபடியும் பாதிக்கப்பட்டு ள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம், நத்தம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான, மணக்காட்டூர்,கே.புதூர், சிறுகுடி, பிள்ளையார்நத்தம், வத்திபட்டி,காசம்பட்டி, செந்துறை உள்ளிட்ட கிராமங்களில் செவ்வந்தி பூக்கள் சாகுபடி செய்யப்படு கிறது.

    தற்போது இப்பகுதியில் அதிக அளவு செவ்வந்தி பூக்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.செவ்வந்திப் பூக்களைப் பொருத்தவரை ஒரு மாதத்தில் அறுவடைக்கு தயாராகி விடும். 3 மாதங்கள் வரை பூக்கள் வரத்து இருக்கும். நத்தம் சுற்று வட்டார பகுதியில் பூக்கள் பூத்துக்குலுங்கி அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளது.இந்த பூக்கள் மதுரை,திண்டுக்கல், திருச்சி உள்பட பல்வேறு நகரங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    கடந்த சில மாதங்களாக முகூர்த்த தினங்கள், திருவிழா காரணமாக விலை ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது.ஐப்பசி மாதம் முகூர்த்த தினங்கள்,திருவிழாக்கள் குறைவாக இருப்பதால் பூக்கள் விலை கடுமையாக சரிந்து ரூ.30 முதல் ரூ.50 மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் அடைமழையால் பூக்கள் சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.இதனால் வியாபாரிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.மிகவும் எதிர்பார்த்த பூக்களுக்கு விலை கிடைக்காத நிலையில் சாகுபடியும் பாதிக்கப்பட்டு ள்ளதால் விவசாயிகள் சோகத்தில் உள்ளதாக தெரிவித்தனர்.மேலும் கார்த்திகை மாதம் தொடங்கிய நிலையில் விலை உயரும் என்ற நம்பிக்கை தொடர்ந்து பூக்களை பறிக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

    • அவரைச்செடிகளில் பூக்கள் மட்டுமே அதிக அளவு பூத்த நிலையில் காய்கள் சரிவர காய்க்கவில்லை. பெரும்பாலான காய்கள் மஞ்சள் நிறத்தில் அதிகமாக புழு க்கள் கொண்டதாக இருந்தது.
    • வேளாண்துறை அதிகாரிகள் இப்பகுதி விவசாய நிலங்களை பார்வையிட்டு உரிய இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடியில் இருந்து 15 கி.மீ தூரத்தில் உள்ளது பொட்டிபுரம் கிராமம். நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க தேர்வு செய்ய ப்பட்ட இடம் என்பதன் மூலம் உலகளவில் இந்த கிராமம் பிரசித்தி பெற்றது. முற்றிலும் விவசாயத்தைச் சார்ந்தே உள்ள இப்பகுதியில் தற்போது அவரைக்காய் அதிக அளவில் பயிரிட ப்பட்டுள்ளது.

    கடந்த முறை நடப்பட்ட அவரை விதைகள் மூலம் உருவாக்கப்பட்ட அவரைச்செடிகளில் பூக்கள் மட்டுமே அதிக அளவு பூத்த நிலையில் காய்கள் சரிவர காய்க்கவில்லை. பெரும்பா லான காய்கள் மஞ்சள் நிறத்தில் அதிகமாக புழு க்கள் கொண்டதாக இருந்தது.

    இதனால் எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்க வில்லை. இங்கு பறிக்கப்படும் காய்கள் தரம் பிரிக்கப்பட்டு தேவாரம் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. மஞ்சள் பூத்த காய்கள் பறிக்காமல் செடியிலேயே விடப்படுகிறது.

    மேலும் நோய் தாக்கம் ஏற்பட்ட காய்கள் விற்பனை யாகாமல் சாலையோரம் கொட்டப்பட்டு மாடுகளுக்கு இறையாக மாறியுள்ளது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அவரைக்காய் கிலோ ரூ.60 முதல் ரூ.80 வரை விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.18 முதல் ரூ.25 வரை மட்டுமே வியாபாரி களால் வாங்கப்படுகிறது.

    விளைச்சல் பாதிப்பு குறித்து தேனி மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக விவசாயிகள் புகார் அளித்தனர். இதனையடுத்து ஆர்.டி.ஓ. தலைமையில் ஆய்வுக்குழுவை நேரில் அனுப்பி விசாரணை நடத்தவும், நிவாரணம் பெற்றுத் தருவதாகவும் அதிகாரிகள் உறுதியளித்த னர்.

    ஆனால் இது வரை விவசாயிகளுக்கு எந்தவித நிவாரணமும் கிடைக்காத தால் மிகுந்த மனவேதனை யடைந்துள்ளனர். எனவே வேளாண் துறை அதிகாரி கள் இப்பகுதி விவசாய நிலங்களை பார்வையிட்டு உரிய இழப்பீடு பெற்றுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இந்த ஆண்டு ரூ.1000 ரொக்கத்துடன் அரிசி மற்றும் சர்க்கரை மட்டுமே வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
    • கரும்பு கொள்முதல் செய்யப்படாததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

    குள்ளனம்பட்டி:

    தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேசன்கார்டுதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை, கரும்பு மற்றும் பொங்கலுக்கு தேவயைான பொருட்கள் வழங்கப்படும்.இது தவிர ரொக்கத்தொகை, வேஷ்டி-சேலையும் வழங்கப்படும்.

    இந்த ஆண்டு ரூ.1000 ரொக்கத்துடன் அரிசி மற்றும் சர்க்கரை மட்டுமே வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. ஜனவரி 2-ந்தேதி முதல் அந்தந்த ரேசன் கடைகளில் இதனைபெற்றுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி, நிலக்கோட்டை, ெநாச்சிஓடைப்பட்டி, கூவனூத்து, சாணார்பட்டி, சிலுவத்தூர், அஞ்சுகுழிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கரும்பு விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த விவசாயிகளிடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு பொங்கல் பண்டிகையின்போது வழங்கப்படும். ஆனால் இந்த ஆண்டு கரும்பு கொள்முதல் செய்யப்படாததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கடந்த ஆண்டு 300 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ.20ஆயிரம் வரை கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு விளைச்சல் குறைந்திருந்த நிலையில் அரசு வாங்காததால் விளைவித்த கரும்பை என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.

    மேலும் வியாபாரிகள் நேரடியாக கரும்பு விவசாயிகளிடம் வந்து குறைந்த விலைக்கு வாங்கிச்செல்கின்றனர். வேறு வழியின்றி நஷ்டமடைந்தாலும் அதனை விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.

    இதுகுறித்து கரும்பு விவசாயிகள் கூறுகையில்,

    ஒரு ஏக்கருக்கு சுமார் ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்து பராமரித்து கரும்பை காப்பாற்றி வந்தோம். அரசு கொள்முதல் செய்தால் எங்களுக்கு ஓரளவு லாபம் கிடைக்கும். விளைச்சல் குறைந்துள்ள போதிலும் தற்போது கிடைத்த விலைக்கு விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். வருடம் முழுவதும் கரும்பு விவசாயத்தை நம்பியே ஏராளமான விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர்.

    ஆனால் அறுவடை செய்து விற்பனைக்கு கொண்டுவரும் வேளையில் நஷ்டத்தையே சந்தித்து வருகிறோம் என்றார்.

    பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் கரும்பு கொள்முதல் செய்யப்படும் என்ற நம்பிக்கையில் ஏராளமான விவசாயிகள் இதனை ஆர்வமுடன் பயிரிட்டு வந்தனர். தற்போது அரசு அறிவித்துள்ள முடிவால் வரும் காலங்களில் கரும்பு விவசாயத்தை கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

    திண்டுக்கல் போன்ற சராசரி மழையளவு கிடைக்காத மாவட்டங்களில் பல்வேறு இன்னல்களுக்கு இடையில் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் விளைபொருளுக்கு ஏற்ற விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். எனவே அரசு இப்பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • கடந்த சில மாதங்களாக தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
    • தேங்காய் சார்ந்துள்ள தொழில்கள் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருவதால் விவசாயிகள் வேதனைக்கு உள்ளாகியுள்ளனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகே சாணார்பட்டி, சிலுவத்தூர், வேம்பார்பட்டி, நத்தம், பரளி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தென்னையில் இருந்து பறிக்கப்படும் தேங்காய்கள் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.இதனால் கோபால்பட்டி அருகே வேம்பார்பட்டியில் தேங்காய்கள் களத்தில் உடைத்து காயப்போட்டு கொப்பரைகளாக மாற்றம் செய்யப்பட்டு காங்கேயம் மற்றும் வெள்ளக்கோவில் வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது.இந்நிலையில், தேங்காய் மற்றும் கொப்பரை விலை தொடர்ந்து சரிந்து வருவதால் இந்த பகுதிகளில் உள்ள விவசாயிகள் புதிதாக தென்னங்கன்று நடவு செய்வதில் ஆர்வம் காட்டவில்லை.

    இதுகுறித்து வேம்பார்பட்டி விவசாயிகள் கூறுகையில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் கொப்பரை தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்து வருகிறது.இதன் காரணமாக தோட்டங்களில் கொப்பரை தேங்காய் மற்றும் தேங்காய்கள் இருப்பு வைக்கப்படுகிறது.தேங்காய் சார்ந்துள்ள தொழில்கள் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருவதால் விவசாயிகள் வேதனைக்கு உள்ளாகியுள்ளனர்.

    முன்பு தேங்காய் சராசரியாக காய் ஒன்றுக்கு ரூ.10 முதல் ரூ.12 வரை இருந்தது. தற்போது ரூ.8 -க்கு விற்பனையாகி வருகிறது.கடந்த சில மாதங்களுக்கு முன்பு சராசரியாக ரூ.13-க்கு கொள்முதல் செய்யப்பட்டது.

    தற்போது வெளிமார்க்கெட்டில் அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.65-க்குமட்டும் கொள்முதல் செய்யப்படுகிறது.முன்பு ரூ.120-க்கு மேல் கொள்முதல் விலை இருந்தது.தொடர்ந்து கொப்பரை மற்றும் தேங்காய் விலை சரிந்து வருகிறது.ஆனால், தென்னை பராமரிப்பு செலவு, உரச்செலவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    ஆகவே அரசு உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கொப்பரை தேங்காய் ஏற்றுமதிக்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

    • கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக சாரல் மழை பெய்தது.
    • செடிகள் அழுகும் என விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

    கடலூர்:

    தெற்கு ஆந்திரா பகுதியில் மேல்வளி மண்டல சுழற்றி நிலை கொண்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பரவலாக 2 நாட்கள் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக சாரல் மழை பெய்தது. நேற்று இரவு முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது. இன்று காலையும் மழை நீடித்தது.

    கடலூர், நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கம், பண்ருட்டி, திருவந்திபுரம், குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை மழை கொட்டியது.  கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பருவமழையையொட்டி நெல் நாற்றங்கால் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த மழை விவசாயத்துக்கு ஏற்றதாக உள்ளது என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். ஊடு பயிராக பயிரிட்டுள்ள செடிகளுக்கு இந்த மழை உகந்ததாக இல்லை என்றும், இதனால் செடிகள் அழுகும் என விவசாயிகள் கவலை தெரிவித்தனர். வடகிழக்கு பருவமழை பற்றி மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி மாவட்டம் முழுவதும் தாழ்வான பகுதிகளை கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகா ரிகள் தீவிரமடைந்துள்ளனர்

    • கொப்பரை தேங்காய் ஏலம் விலை குறைவால் கவலையில் விவசாயிகள் அடைந்துள்ளனர்.
    • அதிக விலையாக ரூ.78. ஏலம் போனது

    கரூர்:

    கரூர் மாவட்டத்தில் க.பரமத்தி, கரூர் ஆகிய இரு வெவ்வேறு ஒன்றிய பகுதிகளில் விலையும் தேங்காய்களை உடைத்து காய வைத்து தங்களது தேவைக்கு எண்ணை எடுத்ததுபோக மீதம் உள்ள பருப்பினை யும், தேங்காய்களையும் அருகேயுள்ள சாலைபுதூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் திங்கள்தோறும் நடைபெறும் ஏலத்திற்கு கொண்டு செல்கின்றனர்.

    அங்கு கொப்பரை தேங்காய்காக நடந்த ஏலத்திற்கு சுமார் 800மூட்டைகளில் கொப்பரை தேங்காய் கொண்டு வரப் பட்டுஏலம்விடப்பட்டது. கொப்பரை தேங்காய் ஒரு கிலோ சராசரி விலையாக ரூ 73, ஒரு கிலோ கொப்பரை தேங்காய் முதல் ரகம் அதிக விலையாக ரூ.78. ஏலம் போனது. கடந்த வாரத்தை விட கிலோ விற்கு ரூ.4குறைந்து ஏலம் போனதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இதே போல தேங்காய் களுக்காகநடந்தஏலத்தில் சுமார் 9900தேங்காய்கள் ஏலம்விடப்பட்டன.இதில் ஒரு கிலோ தேங்காய்கள் விலைகுறைந்தவிலையாக ரூ.18, ஒரு கிலோ தேங்காய் அதிக விலையாக ரூ.23 ஏலம் போனது. கடந்த வாரத்தை விட கிலோ விற்கு ரூ.2குறைந்து ஏலம் போனதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

    • ஆயிரம் மெட்ரிக் டன் அளவு கொண்ட ஒரே குடோன் மட்டுமே ஒழுங்கு விற்பனை கூடம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
    • தரமான சீட்டுகளை அகற்றி விட்டு மிகவும் தரமற்ற தகர சீட்டுகளை பொருத்தியதால் இது போன்ற பாதிப்பு ஏற்படுகிறது.

    சின்னசேலத்தில் உள்ள ஒழுங்கு விற்பனை கூடத்தில் 5 குடோன்கள் இருக்கின்றது. இதில் ஆயிரம் மற்றும் 500 மெட்ரிக் டன் அளவு கொண்ட குடோன்கள் தமிழ்நாடு வாணிப நுகர் பொருள் கிடங்கின் கட்டுப்பாட்டில் உள்ளது. 1200 மற்றும் ஆயிரம் மெட்ரிக் டன் அளவு கொண்ட குடோன் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மீதமுள்ள ஆயிரம் மெட்ரிக் டன் அளவு கொண்ட ஒரே குடோன் மட்டுமே ஒழுங்கு விற்பனை கூடம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஒரே குடோனும் புதுப்பித்தல் என்ற பெயரில் தரமான மேற்கூரை சீட்டுகளை அகற்றிவிட்டு தரமற்ற தகர சீட்டுகளை கொண்டு மேற்கூரையாக போடப்பட்டுள்ளது. சமீபத்தில் அடித்த மழை காற்றின் காரணமாக தரமற்ற சீட்டுகள் தூக்கி வீசப்பட்டு சேதமடைந்தது. பிறகு இந்த கமிட்டியில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் முன்வந்து பறந்த தகர சீட்டை எடுத்து ஓட்டை விழுந்த இடத்தில் தற்காலிகமாக அதன் மேல் கல் வைத்து மூடி வைக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆங்காங்கே ஓட்டைகள் ஏற்பட்டு மழை நீர் உள்ளே வருவதால் விவசாயிகளின் தானிய மூட்டைகள் நனைந்து விவசாயிகளுக்கு பெருமளவு பாதிப்பு ஏற்படுகிறது.

    கடந்த காலங்களில் குடோன்களின் மேற்கூ ரையை தரமாகவும் உறுதியாகவும் விவசாயிகளுக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில் போடப்பட்டு வந்த நிலையில் தற்போது அது தலைகீழாக மாறி பணம் நோக்கமாகக் கொண்டு தரமான சீட்டுகளை அகற்றி விட்டு மிகவும் தரமற்ற தகர சீட்டுகளை பொருத்தியதால் இது போன்ற பாதிப்பு ஏற்படுகிறது. சிறிய காயம் பெரும் தொந்தரவு என்பது போல விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள்.இதுபோன்ற தரமற்ற சீட்டுகளை பொருத்துவதால் அரசாங்கத்தின் பணமும் வீணடிக்கப்பட்டு விவசாயிகளின் உழைப்பும் வீணடிக்கப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு தரமான சீட்டு பொருத்தி விவசாயிகளின் தானிய மூட்டைகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • ஏராளமான வயல்கள் இந்த தண்ணீரில் மூழ்கி உள்ளது. மேலும் தற்போது நடவு செய்யப்பட்ட குறுவை நெற்பயிரும், வளர்ச்சி பருவத்தில் உள்ள கரும்பு, வாழை பயிர்களும் நீரில் மூழ்கியது.
    • அதிகாரிகள் பார்வையிட்டு கணக்கீட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தஞ்சாவூர்:

    கர்நாடகா மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

    நேற்று மேட்டூர் அணையில் இருந்து 1 லட்சத்து 80 ஆயிரம் கனஅடி உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    இதனை தொடர்ந்து முக்கொம்பில் இருந்தும், கல்லணையில் இருந்தும் பெருமளவு தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் திருப்பி விடப்படுகிறது.

    பயிர்கள் மூழ்கியது இதன் காரணமாக தஞ்சை அடுத்த அய்யம்பேட்டை அருகே கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரிக்க தொடங்கி கடல் போல் காட்சியளிக்கிறது.

    இந்த வெள்ளப்பெருக்கால் கொள்ளிடம் ஆற்றின் கரையோர பகுதிகளான வீரமாங்குடி, தேவன்குடி, பட்டுக்குடி, கூடலுர், புத்தூர், குடிக்காடு உள்ளிட்ட கிராமங்களில் கொள்ளிடம் ஆற்றின் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    இதனால் பழைய மன்னியாற்று பகுதியில் ஏராளமான வயல்கள் இந்த தண்ணீரில் மூழ்கி உள்ளது.

    மேலும் தற்போது நடவு செய்யப்பட்ட குறுவை நெற்பயிரும், வளர்ச்சி பருவத்தில் உள்ள கரும்பு, வாழை பயிர்களும் நீரில் மூழ்கியது.

    சில இடங்களில் அறுவடைக்கு தயாரான முன்பட்ட குறுவை பயிர்களும் மூழ்கியது. தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்து வருவதாலும், வெள்ள பெருக்கு காரணமாகவும் மூழ்கிய பயிர்கள் அழுகும் சூழ்நிை உருவாகி உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    இதேப்போல் பட்டுக்குடி கிராமத்தில் ஈமகிரியை மண்டபமும் கொள்ளிடம் ஆற்றின் வெள்ள பெருக்கால் மூழ்கியது.

    நிவாரணம் வழங்க வேண்டும். கொள்ளிடம் ஆற்றின் வெள்ள பெருக்கு காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்திலும் சில இடங்களில் அறுவடைக்கு தயாரான முன்பட்ட குறுவை பயிர்கள் பாதிப்படைந்துள்ளன. நாகை மாவட்டத்தில் தொடர் மழையால் நெற்பயிர்கள் மட்டுமின்றி மற்ற பயிர்களும் பாதிக்கப்பட்டு உள்ளன.

    தொடர்ந்து நெற்பயிர்கள் பாதிப்படைந்து வருவதால் அதிகாரிகள் பார்வையிட்டு கணக்கீட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தருமபுரி மாவட்டத்தில் வெற்றிலை விலை சரிவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி மற்றும் பல்வேறு பகுதிகளில் வெற்றிலை சாகுபடி செய்யப்படுகிறது. இந்த வெற்றிலைகள் நல்லம்பள்ளிக்கு எடுத்து வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இன்று வெற்றிலை விலை மிகவும் குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர். 

    ஏற்கனவே ஒரு கட்டு வெற்றிலை ரூ.50க்கு விற்கப்பட்டது. இன்று ஒரு கட்டு வெற்றிலை ரூ.10 முதல் ரூ.20 வரை விலை போனது. இந்த வெற்றிலைகள் தருமபுரியில் இருந்து ஈரோடு, சேலம், கொங்கணாபுரம், எடப்படி உள்ளிட்டட பல்வேறு பகுதிகளுக்கு வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.
    சாணார்பட்டி பகுதியில் மாங்காய் விளைச்சல் குறைவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகே வேம்பார்பட்டியில் தமிழகத்தில் 2-வது பெரிய மாம்பழ சந்தை உள்ளது. கிருஷ்ணகிரிக்கு அடுத்த படியாக வேம்பார்பட்டி சந்தைக்கு தேனி, திண்டுக்கல், திருச்சி, ஆயக்குடி, சாணார்பட்டி, கோபால்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து மாங்காய்கள் கொண்டு வரப்படுகிறது.

    குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களுக்கும், மலேசியா, துபாய், அபுதாபி உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. நவம்பர், டிசம்பர் மாதங்களில் பூ பூக்க தொடங்கி ஏப்ரல் முதல் ஜூன்வரை மாங்காய் விளைச்சல் இருக்கும். பருவமழை சமயத்தில் மழை பெய்யாததால் மாங்காய் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் சந்தைக்கும் மாங்காய் வரத்து குறைந்த அளவே வந்துள்ளது. மேலும் விலையும் குறைத்து கேட்கப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    கடந்த ஆண்டு கல்லாமாங்காய் ரூ.14-ல் இருந்து ரூ.18 வரை விலை கேட்கப்பட்டது. இந்த வருடம் ரூ. 10 முதல் ரூ.15 வரையே விலை கேட்கப்படுகிறது. இதேபோல் இமாம்பாசாத் கடந்த ஆண்டு ரூ.80 முதல் ரூ.90 வரையும் இந்த ஆண்டு ரூ. 60 முதல் ரூ.70 வரையும் விலை கேட்கப்பட்டது. செந்தூரம் கடந்த ஆண்டு ரூ.20 முதல் ரூ.25 வரையும், இந்த ஆண்டு ரூ.12 முதல் ரூ.16 வரையும் விலை கேட்கப்படுகிறது. மொத்தம் 150 வகையான மாங்காய்கள் சந்தைக்கு வந்துள்ளது.

    இது குறித்து மா, புளி, தென்னை விவசாயிகள் சங்க தலைவர் வேம்பார்பட்டி கண்ணுமுகமது கூறுகையில், சரியான நேரத்தில் பருவமழை பெய்யாததால் விளைச்சல் குறைந்துள்ளது. மற்ற மாவட்டங்களில் ஓரளவு பருவமழை கைகொடுத்ததால் விளைச்சல் உள்ளது.

    எனவே வேம்பார்பட்டி சந்தைக்கு மாங்காய் வருகை குறையத் தொடங்கி உள்ளது. எனவே அரசு மானிய விலையில் விவசாயிகளுக்கு உபகரணங்கள் வழங்க வேண்டும், சொட்டு நீர் பாசனம் அமைத்து தர வேண்டும் என்றார்.

    ×