என் மலர்
நீங்கள் தேடியது "fashion show"
- நடிகைகள் பிரியங்கா, சோப்ரா, கியாரா அத்வானி, திஷா பதானி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
- முதல் முறையாக இந்த வருட மெட் காலா நிகழ்வில் பாலிவுட் கிங் ஷாருக் கான் கலந்துகொண்டார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மெட் காலா 2025 ஃபேஷன் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
மெட்ரோபொலிட்டன் மியூசியம் ஆஃப் ஆர்ட்ஸ் காஸ்டியூம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்திற்கு நிதி திரட்டும் விதமாக ஆண்டுதோறும் மெட் காலா ஃபேஷன் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இதில் உலகெங்கிலும் உள்ள திரைப் பிரபலங்கள் இசை கலைஞர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்று வருகின்றனர். வித்தியாசமான உடையில் தோன்றி கேரமா முன் போஸ் கொடுப்பதே இந்நிகழ்வின் சாராம்சம்.
அந்த வகையில் இந்த ஆண்டிற்கான மெட் காலா ஃபேஷன் நிகழ்ச்சியில் பல்வேறு பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர். இந்திய நடிகைகள் பிரியங்கா, சோப்ரா, கியாரா அத்வானி உள்ளிட்ட பலர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். மேலும் முதல் முறையாக இந்த வருட மெட் காலா நிகழ்வில் பாலிவுட் கிங் ஷாருக் கான் கலந்துகொண்டார்.

ஸ்டைலான கருப்பு நிற உடையில், கழுத்தில் 'K' என்ற எழுத்து பொறிக்கப்பட்ட பெரிய செயின் உடன் ஷாருக் கான் தனக்கே உரிய ஸ்டைலில் தோன்றினார்.

இந்த நிகழ்வில் சுவாரஸ்யமான சம்பவமாக, வெளிநாட்டு ஊடகங்கள் ஷாருக் கானை அடையாளம் காணத் தவறியுள்ளன. நிகழ்வில் ஒரு நிருபர் ஷாருக் கானிடம் நீங்கள் யார் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு அவர் சிரித்தவாறே, நான் தான் ஷாருக் கான் என்று கூறியுள்ளார். இந்த உரையாடலின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய ரசிகர்கள் கடவுள் அந்தஸ்தில் பார்க்கும் ஷாருக் கானை யார் என்று கேட்ட நபரை நெட்டிசன்கள் வலை வீசி தேடி வருகின்றனர்.
- விபத்தை தொடர்ந்து பேஷன் ஷோ நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
- நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த ஏற்பாட்டாளர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர்
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் மாநில அரசு சார்பில் திரைப்பட நகர் உருவாக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள பிலிம் சிட்டியில் அமைந்துள்ள ஸ்டூடியோவில் நேற்று பேஷன்ஷோ நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யபட்டிருந்தது. இதில் ஏராளமான மாடல் அழகிகள் விதவிதமான ஆடை அணிந்து 'ரேம்ப்வாக்' வந்தனர்.
24 வயதான வன்சிகா சோப்ரா என்ற மாடல் அழகி ரேம்ப்வாக் சென்றபோது எதிர்பாராதவிதமாக அங்கிருந்த இரும்பு தூண் ஒன்று மேலிருந்து சரிந்து அவர் மீது விழுந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். அவர்கள் வன்சிகா சோப்ரா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
மின் விளக்குகளுக்காக அந்த இரும்புதூண் அமைக்கப்பட்டு இருந்ததாகவும், எதிர்பாராத விதமாக அந்த தூண் மேலிருந்து சரிந்து விழுந்து விட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் பாபிராஜ் என்ற வாலிபர் காயம் அடைந்துள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கபட்டுவருகிறது. இந்த விபத்தை தொடர்ந்து பேஷன் ஷோ நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், பேஷன்ஷோ நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. எனவே நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த ஏற்பாட்டாளர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர் என்றனர்.
- கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக ரசாயனம் கலக்காத வகையில் இயற்கையான ஆயத்த ஆடைகளை தயாரித்து வருகிறது.
- விலை சற்று அதிகம் என்றாலும் இந்த உடைகளுக்கு என தனி வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
புதுச்சேரி:
புதுவை அருகே உள்ள ஆரோவில் பகுதியில் தனியார் ஆயத்த ஆடை தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
சுனாமி தாக்குதலுக்கு பிறகு இங்கு தயாரிக்கப்பட்ட சுனாமிகா பொம்மை உலக அளவில் புகழ் பெற்றது. இந்த நிறுவனம் கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக ரசாயனம் கலக்காத வகையில் இயற்கையான ஆயத்த ஆடைகளை தயாரித்து வருகிறது.
அண்மையில் இந்த நிறுவனம் துளசி, சந்தனம், கத்தாழை போன்ற மருத்துவ குணம் கொண்ட மூலிகைகளை கொண்டு துணிகளை உற்பத்தி செய்து அவற்றை கொண்டு ஆடைகளை தயாரித்து வருகின்றது.
இவற்றை ஆன்லைன், உள்ளூர் கடைகள், வெளி மாநிலங்களிலும் வெளி நாடுகளிலும் தனி விற்பனையகம் அமைத்து விற்பனை செய்து வருகிறது.
ஆரோவில்லை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பெண்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் தொடங்கப்பட்ட இந்த ஆயத்த ஆடை நிறுவனம் இயற்கை பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் உடைகளை தயாரிக்கிறது.
விலை சற்று அதிகம் என்றாலும் இந்த உடைகளுக்கு என தனி வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
வாடிக்கையாளர்கள் இந்த உடைகளை அணிந்து வலம் வந்த வித்தியாசமான பேஷன் ஷோ புதுவை நகர விற்பனை கூடத்தில் நடந்தது. இதில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் ரசாயன கலக்காத ஆயத்த ஆடைகள் அணிந்து ஒய்யார நடை நடந்து கைத்தட்டல் பெற்றனர்.
பெண்கள் சுய தொழில் செய்து சம்பாதிக்க முடியும் என்பதை வெளிபடுத்தும் விதமாக இந்த பேஷன் ஷோ நடத்தப்பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
- அஷ்டலட்சுமி மஹோத்சவ நிகழ்ச்சிகள் 3 நாட்கள் நடக்கிறது.
- நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
புதுடெல்லி:
பேஷன் ஷோவில் அழகிகள் ஒய்யாரமாக நடந்து வருவதைதான் நாம் பார்த்திருப்போம். ஆனால் டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய மந்திரிகள் 2 பேர் அலங்கார ஆடை அணிந்து ஒய்யாரமாக நடந்து வந்து அசத்தினர்.
டெல்லியில் வடகிழக்கு மாநிலங்களான அசாம், அருணாசல பிரதேசம், மேகாலயா, மணிப்பூர், நாகாலந்து, மிசோரம், திரிபுரா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்கள். அஷ்ட லட்சுமியின் 8 வடிவங்கள் என்று குறிப்பிடப்படுகின்றன.
அந்த மாநிலத்தினர் இந்தியாவின் கலாச்சார சமூக மற்றும் பொருளாதார கட்டமைப்பிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறார்கள். அவர்களின் காலாச்சார பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் பொருட்டு டெல்லியில் அஷ்டலட்சுமி மஹோத்சவ நிகழ்ச்சிகள் 3 நாட்கள் நடக்கிறது. நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஜவுளி தொழில், கைவினை பொருட்கள், தனித்துவமான, புவியியல் குறியீடு தயாரிப்புகள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது.
இதில் முக்கிய நிகழ்வாக பேஷன் ஷோ நடந்தது. அழகிகள் பாரமபரிய ஆடை அணிந்து ஒய்யரமாக நடந்து வந்து அசத்திக் கொண்டிருந்தனர்.
அப்போது யாரும் எதிர்பாராத விதமாக நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய மந்திரிகள் ஜோதிராதித்ய சிந்தியா, சுகந்தா மஜும்தார் ஆகிய 2 பேரும் மேடையில் தோன்றி வட கிழக்கு மாநிலங்களின் பாரம்பரிய ஆடைகளை அணிந்து ஒய்யாரமாக நடந்து வந்து அசத்தினர்.
இது அங்கிருந்த பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. அழகிகளுக்கு இணையாக மத்திய மந்திரிகள் நடந்து வந்ததை அங்கிருந்த பார்வையாளர்கள் கரகோஷம் எழுப்பி ஆர்ப்பரித்தனர்.
இதுகுறித்து மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா தனது எக்ஸ் தளத்தில், இந்த நிகழ்வு கலாச்சாரம் மற்றும் படைப்பாற்றலின் கொண்டாட்டம்.
வடகிழக்கு இந்தியாவின் துடிப்பான பாணிகளை வெளிப்படுத்தும் பேஷன் ஷோவில் ஒரு அற்புதமான நேரம் இருந்தது. ஒவ்வொரு மாநிலமும் திறமையான கலைஞர்கள் மற்றும் மாடல்களால் அழகாக பிரதிநிதித்துவபடுத்தப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் எக்ஸ் தளத்தில் பேஷன் ஷோவில் தான் ஒய்யாரமாக நடந்து வந்த படங்களையும் பதிவிட்டுள்ளார்.
- பனிசூழ்ந்த குல்மார்க் மலைப்பகுதியில் திறந்தவெளியில் அணிவகுத்து நடந்தனர்.
- பேஷன் ஷோவில் கவர்ச்சியாக அரைகுறை ஆடைகளுடன் பெண்கள் வளம் வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
ரம்ஜான் மாதத்தில் ஜம்மு காஷ்மீரில் நடத்தப்பட்ட ஒரு பேஷன் ஷோ அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல டிசைனர்களான சிவன் பாட்டியா மற்றும் நரேஷ் குக்ரேஜா சேர்ந்து நடத்தும் ஆடம்பர பேஷன் பிராண்டான ஷிவன் & நரேஷ். இந்நிறுவனத்தின் 15வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் மார்ச் 7 ஆம் தேதி குல்மார்க்கில் ஒரு பேஷன் ஷோவை அவர்கள் நடத்தினர்.
அவர்கள் வடிவமைத்த ஆடைகளை அனைத்து மாடல்கள், பனிசூழ்ந்த குல்மார்க் மலைப்பகுதியில் திறந்தவெளியில் அணிவகுத்து நடந்தனர்.
ஆனால் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதியில் புனித ரமலான் மாதத்தில் நடைபெறும் இந்த பேஷன் ஷோவில் கவர்ச்சியாக அரைகுறை ஆடைகளுடன் பெண்கள் வளம் வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
காஷ்மீரின் தலைமை மதகுரு மிர்வாய்ஸ் உமர் பாரூக் இந்த நிகழ்ச்சியை கடுமையாக விமர்சித்து, இது அநாகரீகமானது என்றும் காஷ்மீரின் கலாச்சார மற்றும் மத நம்பிக்கைகளை அவமதிப்பதாகவும் கண்டிடிருந்தார்.

இதைத்தொடர்ந்து நேற்று நடந்த காஷ்மீர் சட்டமன்றக் கூட்டத்திலும் இந்த பேஷன் ஷோ விவாதப்பொருள் ஆனது. இதுதொடர்பாக அவையில் பேசிய முதல்வர் உமர் அப்துல்லா, குல்மார்க்கில் நடைபெற்ற ஆடை அணிவகுப்பு தனியார் நிகழ்ச்சி. இதில் அரசுக்கு எந்த தொடர்பும் கிடையாது.
எனினும் இந்த ஆடை அணிவகுப்பு சமூகத்தின் உணர்வுகளை புண்படுத்தி இருக்கிறது. இதுதொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. சட்ட விதிகள் மீறப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். என்று தெரிவித்தார். மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா முப்தியும் இந்த ஷோவுக்கு ஆட்சேபனை தெரிவித்தார்.
இந்நிலையில் அரசியல் ரீதியாக தங்கள் நிகழ்ச்சிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் நிகழ்ச்சி ஏற்பாட்டார்களான சிவன் பாட்டியா மற்றும் நரேஷ் குக்ரேஜா பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 'புனித ரம்ஜான் மாதத்தில் குல்மார்க்கில் நடந்த எங்கள் பேஷன் ஷோ யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தியதற்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம்.

எங்கள் நோக்கம் படைப்பாற்றல் மற்றும் வாழ்க்கை முறையைக் கொண்டாடுவது மட்டுமே, யாருடைய மத உணர்வுகளையும் புண்படுத்துவது அல்ல.
நாங்கள் அனைத்து கலாச்சாரங்களையும் மரபுகளையும் மதிக்கிறோம், மேலும் உங்களின் கவலைகளை நாங்கள் முழுமையாகப் புரிந்துகொள்கிறோம்.
சிரமத்திற்கு நாங்கள் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். எதிர்காலத்தில் மிகவும் எச்சரிக்கையாகவும், கவனமுடனும் இருக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்' என்று தெரிவித்துள்ளனர்.


சுதா சந்திரன் விபத்தில் காலை இழந்த பிறகு செயற்கை கால்களுடன் நடனம் ஆடி சாதனை புரிந்தவர். கால்கள் ஊனமுற்றவர்களுக்காக நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி மிகவும் நல்ல விஷயம். இது அவர்களை ஊக்கப்படுத்தும் என தெரிவித்தார். இந்த சேவை நிறுவனம் ஊனமுற்றவர்களின் வளர்ச்சிக்காக பல்வேறு முயற்சிகள் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. #Speciallyabledmodels