என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "female murder"
- பழனியம்மாளுக்கும், மாதுவுக்கும் இடையே வழித்தட பிரச்சினை இருந்து வந்தது.
- மேலும் பழனியம்மாளை கீேழ தள்ளி விட்டு அருகில் கிடந்த அம்மிக்கல்லை தூக்கி அவரது தலையில் போட்டு கொலை செய்தார்.
காடையாம்பட்டி:
சேலம் மாவட்டம் தும்பிப்பாடி அருகே உள்ள ரெட்டியூர் காலனியை சேர்ந்தவர் சாமிநாதன். இவருடைய மனைவி பழனியம்மாள் (வயது 52). இவர்களுக்கு கந்தசாமி, சண்முகம், கார்த்திக் என்ற 3 மகன்கள் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு சாமிநாதன் இறந்து விட்டார்.
இதனால் பழனியம்மாள் தனது வீட்டிலேயே காய்கறி வியாபாரம் செய்தும், மற்றும் ஆடுகள் மேய்த்தும் மகன்களை வளர்த்தார். தொடர்ந்து 2 மகன்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. 3-வது மகனுக்கு மட்டும் திருமணம் ஆகவில்லை. 3 மகன்களும் வெளியூரில் தங்கி டிரைவர் வேலை பார்த்து வருகின்றனர்.
பழனியம்மாளின் பக்கத்து வீட்டை சேர்ந்தவர் மாது (வயது 37). பெயிண்டர். இந்த நிலையில் பழனியம்மாளுக்கும், மாதுவுக்கும் இடையே வழித்தட பிரச்சினை இருந்து வந்தது.
இதனால் மாது கடந்த 1-ந்தேதி இரவு குடித்து விட்டு வந்து பழனியம்மாளிடம் தகராறு செய்தார். மேலும் பழனியம்மாளை கீேழ தள்ளி விட்டு அருகில் கிடந்த அம்மிக்கல்லை தூக்கி அவரது தலையில் போட்டு கொலை செய்தார். பின்னர் மாது அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
மலை பகுதியில் பதுங்கி இருந்தார்
இந்த கொலை சம்பவம் சம்பவம் குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாது பற்றி ரெட்டியூர் காலனி மக்களிடம் விசாரித்தனர். போலீசாரிடம் அப்பகுதி மக்கள் கூறுகையில், மாது அடிக்கடி குடித்துவிட்டு ஊரில் உள்ள பலரிடம், தொடர்ந்து இதுபோல் பிரச்சினை செய்து வருகிறார். அவரை கைது செய்து ஜெயிலில் அடைத்தால் தான் இப்பகுதியில் மக்கள் நிம்மதியாக வாழ முடியும் என்றனர்.
இதையடுத்து தலைமறைவான மாதுவை பல்வேறு இடங்களில் போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் காஞ்சேரி மலையடிவாரத்தில் மாது பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் காஞ்சேரி மலையடிவாரத்தில் விரைந்து சென்று மாதுவை சுற்றி வளைத்து மடக்கி பிடித்து கைது செய்தனர்.
கைதான மாது ஏற்கனவே திருமணம் ஆனவர். குடும்ப செலவுக்கு பணம் கொடுக்காமல், வேலைக்கும் செல்லாமல் நண்பர்களுடன் மது குடித்து வந்தார். மேலும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் கள்ளத் தொடர்பு வைத்துக்கொண்டார். இதை அறிந்த அவரது உறவினர்கள் கண்டித்தனர். ஆனாலும் மாது கேட்கவில்லை.
கணவரின் நடத்தை சரியில்லாததால் கடந்த சில வருடங்களுக்கு முன்பு விவாகரத்து பெற்று அவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். தற்போது அந்த பெண் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு கணவருடன் வாழ்ந்து வருகிறார் என்பது விசாரணையில் தெரியவந்தது. ைகது செய்யப்பட்ட மாதுவுக்கு கொேரானா இருக்கிறதா? என ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நடராஜபுரம் 5-வது தெருவைச் சேர்ந்தவர் சேதுராமன். இவருடைய மகன் மாரிமுத்து (வயது 28), ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி விமலா (25). இவர்களுக்கு காவியா (4), ஸ்ரீவித்யா (2) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.
மாரிமுத்து, அப்பகுதியில் தன்னுடைய குடும்பத்தினருடன் வாடகை வீட்டில் வசித்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாரிமுத்து அப்பகுதியில் உள்ள மற்றொரு வாடகை வீட்டில் தன்னுடைய குடும்பத்தினருடன் குடியேறினார். எனினும் பழைய வீட்டை காலி செய்யாததால், அங்கு சில பொருட்கள் இருந்தன.
அதே பகுதியைச் சேர்ந்தவர் குமார் (20), வெல்டிங் பட்டறை தொழிலாளி. இவருக்கும், விமலாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் இரவில் மாரிமுத்து தன்னுடைய குடும்பத்தினருடன் புதிதாக குடியேறிய வீட்டில் தூங்கினார். அப்போது நள்ளிரவில் கண் விழித்த விமலா, அப்பகுதியில் உள்ள தங்களது பழைய வீட்டுக்கு சென்றார். அவரை எதிர்பார்த்து, கள்ளக்காதலன் குமாரும் அங்கு தயாராக இருந்தார். பின்னர் அவர்கள் இருவரும் பழைய வீட்டில் உல்லாசமாக இருந்துள்ளனர்.
இந்த நிலையில் அதிகாலை 5 மணியளவில் கண்விழித்த குழந்தை ஸ்ரீவித்யா தன்னுடைய தாயாரை காணாததால் அழுதாள். இதனால் கண்விழித்த மாரிமுத்து மனைவியை தேடினார். ஆனால் வீட்டில் விமலா இல்லாததால், மாரிமுத்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர், அப்பகுதியில் உள்ள தன்னுடைய மாமனாரின் வீட்டுக்கு சென்று விமலாவை தேடினார். அங்கும் அவர் இல்லாததால், மாரிமுத்து தனது பழைய வீட்டுக்கு சென்று பார்த்தார்.
அங்கு விமலாவும், குமாரும் உல்லாசமாக இருந்தாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மாரிமுத்து, இரும்பு கம்பியால் குமாரை சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த குமார் அலறியடித்தவாறு வெளியே ஓடி விட்டார். மேலும், ஆத்திரம் தீராத மாரிமுத்து இரும்பு கம்பியால் தன்னுடைய மனைவியையும் சரமாரியாக தாக்கினார். இதில் விமலா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
இதுகுறித்து மாரிமுத்து அக்கம்பக்கத்தில் உள்ள தன்னுடைய உறவினர்களிடம் தெரிவித்தார். பின்னர் அவர், கொலைக்கு பயன்படுத்திய இரும்பு கம்பியுடன் சென்று, கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்துவை கைது செய்தனர்.
கொலை செய்யப்பட்ட விமலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவான குமாரையும் போலீசார் தேடி வருகின்றனர். #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்