என் மலர்
நீங்கள் தேடியது "fetus"
- கரு. கருப்பையா பாட்டு பட்டிமன்றம் நடக்கிறது.
- இரவு 7 மணிக்கு ஓ.ஆர். கண்ணன் குழுவினரின் இன்னிசை கச்சேரியும் நடக்கிறது.
மதுரை
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள குச்சம்பட்டியில் விநாயகர் மற்றும் மாரியம்மன் கோவில் 120-ம் ஆண்டு உற்சவ விழா நடைபெற்று வருகிறது.
விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக வருகிற 31-ந் தேதி மதியம் அன்னதானமும், இரவு 9 மணிக்கு பிரபல ஜோதிடர் மடப்புரம் விலக்கு கரு.கருப்பையா நடுவராக பங்கேற்கும் சிரிப்பு-பாட்டு பட்டிமன்றமும் நடக்கிறது.
மதுரை கீழ மாரட் வீதி பந்தடி 4-வது தெருவில் உள்ள பழைய கோண அரசமரம் பிள்ளையார் கோவிலில் கும்பாபிஷேக விழா வருகிற 1-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10.30 மணி முதல் 11.15 மணிக்குள் விமரிசையாக நடைபெறுகிறது.
அன்று மாலை 6 மணிக்கு ஓ.வி ஆர்.எம்.ராஜ்குமார் தலைமையில் சிரிப்பு பட்டிமன்ற நடுவரும், தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் இலக்கியப் பேரவை தலைவருமான திருப்புவனம் கரு.கருப்பையா பங்கேற்கும் நகைச்சுவை சொல் அரங்கம் நடக்கிறது.
இதனையடுத்து இரவு 7 மணிக்கு ஓ.ஆர். கண்ணன் குழுவினரின் இன்னிசை கச்சேரியும் நடக்கிறது.
- வருகிற 16-ந்தேதி ஆடி அமாவாசையன்று எதிலும் எச்சரிக்கை தேவை.
- பிரபல ஜோதிடர் கரு.கருப்பையா விளக்கமளிக்கிறார்.
மதுரை
வருகிற 16-ந்தேதி ஆடி அமாவாசையாகும். புதன் கிழமை அன்று நிறைந்த அமாவாசையாக வருகிறது. மேலும் இந்த ஆடி மாதத் திலே இரண்டு அமாவா–சைகள் வருகின்றன. இதில் முதலில் வந்த அம்மாவா–சையை சூனிய அமாவாசை என்று சொன்னார்கள். எனவே இந்த அமாவாசை ஆனது பவர்புல் அமாவா–சையாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
அதனால் எதிலும் எச்ச–ரிக்கையாக இருப்பது நல் லது என்று பிரபல ஜோதி–டர் மடப்புரம் விலக்கு கரு.கருப்பையா விளக்கம் அளித்துள்ளார். எச்சரிக் கையாகவும் கவனமாகவும் இருப்பது நல்லது என்று கரு.கருப்பையா கூறியுள் ளார். பொதுவாக ஒரு மாதத்தில் இரண்டு அமா–வாசையோ அல்லது இரண்டு பவுர்ணமியோ வந்தால் அந்த மாதத்திலே புதிய காரியங்கள் தொடங் கக்கூடாது என்று சொல்லு–வார்கள்.
ஒரு சிலர் அமாவாசையை நிறைந்த நாள் என்று சொல்லி புதிய காரியங்களை தொடங்குவார்கள். ஒரு சிலர் சற்று யோசித்து தொடங்க மாட்டார்கள். மேலும் மறுநாள் பிரதமை என்பதால் சந்திரனின் பலம் குறைந்திருக்கும் என்ற காரணத்தால், அதற்கு அடுத்த நாள் மூன்றாம் பிறை புதிய காரியங்களை தொடங்குவார்கள்.
ஆக மொத்தத்தில் வரு–கின்ற அமாவாசையில் நெருப்பு, மின்சாரம் போன்ற வற்றில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும், வண்டி வாகனங்களை கவ னமாக இயக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அன்றைய தினத்திலே முன் னோர்களுக்கு திதி, தர்ப்ப–ணம் கொடுத்தால், ஓராண் டிற்கு உள்ள பலன் கிடைக் கும் என்றும், குலதெய்வத்தை வணங்கி வந்தால் எல்லா காரியங்களும் வெற்றியாகும் என்றும் பிரபல ஜோதிடர் கரு.கருப்பையா விளக்கம் அளித்துள்ளார்.
- குற்றவாளியான வடிவேல் சொகுசு காரில் ஸ்கேன் மெஷின் உடன் தப்பிச் சென்றார்.
- விசாரணையில் இவர்கள் இடைத்தரகர்களாக செயல்பட்டு வந்தது தெரிய வந்தது.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த பரிகம் காட்டுவளவு கிராமத்தில் தனியாக உள்ள புஷ்பாகரன் என்பவரின் விவசாயி வீட்டில் நேற்று கர்ப்பிணி பெண்களுக்கு கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என கண்டறியும் சோதனை நடப்பதாக பாலின தேர்வை தடை செய்யும் மாநில கண்காணிப்பு குழுவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன்பேரில், மருத்துவம் மற்றும் ஊராட்சிகளின் பணிகள் டி.எஸ்.பி. சரவணகுமார், ஏ.ஓ. கமலக்கண்ணன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் தருமபுரி சுகாதாரத்துறை இணை இயக்குனர் சாந்தி தலைமையில் திடீர் சோதனைக்கு சென்றனர். அப்போது மருத்துவக் குழு வருவதை அறிந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய குற்றவாளியான வடிவேல் சொகுசு காரில் ஸ்கேன் மெஷின் உடன் தப்பிச் சென்றார்.
இந்தநிலையில் வீட்டை சுற்றி வளைத்து சோதனை செய்ததில் வடிவேலுக்கு உதவிய தருமபுரி மாவட்டம் பெரியாம்பட்டி பகுதியை சேர்ந்த வனிதா மற்றும் கருவுற்ற பெண்களை காரில் அழைத்து வந்த டிரைவர் முருகன் ஆகிய இடைத்தரகர்கள் 2 பேரை அதிகாரிகள் சுற்றி வளைத்தனர்.
தருமபுரி, கிருஷ்ணகிரி, மேட்டூர், ஓசூர், பெங்களூர், பகுதிகளில் இருந்து வர வழைக்கப்பட்ட கர்ப்பிணி பெண்கள் உள்பட 15 பேரை மருத்துவக் குழுவினர் விசாரித்தனர். இதில் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வடிவேலு, சட்ட விரோதமாக கர்ப்பிணி பெண்களுக்கு கருவில் உள்ள குழந்தை ஏற்கனவே ஆணா, பெண்ணா என கண்டறிந்த சம்பவத்தில் 4 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது.
இவருக்கு பெரியாம்பட்டி பகுதியை சேர்ந்த வனிதா மற்றும் கார் டிரைவர் முருகன் ஆகிய இருவரும் இடைத்தரகர்களாக செயல்பட்டு வந்துள்ளனர். இந்த 2 பேர் மூலம் கருவுற்ற பெண்களின் கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என கண்டறிய நினைக்கும் பெண்களை ஏற்கனவே கருவில் இருப்பது என்ன குழந்தை என்று கண்டறிந்து சென்ற கர்ப்பிணிப் பெண்களின் உதவியோடு கண்டறிந்தனர்.
பின்னர் அவர்களை மாவட்டத்தில் செல்போன் சிக்னல் கிடைக்காத காட்டுப் பகுதிகளை தேர்வு செய்து, அப்பகுதிகளில் உள்ளவர்களுக்கு சந்தேகம் வராமல் இருப்பதற்காக திருவிழா, கல்யாணம், காதுகுத்து, நடக்கும் பகுதிகளை பார்த்து அப்பகுதியில் ஒரு வீட்டை தேர்வு செய்து, விசேஷத்திற்கு வந்தது போல் கணவர்கள் சம்மதத்துடன் அவர்களை அழைத்து வந்து ஒரே இடத்தில் வைத்து கருவில் உள்ளது ஆணா, பெண்ணா என கண்டறிந்து உள்ளனர்.
இதை கண்டறிய ஒரு நபரிடம் ரூ. 13 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை பெற்றுள்ளனர். ஒரு பெண்ணை அழைத்து வந்தால் இடைத்தரகரான வனிதாவிற்கு ரூ. 5 ஆயிரம் கமிஷனாக கொடுத்து உள்ளனர். இதே பாணியில் தான் நேற்று வனிதாவும் முருகனும் தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டத்திற்கு உட்பட்ட பரியம் காட்டுவளவு கிராமத்தில் உள்ள புஷ்பாகரன் வீட்டில் அரங்கேற்றி உள்ளனர்.
தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், மேட்டூர், பெங்களூர் பகுதிகளில் இருந்து வரவழைத்த பெண்களை வீட்டில் தரையில் படுக்க வைத்து ஸ்கேன் மெஷின் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வடிவேலு கர்ப்பிணி பெண்களுக்கு ஆணா, பெண்ணா என 12 பேருக்கு கண்டறிந்து உள்ளார்.
மேலாண்மை குழு வருவதை அறிந்த வடிவேலு ஸ்கேனிங் மெஷினுடன் சொகுசு காரில் தப்பி சென்றுள்ளார். பின்னர் வனிதாவும் டிரைவர் முருகனும் ஒரே காரில் தப்பிச் செல்ல முற்பட்ட போது பாலின தேர்வை தடை செய்யும் குழுவினரிடம் சிக்கிக் கொண்டனர்.
இது குறித்து தொப்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து விரைந்து வந்த போலீசார் வனிதா மற்றும் கார் டிரைவர் முருகன் இருவரையும் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இவர்கள் இடைத்தரகர்களாக செயல்பட்டு வந்தது தெரிய வந்தது.
இதனைத்தொடர்ந்து விசாரணையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வடிவேல் என்பவர் உடன் சேர்ந்து இத்தொழிலை தொடர்ந்து செய்து வருவதும் தெரியவந்தது.
இதையடுத்து தொப்பூர் போலீசார் 2 பேரையும் கைது செய்து இன்று சிறையில் அடைத்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- உள்ளே கரு சிக்கியிருந்ததைப் பார்த்து குழாயை அறுத்து கருவை வெளியே எடுத்தார்
- அவர்கள் அனைவரும் விசாரணைக்கு உட்படுத்தப்படுத்தி வருகின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் குடியிருப்பு ஒன்றின் கழிப்பறைக் குழாயிலிருந்து 6 மாத கரு கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
இந்திரபுரம் பகுதியில் உள்ள அந்த குடியிருப்பின் உரிமையாளர் தேவேந்திரன் நேற்று காலையில் தண்ணீர் தேங்கியதால் குழாய் கழன்று விழுந்ததாகவும் குழாயின் உள்ளே கரு சிக்கியிருந்ததைப் பார்த்து குழாயை அறுத்து கருவை வெளியே எடுத்ததாகவும் போலீசிடம் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் இந்திரபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தியுள்ளனர்.
தனது குடியிருப்பில் உள்ள வீடுகளில் ஒன்பது பேர் வாடகைக்கு வசித்து வருவதாக உரிமையாளர் காவல்துறையிடம் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர்கள் அனைவரையும் போலீசார் விசாரணைக்கு உட்படுத்தப்படுத்தி வருகின்றனர். குழாயிலிருந்து மீட்கப்பட்ட 6 மாத கரு பாதுகாக்கப்பாக வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
அங்கு வசித்து வரும் 9 வீட்டாரின் டிஎன்ஏ மற்றும் ஓனர் தேவேந்திரன் டிஎன்ஏ, கருவில் உள்ள டிஎன்ஏ உடன் ஒப்பீடு செய்யப்பட்டு, அது யாருடன் பொருந்துகிறது என்று ஆராய உள்ளதாக இந்திரபுரம் காவல் உதவி ஆணையர் சுவதந்திர குமார் சிங் தெரிவித்தார்.
- சோனோகிராபி செய்தபோது அவரின் 'கருவில் கரு' வளருவது கண்டறியப்பட்டது.
- இதுவரை உலகில் வெறும் 200 பேருக்கு மட்டுமே இந்த நிலை உண்டாகியது.
மகாராஷ்டிராவில் கர்ப்பிணி பெண்ணின் கருவிலுள்ள குழந்தைக்குள் கரு வளரும் அரிதினும் அரிதான நிலையை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் புல்தானா மாவட்டத்தின் அரசு பெண்கள் மருத்துவமனையில் 35 வார [9 மாத] கர்ப்பிணியான 32 வயது பெண் ஒருவருக்கு சோனோகிராபி செய்தபோது அவரின் 'கருவில் கரு' [Foetus inside foetus] வளருவது கண்டறியப்பட்டது.
அதாவது பெண்ணின் வயிற்றுக்குள் உண்டாகியுள்ள குழந்தையின் உடலினுள் மற்றொரு முழு வளர்ச்சியடையாத கரு உருவாகி உள்ளது. இதுகுறித்து அந்த மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் பிரசாத் அகர்வால் கூறுகையில், ஆரம்பத்தில் நான் ஆச்சரியமடைந்தேன், பின்னர் கவனமாக ஸ்கேனை மறுபரிசீலனை செய்தேன்.
இது முந்தைய சோனோகிராஃபியில் தவறவிடப்பட்டது. ஏனெனில் இது மிகவும் அரிதான நிலை, இதுபோன்ற ஒரு நிலை இருக்கும் என்று யாரும் கற்பனை கூட செய்ய முடியாது. எனவே, நான் இரண்டு மருத்துவர்களிடம் விரிவான ஆலோசனைக்கு பின் அதை உறுதி செய்தேன் என்று தெரிவித்தார்.

மேலும், குழந்தை பிறந்த பின்னரே இந்த நிலை பெரும்பாலும் கண்டறியப்படும். ஆனால் இப்பெண்ணுக்கு பிரசவத்துக்கு முன்னரே கண்டறியப்பட்டுள்ளது.
இது 5 லட்சத்தில் ஒருவருக்கு மட்டும் நிகழக்கூடிய அரிய வகையான மருத்துவ நிலை. இதுவரை உலகில் வெறும் 200 பேருக்கு மட்டுமே இந்த நிலை உண்டாகியது. அதில் இந்தியாவில் 15-20 பேரில் மட்டுமே இந்த நிலை பதிவாகியது என்று தெரிவித்தார்.
இந்த நிலைக்கான சரியான காரணம் முழுமையாக புரிந்து கொள்ளப்படவில்லை, ஆனால் இது ஒரே மாதிரியான இரட்டையர்களின் வளர்ச்சியின் போது நிகழும் ஒழுங்கின்மையின் விளைவு என நம்பப்படுகிறது.

இதற்கிடையே அந்த பெண் பாதுகாப்பான பிரசவத்திற்காக சத்திரப்பதி சம்பாஜி நகர் பகுதியிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- அந்தப் பெண் பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது.
- அந்தப் பெண் 35 வார கர்ப்பமாக இருந்தபோது சோனோகிராபி மூலம் கண்டறியப்பட்டது.
சமீபத்தில் மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்தில் ஒரு பெண்ணுக்கு 'கருவில் கரு' இருப்பது கண்டறியப்பட்டது.
புல்தானா மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயது பெண், கடந்த மாதம் வழக்கமான பரிசோதனையின் ஒரு பகுதியாக சோனோகிராபிக்கு உட்படுத்தப்பட்டபோது, அவரது வயிற்றில் இருந்த குழந்தைக்குள் மற்றொரு குறைபட்ட கரு வளரும் அரிய பிறவி கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது.
அந்தப் பெண்ணுக்கு பிப்ரவரி 1 ஆம் தேதி புல்தானா மகளிர் மருத்துவமனையில் நடந்த பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. அதைத் தொடர்ந்து, அவரும் குழந்தையும் அமராவதி மாவட்டத்தில் உள்ள ஒரு சூப்பர் ஸ்பெஷாலிட்டி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
அங்கு மருத்துவர்கள் குழு புதிதாகப் பிறந்த குழந்தையின் வயிற்றில் இருந்து இரண்டு கருக்களை அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக அகற்றியது அமராவதி பிரதேச மருத்துவமனையில் டாக்டர் உஷா கஜ்பியேவின் மேற்பார்வையில் பிறந்த 3 நாட்கள் ஆன அந்த ஆண் குழந்தைக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் கஜ்பியே, மூன்று நாள் குழந்தையின் வயிற்றில் கைகள் மற்றும் கால்களுடன் இரண்டு [இரட்டைக்] குழந்தைகள்[கரு] இருந்ததாக கூறினார். அறுவை சிகிச்சையின் போது கருக்கள் வெற்றிகரமாக அகற்றப்பட்டன, மேலும் குழந்தையும் தாயும் நலமாக உள்ளனர் என்று அவர் கூறினார்.
அந்தப் பெண் 35 வார கர்ப்பமாக இருந்தபோது சோனோகிராபி செய்த புல்தானா மருத்துவமனையின் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ நிபுணர் டாக்டர் பிரசாத் அகர்வால் பேசுகையில், 'கருவில் கரு' என்பது மிகவும் அரிதான மருத்துவ நிலைகளில் ஒன்றாகும்.
இது ஐந்து லட்சத்தில் ஒருவருக்கு ஏற்படுகிறது. இதுவரை உலகம் முழுவதும் இதுபோன்று 200 பேருக்கு மட்டுமே இருந்துள்ளது. இந்தியாவில் 10-15 பேருக்கு மட்டுமே இந்நிலை உருவானது என்று தெரிவித்தார்.
